• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 15

Kameswari

Member
எவ்ளோ தைரியம் இந்தக் சக்திவேலருக்கு!😠 ஒரு பெண் தனியாளா தைரியமா தொழில் தொடங்கி நடத்தி ஜெயிச்சு தலைநிமிர்ந்து நின்னா, இவர் வந்து அவங்களோட இடத்துல இவரோட போட்டோவை வெச்சு என்னத்த சாதிக்க நினைக்குறார்? இதெல்லாம் பெரிய சாதனையா? இந்த சக்திவேலர் மோசக்காரவேலர் 😡

பாவம் வஞ்சி! இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதானே கல்யாணம் வேணாம்னு மறுத்தா... வஞ்சியவே தையல்நாயகியோட வாரிசு இல்லைன்னு சொன்னவர் மட்டும் எந்த வகையில் தையல்நாயகிக்கு வாரிசானாரு? 🧐

வஞ்சி தையல்நாயகில இருந்தா இவராத எதுவுமே செய்ய முடியாதுன்னு தானே அவளை உண்மையான வாரிசு இல்லன்னு சொல்லி வெளியேற வெச்சு தொழிலைப் பத்தி எதுவுமே தெரியாத செல்லப் பேரன் மிதுனையும், சுவாதியையும் உள்ளே நுழைஞ்சிருக்காரு? 😡 இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா?

சுவாதிகிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? உருப்படாத ஊர்சுத்தி கழுதை! 😠 பைசாவுக்குப் பிரயோஜனமில்லை. தையல்நாயகி உசுர குடுத்து வளர்த்த தொழிலை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கா? 😡

குணாளன் இப்போ சொன்னதை அன்னிக்கே சொல்லியிருந்தா வஞ்சி இதை ரொம்ப நல்லாவே டீல் பண்ணியிருப்பா...

இப்போ வஞ்சிக்கு இல்லாத உரிமை வேற யாருக்குமே இல்லை. அதவும் சக்திவேலருக்கு சுத்தமாவே உரிமை இல்லை. இனி வஞ்சி அவ வழியில் தான் இவங்களை டீல் பண்ணனும். குறுக்கால இந்த நிலன் வந்து, என்னோட அப்பப்பா... வயசுல பெரியவர்... மரியாதை இல்லாம பேசாதே... அப்படின்னு வியாக்கியானம் பேசாம இருந்தா ரொம்பவே நல்லது.

இப்போ தெரிஞ்சுக்கிட்ட உண்மையால, வஞ்சியோட இத்தனை நாள் மன அழுத்தமும், எதுவுமே செய்ய முடியாம நின்ன கோபமும், இப்போ தெரிஞ்சிக்கிட்ட உண்மையும் சேர்ந்து மொத்தமா அவளை வெடிக்க வைக்கப் போகுது.

வஞ்சி என்ன செய்யப் போறான்னு ஆவலா இருக்கு! 😍 பார்ப்போம் 🧐
 

sarjana

Active member
பாலகுமரனுக்கும் 2 வருடத்திட்கு முன்புதான் தெரிந்திருக்குப்போல அதனால்தான் ஹார்ட் அடக். அதேநேரம்தாம் நிலனுக்கும் தெரியுமோ.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... எனக்கு ஒரு doubt. வஞ்சியும் சுவாதியும் அத்தை மாமா மக்கள். இருவரும் எப்படி ஒரே வீட்டு மருமகள்களாக முடியும்.
 

Goms

Well-known member
எதிர்பார்த்த விஷயம் தான்.

ஆனாலும் இன்னும் முக்கியமான ஏதோ விஷயம் இருக்கு. அதுவும் உண்மையான்னு தெரியல. நான் திரும்பவும் முதலிலிருந்து கதையை ஒரு முறை படிச்சிட்டு வந்துட்டு சொல்றேன். 🤩🤩

அவ கேள்விக்கு பதிலை சொல்லிட்டு லீவு எடுங்கன்னு சொன்னதை மறக்காம, இன்றைக்கு அவ யாருன்னு சொல்லிட்டு, நீங்களும் லீவு சொல்லிட்டு போறீங்க. என்னே உங்க நேர்மை????? 🤣🤣🤣
 
Top Bottom