நிச்சயமாக ஒரு அழகான அருமையான காதல் உழைப்பின் சிறப்பு குடும்பமாக வாழும்
நல்ல பையனுக்கு தேவையான அம்சங்கள் நிறைந்த கதை
ஒவ்வொரு இளைஞனும் உழைப்பின் உயர்வை புரிந்து கொண்டால்
நம் வீடு நாடு எல்லாம் முன்னேறும்
காதல் பிரணவன் ஆர்கழி செம பொருத்தம்
சின்ன பிள்ளையா இருக்கும் போதே அச்சாரம் போட்டு
தன்னுடைய பெண்ணை உறுதி செய்து
பல வருடம் கழித்து பாத்து மயங்கி இருவரும் ஒரு மனதாகி
பிரிந்து மனம் கஷ்டப்பட்டாலும் மீண்டும் இணைந்தது அருமை
அதிலும் அந்த அண்ணாமலை சைக்கிள் பாய் தலையனை
பால் பழம் இன்று முதலிரவு பாடல் அடி தூள்
நிதனி எனக்கு உங்க கதை எல்லாம் ரொம்ப பிடிக்கும்
இது இன்னும் ரொம்ப பிடிக்க வைக்குது
இந்த கதைல எல்லா பாத்திரங்களும் நிறைவாக இருந்தது
கருப்பன நிரம்ப பிடித்தது
அருமையான பதிவு