You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்

நிதனிபிரபு

Administrator
Staff member
Bawani Balasubramaniyam


வணக்கம் சகோதரிகளே...!
ஆசிரிய தோழி
நிதனி பிரபு அவர்களின் " நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்"
வாசித்தேன் மனம் பூரித்து போனேன்...!
முகில்கள் சூழ்ந்த வானமாக
மூடி கிடந்தவனின் வாழ்வில்
முழு நிலவாய் வந்த மாது
மேகம் விலகிட
வானமும் நிர்மலமாகிட
நிலவொளியாய் வந்தவளோடு
கைக் கோர்த்து கொண்ட வாழ்வில்
விடியலின் பயணமாக...
நினைவெல்லாம் நீயாகிட வந்(தேன்) தாளோ..!
முதல் உறவு தோற்ற நிலையில்
முடிவு பெற்றதுவோ இவ்வாழ்க்கையென
தன் வாரிசோடு மூர்ச்சையாகி போனவன்
மீண்டும் புத்துணர்வு பெற
தோழனாய் ஒரு தோல்
வந்தான் தன் அன்னை பூமி
வந்தவன் மழலை கிளிமொழியை
ரசித்து கைக்கோர்க்க...
அதனோடு தொடர்ந்தால்
அமைதி பாவையவள்...
யுத்த மண்ணின் போராட்ட சுவடில்
மீண்ட இம்மாது ....
மழலையோடு மீண்டும்
சரண்புகுந்தால் புதுஉறவான
தன் துணையோடு...
காதல் என்ற ஒற்றை வார்த்தை
இருவரையும் இணைக்க
புதிய உறவான குடும்பம்
என்ற நிலையில் உதயமாகிட
புரிதலோடு காதலும் கலக்க
புனிதம் பெற்றது இவ்வுறவு,...
அவன் நினைவில் இவள்
நினைவெல்லாம் நீயாகிட வந்தவளோ..!
புனிதம் பெற்றது அவனா அவளா..?
தன் துணையை நினைத்து
பெருமிதம் கொண்டவன்
இவள் கன்னித் தாய் எனும் போது
அவள் அவனுக்கு தெய்வத்தாயாகி போனால்
அழகிய பாத்திர படைப்புகள்
விக்ரம் யாமினி
என் மனதில் பதிந்த உறவுகள்
தோழனாய் வந்தவனும்
அவனின் அன்னையும்
வணங்க வேண்டிய உறவுகள்
எதிர்பார்ப்பற்ற அன்பு உள்ளங்கள்
அழகிய படைப்பு
மனதில் நின்று பாதிப்பு
நிதனி சகோதரியின்
கை வண்ணத்தில்...
உங்களின் நினைவெல்லாம்
நீயாகி போனதடி சகியே,,..
வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே..!


 

நிதனிபிரபு

Administrator
Staff member
Chithra Venkatesan



நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - நிதனிபிரபு
முதல் காதல் திருமணம் தோல்வியில் முடிந்துவிட, ஒரு வெறுமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த விக்ரம், பின் அந்த வெறுமையை மாற்ற நினைத்து திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறான்.
குழந்தையோடு தனியாக வாழும் யாமினியை அந்த குழந்தைக்காக அவன் மணம் முடிக்க, அந்த திருமணத்திற்கு பிறகு அந்த வாழ்க்கையில் காதலும் மகிழ்ச்சியும் எப்படி வந்து சேர்கிறது என்று கதை நகர்கிறது.
2018 புத்தக கண்காட்சி அப்போ வாங்கினது இப்போ தான் படிக்க நேரம் கிடைத்தது. சந்தனாவை பார்த்தது யாஸ்மின் குழந்தை ஞாபகம் வந்தது. விக்ரம் அன்பு காட்டுவது, 9 வயதில் டெனிஷ் வயதை மீறிய பக்குவத்தோடு இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஏக்கங்கள் வெளிப்படுவதும், அதன்மூலம் அவன் யாமினியை அன்னையாக ஏற்றுக் கொள்வது, என்று உணர்வு குவியலாக கதாப்பாத்திரங்கள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
malar malar



நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்!
**************************************************
கதாசிரியர் : நிதனி பிரபு.
இது ஒரு பாசக்காரக் குடும்பம் புதிதாக உருவாகும் காதல் கொண்ட கதை. இலங்கைக்கும், ஜேர்மனுக்கும் பாலம் கட்டி, காதல் படகோட்டும் நளினமான வாழ்வுப் பயணம்.
இலங்கைத் தமிழர் வீடுகளில் அதுவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் வீடுகளில் வெளிநாடு வாழ் உறுப்பினர்கள் இருப்பது மிகவும் சகஜமான ஒன்று தான். போர் செய்த கோலத்தோடு, திருமணம், பொருளாதாரம் நோக்கிய இடம்பெயர்வாயும் அது இன்று வரை மாறவே இல்லை.
இக் கதையில் வரும் விக்ரம் ஜேர்மனில் வசித்து, அங்கேயே தொழிலும் நடத்தும் ஒருவன். ஏழ்மையாக இருந்து, உழைத்து உழைத்தே தன்னைத் தானே செதுக்கிய ஒரு சிற்பி. அன்பானவன் என்று மட்டும் அவனைச் சொல்லுவது நியாயமில்லை. காதலாக அன்பைக் கொட்டி அதிலுமே அடாவடி காட்டும் ஒரு பாசக்காரன். அவன் விரும்பிய ஜேர்மனின் ஜாஸ்மினை உருகி உருகிக் காதலோடு மணந்து வாழ்கிறான்.
காதலோடான பாசக்காரன் விக்கிக்கு வேலையும் முக்கியம். ஆனால் வெளிநாட்டுக் காலாச்சார மனைவிக்கு காசை விட கண்மூடித்தனமான காதல் மட்டுமே தேவையாகிப் போனது. அவளின் காதலுக்கு, காதலன் அவள் தேடும் போதெல்லாம் அருகிருப்பதும் அவசியமானது. இதனை விளங்காத தமிழன் காதலுக்கு ஜேர்மனியன் வில்லன் ஆவானா? கதையில் தேடுங்கள்.
கதையின் ஆரம்பத்திலேயே விக்கிக்கும், ஜாஸ்மினுக்கும் டெனிஸ் என்கிற மகனும் பிறந்துவிட்டான். அழகான சிறு கூட்டில் விதி விளையாடியது. அங்கு விக்கி என்னவானான்? குழந்தையோடு எப்படி வாழ்ந்தான் என்று கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கதையின் இடையில் நண்பனான அசோக்கோடு இலங்கை செல்லும் விக்கி அங்கு என்ன செய்கிறான்? யாரை எல்லாம் சந்திக்கிறான் என்று நான் சொன்னால் கதையின் சுவாரஸ்யமான பகுதிகளை உளறிய வாயாக மாறிவிடுவேன். அதனால் அங்கு சென்றே பாருங்கள் மக்களே!
நல்ல மனம் படைத்த விக்கிக்கு தேன்சோலையாக மாறும் வாழ்க்கை இறைவனின் வரம் என்றால் மிகையில்லை. அதற்கு டெனிசின் அம்மாவும், பார்பியும் காரணமாகிப் போனதே விந்தையிலும் விந்தை. விக்கிக்கு யாம்ஸ் வரம் என்றால் டெனிசுக்கு அவன் அம்மா...........அதை என்னவென்று சொல்வது. கடவுளின் சித்து விளையாட்டுக்கு அளவே இல்லை.
பார்பி, யாம்ஸ் பற்றி சொல்லவே இல்லை நான். சுருங்கச் சொன்னால் இருவரும் இவ்வுலகிற்கு கடவுள் அனுப்பிய தேவதைகள். அவர்கள் பற்றிய மிகுதியை கதையில் பாருங்கள். சொல்லப் போனால் இதுவே கதை போல வந்துவிடும்.
விக்கி முதலில் நினைத்தது என்னவோ ஒன்று, இறுதியில் அவன் நினைவெல்லாம் .............. உண்மையில் நினைவெல்லாம் நீயாகிடத் தான் அவன் ஊருக்கு சென்றுள்ளான்.
அழகான காதல் கதை. இலங்கைத் தமிழில் மிளிரும் தனித் தன்மையோடு, பாசத்தையும், நேசத்தையும், காதலையும் முக்கியமாக விக்கியின் குறும்புகளையும் கலவையாக்கி இனிக்க இனிக்கத் தந்துள்ளார் தங்கை நிதனி.
வாழ்த்துக்கள் நிதனிம்மா
?
?
?
?
?
?
.
செந்தூரம் தளத்தில் கதை இருக்கிறது. ஞாயிறு மட்டும் கதை இருக்கும் என்று நிதனி எழுதியுள்ளார்.
 
Top Bottom