• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Debate Hub - Nov & Dec

thilagasri

New member
ஹாய் ஹாய் ஹாய் அன்பான நட்புறவுகளே!

இந்தப்பகுதி எங்கள் நிதனிபிரபுவின் ஆசையில் உருவானது.:love:

ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான விவாதற்கு, அதேநேரம் யோசிக்க வைக்கும் படியான கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.

இந்தப் பகுதியின் கலகலப்புக்கு முற்று முழுதாக நீங்களே சொந்தக்காரர்கள். உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இத்தலைப்பு பற்றிய இரு தரப்பு வாதங்களையும் இதே பகுதியில் நீங்கள் பதிவிடலாம். ஒருவர் கருத்தின் மீது மற்றவர் வாதிக்கலாம். கருத்தாடல் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிப்பட்டு இல்லாது ஆரோக்கியமான விவாதமாக இருத்தல் முக்கியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை. நிஜ மனிதர்களை உதாரணமாகக் காட்டுவதோ, அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் குறிப்பதையோ தவிர்த்தக் கொள்ளுங்கள்.

இத்தலைப்புத் தொடர்பில் எதிர்வரும் 18 ம் திகதிவரை நீங்கள் விவாதிக்கலாம். இதிலிருந்து மூன்று சிறந்த விவாதங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும் .

தலைப்பு

'இன்றைய இளம் பெண்களின் பார்வையில்: திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறதா? அல்லது அவர்களின் தனித்துவத்தைக் கட்டுப்படுத்தும் அழுத்தம் தரும் சுமையான உறவாகப் பார்க்கப்படுகிறதா?'
 
Goms

Well-known member
ஆரோக்கியமான விவாதமும், யோசிக்க வைக்கும் கருத்துப் பரிமாற்றமும் - என்ற இந்தப் பகுதியை துவங்கி வைத்த நிதா மற்றும் ரோசி சகோதரிகளுக்கு எங்கள் உளமார்ந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.💖💖💖

விவாதம் என்று நடந்தால், தீர்ப்பு என்ற ஒன்றும் வழங்கப்படுமா? 😂😂😂

ஏனென்றால், தலைப்பின் முதல் பகுதிக்கு கருத்துகள் வரும் அளவிற்கு விவாதம் வருமான்னு சந்தேகமா இருக்கு🤔. இரண்டாம் பகுதிக்கு தான் (வலி கொடுத்தாலும்) ஓட்டு அதிகம் வரும்போல இருக்கு😂.

கலகலப்பிற்கு எங்களை சொந்தக்காரர்கள் ஆக்கிவிட்டு🤣🤣🤣, ஒரு கனமான தலைப்பை தந்திட்டீங்களேம்மா.....😔😂😂

அதான் நிறைய நேரம், இல்லையில்லை, நாட்கள் கொடுத்திருக்கீங்களே 😂 கருத்துக்களை நல்லா யோசித்துக் கொண்டு வர்றேன்.
 
ரோசி கஜன்

Administrator
Staff member
விவாதம் என்று நடந்தால், தீர்ப்பு என்ற ஒன்றும் வழங்கப்படுமா? 😂😂😂
தீர்ப்பு இல்லாமல் எப்படி? வழங்கப்படும் கோம்ஸ்

ஏனென்றால், தலைப்பின் முதல் பகுதிக்கு கருத்துகள் வரும் அளவிற்கு விவாதம் வருமான்னு சந்தேகமா இருக்கு🤔
. இப்ப மகிழ்ச்சி, முதல் பகுதி விவாதத்துக்கு ஆள் தயார். ஆவலோடு உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறது இந்தப் பகுதி.வாங்கோ வாங்கோ
 
Goms

Well-known member
அன்பு சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்🙏.

இன்றைய "இளம் பெண்களின் பார்வையில்" என்று குறிப்பிடுப்பதால், திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் விவாதிக்க விரும்புகிறேன்.💖

இன்றும் தமிழ் நாட்டில், 90 சதவீத திருமண பத்திரிக்கையில், "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்று மேற்கோள் காட்டித் துவங்குவதை நாம் காணலாம். இதன் பொருள் "இல்வாழ்க்கையில் அன்பும், அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே (அந்த வாழ்க்கையே) ஆகும்" என்பதாகும். அப்படியென்றால், ஒரு திருமணத்திற்கு அடிப்படை என்பது அன்பும், அறமும் (ஒழுக்கநெறி). (இன்றைய கால கட்டத்தில் பணமும் முக்கிய பங்கு வகிப்பதாக இருந்தாலும், பெண்களும் படித்து தங்கள் சொந்தக் காலில் நிற்பதால் நான் இதை அடிப்படையில் சேர்க்கவில்லை.😜)

இன்றைய கால கட்டத்திலும் இது பொருந்துமா என்றால், ஆம், கண்டிப்பாக. ஒரு திருமணத்தின் அடிப்படைத் தேவை கணவன் தன்னிடம் அன்பாக நடக்க வேண்டும், ஒழுக்கம் தவறாது நடக்க வேண்டும் என்பதுதானே.💞💖💞

இன்றைக்கு பெண்கள் நிறையப் படித்திருக்கிறார்கள், நிறைய சம்பாதிக்கிறார்கள், நிறைய எதிர் பார்க்கவும் செய்கிறார்கள் என்பது உண்மைதான். தன் துணையைக் கூட தானே தேடிக் கொள்ள விரும்புகிறார்கள் தான். ஆனாலும், எப்படித் தேடுகிறார்கள்? இன்னாரைத் திருமணம் செய்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்குமா, தனக்கும், தன் வாரிசுகளுக்கும் சுகமான உறவைத் தருமா, கடைசி வரை கை கொடுக்கும் உறவாய் இருக்குமா, இருவரின் கருத்துகளும் ஒத்துப் போகுமா, வாழ்வில் இணைந்து முன்னேற முடியுமா, தன் தனித்துவத்தைக் காக்க விடுவாரா, தன் முன்னேற்றத்திற்குத் துணை செய்வாரா, குடும்பமாக இருந்தாலும் தன் கருத்தையும் சொல்ல சுதந்திரம் உண்டா என்று எத்தனையோ விதத்தில் அலசி ஆராய்ந்து பார்த்து தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே பெண் வீட்டினர் மாப்பிள்ளை பார்த்தாலும், தன் மகளுக்கேற்ற, மகளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற ஒருவனைத்தான் தேடுகிறார்கள்.

காதல் திருமணம் என்றாலும் இதை எல்லாம் பெரியவர்கள் பார்த்து சொல்ல வேண்டியதை சொல்லத்தான் செய்கிறார்கள்.அதன் பிறகு அவர்கள் முடிவு மாறுபடுமா என்பது அவர்கள் காதலின் உறுதியைப் பொறுத்தது.

அப்படி வரும்போது இன்றைய இளம் பெண்கள் திருமணத்தை மன நிறைவு தரும் குடும்ப வாழ்க்கையாகத்தான் கருதுகிறார்கள்.

பழைய காலம் மாதிரி, வெறும் புகைப்படத்தை மட்டுமே காட்டியோ, வெறும் தகவல் மட்டுமே சொல்லியோ, நேரில் சந்திக்க விடாமலோ, பேச சந்தர்ப்பம் கொடுக்காமலோ திருமணம் செய்வதில்லைதானே. 😀 திரும்பக்கேட்டால், பெண் பார்த்து சென்று விட்டால் (வீட்டில் ஓரளவு விசாரித்துதான்), கைபேசியில் பேசுவதன் மூலம், பெற்றவர்களை விட அதிக தகவல்களை பெண்களே கூறுவார்கள்😜 (அதுவும் Facebook, insta, இன்னும் social media IDs எல்லாம் புகுந்து பார்த்து விடுகிறார்கள்😂😂😂).

அப்படியெனும் போது, இன்றைய பெண்கள் தங்கள் தனித்துவதைக் காப்பது பற்றியும், தன் வேலையைத் தொடர்வது அல்லது மேற்கொண்டு படித்து முன்னேறுவது, எது என்றாலும் முதலிலேயே பேசி ஒத்து வந்தால் மட்டுமே சம்மதிப்பதால், திருமணத்தை சுகமான உறவாகத்தான் எதிர் பார்க்கிறார்கள் என்பது என் கருத்து.

அன்பும், காதலும் ஒருமித்து வாழும் பெற்றோரைப் பார்த்து வளரும் பெண்கள், தங்களுக்கும் இது போன்ற அருமையான அழகான வாழ்க்கை வேண்டும் என்று தானே நினைப்பார்கள்😜🥰 பெண்களுக்கு எப்போவும் அப்பாதானே ஹீரோ. ஆனால் தனக்கு வருகிறவன் தன் தந்தை தன் மீது காட்டும் அன்பை விட அதிகமாகத் தன் மீது அன்பு காட்டி தன்னை சுகமாக தாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களே தவிர, அதை எப்படி சுமையாகப் பார்ப்பார்கள்😜😂

தாய் தந்தை அன்பை பெறாதவர்கள் கூட, தானும் தன் கணவனும் சேர்ந்து தங்கள் குழந்தைகளை அன்போடு வளர்க்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவார்கள். திருமணத்தை சுமையாக நினைத்தால் குடும்பம் எப்படி அமையும்? 🤔

அதனால் இன்றைய பெண்கள் தங்கள் திருமணத்தை சுகமான உறவாகத்தான் கருதுகிறார்கள் என்பது என் கருத்து. இதுவே எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் வளரும் சூழ்நிலைகள் மாறுபட்டாலும் திருமணம் என்று வரும்போது அவர்களின் அடிப்படை எதிர்பார்ப்பும் அன்பும், ஒழுக்கமும் தான் என்பதால், நான் என்னுடைய கருத்தில் உறுதியாக நிற்கிறேன்.🙏
 
Leelu

New member
எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திட கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்குன்னு தான் எனக்கு தோணுது....
இதற்கு காரணம் தன் முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் போனதும்.... அவர்கள் விட்டுக்கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும் ....அதுவே பெண்ணின் கடமை என்று சமுதாயம் அவர்களின் மேல் குத்திய முத்திரையும் தான்....
இன்று கல்வியறிவு வளர்ந்ததால் அல்ல உலகம் சுருங்கியதால்....
அதாவது அன்று பெண்கள் படித்திருந்தாலும் நல்ல பதவியில் இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் பெரும்பான்மையான கருத்தையே ஏற்று பிடிக்கவில்லை என்றாலும் அதன்படி வாழ்ந்து முடித்தார்கள்....
ஆனால் இன்று உலகம் ஒவ்வொருவரின் கையில் அலைபேசி வழியில் உள்ளது... அதனால் வெவ்வேறு விதமான கலாச்சாரமும்... அங்கு பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் போக்கும் .... இவர்களின் புத்தியில் பதிந்து நாமும் நமக்கான அடையாளத்துடன் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சிந்திக்கின்றது....திருமண உறவில் இருவருக்கும் எல்லாவித உரிமையும் கடமையும் பொறுப்புகளும்... ஏன் விட்டுக்கொடுத்தல் கூட சம அளவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்...
பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களின் கொள்கையாக கூட இருக்கிறது...
Nicely put in words
 
ஹாய் ஹாய் ஹாய் அன்பான நட்புறவுகளே!

இந்தப்பகுதி எங்கள் நிதனிபிரபுவின் ஆசையில் உருவானது.:love:

ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான விவாதற்கு, அதேநேரம் யோசிக்க வைக்கும் படியான கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.

இந்தப் பகுதியின் கலகலப்புக்கு முற்று முழுதாக நீங்களே சொந்தக்காரர்கள். உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இத்தலைப்பு பற்றிய இரு தரப்பு வாதங்களையும் இதே பகுதியில் நீங்கள் பதிவிடலாம். ஒருவர் கருத்தின் மீது மற்றவர் வாதிக்கலாம். கருத்தாடல் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிப்பட்டு இல்லாது ஆரோக்கியமான விவாதமாக இருத்தல் முக்கியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை. நிஜ மனிதர்களை உதாரணமாகக் காட்டுவதோ, அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் குறிப்பதையோ தவிர்த்தக் கொள்ளுங்கள்.

இத்தலைப்புத் தொடர்பில் எதிர்வரும் 18 ம் திகதிவரை நீங்கள் விவாதிக்கலாம். இதிலிருந்து மூன்று சிறந்த விவாதங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும் .

தலைப்பு

'இன்றைய இளம் பெண்களின் பார்வையில்: திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறதா? அல்லது அவர்களின் தனித்துவத்தைக் கட்டுப்படுத்தும் அழுத்தம் தரும் சுமையான உறவாகப் பார்க்கப்படுகிறதா?'
சுகமான
 
சுகமான மனநிறைவைத்தரும் நிறைவான சுகம் எவ்வளவு தான் நாம் புகுந்த வீட்டு உறவுகளாலும் கணவனாலும் கொண்டாடப்பட்டாலும் நாம் பிறந்து தவழ்ந்து தத்தி தத்தி நடை பயின்று சிரித்து ரசித்த சுற்றம் தாய் தகப்பன் உடன்பிறந்த சகோதரி சகோதரர்கள் நாம் அன்புடன் வளர்க்கும் செல்லப்பிராணி செடிகொடிகள் என நம் சுயத்தை தொலைத்தே திருமண பந்தத்தில் இணைந்து வாழவேண்டிய சூழ்நிலை நம் பிறந்து வளர்ந்த வீட்டிற்க்கே விருந்தினராக செல்வது மிகவும் கொடுமை இளங்குறுத்து வளர்ந்து செழித்து பூப்பூக்கும் நேரம் பிடுங்கி வேறோரு இடத்தில் படுவதால் வளரும் காய் கனிகளை தரும் அதன் முதல் வேர் விட்டு மண்ணையே நாடும் அதுவே பெண்களின் நிலை 🥰🥰
 
Ananthi.C

Well-known member
அன்பு சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்🙏.

இன்றைய "இளம் பெண்களின் பார்வையில்" என்று குறிப்பிடுப்பதால், திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் விவாதிக்க விரும்புகிறேன்.💖

இன்றும் தமிழ் நாட்டில், 90 சதவீத திருமண பத்திரிக்கையில், "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்று மேற்கோள் காட்டித் துவங்குவதை நாம் காணலாம். இதன் பொருள் "இல்வாழ்க்கையில் அன்பும், அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே (அந்த வாழ்க்கையே) ஆகும்" என்பதாகும். அப்படியென்றால், ஒரு திருமணத்திற்கு அடிப்படை என்பது அன்பும், அறமும் (ஒழுக்கநெறி). (இன்றைய கால கட்டத்தில் பணமும் முக்கிய பங்கு வகிப்பதாக இருந்தாலும், பெண்களும் படித்து தங்கள் சொந்தக் காலில் நிற்பதால் நான் இதை அடிப்படையில் சேர்க்கவில்லை.😜)

இன்றைய கால கட்டத்திலும் இது பொருந்துமா என்றால், ஆம், கண்டிப்பாக. ஒரு திருமணத்தின் அடிப்படைத் தேவை கணவன் தன்னிடம் அன்பாக நடக்க வேண்டும், ஒழுக்கம் தவறாது நடக்க வேண்டும் என்பதுதானே.💞💖💞

இன்றைக்கு பெண்கள் நிறையப் படித்திருக்கிறார்கள், நிறைய சம்பாதிக்கிறார்கள், நிறைய எதிர் பார்க்கவும் செய்கிறார்கள் என்பது உண்மைதான். தன் துணையைக் கூட தானே தேடிக் கொள்ள விரும்புகிறார்கள் தான். ஆனாலும், எப்படித் தேடுகிறார்கள்? இன்னாரைத் திருமணம் செய்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்குமா, தனக்கும், தன் வாரிசுகளுக்கும் சுகமான உறவைத் தருமா, கடைசி வரை கை கொடுக்கும் உறவாய் இருக்குமா, இருவரின் கருத்துகளும் ஒத்துப் போகுமா, வாழ்வில் இணைந்து முன்னேற முடியுமா, தன் தனித்துவத்தைக் காக்க விடுவாரா, தன் முன்னேற்றத்திற்குத் துணை செய்வாரா, குடும்பமாக இருந்தாலும் தன் கருத்தையும் சொல்ல சுதந்திரம் உண்டா என்று எத்தனையோ விதத்தில் அலசி ஆராய்ந்து பார்த்து தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே பெண் வீட்டினர் மாப்பிள்ளை பார்த்தாலும், தன் மகளுக்கேற்ற, மகளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற ஒருவனைத்தான் தேடுகிறார்கள்.

காதல் திருமணம் என்றாலும் இதை எல்லாம் பெரியவர்கள் பார்த்து சொல்ல வேண்டியதை சொல்லத்தான் செய்கிறார்கள்.அதன் பிறகு அவர்கள் முடிவு மாறுபடுமா என்பது அவர்கள் காதலின் உறுதியைப் பொறுத்தது.

அப்படி வரும்போது இன்றைய இளம் பெண்கள் திருமணத்தை மன நிறைவு தரும் குடும்ப வாழ்க்கையாகத்தான் கருதுகிறார்கள்.

பழைய காலம் மாதிரி, வெறும் புகைப்படத்தை மட்டுமே காட்டியோ, வெறும் தகவல் மட்டுமே சொல்லியோ, நேரில் சந்திக்க விடாமலோ, பேச சந்தர்ப்பம் கொடுக்காமலோ திருமணம் செய்வதில்லைதானே. 😀 திரும்பக்கேட்டால், பெண் பார்த்து சென்று விட்டால் (வீட்டில் ஓரளவு விசாரித்துதான்), கைபேசியில் பேசுவதன் மூலம், பெற்றவர்களை விட அதிக தகவல்களை பெண்களே கூறுவார்கள்😜 (அதுவும் Facebook, insta, இன்னும் social media IDs எல்லாம் புகுந்து பார்த்து விடுகிறார்கள்😂😂😂).

அப்படியெனும் போது, இன்றைய பெண்கள் தங்கள் தனித்துவதைக் காப்பது பற்றியும், தன் வேலையைத் தொடர்வது அல்லது மேற்கொண்டு படித்து முன்னேறுவது, எது என்றாலும் முதலிலேயே பேசி ஒத்து வந்தால் மட்டுமே சம்மதிப்பதால், திருமணத்தை சுகமான உறவாகத்தான் எதிர் பார்க்கிறார்கள் என்பது என் கருத்து.

அன்பும், காதலும் ஒருமித்து வாழும் பெற்றோரைப் பார்த்து வளரும் பெண்கள், தங்களுக்கும் இது போன்ற அருமையான அழகான வாழ்க்கை வேண்டும் என்று தானே நினைப்பார்கள்😜🥰 பெண்களுக்கு எப்போவும் அப்பாதானே ஹீரோ. ஆனால் தனக்கு வருகிறவன் தன் தந்தை தன் மீது காட்டும் அன்பை விட அதிகமாகத் தன் மீது அன்பு காட்டி தன்னை சுகமாக தாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களே தவிர, அதை எப்படி சுமையாகப் பார்ப்பார்கள்😜😂

தாய் தந்தை அன்பை பெறாதவர்கள் கூட, தானும் தன் கணவனும் சேர்ந்து தங்கள் குழந்தைகளை அன்போடு வளர்க்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவார்கள். திருமணத்தை சுமையாக நினைத்தால் குடும்பம் எப்படி அமையும்? 🤔

அதனால் இன்றைய பெண்கள் தங்கள் திருமணத்தை சுகமான உறவாகத்தான் கருதுகிறார்கள் என்பது என் கருத்து. இதுவே எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் வளரும் சூழ்நிலைகள் மாறுபட்டாலும் திருமணம் என்று வரும்போது அவர்களின் அடிப்படை எதிர்பார்ப்பும் அன்பும், ஒழுக்கமும் தான் என்பதால், நான் என்னுடைய கருத்தில் உறுதியாக நிற்கிறேன்.🙏
அப்படி அனைத்து விதத்திலும் தேடித்தேடி திருமணம் செய்தாலும்.... விவாகரத்து என்பது அதிகமானது ஏனோ??
 
மிகவு‌ம் அருமையாக கூறியுள்ளீர்கள்
வாழ்த்துகள் சகோதரி.
 
அப்படி அனைத்து விதத்திலும் தேடித்தேடி திருமணம் செய்தாலும்.... விவாகரத்து என்பது அதிகமானது ஏனோ??
சில பெண்களின் பேராசை, முன்யோசனை இல்லாமல் நடத்தல், மனக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல், பணிவு இன்மை, மற்றவருக்காக யோசிக்காமல் நடந்துகொள்ளல் இப்படியான குணங்களால் தான் விவாகரத்து ஏற்படுகிறது எனது கருத்து.
 
Top Bottom