மிக எளிமையான சுவையான ரெசிபி. அதுவும் வேகமா செய்வதற்கு அருமை.
எப்பவுமே ஞாயிறு காலைகள் எனக்கு அவசரமானவையாகத்தான் இருக்கும். காரணம், எழும்புவது எட்டுக்கு. ஒன்பது ஒன்பதரைக்குள் கணவருக்குக் காலைச் சாப்பாடு கொடுக்கவேண்டும்.
அதனாலேயே இப்படியான அவசர + சுவையான வகைகளை கண்டுபிடித்து வைத்திருப்பேன்.
கடுகை எண்ணெயில் வெடிக்கவிட்டு பெருஞ்சீரகம்(சோம்பு) சேர்த்து சிவப்பு வெங்காயம் இருந்தால் அது அல்லது இருக்கிற வெங்காயத்தை கண்ட துண்டமா வெட்டிட்டு தூக்கி சட்டிக்க எறிங்க. (சின்ன வெங்காயம் இருந்தா அருமையா இருக்கும்.) பச்சை மிளகாய் அதையும் நறுக்கிக் கடாசுங்க. கறிவேப்பிலை இங்க கிடைக்கிறது கஷ்ட்டம். உங்களுக்கு கிடைச்சா அதையும் தூக்கிப் போடுங்க. சூடான எண்ணெய்க்க கிடந்து துடிக்கட்டும். உள்ளிய மறந்துடாதீங்க மக்கா. அதை மறந்தா வயிறுக்கு நடக்கிற எந்த அசம்பாவிதத்துக்கும் கம்பனி பொறுப்பேற்காது!
இதெல்லாம் நன்றாக வதங்கி வரும்போது ஒரு தக்காளிப்பழத்தையும் இருக்கிற கோபம் போகிற வரைக்கும் வெட்டு வெட்டு எண்டு வெட்டி சட்டிக்க தூக்கிப் போடுங்க. வெங்காயமும் தக்காளியும் ஒன்றாகச் சேர்ந்து குடும்பம் நடத்தட்டும். அந்த ரெண்டும் கண்ணுக்கு மண்ணா ஒன்றுக்க ஒன்றா கலந்தபிறகு சில்லிஃபிளெக்ஸ்(சிவப்பு காய்ந்த மிளகாயை அருவல் நொறுவலாக அரைத்து வைத்திருக்க வேணும். இது பலசமயம் உதவும்) உங்க உறைப்புக்குத் தகுந்தமாதிரி போடுங்க. உப்பு அளவாக. மஞ்சள் கொஞ்சமாகக் கலந்தபிறகு மீன் டின்னை உடைத்துப் போடுங்க. எல்லாம் நன்றாகக் கலந்தபிறகு மிளகுத்தூள் சேர்த்து இறக்கி சற்றே சூடு ஆறியதும் தேசிப்புளி விட்டுட்டுச் சாப்பிட்டுப் பாருங்க என்ன சுவை என்று.
அருமையா இருக்கும்! அதற்கு நான் காரண்டி.
- இன்றைக்கு நான் செய்தது.
பிரெட்டுடன் சாப்பிடலாம். ரொட்டிக்கு நல்லாருக்கும். சுடு சோத்துக்கும் நல்லாருக்கும்.

Last edited: