• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மீன் டின் சம்பல்/பிரட்டல்

நிதனிபிரபு

Administrator
Staff member
மீன் டின் சம்பல்/ பிரட்டல்

1590322456557.png

மிக எளிமையான சுவையான ரெசிபி. அதுவும் வேகமா செய்வதற்கு அருமை.

எப்பவுமே ஞாயிறு காலைகள் எனக்கு அவசரமானவையாகத்தான் இருக்கும். காரணம், எழும்புவது எட்டுக்கு. ஒன்பது ஒன்பதரைக்குள் கணவருக்குக் காலைச் சாப்பாடு கொடுக்கவேண்டும்.

அதனாலேயே இப்படியான அவசர + சுவையான வகைகளை கண்டுபிடித்து வைத்திருப்பேன்.

கடுகை எண்ணெயில் வெடிக்கவிட்டு பெருஞ்சீரகம்(சோம்பு) சேர்த்து சிவப்பு வெங்காயம் இருந்தால் அது அல்லது இருக்கிற வெங்காயத்தை கண்ட துண்டமா வெட்டிட்டு தூக்கி சட்டிக்க எறிங்க. (சின்ன வெங்காயம் இருந்தா அருமையா இருக்கும்.) பச்சை மிளகாய் அதையும் நறுக்கிக் கடாசுங்க. கறிவேப்பிலை இங்க கிடைக்கிறது கஷ்ட்டம். உங்களுக்கு கிடைச்சா அதையும் தூக்கிப் போடுங்க. சூடான எண்ணெய்க்க கிடந்து துடிக்கட்டும். உள்ளிய மறந்துடாதீங்க மக்கா. அதை மறந்தா வயிறுக்கு நடக்கிற எந்த அசம்பாவிதத்துக்கும் கம்பனி பொறுப்பேற்காது!

1590322489596.png

இதெல்லாம் நன்றாக வதங்கி வரும்போது ஒரு தக்காளிப்பழத்தையும் இருக்கிற கோபம் போகிற வரைக்கும் வெட்டு வெட்டு எண்டு வெட்டி சட்டிக்க தூக்கிப் போடுங்க. வெங்காயமும் தக்காளியும் ஒன்றாகச் சேர்ந்து குடும்பம் நடத்தட்டும். அந்த ரெண்டும் கண்ணுக்கு மண்ணா ஒன்றுக்க ஒன்றா கலந்தபிறகு சில்லிஃபிளெக்ஸ்(சிவப்பு காய்ந்த மிளகாயை அருவல் நொறுவலாக அரைத்து வைத்திருக்க வேணும். இது பலசமயம் உதவும்) உங்க உறைப்புக்குத் தகுந்தமாதிரி போடுங்க. உப்பு அளவாக. மஞ்சள் கொஞ்சமாகக் கலந்தபிறகு மீன் டின்னை உடைத்துப் போடுங்க. எல்லாம் நன்றாகக் கலந்தபிறகு மிளகுத்தூள் சேர்த்து இறக்கி சற்றே சூடு ஆறியதும் தேசிப்புளி விட்டுட்டுச் சாப்பிட்டுப் பாருங்க என்ன சுவை என்று.

அருமையா இருக்கும்! அதற்கு நான் காரண்டி.

1590323128153.png - இன்றைக்கு நான் செய்தது.

பிரெட்டுடன் சாப்பிடலாம். ரொட்டிக்கு நல்லாருக்கும். சுடு சோத்துக்கும் நல்லாருக்கும்.
 
Last edited:

Sowdharani

Well-known member
வெங்காயம் தக்காளி எல்லாம் குடும்பம் நடத்த சொல்லுற எல்லாம் அட கடவுளே....

அக்கா பாக்கவே super யா இருக்கு...
 
Rena

Active member
நா பல சமயம் இப்படிதான் போடுவேன் .டக் டக்னு முடிச்சுட்டு எல்லோருக்கும் மதிய உணவு பார்சல் பண்ணிட்டு காலை சாப்ட வச்சு நானும் ரெடி ஆகுறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடும்.வேன நிக்க வைக்காம ரெடி ஆகுறதே கின்னஸ் சாதனை எனக்கு.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
வெங்காயம் தக்காளி எல்லாம் குடும்பம் நடத்த சொல்லுற எல்லாம் அட கடவுளே....

அக்கா பாக்கவே super யா இருக்கு...

ஹாஹா... சிம்பிள் தான் தாரணி. ஆனாம்மா சூப்பரா இருக்கும்.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
நான் ட்ரை செய்தேன் அக்கா.. கொஞ்சம் dry பண்ணிட்டேன். :( பட் செம ? நன்றிகள் பல ?

View attachment 619

வாவ்! பாக்கவே எனக்கு திரும்பச் செய்யவேணும் மாதிரி இருக்கு. சூப்பர் சூப்பர்!
 
நிதனிபிரபு

Administrator
Staff member
நா பல சமயம் இப்படிதான் போடுவேன் .டக் டக்னு முடிச்சுட்டு எல்லோருக்கும் மதிய உணவு பார்சல் பண்ணிட்டு காலை சாப்ட வச்சு நானும் ரெடி ஆகுறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடும்.வேன நிக்க வைக்காம ரெடி ஆகுறதே கின்னஸ் சாதனை எனக்கு.
மின்னலுக்கே டஃப் பான போட்டியாளர்கள் நாங்களாச்சே. இதுக்க உருளைக்கிழங்கு கொஞ்சமா ஃபிரை பண்ணி போட்டு சோறை போட்டு பிரட்டிட்டு ஒரு முட்டையை அவிச்சு வச்சாலுமே மதிய சாப்பாடு ஓவர்! ஹாஹா.. சீரியஸாவே சூப்பரா இருக்கும்.
 
Shruti

Moderator
Staff member
வாவ்! பாக்கவே எனக்கு திரும்பச் செய்யவேணும் மாதிரி இருக்கு. சூப்பர் சூப்பர்!
நான் சமைச்சதே ஒரு காமெடி.. அதையும் பாராட்டுற மனசு இருக்கே ?
 
Rena

Active member
மின்னலுக்கே டஃப் பான போட்டியாளர்கள் நாங்களாச்சே. இதுக்க உருளைக்கிழங்கு கொஞ்சமா ஃபிரை பண்ணி போட்டு சோறை போட்டு பிரட்டிட்டு ஒரு முட்டையை அவிச்சு வச்சாலுமே மதிய சாப்பாடு ஓவர்! ஹாஹா.. சீரியஸாவே சூப்பரா இருக்கும்.
ம் சூப்பராதான் இருக்கும்.என்னவருக்கு சாம்பார்,ரசம்,தயிர்,... எல்லாம் வைக்கனும் .ஏதாவது ஒரு நாள் வெரைட்டி ரைஸ் வச்சாலே சாப்ட மாட்டிங்குறார்.என்ன செய்ய...:unsure:
 
நிதனிபிரபு

Administrator
Staff member
ம் சூப்பராதான் இருக்கும்.என்னவருக்கு சாம்பார்,ரசம்,தயிர்,... எல்லாம் வைக்கனும் .ஏதாவது ஒரு நாள் வெரைட்டி ரைஸ் வச்சாலே சாப்ட மாட்டிங்குறார்.என்ன செய்ய...:unsure:
நீங்க அண்ணாக்கு குடுத்த ட்ரைனிங் காணாது. ஹாஹா...
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom