• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சேலை சேலையானது எப்படி?

நிதனிபிரபு

Administrator
Staff member


தாவர நார்களை அல்லது விலங்கு மயிர்களைச் சிரை(/லை)த்து, நூலாக்கி, பின் நெய்ந்து, பெற்றது சீரை/ சீலை. இது சீலை> சேலை எனத் திரியும்.

-------------------------------------------------------
ஆட்டு மயிராலும், எலி மயிராலும், பட்டு நூலாலும் நெய்யப்பட்ட துணிகளை ஒரு காலத்தில் நூலாக் கலிங்கம் என்றழைத்தார்.
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ என்பது பதிற்றுப்பத்தின்.12 ஆம் பாடலில் வரும்.

விலங்கு மயிர் என்பது உடம்பின் மேலாடைக்கு மட்டும் அல்ல. தரையில் விரிக்கும் கம்பலத்திற்கும் உண்டு., ”கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம்” என்பது - நற் 24/4.

தவிர நம்மூரில் எல்லாமே சூடான இடங்கள் அல்ல. கோடைக்கானல், ஒற்றைக்கல் நந்து என்பன பழங்காலத்திலும் உண்டு. அங்கு ஆண்டிற்கு 4,5 மாதங்கள் குளிர் தான். விலங்கு மயிராடை அங்கு பயன்படும். பட்டு என்பது பூச்சியில் கிடைப்பது. அதையும் சங்க காலத்தில் பயன்படுத்தியது உண்டு


சீலைக்கும் சிலைக்குமான வித்தியாசம்:
ஒரு கல்லில் சிறு, சிறு துண்டுகளைச் சில்லி எடுப்பது சிலைத்தலாகும். சிலை என்ற சொல் சிற்பத்தைக் குறிக்கும். உளி கொண்டு வேண்டாத பகுதியைச் சிலைத்து, வேண்டும் பகுதியைக் கொண்டது சிலை ஆகும். தாவர நார்களை, விலங்கு மயிரைச் சிலைத்ததைச் சிரைத்தல் என்று சொல்வோம்

இராம கி அவர்களின் முகப்புத்தகத்தில் இருந்து பெற்றது.
 
Last edited:
Top Bottom