ஒரு நாள் கடந்து அடுத்த நாள் பிறக்கையில் புது வருடம் என்கிறோம். எதிலும் பெரிய மாற்றங்கள் இருக்கப் போவதில்லை. அதே நாம், அதே நாளாந்த வாழ்வின் ஓட்டம், அதே பிரச்சனைகள் என்று எல்லாம் அதேதான். அது தெரிந்தாலும் கூட ஏதாவது ஒன்று சிறப்பாக அமைந்துவிடாதா, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட மாட்டோமா, பிறந்திருக்கும் வருடம் மாற்றங்களைத் தந்துவிடாதா என்று ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு உருவாகிவிடுவதைத் தவிர்த்துவிட முடிவதில்லை. அப்படித்தான் எனக்கும் இருந்தது. அப்படி இருக்கையில்தான் புது வருடத்தின் தித்திப்பாய் இந்தப் பேட்டி.
எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும் நாம் பிறந்து வளர்ந்த நம் தாய் மண் நம் திறமையை இனம் கண்டு, தோள் தட்டித் தருகையில் கிடைக்கும் நிறைவுக்கும் நெகிழ்வுக்கும் அளவேது?
அப்படியானதொரு தருணம்தான் இது.
அன்புச் சகோதரி சர்மிலா வினோதினி அவர்கள் அவள் ஆரணி நாவலை வாசித்து, பொருள் பொதிந்த கேள்விகளை எழுப்பி இருந்தார். அதுவே என்னை மனம் திறந்து பேச வைத்திருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்தித் தந்திருப்பது என் எழுத்து என்கையில் அதன் மீது நான் செலுத்தவேண்டிய கவனமும் எனக்கான பொறுப்பும் இன்னுமே அதிகரித்திருப்பதை உணர்கிறேன்.
IBC தொலைக்காட்சிக்கும், சகோதரி சர்மிலா வினோதினிக்கும் இதயம் நிறைந்த நன்றி!