அத்தியாயம் 24
கணவன் இந்தளவில் தன்னைத் தண்டிப்பான் என்று இளவஞ்சி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் பேசியது தவறுதான்.
அதுவும் இறுகிப்போய் இருந்தவளைத் தன் நேசத்தால் மட்டுமே ஆராதித்த அவனைப் பார்த்து அவள் அப்படிச் சொல்லியிருக்கவே கூடாது. அதற்காக இந்தக் கணம் வரையிலும் வருந்துகிறாளும் கூட.
அவனும் கோபப்பட்டிருக்கலாம். இப்படி இனிமேலும் நீ பேசக் கூடாது என்று கடுமையாகக் கண்டித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அவளைத் திரும்பியும் பாராமல் இருக்கிறானே.
பார்க்க வரவில்லை. அவளுக்கு அழைக்கவில்லை. ஒரு குறுந்தகவல் கூட இல்லை. முற்றிலுமாகத் தள்ளி நின்று அவளை அவனுக்காக ஏங்க வைக்கிறான். அதுதான் வலித்தது.
தான் இந்தளவில் பலகீனமானவளா என்று அவளால் நம்பவே முடியவில்லை. அந்தளவில் சதா தொண்டை அடைத்துக்கொண்டிருந்தது. கண்கள் கரித்தன. அடிக்கடி தொண்டையைச் செருமியும், தண்ணீரைப் பருகியும் தன்னைச் சமாளித்துக்கொண்டிருக்கிறாள்.
அவளே அவனைப் போய்ப் பார்க்கலாம் என்றால் ஒன்றில் அவன் வீட்டிற்கு போக வேண்டும். இல்லையா சக்திவேலுக்குப் போக வேண்டும். இரண்டிற்கும் போக விருப்பமில்லை. தானாக அவனுக்கு அழைக்கவும் வரமாட்டேன் என்றது. அவனாகக் கோபம் விடுத்து வரமாட்டானா என்று தவிக்க ஆரம்பித்தாள்.
அந்த வாரம் முழுக்க ஆன உறக்கமில்லை. பால்கனியில் கிடக்கும் கூடையே தஞ்சமாயிற்று. உடலில் உற்சாகம் என்பது மருந்துக்கும் இல்லை. ஆனால், அறைக்குள் முடங்கிக் கிடக்க முடியாதே. மனமே இல்லாமல் எழுந்து தயாராகி அவள் கீழே வந்தபோது உள்ளே வந்துகொண்டிருந்தான் நிலன்.
அப்படியே நின்றுவிட்டாள் இளவஞ்சி. அவனையே பார்த்தாள். என்னவோ நீண்ட நெடிய வருடங்களின் பின் பார்ப்பதுபோல் ஒரு உணர்வு. இத்தனை நாள்களும் என்னைப் பார்க்க வராமல் எங்கே போனாய் என்று கத்துகிற அளவுக்கு ஆத்திரமும் அழுகையும் சேர்ந்து வந்தன.
இதற்குள் மகளுக்காகக் காலை உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஜெயந்தி அவனைப் பார்த்துவிட்டார். சட்டென்று முகம் மலர, “தம்பி வாங்கோ. உங்களைக் காணவே இல்லை எண்டு இவர் சொல்லிக்கொண்டிருந்தவர். வாங்கோ நீங்களும் சாப்பிடலாம்.” என்று அவனை வரவேற்றுவிட்டு,
“என்னம்மா பாத்துக்கொண்டு நிக்கிறாய். கூப்பிடு!” என்று அவளையும் உசுப்பி விட்டுவிட்டார்.
அன்னை முன்னே எதையும் காட்டிக்கொள்ளாமல், “வாங்க!” என்றவள் அவன் வந்து அமர்ந்ததும் தானே அவனுக்குப் பரிமாறினாள். தனக்கும் போட்டுக்கொண்டு அவனருகிலேயே அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.
இதற்குள் ஜெயந்தி போய்ச் சொன்னதில் பாலனின் துணையுடன் சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர்ந்தார் குணாளன்.
“வாங்கோ தம்பி. கொழும்புப் பயணம் எல்லாம் நல்லா இருந்ததோ?” என்றவரின் கேள்வியில் வேகமாய்த் திரும்பிக் கணவனைப் பார்த்தாள் இளவஞ்சி.
அதை உணர்ந்தாலும் பெரியவர்கள் முன் எதையும் காட்டிக்கொள்ளாமல், “ஓம் மாமா. ஒரு பிரச்சினையும் இல்ல.” என்றான் அவன்.
“குறையா நினைக்காதீங்கப்பு. எங்க உங்களை ஒரு கிழமையா காணவே இல்லையே எண்டுதான் நேற்று எடுத்துக் கேட்டனான். உடனேயே நீங்க வந்தது சந்தோசம். நான் ஒண்டும் தொந்தரவு தரேல்லையே?” என்றதும் உணவை வாய்க்குள் கொண்டுபோன இளவஞ்சியின் கை அப்படியே நின்றுபோயிற்று.
ஆக அவனாக வரவில்லை. அவளுடைய தந்தை அழைத்து விசாரித்ததில்தான் வந்திருக்கிறான். அதுவும் முதல் நாள் இரவு வந்தால் அவளோடு தங்க நேரிடும் என்பதில் காலையில் வந்திருக்கிறான். தன் கோபத்தை அவளிடம் அப்படியே தொடர்ந்துகொண்டு மாமனாருக்கு நல்ல மருமகனாகவும் நடந்துகொள்கிறான்.
சட்டென்று தன் முன்னே இருந்த தண்ணீர் குவளையை எடுத்து முழுவதுமாக அருந்தினாள். அதற்குமேல் உணவு இறங்கவில்லை. ஒரு வாரம் கழித்து என்றாலும் என்னைப் பார்க்க வந்துவிட்டான் என்கிற மகிழ்ச்சி துணி கொண்டு துடைத்தாற்போல் மறைந்து போயிற்று. இதற்கு அவன் வராமலேயே இருந்திருக்கலாம்.
“அப்பிடி எல்லாம் ஒரு தொந்தரவும் இல்லை மாமா. எப்ப எண்டாலும் நீங்க எடுங்கோ.” என்று குணாளனுக்குப் பதில் சொன்னாலும் அவளை நிலன் கவனிக்காமல் இல்லை. பெரியவர்கள் முன் எதுவும் சொல்ல முடியாமல் பேசாமல் இருந்தான்.
“சந்தோசம் தம்பி. நீங்க பிஸி, அதான் வரேல்ல எண்டு மகள் சொன்னவாதான். எண்டாலும் சுகம் விசாரிக்காம இருக்கக் கூடாது எண்டுதான் எடுத்தனான்.” என்று அவரும் சமாளித்தார்.
குணாளனுக்கு இளவஞ்சியைத் தெரியும். என்ன நடந்தாலும் திடமாக இருக்கிற பெண். அந்த வாரம் முழுக்க தொழிற்சாலைக்குச் செல்வதிலோ, வேலைகளிலோ எந்த மாற்றமும் இல்லாதபோதிலும் அவள் முகத்தில் தெரிந்த வாட்டத்தைக் கண்டுகொண்டார்.
நிலனும் இங்கு வரவில்லை என்றதும் அவளிடம் விசாரித்தார். அவள் எதையும் சொல்லத் தயாராயில்லை. அதன் பிறகுதான் அவனுக்கு அழைத்திருந்தார். அவன் உடனேயே வந்ததில் பெரும் ஆறுதல்.
அதுவும் விசாகனை அவள் காரை எடுத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவளை அவன் தன் காரில் அழைத்துக்கொண்டு போவதைக் கண்ட பிறகே நிம்மதியானார்.

Last edited: