• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அந்தக் காலம்

Mohanan

New member
அதுவொரு காலம் அழகிய காலம்.

காலமையில எழும்பி வயற்
காட்டு குளத்துக்கை குளிப்பம்
ஆலமர நிழலுக்கை இருந்து
அரட்டை பைம்பல் அடிப்பம்
மாலையில விளையாடிப் போட்டு
மணிக்கணக்கா இருந்து கதைப்பம்
சோலையெண்டு சொன்னா அது
சோக்கான கிராமம் தான்.

அந்த நாட்களிலை நாங்கள்
அயலோடை கூடியிருந்து
வந்த விருந்தாளிகளை நல்லாய்
வரவேற்று உபசரித்து
பந்தங்களோடை அரட்டையடித்து
பாசமாய் கதைபேசி
சொந்தமாய் இருந்த குடிசையளிலை
சொகுசாய் வாழ்ந்தனாங்கள்.

இந்த காலத்து மனிசர்
இங்கிதம் தெரியாமல்
சொந்த பந்தத்தையும் மதிக்காமல்
சொகுசான மாடி வீட்டிலை
மந்தமான வாழ்க்கையைத் தானே
மகிழ்ச்சி என்று சொல்லுதுகள்
அந்த காலத்திலை இருந்த
அற்புதங்கள் இதுகளுக்கு தெரியாது.

இரவு சோத்துக்கை தண்ணிவிட்டு
விடிய அதைப்பிழிஞ்சு வாற
திரவத்தை தேத்தண்ணிக்கு பதிலா
தீதின்றி குடிச்சிட்டு சம்பல்
அரைச்சு வெங்காயமும் சே(ர்)த்து
அந்த சோத்தோடை சாப்பிடுவம்
மரபுகள் அழிஞ்சதால இப்ப அந்த
மனிசரும் இல்லாம போயிட்டினம்.

மீன்குழம்பு மிஞ்சிப் போனால்
மீதியை அடுப்படியில வைச்சிட்டு
வான்வெளிச்சதும் அதையெடுத்து
வடிவாய் கொதிக்கவைச்சு சூடாக்கி
நான் நீயெண்டு அடிச்சுப்பிடிச்சு
நாவூற வயிறுமுட்ட தின்பம்
ஏன் இதெல்லாம் மாறிப்போச்சுதெண்டு
ஏங்குது என்ரை மனசு.

அப்பேக்கை நாங்கள் எல்லாம்
அளவாய்த் தான் சாப்பிடுவம்
இப்ப இருக்கிறதுகள் போல
எல்லாத்தையும் சாப்பிட மாட்டம்
எப்பன் எண்டாலும் சாப்பாட்டை
ஏழைகளுக்கும் குடுப்பம்
தப்பித் தவறியும் எங்கடை
தாராள மனசை மாத்தமாட்டம்.

அம்மாக்கள் பிள்ளையளுக்கு அரை
அவியல்முட்டை சத்தெண்டு குடுக்க
நம்பாத சிறுசுகள் அதைத்தின்னாமல்
நச்சரித்து அடம்பிடிச்சாலும்
"சும்மா கிட"வென்று சொல்லி
தீத்தி விடுவினம்-அந்த
கும்மாளம் கூத்தெல்லாம் இப்ப
குடி முழுகிப் போச்சு.

அதையெல்லாம் இப்ப நினைச்சா
அழுகை தான் வருது
பதைபதைச்சு துடிக்கிற என்ர
பக்குவமான மனசு இப்ப
இதையெல்லாம் கதையளில மட்டும்தான்
இனங்கண்டு பரிதவிக்குது-இந்த
கதையளும் ஒருநாள் நவீனத்தோடை
கலந்து அழிஞ்சு போகலாம்.
(21-01-2019)FB_IMG_1548746262889.jpg
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அதுவொரு காலம் அழகிய காலம்.

காலமையில எழும்பி வயற்
காட்டு குளத்துக்கை குளிப்பம்
ஆலமர நிழலுக்கை இருந்து
அரட்டை பைம்பல் அடிப்பம்
மாலையில விளையாடிப் போட்டு
மணிக்கணக்கா இருந்து கதைப்பம்
சோலையெண்டு சொன்னா அது
சோக்கான கிராமம் தான்.

அந்த நாட்களிலை நாங்கள்
அயலோடை கூடியிருந்து
வந்த விருந்தாளிகளை நல்லாய்
வரவேற்று உபசரித்து
பந்தங்களோடை அரட்டையடித்து
பாசமாய் கதைபேசி
சொந்தமாய் இருந்த குடிசையளிலை
சொகுசாய் வாழ்ந்தனாங்கள்.

இந்த காலத்து மனிசர்
இங்கிதம் தெரியாமல்
சொந்த பந்தத்தையும் மதிக்காமல்
சொகுசான மாடி வீட்டிலை
மந்தமான வாழ்க்கையைத் தானே
மகிழ்ச்சி என்று சொல்லுதுகள்
அந்த காலத்திலை இருந்த
அற்புதங்கள் இதுகளுக்கு தெரியாது.

இரவு சோத்துக்கை தண்ணிவிட்டு
விடிய அதைப்பிழிஞ்சு வாற
திரவத்தை தேத்தண்ணிக்கு பதிலா
தீதின்றி குடிச்சிட்டு சம்பல்
அரைச்சு வெங்காயமும் சே(ர்)த்து
அந்த சோத்தோடை சாப்பிடுவம்
மரபுகள் அழிஞ்சதால இப்ப அந்த
மனிசரும் இல்லாம போயிட்டினம்.

மீன்குழம்பு மிஞ்சிப் போனால்
மீதியை அடுப்படியில வைச்சிட்டு
வான்வெளிச்சதும் அதையெடுத்து
வடிவாய் கொதிக்கவைச்சு சூடாக்கி
நான் நீயெண்டு அடிச்சுப்பிடிச்சு
நாவூற வயிறுமுட்ட தின்பம்
ஏன் இதெல்லாம் மாறிப்போச்சுதெண்டு
ஏங்குது என்ரை மனசு.

அப்பேக்கை நாங்கள் எல்லாம்
அளவாய்த் தான் சாப்பிடுவம்
இப்ப இருக்கிறதுகள் போல
எல்லாத்தையும் சாப்பிட மாட்டம்
எப்பன் எண்டாலும் சாப்பாட்டை
ஏழைகளுக்கும் குடுப்பம்
தப்பித் தவறியும் எங்கடை
தாராள மனசை மாத்தமாட்டம்.

அம்மாக்கள் பிள்ளையளுக்கு அரை
அவியல்முட்டை சத்தெண்டு குடுக்க
நம்பாத சிறுசுகள் அதைத்தின்னாமல்
நச்சரித்து அடம்பிடிச்சாலும்
"சும்மா கிட"வென்று சொல்லி
தீத்தி விடுவினம்-அந்த
கும்மாளம் கூத்தெல்லாம் இப்ப
குடி முழுகிப் போச்சு.

அதையெல்லாம் இப்ப நினைச்சா
அழுகை தான் வருது
பதைபதைச்சு துடிக்கிற என்ர
பக்குவமான மனசு இப்ப
இதையெல்லாம் கதையளில மட்டும்தான்
இனங்கண்டு பரிதவிக்குது-இந்த
கதையளும் ஒருநாள் நவீனத்தோடை
கலந்து அழிஞ்சு போகலாம்.
(21-01-2019)View attachment 309
உண்மையான வரிகள் ...கடைசியில் வாசிக்கையில்...ம்ம் ..இதையெல்லாம் அனுபவித்த தலைமுறைக்குப் பிறகு கதைகளில் வருபவை எந்தளவுக்கு உணரப்படும்? ம்ம் அழிந்துதான் போகுமோ! ..

தொடர்ந்து எழுதுங்க மோகனன் .

வாழ்த்துகளும் நன்றியும்
 
Top Bottom