• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே! - 1

knirmala

New member
“சரியப்பா எனக்கு நேரமாகுது.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

அவர் கேள்விப்பட்டது போன்று கடந்த சில வருடங்களாக தொழிலில் நெருக்கடித்தான். பல சறுக்கல்கள். நடக்கிற அத்தனை பிரச்சனைகளும் அவளின் அனுபவத்திற்கும் திறமைக்கும் சவால் விட்டுக்கொண்டேயிருந்தன.

முக்கியமாக அவள் கை தட்டிப் போகிற அத்தனை வாய்ப்புகளும் எதிராளியின் கைக்குப் போய்க்கொண்டிருந்தன.

இலங்கை முழுவதும் பல கிளைகள் பரப்பிப் படர்ந்திருந்த ஆடையாகங்கள் பல இத்தனை காலமும் அவளின் வாடிக்கையாளராக இருந்தவர்கள். இப்போது அவளின் எதிரியின் கைவசம் போய்க்கொண்டிருந்தனர். அல்லது, இவர்களிடம் கொடுக்கும் ஆர்டரின் அளவு குறைந்திருந்தது.

அம்மா ஜெயந்தி முழுமையான இல்லத்தரசி. அவரின் ஒரே கவலை இவள் 28 வயதாகியும் திருமணம் செய்யாமல் தொழில் தொழில் என்று இருக்கிறாளே என்பதுதான். தந்தை மனத்தளவிலும் உடலளவிலும் நொடிந்துபோயிருப்பவர்.

அவர்களிடம் தொழில்பற்றிய எந்தக் கெட்டதுகளை அவள் கொண்டுபோவதில்லை. முதலில் அவளுக்கு அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கத் தெரியாது.

அவளுக்கு உதவிக்கு வரும் சுவாதிக்கு கூட இதைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிவதற்கு பார்க்கும் வேலையில் ஒரு ஆர்வமும் ஈடுபாடும் வேண்டும். தமக்கை என்ன செய்கிறாள் என்கிற கவனிப்பு இருக்க வேண்டும். இது படிப்பை முடித்துவிட்டேன், அக்கா வராகி சொல்கிறாள் என்று வருகிறவன் இவள் சொல்கிறவற்றை மட்டும் கடமைக்கு முடித்துவிட்டுப் போய்விடுவாள்.

அதனால் அத்தனை நெருக்கடிகளையும் இளவஞ்சி தனியொருத்தியாகத்தான் தாண்ட வேண்டும். குறைந்துபோயிருக்கும் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். அதற்கான ஒரு வழியாகத்தான் இன்று இரவு கொழும்பு போகிறாள்.

தையல்நாயகி அம்மாவின் காலத்திலிருந்தே பழக்கமானவர்தான் முத்துமாணிக்கம். அங்கே கொழும்பில் அவரும் கார்மெண்ட்ஸ்தான் வைத்திருக்கிறார். பிள்ளைகள் இருவரும் அவுஸ்திரேலியாவில் இருப்பதில் மனைவியோடு தானும் அங்கே சென்றுவிட முடிவெடுத்தவர், கார்மெண்ட்ஸை விற்கலாமா என்று யோசிப்பதை அவளிடம்தான் முதன்முதலில் சொன்னார்.

அவளுக்கு அத்தனை ஆனந்தம். அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்னிடம்தான் முதன்முதலில் சொல்ல வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவரும் முடிவானதும் அவளிடமே சொல்ல, விலை பேசி முடிக்க வருவதாகச் சொல்லியிருந்தாள். அவரும் அவளின் முடிவை அறிந்தபிறகுதான் முறையாக வெளியே அறிவிப்புப் போடுவதாகச் சொல்லியிருந்ததில் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தாள் இளவஞ்சி.

அந்தக் காலத்திலேயே ஒரு பெண்ணாகத் தனித்தியங்கி சாதித்த பெண்மணியான தையல்நாயகி மீது அலாதியான மரியாதை கொண்டவர் முத்துமாணிக்கம். அவரைப் போலவே அவரின் பேத்தியும் என்பதில் இவள் மீது பிரத்தியேகமான வாஞ்சை கொண்டவர்.

அவளுக்கும் நியாயமில்லாத விலை கேட்கும் எண்ணமில்லை. அவரும் அதிகவிலை சொல்லப்போவதில்லை என்கையில் இது கைகூடும் என்கிற நம்பிக்கையில் இருந்தால் இளவஞ்சி.

அன்று மதியமே விசாகனை வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுக்கச் சொன்னவள் திட்டமிட்டது போலவே இரவு பத்துமணிக்கு அவளின் பிஏ ஆனந்தி சகிதம் விசாகனோடு கொழும்புக்குப் புறப்பட்டிருந்தாள்.

எப்போதும் கொழும்பு வந்தால் தங்கும் நம்பிக்கையான உயர்ரக ஹோட்டலில் தங்கி, குட்டியாக இளைப்பாறி, புத்துணர்ச்சியோடு தயாராகி முத்துமாணிக்கம் வீட்டிற்குச் சென்றவளை, வாசலுக்கே வந்து வரவேற்றனர் முத்துமாணிக்கமும் அவர் துணைவியார் இராசம்மாவும்.

“அப்பிடியே தையல்நாயகியப் பாத்தா மாதிரியே இருக்கிறீங்கம்மா. அதே கம்பீரம். அதே நிமிர்வு. அதே தைரியம்.” அவளை பார்த்த கணம் விழிகள் இலேசாகப் பனித்துவிட வாஞ்சையுடன் சொன்னார் மனிதர்.

தையல்நாயகி அம்மாவை அறிந்த பலரும் இதையே சொல்லக் கேட்டிருந்தவள் அழகான முறுவலோடு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டாள்.

“நீங்க வாறீங்க எண்டு சொன்னதில இருந்து இதே தானம்மா கதை. இவர் உங்கட அப்பம்மாவை சைட் அடிச்சாரோ எண்டு எனக்குச் சந்தேகமா இருக்கு.” என்றபடி அவளுக்குக் காலை உணவைப் பரிமாறினார் இராசம்மா.

இருவருமே 65க்கும் இழுப்பதற்கும் இடைப்பட்டவர்கள். அப்படியிருக்க அவர்களின் பேச்சு மூட்டிய சிரிப்புடன், “அப்பிடியா அங்கிள்?” என்றாள் இளவஞ்சி.

“நான் ஏன் பொய் சொல்லப்போறன்? நான் ப்ரப்போஸ் பண்ண முதல் தையல்நாயகி கட்டிட்டா. இல்லாட்டி அவவத்தான் கட்டியிருப்பன். அப்பிடி ஒண்டு நடந்திருந்தா இந்தக் கொடுமைக்காரக் கிழவிட்ட இருந்து விடுதலை கிடைச்சிருக்கும். எங்க?” என்று அவர் பெருமூச்சு விட்டார்.

முகத்தை வெட்டிவிட்டு, “அவாவை மாதிரி கெட்டிக்காரி எல்லாம் இவரைத் திரும்பிப் பாத்திருப்பாவோ எண்டு கேளுங்கோம்மா. என்னவோ நானா இருக்கப்போய் தெரியாத்தனமா கட்டிட்டனே எண்டு வச்சு வாழுறன்.” என்று இவளை நடுவில் வைத்து அவர்கள் செல்லச் சண்டை இட்டுக்கொள்ள, அப்பம்மாவும் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருகணம் கலங்கிப்போனாள் இளவஞ்சி.

ஆனாலும் சமாளித்துக்கொண்டு உணவை முடித்தாள்.

அவர் கார்மெண்ட்ஸ்க்கு சொன்ன தொகை சற்று அதிகமாக இருக்க, “கூடவா இருக்கே அங்கிள்.” என்றாள் மனத்தை மறைக்காமல்.

“சக்திவேல் கார்மெண்ட்ஸ்சின்ர காத்துக்குப் போனா இதவிடக் கூடத் தந்து வாங்குவினம்.” என்றார் அவர்.

மறைமுக மிரட்டல். கை தேர்ந்த வியாபாரி இல்லையா? அவளும் சளைத்தவளா என்ன?

“அது நான் போட்டிக்கு நிக்கிறன் எண்டு தெரிஞ்சாத்தான் அங்கிள். எனக்கு வேண்டாம் எண்டு நான் சொன்னா நான் கேக்கிறதில பாதிதான் கேப்பினம்.” என்று முறுவலித்தாள் அவள்.

அதிலிருக்கும் உண்மையில், “கெட்டிக்காரிதான்.” என்று சொல்லிச் சிரித்தார் முத்துமாணிக்கம்.

“ஆனாம்மா பாரம்பரியமான கார்மெண்ட்ஸ் எங்கட. இதால காலத்துக்கும் நீங்க லாபம் மட்டும்தான் பாப்பீங்க. அப்பிடியிருக்க நான் சொல்லுற தொகையக் குடுக்கிறதால உங்களுக்கு நாட்டம் வரப்போறேல்ல. காலம் முழுக்க வரப்போற அந்த லாபத்தோட பாக்கேக்க நான் சொல்லுற தொகை ஒன்றுமே இல்லை.” என்று அவரும் விடுவதாக இல்லை.
“உண்மைதான் அங்கிள். ஆனா நீங்க சொன்ன சக்திவேல் கார்மெண்ட்ஸ் இத வாங்கினா உங்கட பெயர் இருக்குமா எண்டு யோசிங்க. இதுவும் சக்திவேல் கார்மெண்ட்ஸா மாறிடும். ஆனா நான் உங்கட பெயரை மாத்த மாட்டன். சோ உங்கட பெயரும் அதுக்குண்டான மரியாதையும் காலத்துக்கும் இருக்கும். அதை யோசிங்க.”

அந்தப் பெயர் அவருக்கு முக்கியம்தான். தையல்நாயகி கூட அவர் காலத்தில் அவர்களின் வீட்டிலேயே தொழிலை ஆரம்பித்து அதைப் பெரிதாக்கியவர்.

முத்துமாணிக்கமும் சக்திவேலும் அப்படியன்று. வெள்ளைக்காரனின் காலத்திலிருந்தே கடல் கடந்து சென்று துணிமணிகளைக் கொண்டு வந்தும், நெசவு செய்தும் தொழில் செய்தவர்கள். அதனாலேயே அவருக்கு அவர் பெயர் நிலைத்திருப்பது முக்கியம்தான்.

“நல்லா யோசிங்க அங்கிள். உங்களிட்ட இருக்கிற மெஷின்ஸ் எல்லாம் பழசு. அது இன்னும் எத்தின நாளைக்கு உழைச்சுத் தரும் எண்டு தெரியாது. அதைவிட நான் புது மெஷின்ஸ்தான் போடுவன். நீங்க பழமை மாறாம அப்பிடியே வச்சிருக்கிறீங்க. எனக்கு அது செட்டாகாது. அதுக்கும் நான் காசு போடோணும். ஆனாலும், அறா விலைக்கு நான் கேக்கேல்லை. உங்களுக்கும் எனக்கும் நியாயமான விலைதான் இது.”

அவர் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தபோதிலும் தொழில் என்று வந்தபிறகு நேர்த்தியாகவும் தெளிவாகவும் பேசினாள் அவள்.

அவள் சொன்ன அத்தனையும் உண்மை என்பதை அவரும் அறிவார். இதை விற்றுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்ததில் இருந்தே அதன் மீதான கவனிப்பைக் குறைத்திருந்தார்தான்.

அதில், “எதுக்கும் பொறுங்கோம்மா. மகனாக்களோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்றுவிட்டு உள்ளே சென்றவர் அரை மணி நேரத்தில் திரும்பி வந்தபோது முகம் முழுக்கச் சிரிப்போடு வந்தார்.

“தம்பியாக்களுக்கும் ஓக்கேயாம். அப்ப அந்த விலையையே முடிப்பம்.” என்று அவர் சொன்னதும் அவள் முகமும் மலர்ந்துபோயிற்று.

“உறுதியான முடிவுதானே அங்கிள்? நான் நம்பி இதுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்தானே?”

“உறுதியான முடிவுதானம்மா. முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸ் இனி உங்களுக்குத்தான். தேவையான ஏற்பாடுகளைப் பாருங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார் அவர்.

நிறைய நாள்களுக்குப் பிறகு அவள் உள்ளம் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ரெயின்கோட் தயாரிப்பில் இறங்கி, குடை, வாகனங்களை மூடப் பயன்படுத்தும் ரெட் என்று அதை வளர்த்து, அதில் ஒரு பிராண்ட் நிறுவ வேண்டும் என்பது அவளின் நெடுநாள் ஆசை.

இனி அது நிறைவேறிவிடும். தலைநகரில் இயங்கப்போகும் கார்மெண்ட்ஸ் அவளின் வளர்ச்சியைப் பலபடிகள் ஏற்றிவிடப் போகிறது. அவள் போகிற பக்கமெல்லாம் காலைப் பிடித்து இழுத்துவிடுகிறவர்களுக்கு என் உயரத்தைப் பார் என்று காட்ட வேண்டும்.

அப்போதே அதற்கான திட்டங்கள் அவள் உள்ளத்தில் கடகடவென்று உதயமாக ஆரம்பிக்க, ஐபாடை எடுத்துவைத்து அவற்றைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

ஆனால், அடுத்தநாள் காலையே அவளுக்கு அழைத்த முத்துமாணிக்கம் அவளிடம் மன்னைப்பைக் கேட்டுவிட்டு, அவள் கேட்ட தொகையை விடவும் அதிக தொகையில் சக்திவேல் கார்மெண்ட்ஸ் கேட்டதாகவும், மகன்கள் அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துவிட்டதாகவும் சொல்ல அப்படியே அமர்ந்துவிட்டாள் இளவஞ்சி.

“அவேக்கு எப்பிடித் தெரியும் அங்கிள்? ஆர் கதைச்சதாம்?”

“நிலன் கதைச்சவனாம்.”

“ஓ!” என்றவளுக்கு மேலே பேசக்கூட முடியவில்லை. நீங்கள் சொன்ன வார்த்தை என்னாயிற்று என்றுகூட அவள் கேட்கவில்லை.

எல்லாமே கைமீறிப் போனபிறகு எதைக் கேட்டு என்ன பலன்?

நிலன் பிரபாகரன்! கடந்த சில வருடங்களாக அவளின் சறுக்கல்கள் எல்லாவற்றுக்கும் காரணமாயிருப்பவன்.

தொடரும்…

கமெண்ட்ஸ் அண்ட் லைக் போட மறந்துடாதீங்க மக்களே.
Super starting
 
indu4

Member

மிக கம்பீரமான தொடக்கம் நிதா சிஸ்
 
thilagasri

Anti hero story
 
K sathiyabhama

New member
“சின்ன சின்ன சறுக்கல் வாறதெல்லாம் ஒரு விசயமாப்பா? அதைக் கூடச் சமாளிக்கத் தெரியாட்டித் தையல்நாயகின்ர பேத்தி எண்டு சொல்லுறதிலேயே அர்த்தமில்லாமப் போயிடும்.” என்றவள் அதற்குமேல் அதைப் பற்றிப் பேச அவரை அனுமதிக்கவில்லை.

“சரியப்பா எனக்கு நேரமாகுது.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

அவர் கேள்விப்பட்டது போன்று கடந்த சில வருடங்களாகத் தொழிலில் நெருக்கடித்தான். பல சறுக்கல்கள். நடக்கிற அத்தனை பிரச்சனைகளும் அவளின் அனுபவத்திற்கும் திறமைக்கும் சவால் விட்டுக்கொண்டேயிருந்தன.

முக்கியமாக அவள் கை தட்டிப் போகிற அத்தனை வாய்ப்புகளும் எதிராளியின் கைக்குப் போய்க்கொண்டிருந்தன.

இலங்கை முழுவதும் பல கிளைகள் பரப்பிப் படர்ந்திருந்த ஆடையாகங்கள் பல இத்தனை காலமும் அவளின் வாடிக்கையாளராக இருந்தவர்கள். இப்போது அவளின் எதிரியின் கைவசம் போய்க்கொண்டிருந்தனர். அல்லது, இவர்களிடம் கொடுக்கும் ஆர்டரின் அளவு குறைந்திருந்தது.

அம்மா ஜெயந்தி முழுமையான இல்லத்தரசி. அவரின் ஒரே கவலை இவள் இருபத்தி எட்டு வயதாகியும் திருமணம் செய்யாமல் தொழில் தொழில் என்று இருக்கிறாளே என்பதுதான். தந்தை மனத்தளவிலும் உடலளவிலும் நொடிந்துபோயிருப்பவர்.

அவர்களிடம் தொழில்பற்றிய எந்தக் கெட்டதுகளையும் அவள் கொண்டுபோவதில்லை. முதலில் அவளுக்கு அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கத் தெரியாது.

அவளுக்கு உதவிக்கு வரும் சுவாதிக்குக் கூட இதைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிவதற்கு பார்க்கும் வேலையில் ஒரு ஆர்வமும் ஈடுபாடும் வேண்டும். தமக்கை என்ன செய்கிறாள் என்கிற கவனிப்பு இருக்க வேண்டும்.

இது படிப்பை முடித்துவிட்டேன், அக்கா வரச் சொல்கிறாள் என்று வருகிறவன் இவள் சொல்கிறவற்றை மட்டும் கடமைக்கு முடித்துவிட்டுப் போய்விடுவாள்.

அதனால் அத்தனை நெருக்கடிகளையும் இளவஞ்சி தனியொருத்தியாகத்தான் சமாளித்துக்கொண்டிருந்தாள். குறைந்துபோயிருக்கும் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். அதற்கான ஒரு வழியாகத்தான் இன்று இரவு கொழும்பு போகிறாள்.

தையல்நாயகி அம்மாவின் காலத்திலிருந்தே பழக்கமானவர்தான் முத்துமாணிக்கம். அங்கே கொழும்பில் அவரும் கார்மெண்ட்ஸ்தான் வைத்திருக்கிறார். பிள்ளைகள் இருவரும் அவுஸ்திரேலியாவில் இருப்பதில் மனைவியோடு தானும் அங்கே சென்றுவிட முடிவெடுத்தவர், கார்மெண்ட்ஸை விற்கலாமா என்று யோசிப்பதை அவளிடம்தான் முதன்முதலில் சொன்னார்.

அவளுக்கு அத்தனை ஆனந்தம். அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்னிடம்தான் முதன்முதலில் சொல்ல வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவரும் முடிவானதும் அவளிடமே சொல்ல, விலை பேசி முடிக்க வருவதாகச் சொல்லியிருந்தாள். அவரும் அவளின் முடிவை அறிந்தபிறகுதான் முறையாக வெளியே அறிவிப்புப் போடுவதாகச் சொல்லியிருந்ததில் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தாள் இளவஞ்சி.

அந்தக் காலத்திலேயே ஒரு பெண்ணாகத் தனித்தியங்கி சாதித்த பெண்மணியான தையல்நாயகி மீது அலாதியான மரியாதை கொண்டவர் முத்துமாணிக்கம். அவரைப் போலவே அவரின் பேத்தியும் என்பதில் இவள் மீது பிரத்தியேகமான வாஞ்சை கொண்டவர்.

அவளுக்கும் நியாயமில்லாத விலை கேட்கும் எண்ணமில்லை. அவரும் அதிகவிலை சொல்லப்போவதில்லை என்கையில் இது கைகூடும் என்கிற நம்பிக்கையில் இருந்தாள் இளவஞ்சி.

அன்று மதியமே விசாகனை வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுக்கச் சொன்னவள் திட்டமிட்டது போலவே இரவு பத்துமணிக்கு அவளின் பிஏ ஆனந்தி சகிதம் விசாகனோடு கொழும்புக்குப் புறப்பட்டிருந்தாள்.

எப்போதும் கொழும்பு வந்தால் தங்கும் நம்பிக்கையான உயர்ரக ஹோட்டலில் தங்கி, குட்டியாக இளைப்பாறி, புத்துணர்ச்சியோடு தயாராகி முத்துமாணிக்கம் வீட்டிற்குச் சென்றவளை, வாசலுக்கே வந்து வரவேற்றனர் முத்துமாணிக்கமும் அவர் துணைவியார் இராசம்மாவும்.

“அப்பிடியே தையல்நாயகியப் பாத்த மாதிரியே இருக்கிறீங்கம்மா. அதே கம்பீரம். அதே நிமிர்வு. அதே தைரியம்.” அவளைப் பார்த்த கணம் விழிகள் இலேசாகப் பனித்துவிட வாஞ்சையுடன் சொன்னார் மனிதர்.

தையல்நாயகி அம்மாவை அறிந்த பலரும் இதையே சொல்லக் கேட்டிருந்தவள் அழகான முறுவலோடு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டாள்.

“நீங்க வாறீங்க எண்டு சொன்னதில இருந்து இதே தானம்மா கதை. இவர் உங்கட அப்பம்மாவை சைட் அடிச்சாரோ எண்டு எனக்குச் சந்தேகமா இருக்கு.” என்றபடி அவளுக்குக் காலை உணவைப் பரிமாறினார் இராசம்மா.

இருவருமே அறுபத்தி ஐந்திற்கும் எழுபதற்கும் இடைப்பட்டவர்கள். அப்படியிருக்க அவர்களின் பேச்சு மூட்டிய சிரிப்புடன், “அப்பிடியா அங்கிள்?” என்றாள் இளவஞ்சி.

“நான் ஏன் பொய் சொல்லப்போறன்? நான் ப்ரப்போஸ் பண்ண முதல் தையல்நாயகி கட்டிட்டா. இல்லாட்டி அவவத்தான் கட்டியிருப்பன். அப்பிடி ஒண்டு நடந்திருந்தா இந்தக் கொடுமைக்காரக் கிழவிட்ட இருந்து விடுதலை கிடைச்சிருக்கும். எங்க?” என்று அவர் பெருமூச்சு விட்டார்.

முகத்தை வெட்டிவிட்டு, “அவாவை மாதிரி கெட்டிக்காரி எல்லாம் இவரைத் திரும்பிப் பாத்திருப்பாவோ எண்டு கேளுங்கோம்மா. என்னவோ நானா இருக்கப்போய் தெரியாத்தனமா கட்டிட்டனே எண்டு வச்சு வாழுறன்.” என்று இவளை நடுவில் வைத்து அவர்கள் செல்லச் சண்டை இட்டுக்கொள்ள, அப்பம்மாவும் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருகணம் கலங்கிப்போனாள் இளவஞ்சி.

ஆனாலும் சமாளித்துக்கொண்டு உணவை முடித்தாள்.

அவர் கார்மெண்ட்ஸ்க்கு சொன்ன தொகை சற்று அதிகமாக இருக்க, “கூடவா இருக்கே அங்கிள்.” என்றாள் மனத்தை மறைக்காமல்.

“சக்திவேல் கார்மெண்ட்ஸ்சின்ர காதுக்குப் போனா இதவிடக் கூடத் தந்து வாங்குவினம்.” என்று புன்னகைத்தார் அவர்.

மறைமுக மிரட்டல். கை தேர்ந்த வியாபாரி இல்லையா? அவளும் சளைத்தவளா என்ன?

“அது நான் போட்டிக்கு நிக்கிறன் எண்டு தெரிஞ்சாத்தான் அங்கிள். எனக்கு வேண்டாம் எண்டு நான் சொன்னா நான் கேக்கிறதில பாதிதான் கேப்பினம்.” என்று முறுவலித்தாள் அவள்.

அதிலிருக்கும் உண்மையில், “கெட்டிக்காரிதான்.” என்று சொல்லிச் சிரித்தார் முத்துமாணிக்கம்.

“ஆனாம்மா பாரம்பரியமான கார்மெண்ட்ஸ் எங்கட. இதால காலத்துக்கும் நீங்க லாபம் மட்டும்தான் பாப்பீங்க. அப்பிடியிருக்க நான் சொல்லுற தொகையக் குடுக்கிறதால உங்களுக்கு நட்டம் வரப்போறேல்ல.” என்று அவரும் விடுவதாக இல்லை.

“உண்மைதான் அங்கிள். ஆனா நீங்க சொன்ன சக்திவேல் கார்மெண்ட்ஸ் இத வாங்கினா உங்கட பெயர் இருக்குமா எண்டு யோசிங்க. ஆனா நான் உங்கட பெயரை மாத்த மாட்டன். சோ உங்கட பெயரும் அதுக்குண்டான மரியாதையும் காலத்துக்கும் இருக்கும்.”

அந்தப் பெயர் அவருக்கு முக்கியம்தான். தையல்நாயகி கூட அவர் காலத்தில் அவர்களின் வீட்டிலேயே தொழிலை ஆரம்பித்து அதைப் பெரிதாக்கியவர்.

முத்துமாணிக்கமும் சக்திவேலும் அப்படியன்று. வெள்ளைக்காரனின் காலத்திலிருந்தே கடல் கடந்து சென்று துணிமணிகளைக் கொண்டு வந்தும், நெசவு செய்தும் தொழில் செய்தவர்கள். அதனாலேயே அவருக்கு அவர் பெயர் நிலைத்திருப்பது முக்கியம்தான்.

“நல்லா யோசிங்க அங்கிள். உங்களிட்ட இருக்கிற மெஷின்ஸ் எல்லாம் பழசு. அது இன்னும் எத்தின நாளைக்கு உழைச்சுத் தரும் எண்டு தெரியாது. அதைவிட நான் புது மெஷின்ஸ்தான் போடுவன். நீங்க பழமை மாறாம அப்பிடியே வச்சிருக்கிறீங்க. எனக்கு அது செட்டாகாது. அதுக்கும் நான் காசு போடோணும். ஆனாலும், அறா விலைக்கு நான் கேக்கேல்லை. உங்களுக்கும் எனக்கும் நியாயமான விலைதான் இது.”

அவர் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தபோதிலும் தொழில் என்று வந்தபிறகு நேர்த்தியாகவும் தெளிவாகவும் பேசினாள் அவள்.

அவள் சொன்ன அத்தனையும் உண்மை என்பதை அவரும் அறிவார். இதை விற்றுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்ததில் இருந்தே அதன் மீதான கவனிப்பைக் குறைத்திருந்தார்தான்.

அதில், “எதுக்கும் பொறுங்கோம்மா. மகனாக்களோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்றுவிட்டு உள்ளே சென்றவர் அரை மணி நேரத்தில் திரும்பி வந்தபோது முகம் முழுக்கச் சிரிப்போடு வந்தார்.

“தம்பியாக்களுக்கும் ஓக்கேயாம். அப்ப அந்த விலைக்கே முடிப்பம்.” என்று அவர் சொன்னதும் அவள் முகமும் மலர்ந்துபோயிற்று.

“உறுதியான முடிவுதானே அங்கிள்? நான் நம்பி இதுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்தானே?”

“உறுதியான முடிவுதானம்மா. முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸ் இனி உங்களுக்குத்தான். தேவையான ஏற்பாடுகளைப் பாருங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார் அவர்.

நிறைய நாள்களுக்குப் பிறகு அவள் உள்ளம் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ரெயின்கோட் தயாரிப்பில் இறங்கி, குடை, வாகனங்களை மூடப் பயன்படுத்தும் ரெட் என்று அதை வளர்த்து, அதில் ஒரு பிராண்ட் நிறுவ வேண்டும் என்பது அவளின் நெடுநாள் ஆசை.

இனி அது நிறைவேறிவிடும். தலைநகரில் இயங்கப்போகும் கார்மெண்ட்ஸ் அவளின் வளர்ச்சியைப் பலபடிகள் ஏற்றிவிடப் போகிறது. அவள் போகிற பக்கமெல்லாம் காலைப் பிடித்து இழுத்துவிடுகிறவர்களுக்கு என் உயரத்தைப் பார் என்று காட்ட வேண்டும்.

அப்போதே அதற்கான திட்டங்கள் அவள் உள்ளத்தில் கடகடவென்று உதயமாக ஆரம்பிக்க, ஐபாடை எடுத்துவைத்து அவற்றைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

ஆனால், அடுத்தநாள் காலையே அவளுக்கு அழைத்த முத்துமாணிக்கம் அவளிடம் மன்னைப்பைக் கேட்டுவிட்டு, அவள் கேட்ட தொகையை விடவும் அதிக தொகையில் சக்திவேல் கார்மெண்ட்ஸ் கேட்டதாகவும், பெயரையும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று சொன்னதாகவும், மகன்கள் அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துவிட்டதாகவும் சொல்ல அப்படியே அமர்ந்துவிட்டாள் இளவஞ்சி.

“அவேக்கு எப்பிடித் தெரியும் அங்கிள்? ஆர் கதச்சதாம்?”

“நிலன் கதச்சவனாம்.”

“ஓ!” என்றவளுக்கு மேலே பேசக்கூட முடியவில்லை. நீங்கள் தந்த வாக்கு என்னாயிற்று என்றுகூட அவள் கேட்கவில்லை.

எல்லாமே கைமீறிப் போனபிறகு எதைக் கேட்டு என்ன பலன்?

நிலன் பிரபாகரன்! கடந்த சில வருடங்களாக அவளின் சறுக்கல்கள் எல்லாவற்றுக்கும் காரணமாயிருப்பவன்.

தொடரும்…

கமெண்ட்ஸ் அண்ட் லைக் போட மறந்துடாதீங்க மக்களே.
Starting super ma
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom