அத்தியாயம் 4
அவன் அதிர்ந்து நிற்பது புறக்கண்ணில் விழுந்தாலும் அதைப் புறக்கணித்து மூன்றாவது மாடிக்கு ஏறினாள் இளவஞ்சி. ஒன்றுமே நடவாதது போன்ற அவனின் பேச்சும் நடத்தையும் அந்தளவில் அவளுக்குள் எரிச்சலை மூட்டியிருந்தன.
அவளோடு பேச வேண்டுமாமே! வரட்டும்!
மூன்றாவது மாடியில்தான் பிரபாகரனும் மிதுனும் நின்றிருந்தார்கள். அவர்கள் இறுக்கமற்று இலகுவாகப் பேசிச் சிரித்தபடி நிற்பதை வைத்து, நகரசபைத் தலைவர் புறப்பட்டுவிட்டார் என்று கணித்தாள் இளவஞ்சி.
அன்றைய நாளுக்கான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாலோ என்னவோ அந்தத் தளத்தில் எந்த உடைகளும் இல்லை. ஒரு புறமாக விதம் விதமான உணவு வகைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, அவரவர் அவரவருக்கு விருப்பமானதை எடுத்துச் சாப்பிடுவதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்படியே வட்ட வட்ட மேசைகள் போடப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் நால்வர் இருந்து உண்பதுபோல் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
நேராக உணவு வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி நகர்ந்த இளவஞ்சி திரும்பி விசாகனைப் பார்த்தாள். அடுத்த கணமே, “மேம்!” என்று அவள் முன்னே வந்து நின்றான் அவன்.
“நீங்களும் சாப்பிடுங்க. சாப்பிட்டதும் வெளிக்கிடுவம்.” என்று அவனிடம் சொல்லிவிட்டுத் தனக்குத் தேவையானவற்றைப் போட்டு எடுத்துக்கொண்டு சென்று அமர்ந்தாள்.
விசாகணும் தனக்கான உணவோடு வேறொரு மேசையில் சென்று அமர்ந்துகொண்டான்.
அவளைத் தனியாகப் பிடிப்பதற்கென்றே காத்திருந்த இருவர் வந்து அவளெதிரில் அமர்ந்தனர். புடவைக் கடைக்காரர்கள். முக்கியமாக அவளிடம் கொள்வனவு செய்பவர்கள்.
இயல்பு போன்று நல விசாரிப்புகள் எல்லாம் கடந்தபிறகு, “இளவஞ்சி, உடனடியா பலன்ஸ் எல்லாம் பே பண்ணச் சொல்லி மெயில் வந்திருக்கு. அதப் பற்றி உங்களோட கதைக்க ட்ரை பண்ணினனான். உங்கட பிஏ நீங்க பிஸியாம் எண்டு சொன்னவா. எப்பவும் ஆறு கிழமை டைம் தந்து பே பண்ணுறதுதானே வழமை. அதே மாதிரியே இந்த முறையும் டைம் தந்தா நல்லாருக்கும்.” என்றார் அவர்களில் ஒருவர்.
“எப்பவும் மாதிரி நான் நடக்கிறதுக்கு நீங்க எப்பவும் மாதிரி இல்லையே.” அவளை விடச் சற்றே வயதில் பெரியவராக இருந்தாலுமே எந்தப் பணிவும் குழைவும் இல்லாமல் நேராகவே சொன்னாள்.
“இல்…லையே. எதுவும் மாறேல்லையே. உங்கட அப்பம்மான்ர காலத்தில இருந்து இப்பவரை எல்லாமே அப்பிடியேதானே இருக்கு.” தையல்நாயகியின் பெயரை இழுத்தால் அவள் கொஞ்சம் மசிவாள் என்றெண்ணிச் சொன்னார் அவர்.
“ஓ! அதான் எங்களிட்ட வாற ஓர்டர் குறையுது. அதுக்குப் பதிலா சக்திவேல் பிராண்ட் உடுப்புகள் உங்கட கடைல தொங்குதா?” என்றவள் கேள்வியில் அதிர்ந்து விழித்தார் மனிதர்.
வேகமாக அவர் சமாளிக்க முயல, அதற்கு இடம் கொடாமல் தன் கைப்பேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்து அவர் புறமாகத் திருப்பி வைத்தாள்.
அதில் சக்திவேல் பிராண்ட் பெண்கள் ஆடைகள் அவர் கடையில் தொங்கிக்கொண்டிருந்தன.
கையும் களவுமாகப் பிடிபட்டுக்கொண்ட நிலை அவருக்கு. “இல்ல அது சாம்பிலுக்கு…” என்று இழுத்தார்.
“ஓ! நல்லா போகுதா?”
இரண்டு சொற்கள் கொண்ட ஒற்றைக் கேள்வி. அதைவிடக் கூர்மையாக அவரைக் கூறுபோட்ட அவள் பார்வை. இரண்டினாலும் பதிலே வராமல் திணறினார்.
“நீங்க ஒண்டு செய்ங்க. என்ர பேமெண்ட்ட முடிச்சுவிட்டுட்டு முழு ஓடரையும் அங்கயே குடுங்க!” என்றாள் அவள் பார்வையில் தீர்மானத்தோடு.
“இல்ல அது…” என்று ஆரம்பித்தவருக்கு அவளை எப்படி மலையிறக்குவது என்றே தெரியவில்லை.
பெண்களின் உடைகளின் தரத்தில் அவளுடையதை அடித்துக்கொள்ளவே முடியாது. அப்படியிருக்க முழு ஓர்டரையும் சக்திவேலுக்கு மாற்றினால் அவர் கடைதான் படுத்துக்கொள்ளும். அவர்களுடையதில் ஆண்களின் உடைகள் நல்ல தரம். ஆனாலுமே நிலனைப் பகைத்துக்கொள்ள முடியாமல்தான் அவர்களுடையதிலும் கொஞ்சமாக எடுத்தார்.
அது பார்த்தால் அவருக்கே வினையாக முடிந்திருக்கிறது.
“இனி எப்பவும் போல உங்களிட்டயே வாங்கிறன் இளவஞ்சி. பேமெண்ட் டேட்டை மட்டும் பழைய மாதிரியே மாத்திவிடுங்க.” அவரை விடவும் வயதில் சின்ன பெண். அவளிடம் கெஞ்சும் நிலைக்கு ஆளாகிப்போனோமே என்று உள்ளூரக் குறுகியபடி கெஞ்சினார்.
அவள் அசையவில்லை. “சொறி. இனி அது ஏலாது.” முகத்துக்கு நேராகவே மறுத்துவிட்டு மற்றவரைப் பார்த்தாள்.
அவர் ‘லாவண்யா ஆடையகம்’ என்கிற பெயரில் இலங்கை முழுக்கக் கிளைகள் வைத்திருப்பவர். அவருமே இவருடன் சேர்ந்து நிலனிடம் கொள்வனவு செய்தது அவளுக்குத் தெரியும்.
அவருக்கு அனுப்பிவைக்க வேண்டிய ஆர்டரை, ‘மூலப்பொருள்கள் தட்டுப்பாடாக இருக்கிறது’ என்கிற காரணத்தைச் சொல்லி நிறுத்திவைத்துவிட்டு, அவரின் போட்டிக் கடைக்குக் கொடுத்திருந்தாள்.
“அவரை மாதிரி நானும் சாம்பிலுக்குத்தான் எடுத்தனான். இனி எடுக்கமாட்டன்.” அவள் கேட்கும் அவசியமே இல்லாமல் அவசரமாகச் சொன்னார் அவர்.
“அது உங்கட விருப்பம் அங்கிள். ஆனா, சக்திவேல் பிராண்ட் இருக்கிற இடத்தில தையல்நாயகி இருக்காது.”
“விளங்குதம்மா. இனி அப்பிடி நடக்காது. நீங்க சாப்பிடுங்கோ!” என்றுவிட்டு மெதுவாக மற்றவரோடு அவளை விட்டு நகர்ந்தார் மனிதர்.
அவர்களை இப்படி அவளைத் தேடி வர வைத்ததே அவள்தான். அவ்வப்போது அவர்களிடம் கொள்வனவு செய்யும் புடவைக் கடைகளுக்குச் சென்று, விற்பனை எப்படிப் போகிறது, என்ன மாதிரியான உடைகள் நன்றாகப் போகிறது, ட்ரெண்டில் இருப்பவை என்ன, என்ன டிசைன்ஸ் புதிதாக வந்திருக்கிறது போன்ற தகவல்களைத் திரட்டிக்கொண்டு வருவதற்கு என்றே ஒரு குழுவை வைத்திருக்கிறாள் அவள்.
தையல்நாயகி அம்மா ஆரம்ப காலங்களில் அவரே ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, எது நன்றாகப் போகிறது என்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவற்றையே தானும் தைத்துக் கொடுத்ததாகச் சொன்னதை நினைவில் வைத்து, அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாள்.
இவர்களைப் போன்றவர்கள் அவளிடம் கொள்வனவு செய்யும் அளவைக் குறைத்தபோதே அந்தக் குழுவை அனுப்பித் தகவல்களை முழுமையாகப் பெற்றுக்கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் அவளாக அவர்களைத் தேடிப்போய்ப் பேச முயற்சிக்கவில்லை. அது அவளைக் குறைத்து எடை போடுவதற்கு அடிகோலிவிடும்.
அவர்களை அவளைத் தேடி வர வைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோதுதான் நிலன் இந்த விழாவிற்கு அழைப்பு விடுத்தான்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல், அவனால் உண்டான சறுக்கலை அவன் கடை திறப்பு விழாவில் வைத்தே முடிக்கிறேன் என்று திட்டமிட்டுவிட்டாள்.
அதன்படி யாரெல்லாம் அவளிடமிருந்து அந்தப் பக்கம் நழுவிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற லிஸ்டை எடுக்கச் சொல்லி, அதில் இந்த விழாவுக்கு வருவார்கள் என்று கணித்த இவர்கள் இருவரையும் வட்டமிட்டு ஆனந்தியிடம் கொடுத்ததே இவள்தான்.
இவர்கள் கொஞ்சம் பெரும் தலைகள். இவர்களுக்குக் கொடுக்கிற கெடுபிடியால் மற்றவர்களும் சுருண்டுவிடுவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
அதே போன்று, அவர்களுக்கு மெயில்களை அனுப்பிய பிறகு, தன்னோடு கதைப்பதற்கு நிச்சயம் முயற்சி எடுப்பார்கள் என்று சொல்லி, அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று உத்தரவிட்டதும் அவள்தான்.
அவர்கள் அவளை இங்கே நேரில் கண்டு மட்டுமே பேச வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். நெருக்கடியைக் கொடுத்து அவர்களைக் கலங்க வைத்துவிட்டு, அந்தக் கலக்கத்தை நொடியில் தீர்க்க விடக் கூடாது!
ஏனடா தேவை இல்லாத உத்தியோகம் பார்த்தோம் என்று யோசிக்க வைத்து, இனி இப்படியான வேலைகளைச் செய்யவே கூடாது என்கிற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதற்கு, அவளைத் தொடர்புகொண்டுவிட முடியாமல் தவிக்கும் இந்த இடைப்பட்ட நாள்கள் அவளுக்குத் தேவையாய் இருந்தன.
கடைசியில் அவள் திட்டமிட்டபடியே அவர்களும் வந்து பேசிவிட்டுப் போகிறார்கள்.
சீற்றத்துடன் தனக்குள் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. பெண், அதுவும் இளம் பெண் எப்படியும் விளையாடலாம் என்று நினைத்துவிட்டார்கள் போலும். தரம் மிகுந்த பொருள் அவள் கையில் இருக்கையில் அவள் எதற்கு யோசிக்க? அதுதான் இறங்கி அடித்தாள்.
இத்தனையையும் அங்கே சற்றுத் தள்ளி மற்றவர்களோடு பேசிக்கொண்டிருந்த பிரபாகரன் கவனிக்காததுபோல் கவனித்துக்கொண்டு இருப்பதை அவள் கவனிக்காமல் இல்லை. கவனித்தால் கவனிக்கட்டுமே!
அவள் உண்டு முடியும் தறுவாயில் தனக்கான உணவோடு அவள் முன்னே வந்து அமர்ந்தான் நிலன். இனி இவனா என்று சினம் பொங்க, “உங்கட கடைத் திறப்புவிழாக்கு என்னைத் தவிர வேற ஆரையும் நீங்க கூப்பிடவே இல்லையா?” என்றாள் எரிச்சலை மறையாமல்.
சிறிதாக முறுவலித்து, “அவே எல்லாரையும் கவனிக்க அப்பா, அம்மா, அத்தை, மாமா எண்டு எல்லாரும் இருக்கினம். உன்ன நான்தானே கவனிக்கோணும்.” என்றான் அவன்.

Last edited: