• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 17

நிதா அக்கா !! உங்களோட கதைகளை யாரோடும் ஒப்பிட முடியாது. நீங்க மேலே குறிப்பிட்ட கதையை நான் படிச்சிருக்கன். அந்த author-யோட recent on going novel idhu than.both are totally diffrent. உங்களுக்கு ஒரு தனி திறமை அது எ என்னவென்றால் உங்களோட கதையை படித்த பிறகு நான் கொஞ்ச நேரம் அதன் தாக்கத்தில் இலங்கை தமிழில் கதைத்து கொண்டிருப்பேன். இப்போ சொல்லுங்கோ!! நிதா அக்கா இந்த மாதிரி compairing message வந்தா ignore and move.on இந்த மாதிரி நீண்ட விளக்கம் எல்லா வேண்டா. எங்களுக்கு. okay Love you Nitha akka😍😍😍😍😍😍
 

Sankarvani

New member
வணக்கம் நிதனிம்மா
உங்களுடைய கதை கரு மட்டுமல்ல உங்களின் எழுத்து நடையும் தனித்துவமானதே.நீங்கள் கூறும் கதையை சமீபத்தில் நானும் வாசித்தேன்.அது கதையின் கடந்து செல்லும் ஓர் பகுதியாகத்தான் தோன்றியது வேறு எந்த பாதிப்பும் இல்லை.
உன் அன்புக்கு நன்றி கதை காலத்திற்கேற்ற மாற்றம் எனினும் விருப்பமின்றியே வாசித்தேன். நீங்கள் குறிப்பிடும் இடம் வாசிக்கையில் ஏதோ மனத்தை அழுத்தும் உணர்வினை உங்கள் நடை ஏற்படுத்தியது நிஜமே.
பெயரிடப்படாத ஓர் புத்தகத்தை வாசிக்கும் வாசகனும் இன்னார் எழுதிய புத்தகம் என கூறும் தன்மை உடையது உங்களின் எழுத்து நடை.
தனித்து நடந்து செல்பவரின் வழியே இங்கு பலரின் பாதை ஆகின்றது.எங்களுடைய எழுத்தாளரின் வழி எங்களுக்குத் தெரியும்.கவலை கொள்ள வேண்டாம்.
 
உங்க கதையளவுக்கு எழுத முடியுல அதனால உங்க கதையையே காப்பி அடிக்கிறாங்க😜😜😜😜😜
வஞ்சி சிங்கப் பெண்ணே👌👌👌👌
இனி நிலன் சப்போர்ட்டும் இருக்கும், சக்தி வேலர்ர்ர்ர் இனி தாக்குதலுக்கு தயாராக இரும்.
 

Sowdharani

Well-known member
அரிமா புறபட்டு விட்டது....
குணா குணமானவர்....
 

mayan

New member
மக்களே, ஒரு விடயம் சும்மா உங்களோடு பகிரலாம் என்றும் நினைக்கிறேன்.

இந்த இணைய உலகத்தில் பலர் கதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் இல்லையா. அப்படி இருக்கையில் ஒரே மாதிரியான கருக்களை எடுத்து அவரவர் கோணத்தில் எழுதுவது என்பது வேறு. ஆனால், அதே கதையையோ அல்லது அதே காட்சியை எடுத்து அப்படியே எழுதுவதற்கு பெயர் வேறு.

இதே மாதிரி ஒரு நிகழ்வு 2020ல் எனக்கு நடந்தது. 2017ல் நான் எழுதிய நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவல் அதே கருவோடு அப்படியே கதையாக வந்து புத்தகமாகவும் வெளிவந்திருந்தது.

இதில் கவலையான விடயம் என்னவென்றால் அந்தக் கதையைப் போல் என் கதை இருக்கிறதே என்று ஒரு கருத்தினை நான் பார்க்க நேர்ந்ததுதான்.

இதுதான் அது :

View attachment 976




அதனால்தான் இப்போதும் என் வாசகர்களுக்கு இந்த விளக்கம்.

உன் அன்புக்கு நன்றி - என் வாழ் நாளில் என்னால் மறக்கவே முடியாத ஒரு கதை. அதைப்போலத்தான் அதை வாசித்த ஒவ்வொரு வாசக உறவுகளின் மனத்திலும் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் என்று எனக்குத் தெரியும்.

அந்தக் கதையிலிருந்து ஒரு காட்சியை இங்கே பகிர்கிறேன். ஏதாவது ஒரு காலத்தில் அல்லது என்றாவது ஒரு நாள் இதேபோல் காட்சிகளை வேறு கதைகளிலும் நீங்கள் பார்க்கலாம். இல்லை, ஏற்கனவே பார்த்திருக்கலாம். அப்போது வந்து என்ன இது அந்தக் கதையில் வருகிற காட்சி இங்கு வருகிறதே என்று சொல்லிவிடாதீர்கள்.

நான் அப்படியானவளும் அல்ல. என் எழுத்து அப்படியானதும் அல்ல. என் வாசகர்களுக்கு என்னைத் தெரியும் என்கிற நம்பிக்கையோடு அன்பும் நன்றியும் அனைவருக்கும்.

நட்புடன் நிதா. View attachment 977

View attachment 978View attachment 979
View attachment 980
நீங்கள் இதை கூற வேண்டும் என்ற அவசியமே இல்லை, மா. எல்லோருடைய கதைகளையும் விரும்பிப் படிக்கும் கதை பிரியர்களுக்கு உங்களைப் புரியும். மயிலுக்கும் வான்கோழிக்கும் உள்ள வித்தியாசம் யாரும் கூறாமலேயே தெரியம்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom