ஆட்டநாயகன் - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
வணக்கம் மக்களே,

கதை செப்டெம்பர் தொடக்கத்திலதான் வரும். இத்தனை நாள்களும் சும்மா இருந்ததோ என்னவோ ஒரு செல்லச் சோம்பேறித்தனம் எனக்கு வந்திட்டுது. அதுதான் ஒரு கமிட்மெண்ட்டுக்க போய்ட்டா கதைக்குத் தயாராவேன் என்று நினைச்சு இப்பவே அறிவிப்பு போடுறேன்.

ஆட்டநாயகன் கதை பற்றி என்ன சொல்ல? எழுதிடோணும் என்று நினைத்து நினைத்தே தள்ளிப்போட்ட ஒரு கதை. நன்றாக வருமா என்கிற மெல்லிய பயமும் உண்டு. எனக்கு வித்தியாசமான களமாகத்தான் இருக்கும். வாசிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது:LOL:.

நேரே நின்று ஒருவனின் நெற்றிப்பொட்டில் சுடுவது மட்டுமே அவனை அழிப்பது கிடையாது. அவன் கூட்டைப் பிய்த்துப்போட்டு, திசைக்கு ஒன்றாக அவன் வீட்டுப் பறவைகளைத் தெறித்துப் பறக்க விடுவதும் அழிப்புத்தான்.

தன்னை அடிமைகொள்ளும் எதற்குள்ளும் ஆட்பட விரும்பாத ஒருவனின் கதைதான் இது. அது எப்போதும் முடியுமா என்ன?

வேற என்ன சொல்லட்டும் நான்? எப்பவும் போல ஃபீல் குட் கதைதான்:p.

விரைவில் இந்த நாவலின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரையில்,

நட்புடன் நிதனிபிரபு


Design ohne Titel (8).jpg
 
Status
Not open for further replies.
Top Bottom