You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேத முறைகள் - சுருதி - இதழ் 12

ரோசி கஜன்

Administrator
Staff member
பாரம்பரிய முறைகள் எதற்காக?

உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆயுர்வேத முறையே சிறந்தது.

தினமும் உண்ணும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆயுர்வேத முறையில் இருந்தால் சுலபமாக உடல் எடையைக் குறைத்துவிடலாம்.

நம் உடலுக்குச் சீசனுக்கு ஏற்றவாறு உணவுகள் தேவைப்படுகின்றது. தவறாமல் சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட டயட்டில் சேர்க்க வேண்டியது அவசியம். இந்த முறையில் உடல் குறைப்பு மட்டுமல்ல, எல்லா விதமான உடல் நலக் குறைபாடுகளையும் எளிமையாகச் சரி செய்துவிடலாம்.

எந்த முறையாக இருந்தாலும், உடல் எடையைக் குறைப்பதற்கு அதனை சீராகக் கடைபிடிக்க வேண்டும். பாரம்பரிய முறையைப் பொறுத்தவரை, அதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் பலன் அளித்துக் கொண்டே இருக்கும்.



1579714849291.png



ஆயுர்வேதத்தின்படி எடையைக் குறைப்பதற்கான உணவு முறை :


அதிகாலை:

ஒரு கிளாஸ் தேன் கலந்த எலுமிச்சைச் சாறு



காலை உணவு:

- ஒரு கப் முளைகட்டிய பயறு

- ஒரு கப் பால்



முற்பகல்:

ஒரு கிளாஸ் ஆரஞ்சு அல்லது காரட் ஜூஸ்



மதிய உணவு:

பச்சைக் காய்கறி சாலட் (காரட், வெள்ளரி, முட்டைகோஸ் மற்றும் தக்காளி போன்றவை)

வேக வைத்த காய்கறிகள்

முழு கோதுமை சப்பாத்தி அல்லது முழு தானிய ரொட்டி.

சீரகம், கொத்தமல்லித் தழை, சிறிது உப்பு, துருவிய இஞ்சி கலந்த மோர் ஒரு கிளாஸ்.



பிற்பகல்:

இளநீர்

உலர்ந்த பழங்கள்

எலுமிச்சை/ கிரீன் டீ

காய்கறி சூப்



இரவு:

வேக வைத்த காய்கறிகள்

முழு கோதுமை சப்பாத்தி அல்லது முழு தானிய பிரட்

பழங்கள் (வாழை மற்றும் ஆப்பிள் தவிர)



குறிப்புகள் :

• தினமும் கண்டிப்பாக குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.

• கார்போஹைட்ரேட்டுகள் அதிகமுள்ள உணவு பொருட்களைத் தவிர்க்கவும். தானியங்களில் கோதுமை நல்லது.

• சீஸ், வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்.

• அதிக உப்பு உட்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும்.

• உடல் குறைப்பில் புதினா மிகவும் சிறந்தது. உணவோடு மசாலாப் பொருள் சேர்த்த புதினா சட்னியையும் எடுத்துக் கொள்ளுங்கள். புதினா தேநீரும் நல்லது.

• உடல் கொழுப்பைக் கரைப்பதில் முட்டைக்கோஸ் மிகவும் சிறந்தது.
 
Top Bottom