உனக்காக ஏங்கும் உன் மனது

Subamurugan

Well-known member
மடைதிறந்த வெள்ளமாய்
உனை நோக்கி பாய்கிறேன்
மடைமாற்றி நீ தடை போட்டுச் செல்கிறாய் மடைமாற்றலாம்
உனக்காக மன்றாடும்
மனதை என்ன செய்ய?..

பாரம் ஏறிப்போன மனதுடன்
தூரம் கடந்து வரும் கால்கள்
உனை நெருங்க நெருங்க
பறந்து செல்லும் காற்றாடியாக
எனை விட்டு விலகி விலகி செல்கிறாய் வீம்பாய் திரும்ப
உனை தொடரும் மனதை
என்ன செய்ய?.

என்றும் உன்னைவிட்டு நீங்கா
நிழல் என நான் நடக்க
என்னை நீங்கிவிடவென்றே
உன் பாதையையும் நீ
இருட்டாக்கிச் செல்கிறாய்
இருந்தும் உனக்காக ஏங்கும்
மனதை என்ன செய்ய?.

உன் முகம் காண வேண்டி
அல்லி மலர் நானென்று
பொழுது புலரும் வேளை நோக்கி
இருளில் மலர்ந்து நிற்கின்றேன்
இரவோடு இரவாக சூராவளியாய்
நீ எனை தூக்கி தூர வீசிவிட்டு
செல்கிறாய் மறுபடியும்
உனக்காக மலரும்
மனதை என்ன செய்ய?.
 

Nandhunalin

Active member
மடைதிறந்த வெள்ளமாய்
உனை நோக்கி பாய்கிறேன்
மடைமாற்றி நீ தடை போட்டுச் செல்கிறாய் மடைமாற்றலாம்
உனக்காக மன்றாடும்
மனதை என்ன செய்ய?..

பாரம் ஏறிப்போன மனதுடன்
தூரம் கடந்து வரும் கால்கள்
உனை நெருங்க நெருங்க
பறந்து செல்லும் காற்றாடியாக
எனை விட்டு விலகி விலகி செல்கிறாய் வீம்பாய் திரும்ப
உனை தொடரும் மனதை
என்ன செய்ய?.

என்றும் உன்னைவிட்டு நீங்கா
நிழல் என நான் நடக்க
என்னை நீங்கிவிடவென்றே
உன் பாதையையும் நீ
இருட்டாக்கிச் செல்கிறாய்
இருந்தும் உனக்காக ஏங்கும்
மனதை என்ன செய்ய?.

உன் முகம் காண வேண்டி
அல்லி மலர் நானென்று
பொழுது புலரும் வேளை நோக்கி
இருளில் மலர்ந்து நிற்கின்றேன்
இரவோடு இரவாக சூராவளியாய்
நீ எனை தூக்கி தூர வீசிவிட்டு
செல்கிறாய் மறுபடியும்
உனக்காக மலரும்
மனதை என்ன செய்ய?.
Superb ...keep it up
 
Top Bottom