உன் அன்புக்கு நன்றி

நிதனிபிரபு

Administrator
Staff member
உன் அன்புக்கு நன்றி
Nithani Prabu
நிறைய reviews பார்த்து எப்போதும் போல last day (May 3) எடுத்து அன்னைக்கே முடித்த கதை...
Epi 50 படிச்சுட்டு restart பண்ணினதால கொஞ்சமே கொஞ்சம் relaxed ah படிச்சேன்
நிறைய இடங்கள்ல (என்னையவே!) அழ வச்சிட்டீங்க
Especially சிமிர, நிரா மீட்டிங் before marriage;
சிமிர அப்பா, அவன் அத்தை, ருக்ஷி மீட், நந்தா, சிமிர ஃபேமிலி மீட் எல்லாம் so emotional
நிறைய இடத்தில் take diversion எடுத்திருந்தா இந்தக் கதை எப்படி போய் இருக்கும்ன்னு கற்பனை வேற என் நேரத்தை விழுங்கிருச்சு
ஒரு நாள் முழுதும் படிச்சு அடுத்த நாள் முழுதும் அதை அசைப்போட்டு
Awesome experience
எனக்கு சிசிர விட நந்தன ரொம்பப் பிடிச்சுது for no reason
?
?

Final epila that 2 families bonding wow
Great writing
Congrats

Kokila Balraj
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nithani Prabu
முதலில் சிங்கள அரசியலை, அரசியல்வாதிகளை, ராணுவத்தை , கிரிக்கெட் வீரர்களைத் தாண்டி அன்பும் இயல்புமான சாதாரண மனிதர்களை அறிமுகப் படுத்திய உங்கள் பரந்த மனதிற்கு
?
?

சிசிரவின் காவாலா டான்ஸ்
?

அவனது காதல் ஈர்த்தாலும் அனந்தனின் காதல் முன்பே அறிமுகமாகிவிட்டதால் அதுதான் சரி என்ற பிம்பம் எனக்குள் தானாகவே வந்துவிட்டது. (Thanks to spoilers
?
)
சிசிரவின் காதலில் இளமையும் துள்ளலும்
?

அனந்தனின் காதலில் ஏக்கமும் பரிதவிப்பும்
?

அனந்தன், நிரல்யா, சிசிர மூவரும் காதல் கொண்டனர். பிரிவை அனுபவித்தனர், அழுதனர், தேற்றினர், தேறினர்.
ஆனால் ருக்க்ஷி?
?
அவளது அன்பில், புரிதலில், இரண்டு குழந்தைகளுடன் இன்னொரு வாய்ப்பில்லாத நிலையில் காத்திருப்பைச் சொல்லும் வரிகள்தான் என்னை அழ வைத்தன.
கட்டிப்போடும் இலங்கைத் தமிழ், என்ன ஒரு flow
?
காலை முதல் மகளைச் சமைக்க விட்டு இதே வேலைதான் எனக்கு
?

பேராதனையைக் காணும் பேராவலுடன் நான்

வாழ்த்துகள் மகே லஸ்ஸன நிதா⚘️⚘️⚘️⚘️


Vedha Vishal
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நிதனி பிரபு மேமோட 'உன் அன்புக்கு நன்றி!'
ரொம்ப நாளா கண்ணால பாத்து, கேள்விப்பட்ட கதை. அந்தக் கதை பத்தின விமர்சனத்துல அடிக்கடி அடிபடுற வார்த்தை சிசிர காதல் or something.
நானும் கதை படிச்சேன். நேத்து night கடைசி நாள்னு போட்ருந்துச்சு. Recent daysல எந்தக் கதைலயும் ஒன்ற முடியாம தவிச்சுட்டு இருந்தேன். இந்தக் கதைல ரொம்ப ஒன்றிப் போய் ரொம்பவே தவிச்சுப் போயிட்டேன். நான் படிக்கும் போதே மணி 11க்கு மேல. 12 மணிக்கு ரிமூவ் பண்ணிடுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். ரைட்டருக்கு அர்த்த இராத்திரில மெசேஜ் போட்டேன். காலைல வரைக்கும் இருக்கும்னு அவங்க சொன்னதும் அப்படி ஒரு நிம்மதி
😌
விடியல் 4 மணி வரைக்கும் கதை பிடிச்சேன்.
ஏற்கனவே கஷ்டமான மனநிலைல தான் இருந்தேன். இந்தக் கதைய படிச்சுட்டு கண்ணீர்த் துளிகள் உருண்டு தலையணையை நனைச்சது‌. அதிலும் ஒரு ஆசுவாசம்; நிம்மதி; பேரமைதி. முதல் எபிலயே என்னோட ஹீரோ யாருன்னு நான் ஃபிக்ஸ் ஆயிட்டேன். Yes, I'm in Anandan army
🫡

சிசிர வால அவனோட உணர்வுகள வெளிப்படுத்த முடியுது. அது சோகமோ, சந்தோஷமோ, கோபமோ கொட்டிட்றான். அனந்தன் அப்படி இல்லை. மூடி வைக்கப்பட்ட கதவுக்குப் பின்னாடி என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. அது மாரி தான் அவனோட இதயமும். அவ்ளோ பாரத்தை யார் கிட்டயும் வெளிப்படுத்த முடியாம, அப்படியே வெளிப்படுத்தினாலும் கோப மொழியில மட்டுமே வெளிப்படுத்தத் தெரிஞ்ச ஒரு செல்லாக்குட்டி
😍
அதைப் பெரும்பாலும் வசனங்கள்ல சொல்லாமலே, அந்தக் கனத்தை முழுமையா வாசகர்களுக்குக் கடத்திருக்காங்க. அது ஆசிரியரோட பெரிய பலம்
👏
அனந்தன் ஒவ்வொரு தடவையும் நிராவால நொந்து, அதனால தன்னிச்சையா வெளிப்படுற உடல் மொழியைக் கூட அரை நொடில சரி பண்ணிப்பான். அந்த நிதானம் கடைசி வரைக்கும் மனச ஒருவழி பண்ணிடுச்சு. அந்த நிதானம் தான் அவனுக்கு நிராவ தேடித் தந்ததும்‌. அவனோட characterization அருமை! அந்த டாட்டூ விஷயத்தை அவன் handle பண்ண விதம்
💗
சொல்ல வார்த்தை இல்லை.
காதல் வயப்பட்ட ஒரு பொண்ணோட இதயம் எந்த அளவுக்கு மத்தவங்களை உதாசீனப்படுத்தும்; காதலனை மட்டுமே முதன்மைப்படுத்தும்குறத close to reality சொல்லிருக்கீங்க. பேராதனைய விவரிச்ச விதம் படிக்கும்போதே அந்தக் குளிரையும் மழையையும் உணர்ந்த மாரி நெஞ்செல்லாம் சிலுசிலுங்குது. குடையில தொடங்கி குடையிலயே ஒரு முடிவு‌. அவங்க காதல் எவ்ளோ உண்மையானதா இருந்தாலும் அது சேரக் கூடாதுனு நான் வேண்டாத தெய்வமில்ல! மன்னிச்சுருங்க சிசிர fans
😂
🙏
சிசிர is not a bad man here. But I loved அனந்தன் more. I couldn't help it. கதை முடியுற வரைக்கும், எல்லாரையும் விட அவனுக்காக மட்டுமே என் இதயம் துடிச்சது
🥰

கடைசி கட்டத்துல எனக்குப் பிடிச்ச ஒரு ஆள்னா ருக்ஷி. அந்தப் புள்ளைக்கு கனிவும் உறுதியும் ஒருசேர இருக்கு. இது போன்ற அழுத்தமான கதாப்பாத்திரங்களைப் படைச்சு, மனசை உலுக்கின உங்கள் எழுத்துக்கு நன்றி! உங்கள் பயணம் தொடரட்டும். தொடரணும் என்பது என் வேண்டுதல்/ வேண்டுகோள்
🙏

Bittersweetங்குற வார்த்தையக் கேள்விப்பட்ருப்போம். அது தான் இங்கக் கதையே. திகட்டவும் இல்ல. கசக்கவும் இல்ல. கதை முடிஞ்சு கடைசியில இது 25வது நாவலுக்குத் தகுந்ததா கேட்டீங்க. Worth o' worth. கதையோட தலைப்பு அதை விட கச்சிதம்.
உங்களோட கேட்பாரின்றிக் காதல் அமேசான் downloadல இருக்கு. படிச்சுட்டு வாரன்
💖
இந்த slang மனச விட்டுப் போக நாளாகும்
😊

படிக்காதவங்க படிங்க. ஆர்ப்பாட்டமில்லாத ஓர் உணர்வுப் பிரவாகத்தை miss பண்ணிடாதீங்க
🔥


Ezhilmathi G S
 
Top Bottom