என்னைப்பற்றி

நிதனிபிரபு

Administrator
Staff member
என்னைப்பற்றி?


என்னைப்பற்றி என்ன சொல்ல? யோசிச்சுக்கொண்டு வாறன். எதைச் சொன்னாலும், 'அப்படியா நான்?' என்கிற கேள்வி வருது. இல்லையோ, முழுமையாகச் சொல்லாத மாதிரி உணர்வு வருது.

மாற்றிக் கேட்டுப் பாக்கவா? என்னைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்க பார்க்கலாம். அது சரியா இல்லையா என்று நான் சொல்லுறேன். இதில், இன்னொரு இலாபமும் இருக்கு. என்னைப்பற்றிச் சொல்லும் வேலையில் இருந்து நான் தப்பித்துக்கொள்ளலாம்.
 
Last edited:

Vathsala

Member
உங்களை பற்றி வாசகியாகிய எங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டு இருக்கிறீர்கள்..உங்களின் எழுத்துக்கள் மூலம் தெரிந்துகொண்டதை வரிசை படுத்தியிருக்கிறேன்.
உணர்வுபூர்வமாக கதைசொல்லும் அற்புதமான மனுஷி.
குடும்ப உறவுகளின் மேன்மைகளை ஒவ்வொரு கதையிலும் அழுத்தமாக சொல்பவர்..உதாரணம் தனிமை துயர் தீராதோ.. அவள் ஆரணி..போன்ற (தற்போது சட்டென கதைகளின் பெயர்கள் நினைவுக்கு வரவில்லை) கதைகள்.
பெண்கள் எந்தநிலையிலும் மனம் தளரக்கூடாது என்று உங்கள் பெண்கதாபாத்திரங்கள் மூலம் திரும்ப திரும்ப வலியுறுத்தி எழுதி தைரியப்படுத்துவீர்கள்.
தாய்நாட்டின் அருமை பெருமைகளை அவ்வப்போது சொல்லும் நீங்கள் தற்போது இருக்கும் நாட்டின் மனிதர்களின் அருமைபெறுமைகளையும் மறக்காமல் உங்கள் கதைகளின்மூலம் அவ்வப்போது சொல்வீர்கள்.
சிறந்த குடும்பத்தலைவியாகவும் அன்னையாகவும் உங்கள் வா ழ்க்கை மென்மேலும் சிறக்க என்னுடைய ஆசிகள்.
 
வணக்கம் நிதனி
உங்களின் எழுத்து நடைக்காகவும்
சொல் ஆளுமைக்காகவம்
ராதாவின் மோகனனில் துவங்கி
விக்கியின் ஆரணியில் மயங்கி
அனன்யா ஆதிரையனில் அதன் பின் பல்லவி இன்னும் இன்னும்.....
தேடித் தேடி வாசிக்க.....
இப்பொழுது துவாரகையில் ஏனெனில் வந்திருக்கிறேன்........
மகிழ்ச்சி
ஆரவாரம்
வலி
வழி
நிறைய நேசம்....
நிறைவான பாசம்.....
காத்திருக்கிறேன்.........
அடுத்த நேசத்தை வாசிக்க.,. ........
நட்புடன்
நகாஹி
 
மீண்டும் ஒரு முறை தேசத்தின் இன்னொரு முகத்தை வாசிக்க துவங்குகிறேன்............ நிறைவதற்குள் அடுத்த நேயத்துடன் வந்திடுக....
காத்திருக்கிறேன்.......
நன்றி......
வாழ்த்துக்கள்
 

Nandhunalin

Active member
ரமணிச்சந்திரன் அம்மாவிற்கு பிறகு நான் படித்த கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இருவர் நீங்களும் ரோசி அக்காவும் தான். தெளிவான எழுத்து நடையிலும், எளிமையான கதை மாந்தர்களையும் ,,அருமையான கருத்துக்களையும் உள்ளடக்கிய உங்களின் உணர்வுப்பூர்வமான கதைகளுக்கு என்றும் நான் அடிமை.

உங்கள் எழுதுப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
 
நிதனிமா அமேசான் திட்டில் என்னவாயிற்று? காத்திருப்பு காலம்......
 
Top Bottom