Mohanan
New member
கிராமம்
சொந்தங்கள் செறிந்து வாழும்
சொர்க்கத்தின் ஒத்திகை
பந்தங்கள் மகிழ்ந்து சூழும்
பாசத்தின் வேடிக்கை
பச்சை வயல் வெளிகளின்
பட்டுச்சேலை விரிப்பு
உச்சம் தரும் இன்பத்தின்
உயர்வான ஊற்று
நாட்டார் பண்புகள் கொண்ட
நாகரீகமான வடிவம்
காட்டில் கழனி செய்யும்
காரணத்தின் உருவம்
பாட்டில் உணர்வை சொல்லும்
பக்குவத்தின் கலையகம்
ஏட்டில் உள்ளதை அறிவால்
இரும்பும் பொக்கிஷம்
நாட்டின் பொருளாதார உயர்வின்
நாணயமான களஞ்சியம்
தோட்டங்கள் செய்து ஏழ்மையை
துரத்த கிராமம்
அவசியம்.
சொந்தங்கள் செறிந்து வாழும்
சொர்க்கத்தின் ஒத்திகை
பந்தங்கள் மகிழ்ந்து சூழும்
பாசத்தின் வேடிக்கை
பச்சை வயல் வெளிகளின்
பட்டுச்சேலை விரிப்பு
உச்சம் தரும் இன்பத்தின்
உயர்வான ஊற்று
நாட்டார் பண்புகள் கொண்ட
நாகரீகமான வடிவம்
காட்டில் கழனி செய்யும்
காரணத்தின் உருவம்
பாட்டில் உணர்வை சொல்லும்
பக்குவத்தின் கலையகம்
ஏட்டில் உள்ளதை அறிவால்
இரும்பும் பொக்கிஷம்
நாட்டின் பொருளாதார உயர்வின்
நாணயமான களஞ்சியம்
தோட்டங்கள் செய்து ஏழ்மையை
துரத்த கிராமம்
