You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கிருபனின் கமலி

நிதனிபிரபு

Administrator
Staff member
கிருபனின் கமலி.....
Nithani Prabu ....
மனதில் தனிமை உணர்ந்து
மருகும் கிருபன்....
மந்திரம் போல தாயின் சொல்லை
மனதில் பதித்துக் கொண்டு
மாமன் வீட்டில் இருந்தாலும்
மாமா மாமியின் பார்வையில்
மாமன் மகள்களுடன் கூட
முகத்தில் வெறுமை கொண்டு
மன வருத்தத்தில் பேசாமல்
மாமன் விட்டைவிட்டு
மன்னாருக்கு வேலை
மாற்றலாகி வந்துவிட்டான்....
தனிமையை போக்கும்
தன் நண்பன் அரவிந்தன்....
கமலி அரவிந்தனின் தங்கை
அசால்ட்டாக பேசி
அனைவரையும் வாய் பேச்சால்
அசரடிக்கும் அடாவடி பெண்...
கமலி பேசும் இடம் அனைத்தும்
கலாட்டா....
செல்ல பேர்
சிம்ரன் சூப்பர்....
பெண்ணின் தைரியம்
பெருமை என்றால்.....
ஆணின் வெட்கம்
அழகோ அழகு....
பெண்ணின் மிரட்டலும்
ஆணின் மென்மையும்
அச்சோ அழகு......
காதலை கூட
கோபமாய் அதட்டி உருட்டி
கிஸ் கேட்கும் இடம்
கட்டி பிடிக்க என்று
குறும்புகள் அனைத்தும்
அட்ரா சக்கை....
அப்படி போடு....
தாயாக தோன்றும் கமலி
தனிமைக்கு மருந்தாய்
தனக்கென்று ஒரு உயிர்
உறவாய் தேடியவனுக்கு
உலகமாய் மாறினாள் கமலி
கிருபனின் கமலி.....


ApsareezBeena Loganathan
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கிருபனின் கமலி

சிம்ரன் எனும் செல்லப்பெயரால் அமைதியான ஹீரோவை அழைக்கும் வாயாடி கமலி. இருவருக்குள்ளும் இருக்கும் புரிதலும் காதலும் அத்தனை அழகு. மனசு டிப்ரஸ்ட்டா இருக்கா, இதை வாசித்து முடிக்கும் போது போயே போச்சுனு அவ்ளோ ரிலாக்ஸ்டா உணர்வீங்க. கமலியின் வாயாடித்தனத்தை அவ்ளோ ரசிச்சேன் சிரிச்சேன். செம்ம Nithani Prabu சிஸ்

Narmadha Subramaniyam
 

நிதனிபிரபு

Administrator
Staff member
#Priyakutty_Review
கதை பெயர் : கிருபனின் கமலி
ஆத்தர் : Nithani Prabu மேம்



கிருபன்
நம்ம ஹீரோ...
?

கமலி
நம்ம ஹீரோயின்...
?

கிருபன்
கூச்ச சுபாவம் கொண்டவர்.
அமைதி, ஒழுக்கம்னு ரொம்ப நல்ல பையன்.
?

அவர் அமைதி, வெட்கம் எல்லாம் அழகு.
?

கமலி
துடுக்குத்தனமா, தைரியாமன பொண்ணு.
?

மனசுல பட்டதை பட்டுனு சொல்லி கோபப்பட்டாலும், நல்ல பொண்ணு.
?

கிருபன்... சின்ன வயசுலையே பெற்றோரை இழந்ததால மாமா வீட்ல தான் வளருறாரு.
படிப்பு வேலனு லைப்ல கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நல்ல நிலையில இருக்காரு.
?

ஆனாலும் மாமா, அத்தை, அவங்க ரெண்டு பொண்ணுங்கனு யாரும் அவர் கூட பெருசா பாசமா இருக்கறதில்ல. ஒதுக்கமாவே இருக்காங்க.
சில பல காரணத்தால வெளிய வந்து தனியா தங்கி வேலைக்கு போறாரு. ஆனாலும் மனசுல நமக்குன்னு யாரும் இல்ல என்ற எண்ணம், தனிமை அவருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
நமக்கும்...
?

இந்த தனிமை எப்படி அவர் கமலியால மாறுது அப்படின்றதுதான் கிருபனின் கமலி.
?
?

அரவிந்த் அவர் frd. கமலி அண்ணா.
நைஸ் கேரக்டர்.
?

அண்ணனும் தங்கையும் போடும் சண்டை...
?
?

அவங்க அம்மா,அப்பா கேரக்டர்ஸும் நைஸ்...
?

ஒரு கட்டத்துல அவருக்கு கமலி மேல லவ் வந்தாலும் frd தங்கை, அவங்க அம்மா அப்பா என்ன நினைப்பாங்களோனு தயங்கறது... மாமா பொண்ணு கல்யாணத்துக்கு போய் உரிமையா வேலை செய்றது... எல்லாம் அவர் நல்ல குணத்தை காட்டுது.
?

கமலி அவரிடம் காட்டும் அதட்டல், மிரட்டல்... அதுக்கு அவர் திணறல்... அவங்களோட 'சிம்ரன்' என்ற அழைப்பு... அவர் மேல இருக்க அக்கறை எல்லாம் அழகு...
?
?

மொத்தத்துல ஒரு கியூட்டான ஷார்ட் அண்ட் ஸ்வீட் லவ் ஸ்டோரி...
?

ரொம்ப ரசிச்சு படிச்சேன்.
All the best for all your upcomming novels mam...


கதைக்கான முழு லிங்க்...
❤
?

https://nithaniprabunovels.com/.../%E0%AE%95%E0%AE%BF%E0.../

1661584335140.png
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கிருபனின் கமலி - Nithani Prabu
கமலி & கிருபன்
?

அவ்வ் எவ்வளவு ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரி.
ரசித்து வாசித்தேன் நிதா அக்கா
?
அதிலும் சிம்ரனை கமலி வெச்சு செய்யும் இடமெல்லாம் விசில் மட்டும் தான் நான் அடிக்கல
?

லைட் சப்ஜெக்ட் கதை ஆனாலும் சிம்ரனின் பின்புல நிலையும் அவன் வருந்தும் இடமும் கொஞ்சம் சோகம் தான்.
கமலி, சான்ஸ்லெஸ் character
?
எத்தன அடாவடி சரவெடி!
அதோட அரவிந்த்
?
took my heart.
வாழ்த்துகள்

அக்கா
?

பி.கு: கதையில் ஹீரோயின் தான் ஹீரோவை வெச்சு செய்வார் என்பது குறிப்பிட தகுந்தது!

Sowndarya Umayaal
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nithani Prabu
கிருபன்
?
?
?

கமலி
?
?
?
?

Enjoyed thoroughly .
கல்யாணம், கிருபன், கமலியோட அடாவடி ரொமான்ஸ், ஒரு எபிலாக் கொடுத்தே ஆகணும்.
We are waiting dear
?
?
?


Vedha vishal
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இன்றுதான் ... கிருபன் கமலியை சந்தித்தேன்.....எப்பவும் போல.... நெஞ்சுவலி .....சிம்ரன நினைச்சு .... கண்கலங்காம படிக்க முடியவில்லை... அருமையானவன் ...... நிக்கி மாதிரி ம னிதர்களை அப்படியே..... கடந்து போகப் பழகியவன் .....
அருமையான

... படைப்பு... கோடான.....கோடி... நன்றிகள்....

Aberna Devi
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கிருபனின் கமலி - நிதனி பிரபு

எப்பவும் நிதா கதைகள் எல்லாம் ஒரு வித அழுத்தத்தோடவே இருக்கும் … படிக்கும் போது ஹீரோவ கண்டிப்பா திட்டிக்கிட்டுதான் படிப்போம் …
பட் கதை அப்படி இல்ல , முதல் முதலா கலகல கதையை அவங்க எழுத்துல படிக்கிறேன் … ஸ்டார்டிங்ல இருந்து எண்டு வரைக்கும் முகத்துல சிரிப்பு இருந்துகிட்டே இருக்கும் …
சாதுவான கிருபன் அறந்தவாலு கமலிகிட்ட எப்படி கவிழ்ந்தானு நீங்களே படிச்சு பாருங்க…
ஜாலியான் கதை படிக்கனுமா அப்போ மிஸ் பண்ணாம படிங்க …


Kavi Thillai
 

நிதனிபிரபு

Administrator
Staff member
#Uma_View

?
கிருபன்
?

அன்பானவன்
அமைதியானவன்
பண்பானவன்
தனிமை துயரன்.
வெட்கத்தால் முகம் சிவப்பவன்
கூச்சத்தால் தேகம் நெளிபவன்
மெல்லிய இடை கொண்ட அவனவளின் சிம்ரன்.
சொந்தங்களின் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்படுபவன்
உறவினர்களின் ஒதுக்கத்தால் தனக்குள்ளே ஒடுங்கப்பட்டவன்
ஒதுக்கி தள்ளினாலும் ஓரம் நின்று நேசம் வளர்ப்பவன்
தனாகான அங்கீகாரம் தரா சொந்தங்களுக்கு முதல் சொந்தமாய் போய் நிற்ப்பவன்.
தனக்கென வரும் இல்லாளில் மூலம் தன் வாழ்வு முழுமைக்குமான இனிமையை தேடுபவன்
இவன் கொண்டது ஒன்றை நண்பன் ஆகினும் இவனுகான உற்ற நண்பன் ஆயிற்றே அவன்.
?
கமலி
?

இவள் கிருபனின் கமலி
வாயாடி
சேட்டைக்காரி
பிடிவாதகாரி
மனதால் அனாதையாய் தவிபவனின் ஒட்டு மொத்த உறவு இவள்.
அன்பான அதட்டல் மொழிகளாலும்,
பாசமான பரிதவிப்பினாலும்,
அதிரடியான அரவணைப்பினாலும்
கிருபன் இவனின் உள்ளம் நுழைந்தவள்
நேசம் நிறைத்தவள் அவனுகான தாய்மை உணர்தியவள் இந்த கமலி
கிருபனின் கமலி
உங்க ரைடிங் ரொம்பவே பிடிக்கும். அவ்ளோ ரசிச்சு படிப்பேன் உங்க எழுத்தை . உங்க கதைகளுக்கு இது வரை silent ரீடர் நான் . முதல் Review இது.
?
?

எந்த வித அழுத்தம் இல்லாத சின்னதா அழகா ஃபீல் குட் ஸ்டோரி ரொம்ப பிடிச்சு இருந்தது.
வாழ்த்துகள்

sis
?
♥️
?
♥️
?
♥️
?



1661584746523.png
 
Top Bottom