You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

சதுரம் என்ற சொல்லிற்கான தமிழ்ச்சொல்?

ரோசி கஜன்

Administrator
Staff member
சதுரம் என்ற சொல்லிற்கான தமிழ்ச்சொல்?

?சதுரம் என்ற சொல் தமிழல்ல. அதற்கு நிகரான தமிழ்ச்சொல்லாக `நாற்கரம்` என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. `நாற்கரம்` என்ற சொல் தமிழே. ஆனால், ஆழமாகப் பார்த்தால் ,

நாற்கரம் = Quadrilateral { not *Square* }.

?எனவே இதனை (Square) #சம_நாற்கரம் எனக் குறிக்கலாம். இதனை விடச் சிறப்பான சொல் #சதுக்கம் என்பதாகும். இது ஒரு சங்கத்தமிழ்ச் சொல்.
“சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் ..." – {திருமுருகாற்றுப்படை}

??`சதுக்குதல்` என்றால் நாற்புறங்களையும் சமன் செய்தல் என்ற பொருளில் வரும். இதுவே பின்பு `செதுக்கல்` ஆயிற்று. நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வாழும் பூதமே `சதுக்கபூதம்` எனப்பட்டது (சிலம்பு).

?எனவே `சதுக்கம்` என்பது ஒரு தூய தமிழ்ச்சொல். அத்துடன் சங்ககாலச் சொல். நாம் மறந்துவிட்டோம். ஆனால் அதனைக் களவாடி சதுஷ்கம்/ சதுர் போன்ற வடமொழிச் சொற்களை உருவாக்கி அவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

?Square = சதுக்கம் / சம நாற்கரம் (சதுரம் தமிழல்ல)???

1581625432744.png

1581625449746.png


நன்றி: திரு இலங்கநாதன் குகநாதன்
 
Top Bottom