
செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026
அன்பிற்கினிய வாசக உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
நிதனிபிரபு நாவல்கள் தளம் புது முயற்சியாகக் கதை எழுதும் போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறது.
இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கிறவர்கள், புதிதாக எழுத நினைப்பவர்கள், வேறு தளங்களில் எழுதுகிறவர்கள் என்று எந்த வேறுபாடும் இல்லை. எல்லோருமே கலந்துகொள்ளலாம்.
விதிமுறைகள்:
- இது அடையாளம் மறைத்து, அதாவது பெயர் மறைத்து எழுதும் போட்டி
- 14 Jan 2026 தொடக்கம் 15 May 2026 வரை போட்டி நடைபெறும்.
- எக்காரணம் கொண்டும் போட்டிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.
- எழுத விரும்புகிறவர்கள் 28 Feb 2026 வரை பெயர்களைப் பதிவு செய்யலாம்.
- 25000 தொடக்கம் 35000 வரையான சொற்களுக்குள் இருக்க வேண்டும்.
- வேறு தளங்களில் வெளியிடப்படாதவையாக, சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
- இன்னொரு கதையைத் தழுவியதாக இருத்தல் கூடாது.
- முடிவு அறிவிக்கும் வரை கதைகள் தளத்தில் இருக்கும். அதுவரை வேறு எங்கும் பதிவிடக் கூடாது.
- முடிவுகள் வெளியாகும்வரை சுயவிபரங்களை வெளியிடுதல் கூடாது.
- 15 August 2026 முடிவு வெளியிடப்படும்.
- எக்காரணத்தைக் கொண்டும் முடிவுத் திகதி தள்ளிவைக்கப்பட மாட்டாது.
- ஒருவர் ஒரு கதை மட்டுமே எழுதலாம்.
- இது காதலைக் கருவாகக் கொண்ட நாவல் போட்டி. காதலர்களை வைத்தும் எழுதலாம். கணவன் மனைவியை வைத்தும் எழுதலாம். பிரிந்தவர்களை வைத்தும் எழுதலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், விரசம் இல்லாமல், வரம்பு மீறிய வார்த்தைப் பிரயோகங்கள் இல்லாமல், முகம் சுளிக்க வைக்கும் காதல் காட்சிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- எழுத்துப்பிழை, சொற்பிழை வரும்தான். என்றாலும் அளவுக்கதிகமான தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
- வாக்கியம் முற்றுப்பெறுதல், சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்லுதல், கதை நேர்த்தி போன்றவை கதையில் இருத்தல் சிறப்பாகும்.
- மேற்கூறப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டால் அக்கதை போட்டியிலிருந்து விலக்கப்படும்.
- வெற்றியாளர் தெரிவில் வாசகர்களின் வரவேற்பும், தளத்தில் கருத்திடுபவர்களின் எண்ணிக்கையும், பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையும் கணக்கில் கொள்ளப்படும்.
- நிச்சயமாக இப்போட்டி செம்மையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும்.
- தளத்தின் முடிவே இறுதியானது.
- விதிமுறைகள் மீது எந்த நீக்குப்போக்கும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது.
- தொடர்புக்கு : nithaprabu@gmail.com
- உள்பெட்டியிலும் தொடர்புகொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தரவேண்டிய தகவல்கள்:
- போட்டிக் கதையின் தலைப்பு (story title)
- மின்னஞ்சல் முகவரி (email id)
- உங்கள் எழுத்தாளர் பெயர் (pen name or author name)
- தொடர்புக்குக் கைப்பேசி இலக்கம்(contact number)
Last edited: