You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தேத்தண்ணி வித் நிதா

நிதனிபிரபு

Administrator
Staff member
Hi நிதா நலமா உங்கள் கதைகள் எல்லாமே பிடிக்கும் ஆனால் உங்கள் பதிலில்இருக்கும் நகைச்சுவை கதையில் இல்லையப்பா கேரக்டரில் மூழ்கி என்னால் அழாமல் படிக்க முடியவில்லை நான் உங்களை சீரியசானவர் என்று நினைத்திருந்தேன் அப்படி இல்லை என்று உங்கள் பதிலிலும் உங்களை பார்த்தாலும் தெரிகிறது குடும்பபோட்டோ சூப்பர் அழகாக வே இருக்கிறீர்கள் எதற்கு இந்த நீக்கா மேக்கா துறுதுறுஜீவனி மாதிரி ஒரு ஹீரோயின் ப்ளீஸ் ஆரணிக்காக வெயிட்டிங்
ஹாய் Asath,

நலம் நலம். நீங்களும் நலமா? அது என்னவோ உண்மைதான். என்னால் ஒரு அளவைத்தாண்டி நகைச்சுவையாகக் கதையை எழுத முடிவது இல்லை. ஆனால், எழுத மிகவும் விருப்பம். நிச்சயம் அதற்கான அனுபவம், அதை எப்படி எழுதுவது என்கிற லாவகம் பிடிபடும்போது நிச்சயம் எழுதுவேன். ஹாஹா.. எங்கள் வீட்டிலேயே தேடிப்பிடித்து எல்லாவற்றுக்கும் சிரிக்கிற ஆள் நான் தான். அடுத்து மகள். அப்பாவும் மகனும் கொஞ்சம் இறுக்கமான பேர்வழிகள்.

ஜீவனி மாதிரி ஒரு நாயகி இப்போதைக்கு இல்லை. ஆரணி நிமிர்வான பெண்.

மிக்க மிக்க நன்றி உங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும்!
 
நிதா அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க....உங்க பொண்ணு அப்டியே உங்களை மாதிரியே இருக்காங்க ....லவ்லி...அழகான குடும்பம்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Hi nitha super .first unga name nirharsini supera irukku.na unga elutha vachu ungalukku oru image assume panuvomla ,apdiye irukkinga nu solla mudiyadu .konjam color kooda irukkinga.konjam poramai enakku.ipo recent a Dan papa voda cookery section read panen.samathu ponu.en ponnum valanda samaipanga nu irukken.Kathiroli my daughter name.5vayasu aga podu may 1Vanda.enadan paiyan irundalum ponnu illana life e fulfill agadu.edo solla vandu enamo solitu irukken.coffee with nitha u en question LA kekala.epo inda questions LA collect paniga.pongu aattam.inform panirunda nanum kettu irupen la...

ஹாய் ரேனா, ஹாஹா நன்றி நன்றி. ஆமாம், உங்கள் மகளும் கட்டாயம் எல்லாம் சமைப்பா. எனக்குத் தெரிந்து இப்போது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு சமையல் மீது ஒரு ஆர்வமே உண்டு. என் மகள் இப்போதுதான் 13 வயது. ஆனால், ஐந்து ஆறு வருடங்களுக்கு முதல் இருந்தே கேக் எல்லாம் செய்வா. அப்போது என் உதவி சற்று அதிகம் தேவைப்படும். இப்ப தானாவே எல்லாம் செய்வா. சமையலுக்கு எனக்கு பெரும் உதவி அவாதான். வெங்காயம் உள்ளி இஞ்சி எல்லாம் தோல் உரித்து வெட்டித் தருவது எல்லாமே அவதான். அதேபோல காய்கறிகள் கூட வெகு அழகாக காட்டிக் கொடுப்பது போலவே செய்து தருவா. என்ன பண்ட பாத்திரம் மட்டும் கழுவுறது இல்ல. அதுக்கு என்ன? நான் எல்லாம் திருமணமாகி வருவரைக்கும் தேநீர் கூடப் போடத் தெரியாது. கணவரிடம் தான் சமையலே பழகினேன்.

மிக மிக அழகான பெயர் கதிரொளி. மக்களை சுகம் விசாரிச்சேன் என்று சொல்லி விடுங்கோ. ஹாஹா.. இது நீயிருக்கும் நெஞ்சமடி கடைசி எபி போட்டுட்டு கீழே லிங்க் போட்டு இருந்தேனே நீங்க பாக்கேல்லையா.. விடுங்க ஏதாவது கேக்க வேணும் என்றால் இங்க கேளுங்க பதில் சொல்லுறேன். நன்றி ரேனா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Vow nice nitha sis,unga ponnu azhagu,neenga with white dress super.All the best to u and ur family.Neenga ippadiyea continuously ezhuthi entertain pannunumnu request panni kettukurean

Thanks for posting photos sis
மிக்க மிக்க நன்றி! ஹாஹா நிச்சயமா எழுதுவேன் என்னால் முடிந்தவரை..
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Thank you akka. Nanum ungal photos ketanumnu than nenaithen akka. Nenga ethum nenaichupengalonu kekala. Already Rosie akkavoda photo pathiruken, ungala pakanumnu Roomba asaiya irunthathu. En manathukku piditha rendu akkavoda photos pathuten. ???
Nengalum sinthuvum ontrupola irukenga akka. Family photo super.

மிகவும் நன்றிமா. போடக்கூடாது என்றோ காட்டக்கூடாது என்றோ இல்லை உஷா. ஏனோ போடுவதை குறைத்துவிட்டேன். ஆரம்பம் போடுவேன் fb ல. வேற அக்கவுண்ட் இருக்கு எனக்கு. நானும் மகளும் ஒரே மாதிரியும் அப்பாவும் மகனும் ஒரே மாதிரியும் என்றுதான் பெரும்பாலும் எதுவுமே நான் பிளான் பண்ணுவேன். அக்கா தங்கை மாதிரி என்று கேட்டுக்கொள்வதில் ஒரு அல்ப சந்தோசம். ஹாஹா...
 
Top Bottom