• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நண்டுக்கறி

ரோசி கஜன்

Administrator
Staff member
நண்டுக்கறி

1541950489084.png

தேவையான பொருட்கள்:

நண்டு – 4 (500கிராம் )

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 6

இஞ்சி - சிறு துண்டு

மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (தேவையான உறைப்பிற்கேற்ப)

மஞ்சள்தூள் – சிறிதளவு

பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு – சிறிதளவு

மிளகு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

தேங்காய் – பாதி (துருவிய பூ)

பழப்புளி – சிறு எலுமிச்சை அளவு உருண்டை.

எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு

கறிவேப்பிலை, உப்பு, புளி - தேவையான அளவு

செய்முறை:

1 நண்டைச் சுத்தம் செய்து, பெரியதெனில் நான்காகவும் சிறியதாயின் இரண்டாகவும் உடைத்துக்கொள்ளுங்கள். பெரிய கால்களை இரண்டாக முறிக்கலாம்.

2 வெங்காயம், பச்சைமிளகாயை நீட்டு நீட்டாக வெட்டித் தனித்தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

3 உள்ளியையும் இஞ்சியையும் பேஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள். சிறு உரல் இருந்தால் இடித்து எடுக்கலாம். அல்லது காரட் சீவுவதில்(சிறு அச்சில்)சீவி எடுங்கள்.

4. பெருஞ்சீரகம், மிளகு, தேங்காய் பூ என்பவற்றை வறுத்து, மிக்சியில் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். ( தேங்காய் பூ பொன்னிறமாக வரவேண்டும்.)

5. கறி சமைக்கும் பாத்திரத்தில் (அடி கனமானதாயின் நன்று) சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் கடுகு சேர்த்து, வெடித்ததும், பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

6 பின், வெந்தயம் சேர்த்து, அது நிறம் மாறத் தொடங்க, வெட்டிவைத்த வெங்காயத்தையும், பச்சை மிள்காயையும், உள்ளி இஞ்சி பேஸ்ட்டையும் போட்டு நன்றாக வதக்கவும்.

7 பின், நண்டை போட்டு கிழறி வதங்க விடவும். கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் பழப்புளியைக் கரைத்து விடவும். அத்துடன் நண்டு அவியத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

8 அடுத்து, மிளகாய்தூள், உப்பு என்பவற்றைச் சேர்த்து, கலந்து மூடி அவிய விடவும்.

9 நண்டு அரை அவியல் அவிந்ததும் அதற்குள் தேங்காய் பேஸ்ட் கலந்து நன்றாக பிரட்டி மீண்டும் கொதிக்க விடவும்.

10 நண்டு நன்றாக வெந்து கறி பிரட்டலாக வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.

நண்டுக்கறி

View attachment 27

THANKS A LOT AKKA
 
Top Bottom