Mrs. Jeevakan Rathika
New member
மிகுந்த ஆவல்
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ரௌடி ஹீரோவா!? ஆனால் அவ கொஞ்சம் கூட கண்டுக்கலை போலநீயா உயிரிலே! - நிதனிபிரபு
இந்தக் கதைதான் அண்டைக்கு அருவி மாதிரிக் கொட்டிச்சுது எண்டு சொன்னேன்
தன்னைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனும், அழகான உலகத்தில் பூத்துக் குலுங்கும் ஒற்றை மலரும் சந்திக்கும் களம்தான் கதை.
நான் நோட் பண்ணி வச்சதில இருந்து சில இடங்கள். ஆனா கதைல வருமா வராதா எண்டு எனக்கே தெரியாது. எப்பவும் போல ஃபீல் குட் ஒன்லி!
“ஐயோ கடவுளே! இவனுக்கு ஆராவது இடுப்புக்கு மேலயும் உடுப்புப் போடுறதாம் எண்டு சொல்லிக் குடுங்கடா!” சத்தமில்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினாள் அவள்.
“தப்பித்தவறி மேல போடப்போய் கீழ கழட்டிட்டா?” தீவிரமாகி சந்தேகம் கேட்டாள் அவளின் மச்சாள்.
“போதும்! இந்த உலகம் இன்னும் கொஞ்சகாலத்துக்கு அழியாம இருக்கட்டும்!”
—----------------------------------------------------------------------------
ஒரு ரவுடி எண்டும் பாக்காம கேவலப்படுத்திறீங்க என்ன? ஆருக்கு மசில்ஸ் கூட எண்டு பாப்பமா? என்று சினத்துடன் சீறியபடி அணிந்திருந்த சட்டையின் கையைக் கடகடவென்று உயர்த்திவிட்டு கையை முறுக்கிக் காட்டினாள்.
அவன் என்ன சட்டையா போட்டிருக்கிறான் எதையாவது இழுத்துவிட?
இடுப்பில் கைகளை வைத்திருந்தவன் ஒற்றைக் கையை மாத்திரம் மடக்கிக் காட்டினான்.
அவனுடையது காளையின் திமிலைப் போன்று புடைத்து நிற்க, அவளுடையது மரத்தில் தொங்கும் தேன் கூட்டைப் போன்று தொங்கியது.
பக்கென்று சிரித்துவிடாமலிருக்க அவன் பெரும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தான். அவள் தன் எலும்புக் கையை ஆட்டி அசைத்து எதையோ செய்ய முயன்றுகொண்டிருந்தாள்.
………………………….
“எனக்குக் கொலையும் புதுசில்ல ஜெயிலும் புதுசில்ல மாமா.” என்றான் எச்சரிக்கும் குரலில்.
மாமாவாமே! “கொலையையே செய்யச் சொல்லுங்க அப்பா.” என்றுவிட்டுப் போனாள் அவள்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.