அத்தியாயம் 37
ஆதினியின் வீட்டுக்குச் சற்று முன்னாலேயே ஜீப்பை நிறுத்தினான் எல்லாளன். அவள் கேள்வியாகப் பார்க்க, அவளை இழுத்து முகம் முழுக்க முத்தமிட்டான். எதிர்பாராமல் திடீரென்று அவன் நிகழ்த்திய முத்தத் தாக்குதலில் தன்னை நிலைநிறுத்துவதற்குள் அவள் இதழ்களைக் கொய்தான். சற்றே அழுத்தமான உறவாடல்.
“காண்டீபன்ர பிரச்சினை நடுவுக்க வந்திட்டுது. அதுக்கு முதல் வரைக்கும் நீ வரப்போறாய் எண்டு எவ்வளவு ஆசையா இருந்தனான் தெரியுமா. ஆனா நீ? ஆருக்குத் தெரியும் எண்டு கேக்கிறாய் என்ன? இனிக் கேக்கமாட்டாய்!” என்று சீறிவிட்டு அவளை விட்டான் அவன்.
அவன் தோளிலேயே இரண்டு போட்டுவிட்டு வந்த ஆதினிக்கு அன்றைய இரவு உறக்கமற்றே கழிந்தது. ஆனாலும் காண்டீபனைச் சந்திப்பதற்காகக் காலையிலேயே எழுந்து தயாராகினாள்.
என்றைக்குமே அவனைப் பார்க்கப் போகிறோம் என்றாலே உற்சாகம் பொங்கும்; உதட்டோரம் சிரிப்பு மின்னும். அந்தளவில் பேச்சு, செயல், பார்வை என்று அனைத்தாலும் சீண்டி, அவளை ஒருவழியாக்கிவிடுவான். அப்படியானவனை இன்றைக்கு எப்படிச் சிறைக் கம்பிகளுக்கப்பால் பார்க்கப் போகிறாள்? நினைக்கையிலேயே நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
‘இன்னும் கொஞ்ச நாள்தான் அண்ணா. நீங்க வெளில வந்திடுவீங்க.’ கைப்பேசி, ஸ்கூட்டியின் திறப்பு, பேர்ஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வேகவேகமாகக் கீழே இறங்கி வந்தவளின் காதில், ‘கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்களை விநியோகம் செய்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் காண்டீபன் சம்மந்தன், காவல்துறையினால் நேற்றுக் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைக்குப் போதைத் தடுப்புப் பிரிவின் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின்(Criminal Investigation Department) கீழ் மாற்றப்பட்டார்.’ என்கிற செய்தி, பெரும் இடியாக வந்து விழுந்தது.
விறுவிறு என்று ஓடிப்போய்த் தோலைக்காட்சியின் முன்னே நின்றாள்.
‘எதிர்காலச் சந்ததியினருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய விரிவுரையாளரின் மோசமான இச்செய்கையினால், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கொடுத்த முறைப்பாட்டின் பெயரில், இரகசியமாக விசாரணையை மேற்கொண்டபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதை அடுத்து, விசாரணைக்காக சி.ஐ.டியினரின் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.’ என்கிற செய்தியின் பின்னே, கைகளில் விலங்கிடப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து வெளியே அழைத்து வரப்படும் காண்டீபனைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
அவனை இப்படி ஒரு கோலத்தில் கண்ட ஆதினிக்கு விழிகள் கரித்து, தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது.
‘மூன்று வருடங்களுக்கு முன்னர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி, உயர் மன அழுத்தத்துக்கு உள்ளாகித் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் தற்கொலையின் பின்னாலும், காண்டீபன் சம்மந்தன் இருக்கலாம் என்கிற வலுவான சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை தொடரும் என்று, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் குற்றவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்…’ என்று தொடர்ந்த செய்தி, ஆதினியின் தலையில் பெரும் இடியாகவே இறங்கிற்று.
பணிக்குச் செல்வதற்குத் தயாராகி வந்த அகரனும் அந்தச் செய்தியைக் கேட்டுப் புருவங்களைச் சுருக்கினான். வழக்கின் திசையே மாறிப் போயிற்றே. அதைவிட, இது எல்லாம் ஒற்றை இரவில் எப்படி நடந்தது? அதுவும் தொலைக்காட்சியில் செய்தி வரும் அளவுக்கான இந்த வேகம், என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று.
அதற்குமேல் நொடியும் தாமதிக்காமல் வாசலுக்கு ஓடினாள் ஆதினி.
“ஆதி நில்லு, நான் கூட்டிக்கொண்டு போறன்!” என்ற அகரனின் அவசரக் குரல், அவளை எட்டவே இல்லை.
அவள் அங்குச் சென்று சேர்ந்தபோது, அந்தச் சூழலே மிகுந்த பதட்டத்தில் இருந்தது. பத்திரிக்கை, தொலைகாட்சி நிருபர்கள் குவிய ஆரம்பித்திருந்தனர். அவசர நிலை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டது போன்று, அங்கும் இங்குமாகக் காவல்துறை ஆட்கள் நடந்துகொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் ஏதோ ஒரு தீவிரம். இந்தளவில் அப்படி என்ன பெரிதாக நடந்து விட்டது? அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
நொடி நேரத்தைக் கூட வீணாக்க விரும்பாதவளாக உள்ளே விரைந்தாள். அங்கே, மூவர் கொண்ட ஒரு குழுவிடம் மிகத் தீவிரமாக வாதிட்டுக்கொண்டு நின்றிருந்தான் எல்லாளன். அவன் காக்கி உடையில் இருக்க, மற்ற மூவரும் சாதாரண உடையில் இருந்தாலும் அவர்கள், குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என்று பார்க்கவே தெரிந்தது.
அவள் அவர்களை நெருங்கியபோது, “அவர் உங்கட ஃபிரெண்டாம் எண்டு கேள்விப்பட்டனாங்க எல்லாளன். பெத்த அம்மாவா இருந்தாக் கூடச் சட்டம் வளையக் கூடாது! அத நினைவில் வச்சிருங்க! எங்களைத் தடுக்கிற அதிகாரமோ, கேள்வி கேக்கிற உரிமையோ உங்களுக்கு இல்ல. எங்களை எங்கட வேலையப் பாக்க விடுங்க!” என்று சொல்லிக்கொண்டிருந்தார், அந்த மூவரில் நடுவில் நின்றவர்.
அவர்தான் அந்தக் குழுவுக்குத் தலைமை அதிகாரி என்று புரிந்தது.
அதற்குமேல் அவர்களிடம் செல்லாது நின்றுவிட்டவளின் விழிகள், காண்டீபனைத் தேடிச் சுழன்றன. அவள் தனிமையை உணர்ந்தபோது தோள் தாங்கியவன்; இரத்த பந்தமே இல்லாமல் அண்ணனாகத் தன்னை உணர்த்தியவன்; அவனுக்குத் துணை வேண்டுகிற இந்த நிமிடத்தில் அவனருகில் போய்விட முடியாத அந்த நிலை, அவள் மனத்தை அறுத்தது.
அப்போது, அங்குக் கதிரவன் வருவதைக் கண்டவள், அவனை இழுத்துக்கொண்டு காவல்நிலையக் கட்டடத்தை விட்டு வெளியே வந்து, “எங்க காண்டீபன் அண்ணா? ஏன் இப்பிடித் திடீர் எண்டு கேஸே வேற மாதிரித் திரும்பி இருக்கு?” என்று படபடத்தாள்.
அவன் முகத்திலும் மிகுந்த இறுக்கம். “எங்களுக்கும் இன்னும் ஒண்டும் டீடெயிலா தெரியேல்ல, மேம். விடிய எஸ்பிட்ட இருந்து சேருக்கு ஓடர் வந்திருக்கு. சேர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அதுதான் சீ.ஐ.டி ஒபீஸரிட்ட சேர் கதைச்சுக்கொண்டு இருக்கிறார். கேஸ் நாங்களே நினைச்சுப் பாக்காத அளவில பெருசா இருக்கு மேம்!”
அவளாலும் அதை ஊகிக்க முடிந்தது. குற்றவியல் விசாரணைப் பிரிவின் கீழ் சென்ற வழக்கை இனி யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எதுவானாலும் நீதிமன்றின் மூலமாகத்தான் அணுக முடியும். அதுவரைக்கும் காண்டீபன் அண்ணாவின் நிலை?
“அண்ணா எங்க?”