You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ வாழவே.. என் கண்மணி!

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“இவையல(இவர்களை) மாதிரி நாங்களும் வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். எங்களை மாதிரி யாராவது வந்து பாத்திட்டாவது போயிருப்பீனம். உயிரோட இருக்கிறதுல ஒரு சனமும் திரும்பியும் பாக்குதில்ல.”

உண்மைதான்! போரிலே ஊனமுற்றவர்கள் ஏதோ ஒருவகையில் ஒதுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வலி, அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“எங்களைக் கண்டா பாக்கக்கூடாத மனுசரை பாத்தமாதிரி ஓடுதுகள். ஒரு வார்த்த கதையில்ல. சிலநேரம் நான் இங்க வந்திருந்து இவளோட கதைச்சுக்கொண்டு இருந்திட்டுப் போவன். சாவும் வருதில்ல. அதுவரைக்கும் பொழுதும் போகவேணுமே.”

அவளைப்போலத்தான் அவனும் போல. ஒவ்வொரு இரவிலும் கண் மூடுகையில் மீண்டும் விழிக்கக் கூடாது என்று கேட்பான் போலும். அது நடக்காத விரக்தி அவனைப் பேச வைத்தது.

அவளைக் கண்டதும் ‘தன் இனம்’ என்கிற சொந்தம் அவனுக்குள் உருவாகிவிட்டது என்று நன்கே புரிந்தது. நிறையப் பேசினான். அவனை நிறுத்தவோ முகத்தை முறிக்கவோ மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இயக்கத்தில இருக்கேக்கதான் விரும்பினாங்கள்(விரும்பினோம்). அண்ணாதான் செய்து வச்சவர்!” அதைச் சொல்லும்போது மட்டும் அவன் விழிகள் மின்னியது.

வயதில் பெரியவர்களுக்கு ‘தலைவர்’ வயதில் சின்னவர்களுக்கு ‘தலைவர் அண்ணா’. அந்த தேசத்தின் மக்களுக்கே உறவாகிப்போன ஒரு மாமனிதனைப் பற்றி பேசுகையில் விழிகள் மின்னாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அவனோ பேச ஒருவர் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் தன் வாழ்க்கை வரலாற்றையே பகிர்ந்துவிட்டுப் போனான். இன்று நிம்மதியாக உறங்குவான் என்று அவன் முகத்தைப் பார்த்தபோதே தெரிந்தது.

சுற்றி இருந்தவர்களைப் பார்த்தபோது, அவர்கள் வீரசசாவடைந்தது எவ்வளவோ மேல் என்றுதான் அவளுக்கும் நினைக்கத் தோன்றியது. ‘முன்னாள் போராளிகள்’ எல்லோரும் ஒரு காலத்தில் பாதுகாப்பாக நெஞ்சை நிமிர்த்தி மக்களை நடக்க வைத்தவர்கள். இன்று? அந்த மக்கள் திரும்பியும் பாராமல் அவர்களைக் கடந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் மீட்புக்காய் சுண்டு விரலைக்கூட அசைக்காதவன் எல்லாம் ‘நான் ஈழத்தவன்’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்க, அதற்காய் போராடியவர்கள் கூனிக் குறுகி நிற்கிறார்கள். காவல் காத்த தெய்வங்களை தூக்கி ஒரு மூளைக்குத்தானே எறிந்துவிட்டது சமூகம்.

சூரியன் உச்சிக்கு வருவது போலிருக்கவும் அங்கிருந்து வெளியேறி, வீதிக்கு இறங்கி, மெல்ல அவளது வாகனம் வீட்டை நோக்கி நகர்ந்தது.

அதற்காகவே காத்திருந்தது போல அழைத்தார் நிர்மலனின் அன்னை, பத்மாவதி.

“சொல்லுங்கோ ஆண்ட்டி!” அவனைக் கண்டபிறகு அவன் தேடி அழைத்துப் பேசியத்திலேயே பெரும் ஆறுதல் கொண்டிருந்தாள் அவள். இப்போது அவரும் அழைத்ததில் மனதுக்கு நிறைவாக இருந்தது.

“சுகமா இருக்கிறியா பிள்ளை?” நலம் விசாரித்துத் தெரிந்துகொண்டவர் விசயத்துக்கு வந்தார்.

“தம்பி உனக்கு கரண்ட்ல ஓடுற ஒரு சக்கரநாற்காலி வாங்கச் சொன்னவன். அப்படியே பிளாஸ்டிக் காலுக்கும் ஏற்பாடு செய்யச் சொன்னவன். நீ இங்கயே வாவனம்மா. உனக்கும் அலைச்சல் இல்ல எனக்கும் அலைச்சல் இல்ல. எல்லாத்துக்கும் சுகமெல்லோ.” என்றார் அவர்.

அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்ததும் சும்மா கதைக்கத்தான் எடுத்திருக்கிறான் என்று அதிலேயே நிறைவு கண்டவளுக்கு அவன் அவளுக்காக பலதையும் யோசித்திருக்கிறான் என்பது பெரும் சந்தோசத்தைக் கொடுத்தது. இதுவே போதும்!

“எனக்கு ஒண்டும் வேண்டாம் ஆண்ட்டி. இருக்கிறதே போதும். சும்மா காசை வீணாக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ. நீங்க கேட்டதே சந்தோசம். இங்க வரேக்க மட்டும் என்னையும் வந்து பாத்துக்கொண்டு போங்கோ. அவ்வளவும் காணும்!” என்று அவர் எவ்வளவோ சொன்னபோதும், இதமாகவே மறுத்துவிட்டு வைத்துவிட்டாள்.

ஐந்துநிமிடங்கள் கூட கழிந்திராது. உடனேயே அவன் எடுத்தான்.

“ஒண்டும் வேண்டாம் எண்டு சொன்னியாம்!” கோபமாய் ஒலித்தது அவன் குரல்.

மனதை வருடிச் சென்றது அவன் கோபம். “சும்மா ஏன் காசை கரியாக்குறீங்கள். அந்தக் காசுக்கு பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி குடுங்கோ.” இதமாகச் சொன்னாள் அவள்.

“உனக்கு வேணுமா வேண்டாமா எண்டு கேக்கேல்லை நான், உன்னை செய்யச் சொன்னான்!” அவனது அந்தக் கோபம் இப்போது மெல்லிய சங்கடத்தை உருவாக்கியது அவளுக்குள். அவன் தனியல்ல. மனைவி இருக்கிறாள். இப்படியெல்லாம் கதைக்க, உஷா என்ன நினைப்பாள்?

“எனக்கு எதுவும் வேண்டாம் நிர்மலன்!” சற்றே அழுத்தமாக மறுத்தாள்.

“ஒண்டும் வேண்டாம்! யாரும் வேண்டாம்! இப்படியே எவ்வளவு நாளைக்கு எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருக்கப்போறாய்? கொஞ்சமாவது நான் சொல்லுறதையும் கேள் கண்மணி. அது உனக்கு இன்னும் இலகுவா இருக்கும்.”

“ஒவ்வொரு நாளும் ஒருக்கா கோயிலுக்கு போறதுக்கும் எப்பயாவது துயிலுமில்லம் போறதுக்கும் இது காணும். என்னைப்பற்றி நீங்க எதுக்கும் யோசிக்க வேண்டாம்.”

“நீமட்டும் எனக்காக எல்லாம் செய்வாய். ஆனா, நான் உன்னைப்பற்றி யோசிக்கவே கூடாது என்ன?” எவ்வளவு சொன்னாலும் கேட்கிறாள் இல்லையே என்று கோபம் வந்தது அவனுக்கு.

“என்ன நிர்மலன்..” என்றவளை பேசவிடாமல்,

“நீ ஒண்டும் சொல்லவேண்டாம்! அம்மாட்ட போறாய். அவா சொல்லுறதை மட்டும் செய்யிறாய். அவ்வளவுதான்!” என்று முடிவாக அவன் சொன்னபோது, அவளும் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

இது சரிவராது! நிறுத்தியே ஆகவேண்டும்

“இருக்கிறது எல்லாம் போதும் நிர்மலன். தயவுசெய்து இனி எடுக்காதிங்கோ! நான் ஒரு குறையும் இல்லாம சந்தோஷமாத்தான் வாழுறன்!” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.


‘சந்தோசமாத்தான் வாழுறன்!’ என்ற வார்த்தைகளை மீண்டுமொருமுறை அவள் வாயால் கேட்டவன் முற்றிலும் நிதானமிழந்து நின்றிருந்தான்!


தொடரும்....



Buy on Amazon.in

cloth 6.JPG



for more details please click below link


Clothing and Accessories
 
Last edited by a moderator:

நிதனிபிரபு

Administrator
Staff member

கோவமா இருப்பீங்க எண்டு தெரியும். அதுக்கு என்று ஒரு வார்த்தை சொல்லாம ஆளாளுக்கு இப்படியாப்பா அமைதியா இருப்பீங்க? .அழுகை அழுகையா வருது எனக்கு..
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-5


பத்து நாட்கள் கடந்திருக்கும். எப்போதும்போல அன்று மாலையும் கோயிலுக்கு வந்திருந்தாள் கண்மணி. மனதார வணங்கிவிட்டு கண்களைத் திறந்தபோது, திடீரென்று தன் முன்னால் வந்து நின்றவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள். என்னவிதமாக பிரதிபலிப்பது என்றுகூடித் தெரியாமல் பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள்.

இப்படி ஓடிவந்து நிற்கிறானே இதென்ன கொஞ்சநஞ்சத் தூரமா? என்ன செய்கிறான் இவன்? பின்னால் பார்க்க, யாருமில்லை.

“நான் மட்டும் தான் வந்தனான்!” முறைத்துக்கொண்டு சொன்னான்.

‘ஏன்?’ அதிர்ச்சி இன்னும் நீங்காததில், அவளால் கண்களால் மட்டுமே கேள்வி எழுப்ப முடிந்தது.

“நீ சந்தோசமா வாழுறியோ? எங்க காட்டு உன்ர சந்தோசத்தை? நான் பாக்கவேணும்!” பெரும் கோபத்தில் இருக்கிறான் என்று நன்றாகவே புரிந்தது.

“நிர்மலன்! ப்ளீஸ் கொஞ்சம் கோபப்படாம கதைங்கோ. இது என்ன சின்னப்பிள்ளைகள் மாதிரி? தொட்டத்துக்கும் இங்க வந்து நிக்கிறீங்க? உஷா பாவம் எல்லோ. அவவைப் பற்றியும் கொஞ்சம் யோசிங்கோ.”

“அதெல்லாம் எனக்குத் தெரியும்! நீ சந்தோசமா வாழுற வாழ்க்கையை முதல் எனக்குக் காட்டு!” என்று அதிலேயே நின்றான் அவன். அவனுக்குத்தானே தெரியும், அந்த வார்த்தைகள் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் சுழற்றி அடித்தது என்று.

இன்றுவரை அவன் படும் துன்பங்களுக்கு அந்த வார்த்தைகள் தானே மூலகாரணம்.

அவளுக்கோ தீராத அவனது கோபத்தில் நெஞ்சடைத்தது. பதில் சொல்லவும் தெரியவில்லை. பேசாமலேயே அமர்ந்திருந்தாள். கலங்கிய கண்களை சிமிட்டியபடி இருந்தவளைப் பார்க்க, அவனுக்கும் நெஞ்சில் வலித்தது.

அன்று கண்டபோது கோழையாக ஓடிவிட்டான். இன்று கோபம் கொடுத்த உந்துதலில் அவள் முன்னே வந்து கேள்வியும் கேட்டுவிட்டான். இப்போது வெகு அருகில் அவளைப் பார்த்தபோது, முகமெல்லாம் வாடி, பொலிவிழந்து, மெலிந்து ஒரு காலும் இல்லாமல் தன்னில் கவனமென்பதே இல்லாமல் சக்கரநாற்காலியில் முடங்கிப்போனவளைப் பார்க்கமுடியவில்லை.

அந்த மழைநாளில் மெல்ல மெல்ல பாதம் வைத்து நடந்து வந்தவள் நினைவில் வந்தாள். எப்படி இருந்தவள் இப்படி ஆகிப்போனாளே. விதி வஞ்சித்தது ஒருபாதி என்றால் அவனும் அல்லவோ வஞ்சித்துவிட்டான்.

“ஏன் கண்மணி இப்படி இருக்கிறாய்? உனக்காகவும் கொஞ்சம் வாழப்பழகு!” ஆற்றாமையுடன் மனத்தாங்கலாய் சொன்னான் நிர்மலன்.

கோபத்தை தாங்கிவிடலாம் போல. வலி நிறைந்த அவன் குரல் நெஞ்சை என்னவோ செய்தது.

விழிகளில் நீர் அரும்ப, அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். “நான் நல்லா..த்தான் இருக்கிறன். எனக்கொரு கு..குறையுமில்லை..” அவன் கண்களைப் பார்த்துச் சொல்ல முடியாமல் வார்த்தைகள் திக்கிற்று!

அவனைப் பார்த்து அவனிடமே எப்படி அவளால் பொய்யுரைக்க முடியும்?

‘இவள் சரிவரமாட்டாள்.’ என்பதுபோல தலையசைத்தான் அவன். என்ன சொன்னாலும் விளங்கிக்கொள்ளப் போவதில்லை. தலைக் கேசத்தைக் கோதிக்கொண்டு யோசித்தான்.

“நீ வா வீட்டை போவம்!” என்றான் ஒரு முடிவோடு.

“யாரின்ர வீட்டை?”

“எங்கட வீட்டை.”

“அங்க நான் வரமாட்டன்.” பதறியடித்துக்கொண்டு சொன்னாள்.

அவன் சுருங்கிய புருவங்களோடு ஏறிட, “தயவுசெய்து சொல்லுறதை கேளுங்கோ. உங்களைப் பாத்தது சந்தோசம். அந்தளவும் காணும். கடைசிவரைக்கும் அங்க வரமாட்டன்.” முடிவாகச் சொன்னாள்.

“ஏன்?”

“என்னை இப்படியே விட்டுடுங்கோ நிர்மலன். இனி இதுதான் என்ர வாழ்க்கை!” அசையவே மறுத்தாள் அவள்.

“அதுக்குத்தான் அங்க இருந்து இங்க வந்து நிக்கிறன் பாரு!” கோபமாய் சொன்னான்.

‘எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்ல சொல்லக் கேட்காமல் வந்துவிட்டு இப்படிச் சொல்கிறவனிடம் என்ன சொல்லுவாள்?


அசையாமல் இருந்தவளை ஒன்றுமே செய்யமுடியாத நிலை இன்னும் கோபத்தை கிளப்பியது. “உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது கண்மணி!” என்றான். அவன் அந்தத் தொலைவிலிருந்து வந்தும் அசைகிறாள் இல்லையே!

Buy on Amazon.in

cloth 5.JPG


for more details please click below link


Clothing and Accessories
 
Last edited by a moderator:

நிதனிபிரபு

Administrator
Staff member
“சரி…! நட உன்ர வீட்ட போவம்.”

“அங்க நீங்க என்னத்துக்கு?” அந்த ‘வீட்டை’ப் பார்த்தாலும் ஏதாவது சொல்லுவானே.

அவன் முறைத்தான்.

“இப்ப நீ அங்க வரவேணும். இல்ல நான் உன்ர வீட்ட வருவன். எது வசதி.” அதற்குமேல் முடியாமல் அழைத்துப்போனாள்.

நடந்து செல்லும் தூரம்தான் என்பதில் அவள் சக்கரநாற்காலியில் வர அவன் அருகே நடந்துவந்துகொண்டிருந்தான்.

அவள் பார்வை அடிக்கடி அவனிடம் பாய்ந்தது.

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன் அதைப் பிறகுதான் உணர்ந்தான்.

“என்ன பாக்கிறாய்?”

“இல்ல.. முந்தி சின்னப் பெடியன் மாதிரி இருந்தீங்க..” அவள் இழுக்க அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இப்ப?” சிரிப்போடு கேட்டான்.

“வளந்த மனுசன் ஆக்கிட்டிங்க?” அவனை ஒருமுறை விழிகளால் முழுவதும் அளந்துவிட்டுச் சொன்னாள்.

வாய்விட்டுச் சிரித்தான் நிர்மலன்.

“பிறகு? ரெண்டு பிள்ளைகள் இருக்கடியப்பா. எப்பவும் சின்னப் பெடியன் மாதிரியே இருக்க முடியுமா? வயசு போகுதெல்லோ.” இலகுவான புன்னகையோடு சொன்னான்.

“காலம் எவ்வளவு வேகமா போகுது பாத்தீங்களா?” அவனோடு இப்படி உரையாடுவது அவளுக்கு மிகவுமே நன்றாக இருந்தது.

“ம்ம்.. உண்மைதான்.”

இதே பத்து வருடங்களுக்கு முதல் அவர்கள் இளமையின் ஊஞ்சலில் ஆடியவர்கள். இன்று நிதானம் கொண்டு சிந்தித்துச் செயலாற்றும் மனிதர்களாக மாறிவிட்டார்கள். அதே பத்து வருடத்துக்குப் பிறகு அவர்களது பிள்ளைகள் அதே இளமையில் ஊஞ்சலாடுவார்கள். இவர்கள் வயதானவர்கள் ஆகிவிடுவார்கள். இதுதானே வாழ்க்கை!

“ஆரானும் மானசியும் எப்படி இருக்கீனம்?”

அவளின் கேள்விகளுக்கு இலகுவாக பதிலளித்தபடி சென்று அவளின் ‘வீட்டை’ப் பார்த்தவனுக்கு தொண்டை அடைத்தது. முதலில் இது என்ன வீடா? என்ன வாழ்க்கை வாழ்கிறாள் இவள்?

இதை வைத்துக்கொண்டுதான் ‘எனக்கு ஒன்றும் வேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன்’ என்றாளா? இதில் ‘சந்தோசமாக’ வாழ்கிறாளாம்! கிடுகிடு என்று ஏறிய கோபம் உச்சியை தொட்டுவிட முகம் இறுகிப்போய் நின்றிருந்தான்.

வறண்ட நிலத்தில் ஒரு கிணறு இல்லை, மலசலகூடம் இல்லை. எல்லாவற்றுக்கும் பக்கத்துவீட்டுக்குப் போகவேண்டும். இரவில் வயிறு சரியில்லை என்றால் என்ன செய்வாள்? நெஞ்சில் இரத்தம் வடிந்தது.

அவனது கண்மணி.. என்ன வாழ்க்கை வாழ்கிறாள்? இப்படி அவளிருக்க, அவன் வெளிநாட்டில் மனைவியோடு இனிமையான இல்லறம் நடத்திக்கொண்டு இருந்தானே!

அவனை அவனே வெறுத்தான்!

“சாப்பாட்டுக்கு என்ன செய்றாய்?” குரலடைக்கக் கேட்டான்.

“பக்கத்தில இருக்கிற அந்தக் குடும்பத்துக்கு மூண்டு பிள்ளைகள். ஒவ்வொருநாளும் பாடம் சொல்லிக் குடுப்பன். அதுக்குப் பதிலா சாப்பாடு தருவீனம்.”

அதற்குமேல் எதையும் அவளிடம் கேட்கும் தைரியம் அவனுக்குத்தான் இல்லை.

“இங்கேயே இரு!” என்றவன் வேகமாகச் சென்று அன்றைக்குத் தேவையான உணவை வாங்கி வந்தான். தன்னால் இயன்றதாக வீட்டின் வாசல் கதவுக்கு ஒரு பூட்டினைப் போட்டான்.

“இது என்னத்துக்கு?” அவனது செய்கையால் உண்டான சின்னச் சிரிப்புடன் கேட்டாள் அவள்.

“இரவில எவனாவது வந்தா?”

“என்னட்ட என்ன இருக்கு எண்டு வரப்போறான்?”

“நீ இருக்கிறியேடி விசரி!” கோபம் தான் வந்தது. ஆனால், அதைச் சொல்லி அவளைப் பயமுறுத்த மனமில்லை.

இத்தனை நாட்களாக அவள் இப்படித்தானே வாழ்ந்திருக்கிறாள். இன்று வந்து அவன் பதை பதைத்தால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா என்ன? மனம் கேளாமல் பக்கத்துவீட்டுக்குச் சென்று பார்த்துக்கொள்ளும்படி சொன்னான்.

ஒருவாரம் கடந்தது. கண்மணிக்கு இவன் இங்கேயே நிற்பதில் சற்றே பயம்தான். அதைவிட தினமும் அவளையும் வந்து பார்த்து, அவளோடு நேரமும் செலவழித்துக் கொண்டிருந்தான்.

“உஷா என்னெண்டு விட்டவா?”

“என்ன சொல்லிப்போட்டு வந்தனீங்கள்?”

“பிள்ளைகள் உங்களைத் தேட மாட்டீனமா?”

“ஏன் இங்கேயே நிக்குறீங்கள்?” எண்டு எவ்வளவோ கேட்டுவிட்டாள்.

எதற்கும் பதில் இல்லை.

திரும்ப திரும்பக் கேட்டால், “நான் சொன்னதை நீ கேட்டியா? நீ கேக்கிறதுக்குப் பதில் சொல்ல?” என்று கேட்டு வாயை அடைத்துவிடுவான்.

ஒருநாள் அதிகாலையிலேயே ஒரு வாகனத்தைப் பிடித்துக்கொண்டு பரபரப்பாக வந்துவிட்டான். அவள் அதிர்ந்து விழிக்க, “வெளிக்கிடு வெளிக்கிடு!” என்று துரத்திவிட்டு, அங்கிருந்த பொருட்களை எல்லாம் வாகன ஓட்டியோடு சேர்ந்து ஐந்து நிமிடங்களில் வாகனத்துக்குள் அள்ளி எறிந்திருந்தான்.

“நிர்மலன், ப்ளீஸ் நான் உங்கட வீட்டை வரமாட்டன்.” சட்டென்று நின்றவன் முறைத்த முறைப்பில் கப்சிப் ஆனாள் கண்மணி.

“உன்ர வீட்டுக்கு வரலாம்தானே!”


அவளின் தேகம் ஒருமுறை அதிர்ந்தது.


Buy on Amazon.in

cloth 4.JPG


for more details please click below link


Clothing and Accessories
 
Last edited by a moderator:

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்னால முடியாது. அம்மா, அப்பா, அண்ணா எண்டு வாழ்ந்த அந்த வீட்டை யாருமே இல்லாம பாழடைந்து என்னால பாக்க முடியாது. ப்ளீஸ் விடுங்கோ!” கண்ணீரோடு கெஞ்சினாள்.

“நான் இருக்கிறன் தானே. வா!” கோபம் கரைத்துவிட ஆதரவாகச் சொன்னான் நிர்மலன்.

அந்த ஊரிலிருக்கும் அத்தனையும் மற்ற எல்லாவற்றையும் விட அவனைத்தான் அதிகமாக நினைவூட்டும். அதனால்தானே அவள் அந்தப் பக்கமே எட்டியும் பார்க்கவில்லை. அவனோ அதை உணராமல் வா என்கிறான். அவளோ அசையவில்லை. தன்மையாகக் கதைத்து இவளை வழிக்குக் கொண்டுவர முடியாது என்று தெரிந்துபோயிற்று அவனுக்கு.

“இப்ப நீயா வரேல்லையோ நடக்கிறதே வேற!” அவன் பொறுமையும் பறந்துவிட்டது என்று தெரிந்து அடங்கிப்போனாள் கண்மணி.

அங்கே கொண்டுபோய்ச் சேர்க்காமல் அவன் இங்கிருந்து சுவிஸ் போகப் போவதில்லை என்பதும் இத்தனை நாட்களுக்குள் புரிந்திருந்தது.

மெல்லத் தன் சக்கர நாற்காலியில் வாகனத்தை நெருங்கியவளுக்கு அழுகை வரும்போலாயிற்று! எப்படி அதில் ஏறுவாள். வாகன ஓட்டியும் என்ன செய்ய முடியும்? நிர்மலனைப் பார்க்க, அவன் நெஞ்சிலும் பாரம்!

என்ன நிலையில் இருக்கிறாள் அவனது கண்மணி? வேகமாகச் சென்று அவளை அப்படியே பூவைப்போல அள்ளினான்.

விழிகள் வெளியே தெறித்துவிடுமோ என்கிற அளவில் அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் அவள். அந்தச் சாரதி தூக்கியிருந்தால் கூட அதிர்ந்திருக்க மாட்டாள். நிர்மலன்.. அவன் நிர்மலன்.. அவளைத் தூக்கியிருக்கிறான்.

விழிகள் நான்கும் நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ள, இருவராலும் பிரிக்க முடியாமல் போயிற்று! மெல்ல அப்படியே சீட்டில் அவளை அமர்த்தினான்.

“இரு வாறன்!” என்றுவிட்டு, இறங்கிச் சென்று அவளது நாற்காலியையும் பின்னால் தூக்கி வைத்துவிட்டு வந்து அவளருகிலேயே அமர்ந்துகொண்டான்.

எப்போதுமே முழு நீட்டுப் பாவாடை அணிந்துதான் பார்த்திருக்கிறான். அத்தனை அதிகாலையில் அவன் வருவதில்லை என்பதாலோ என்னவோ அரைப்பாவாடை அணிந்திருந்தாள். அதைத் தாண்டித் தெரிந்த கால் சூம்பி முடிந்திருந்தது. விழிகளில் நீர் கோர்த்துவிட்டது அவனுக்கு.

கைகள் நடுங்க முழங்காலுக்கு கீழ் பகுதியை மெல்லத் தடவிக்கொடுத்தான். அதிர்ந்து அவள் திரும்ப, அவனால் பேச இயலவில்லை.

ஆண் என்பதையும் மறந்து கதறிவிடுவான் போலிருந்தான். அதுநாள் வரை நடமாடித்திருந்த காலை இழப்பது என்றால் எப்படி இருக்கும். அவனது கால்கள் நடுங்கின. அந்தக் கசப்பான நிஜத்தை உள்வாங்கிக்கொள்ள மனதளவில் எவ்வளவு போராடியிருப்பாள்? காலை இழந்தகணம் எப்படி இருந்திருக்கும்? காயம்பட்ட வலி ஒரு பக்கம், கால் இனி இல்லை என்கிற நிஜம் மறுபக்கமாய் துடித்திருப்பாளே!

வாகனம் அவர்களின் ஊருக்குள் நுழைந்தபோதே கண்மணியின் தேகம் நடுங்கத் துவங்கியிருந்தது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு அவள் இந்தப் பக்கம் வரவேயில்லை. பயம்.. தன்னால் அதையெல்லாம் தாங்க முடியாது என்கிற நடுக்கம்.

அந்த ஊர், அங்கே நண்பிகளோடு அவள் வாழ்ந்த வாழ்க்கை, அந்தத் தெரு, அதிலே அவனது வீடு, அவன் மீது கொண்ட காதல், அந்த வீதியில் ஒருவரை மற்றவர் கடக்கையில் பரிமாறிக்கொள்ளும் பார்வை.. ஐயோ ஐயோ என்று நெஞ்சு தகித்தது. எல்லாம் போச்சு.. அந்த நாட்கள் எல்லாம் போயே போச்சு.. இழப்பின் அளவு படு பயங்கரமாக அவளைத் தாக்க, உதடு நடுங்க அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள்.

அதுவரை தன் மனப்போராட்டத்தில் இருந்தவன் திரும்பிப் பார்த்தான். முகமெல்லாம் சிவந்து, விழிகள் குளமாகியிருக்க, நடுங்கும் உதட்டைப் பற்களால் பற்றியபடி வெளிப்புறத்தை வெறித்தவளின் நிலையை அப்போதுதான் வலியோடு உள்வாங்கினான்.

“ஒண்டுமில்லம்மா..”தன் மற்றக் கையால் அவள் கரத்தைப் பொத்திக்கொண்டான்.


அவனது வீடு.. அதன் முன்னே நின்ற அந்தக் கொண்டல் மரம்.. அதிலே அவர்கள் தங்களது கடிதங்களை மறைத்து வைத்து எடுக்கும் இடம்.. அதைக் கண்டபோது அவளையும் மீறி விசித்துவிட்டவளை நெஞ்சில் துயரோடு தன் மீது சாய்த்துக்கொண்டான் நிர்மலன். மறுக்கக் கூட முடியாமல் சரிந்து விம்மினாள் அவள். அவனது விழிகளில் இருந்து வீழ்ந்த கண்ணீர் துளிகள் அவள் தலைமீது விழுந்து சிதறிப்போயின; அவர்களின் காதலைப் போலவே!


தொடரும்....


Buy on Amazon.in


cloth 2.JPG



for more details please click below link


Clothing and Accessories
 
Last edited by a moderator:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-6


அவளது வீட்டின் முன்னே வாகனம் சென்று நின்றது.

“வீடு வந்திட்டுது கண்மணி!” குரலைச் செருமிக்கொண்டு சொன்னான்.

“யாருமே இல்லாத வீட்டை என்னால பாக்க முடியாது நிர்மலன். திரும்ப அங்கேயே கொண்டுபோய் விடுங்கோ.” அவன் மார்பிலிருந்து தலையை எடுக்காமலேயே மறுத்துத் தலையசைத்தாள்.

“உனக்கெண்டு இவ்வளவு பெரிய காணியும் வீடும் இருக்கேக்க, யாரோ ஒரு ஆக்களின்ர காணியில ஏன் அநாதை மாதிரி இருக்கவேணும்?” நெஞ்சிலிருந்து பாரத்தை மறைத்து இதமாக எடுத்துச் சொன்னான் அவன்.

“இங்க வந்தா மட்டும் நான் அநாதை இல்லையா?” அவன் கண்களை பார்த்துக் கேட்டவளிடம் என்ன சொல்லுவான்?

“இல்ல! நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீ அநாதை இல்ல. இறங்கு!” என்றான் அழுத்தி.

மெல்லத் திரும்பி நீர் நிறைந்த விழிகளால் வீட்டைப் பார்த்தாள். சுற்றிவர வளர்ந்துவிட்ட பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. வீடு, அதற்குச் செல்லும் பாதை எல்லாமே திருத்தப் பட்டிருந்தது.

அவள், அண்ணா, அம்மா அப்பா என்று எல்லோருமாக வாழ்ந்த வீட்டுக்குள் எப்படித் தனியாகப் போவாள்? அம்மா அப்பாவோடு நெஞ்சு நடுங்க, அந்த வீட்டிலிருந்து பயத்தோடு வெளியேறிய நாள் நினைவில் வந்தது.

போகமுதல் அவள் முத்தமிட்டுப் பிரிந்த ரோஜா செடி எங்கே?

அண்ணா நட்ட மாமரம் எங்கே? அப்பாவின் செவ்விளநீர் தென்னைகள் எங்கே? ஐயோ.. அம்மாவின் முருங்கை மரத்தைக் கூட காணவில்லை. எதையுமே காணவில்லை. அவளும் அந்த வீடும் மட்டும் வாழ்ந்த வாழ்க்கையின் எச்சங்களாக மிஞ்சிப்போய் நிற்கிறார்கள்.

“வா..!” அவன் அவளைத் தூக்கியதை உணரவேயில்லை அவள். தேகமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அவளைச் சக்கர நாற்காலியில் இருத்தி மெல்ல அவனே தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

வாசலுக்குப் போனதும் கால்களை வைத்து நடக்கவேண்டும் போலிருந்தது. அவளால் முடியாதே. விம்மல் ஒன்று பெரிதாக வெடித்தது. கைகள் இரண்டாலும் வாயை இறுக்கிப் பொத்திக்கொண்டாள்.அவள் பிறந்து, வளர்ந்து, ஓடி ஆடி விளையாடிய வீட்டில் கால்வைக்க காலில்லை அவளுக்கு.

“நிர்மலன் ப்ளீஸ்.. நான் வீட்டை மிதிக்கவேணும்.. கால்.. கால் வைக்கப்போறன்..” பெரும் பரிதவிப்போடு பின்னால் திரும்பி அவனிடம் சொன்னாள்.

அவள் படும்பாட்டைக் கண்டவனின் விழிகளிலும் கண்ணீர்!

நெஞ்சு கனக்க, அவளை மெல்ல எழுப்பி ஒற்றைக் காலில் நிறுத்தினான். முதல் பாதடி அந்த வீட்டினுள் பட்ட நொடி, தேகமெங்கும் அதிர்வலைகள் தாக்க அப்படியே மடிந்து சரிந்தவள் விறாந்தையில் விழுந்து கதறித்தீர்த்தாள்.

ஒன்பது வருடத்து அழுகையை, ஒன்பது வருடத்துத் துயரை, ஒன்பது வருடத்துப் பாரத்தை அழுது தீர்த்தாள். அங்கே பற்றைகளை வெட்டிக்கொண்டு இருந்தவனும் காரோட்டியும் என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு ஓடிவந்தனர். அவளைப் பார்த்த அவர்களின் கண்களிலும் கண்ணீர்.

சொல்லித் தெரியவேண்டியதில்லையே இந்தத் துயரெல்லாம்!

நிர்மலனாலும் தேற்ற முடியவில்லை. தேற்றும் நிலையில் அவனுமில்லை. அவளது அண்ணன் கதிரோன் இரண்டு வயது பெரியவன் என்றாலும் அவனது நண்பன்.

அவளை அழட்டும் என்று விட்டுவிட்டான். அதன்பிறகாவது தெளிந்து தன்னைப் பற்றியும் அவள் யோசிக்கட்டும். அழுது அழுது ஓய்ந்தவளின் அழுகை விம்மலாக மாறி, சின்னச் சின்ன கேவலாக வந்து நின்றபோது, “கண்மணி! காணும் எழும்பு.. வா!” என்றவன் பூவைப்போலத் தூக்கி அங்கே சோபாவில் அவளை இருத்தினான்.

உள்ளே சென்று தண்ணீர் எடுத்துவந்து பருகச் செய்தான். ஈரத்துணியைக் கொடுக்க நன்றி சொல்லி முகத்தை துடைத்துக்கொண்டவளுக்கு, ஒருமுறை அந்த வீடு முழுவதும் நடந்துபார்க்க வேண்டும் போலிருந்தது. அம்மா அப்பாவின் அறையை, சுவாமி அறையை, அண்ணாவின் அறையை, சமையலறையை எல்லாவற்றையும்.. ஒரு சுவரைக்கூட விடாமல் தடவிப்பார்க்க வேண்டும் போலிருந்தது.

அப்போது தேநீரை நீட்டியது ஒரு கரம். யார் என்று பார்த்தவளின் விழிகளில் வியப்பு! இது அவன்.. அன்று துயிலுமில்லத்தில் பார்த்தவன்.

“இவர்தான் வீடு முழுக்க துப்பரவாக்கினவர். இப்ப தோட்டத்தையும் செய்துகொண்டு இருக்கிறார். பெயர் காந்தன். எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிச்சவர். நினைவிருக்கா உனக்கு?” அறிமுகம் செய்துவைத்தான் நிர்மலன்.


“எங்கட பள்ளிக்கூடத்திலையோ?” வியப்போடு கேட்டவள் மறுத்துத் தலையசைத்தாள். “ஆனா இவரைப் பாத்திருக்கிறன்.” என்றவள், துயிலுமில்லத்தில் சந்தித்தத்தைச் சொன்னாள்.


Buy on Amazon.in

cloth1.JPG

for more details please click below link

Clothing and Accessories
 
Last edited by a moderator:

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஆனா கதிரோன்ர தங்கச்சி நீங்க எண்டு எனக்குத் தெரியாது.” சொல்லும்போதே தொண்டை அடைத்தது காந்தனுக்கும்.

“அண்ணாவைத் தெரியுமா?” ஆவல் மின்னக் கேட்டாள்.

“அவனும் நானும் ஒரு படையணிதான். நான் காயப்பட்டு போய்ட்டன். பிறகுதான் தெரியும் அவன் வீரச்சாவு எண்டு. அண்டைக்கு நீங்க யாரிட்ட வந்தனீங்க எண்டு கவனிக்க இல்ல.” என்றான் காந்தன்.

அன்று மனைவியை இழந்த துயரில் விரக்தியின் எல்லையில் நின்றவன் கவனித்திருக்க சந்தர்ப்பம் இல்லைதான்.

நால்வருமே தேநீரைப் பருகினர். கதிரோனைப் பற்றி நிறையச் சொன்னான் காந்தன். அதுவும் அவளைப் பற்றிய கவலைதான் கடைசிநாட்களில் அவனை அரித்தது என்று அறிந்தபோது நின்றிருந்த கண்ணீர் மீண்டும் அரும்பியது அவளுக்கு.

“நீங்க யாரையோ விரும்புறீங்க எண்டும்..” பேச்சுவாக்கில் ஆரம்பித்துவிட்டவன் அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் நிறுத்திவிட, சட்டென்று வியப்புடன் நிர்மலனிடம் பாய்ந்தது அவள் விழிகள். அவர்களது காதல் அவர்களைத் தாண்டி வேறு யாருக்கும் தெரியாது என்றல்லவா நினைத்திருந்தார்கள்.

“அண்ணாக்கு எப்படித் தெரியுமாம்?”

“அது தெரியாது. ஆனா, தனக்குத் தெரியும் எண்டு தெரியாம நீங்க நல்லபிள்ளைக்கு நடிப்பீங்களாம் எண்டு கடைசியா லீவுல வந்து நிண்டுட்டு திரும்பி வந்தபோது சொல்லிச் சிரிச்சவன். பெடியன் நல்லவனாம் எண்டும் சொன்னவன்.”

ஒருமுறை அவளது செல்போன் வைத்த இடத்தில் காணவில்லை என்று தேடி, பிறகு அலமாரிக்குள் இருந்த நினைவு வந்தது. ஆமாம்! அப்போது அண்ணா விடுமுறையில் ஒருவாரம் வந்திருந்தான் தான். அதுதான் அவன் கடைசியாக வந்திருந்துவிட்டுப் போனது.

மீண்டும் கலங்கத் தொடங்கியவளிடம், “அழுதது போதும் கண்மணி! கொஞ்சநேரம் இங்கேயே இரு. சாமானை இறக்கிவிட்டா அவரை போகச் சொல்லலாம்.” சொல்லிவிட்டு மூவருமாக இறக்கிவைத்தனர்.

மதிய உணவும் கடையிலிருந்தே வருவிக்கப்பட்டுவிட, சாப்பிட்டவளை கட்டாயப்படுத்தி உறங்கவைத்தான்.

உறங்கி எழுந்தவள், அவனும் காந்தனோடு சேர்ந்து வேர்க்க விறுவிறுக்க காணியைத் துப்பரவு செய்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அழைத்தாள்.

“நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்கள்? விடுங்கோ.”

“அதைவிடு! இப்ப பரவாயில்லையா?” மென்மையாகக் கேட்டான்.

“ம்ம்..” என்று தலையசைத்தாள்.

“எனக்கு வீடு முழுக்க பாக்கவேணும் போலக்கிடக்கு. கூட்டிக்கொண்டு போறீங்களா?”

“வா!” கைகால்களை கழுவிக்கொண்டு வந்து கரம் பற்றி எழுப்பினான். ஒற்றைக் காலில் துள்ளித் துள்ளி நடப்பதைக் காணச் சகியாமல், வாங்கிவைத்திருந்த ஊன்றுகோள்களைக் கொண்டுவந்து கொடுத்தான்.

ஒவ்வொரு சுவரிலும் சாய்ந்து நின்று ஆத்மார்த்தமாக அந்த நாட்களோடு வாழ்ந்து, ஒவ்வொரு அறையாகப் பார்த்து, அன்று சலசலத்த வீடு இன்று மௌனித்துப் போயிருக்கும் நிஜத்தை கசப்போடு விழுங்கி அவள் முடிக்கையில் மாலைப்பொழுது வந்துவிட்டிருந்தது.

“இரவுக்கு அம்மா சாப்பாடு கொண்டுவருவா. சாப்பிட்டு நிம்மதியா படு. நாளைக்கு ஒரு வேலை இருக்கு.” என்றவன், காந்தனுக்கும் பணத்தைக் கொடுத்து, அன்றைய கணக்கை முடித்து அனுப்பி வைத்தான்.

“இதெல்லாம் என்னெண்டு நான் திருப்பித்..”

“எனக்கு கோபத்தை கிளப்பாத கண்மணி!” ஒரே பேச்சில் அவளது வாயை அடைத்துவிட்டான் நிர்மலன்.

பத்மாவதி அம்மாவோடு பழங்கதைகள் பேசி, சிரித்து, அழுது, ஏங்கி, மௌனமாகக் கண்ணீர் வடித்து என்று எப்போது உறங்கினாளோ தெரியாது, ஆனால் அதிகாலை நேரத்துப் பறவைகளின் இன்னிசை கேட்டதுமே எழுந்துவிட்டாள்.

மனதுக்கு பெரும் இதமாகத்தான் இருந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு சொந்த வீட்டில் உறங்கி எழுந்திருக்கிறாள். அவன் வாங்கித் தந்த ஊன்றுகோள்களின் உதவியோடு தானாகவே நடந்து சென்று முகம் கழுவி, தலையிழுத்து, மனதார கடவுளைக் கும்பிட்டு தேநீர் வைத்தது கூட அவளுக்கு உற்சாகத்தைத் தந்தது. சின்னதாக தன்னம்பிக்கையை உருவாக்கியது.

‘இங்க வந்ததும் நல்லதுதான். ஒரு பிடிப்பு வந்திருக்கு!’ மனதில் எண்ணிக்கொண்டாள்.

அவளுக்குத் தேவையான அளவில் அந்த வீட்டில் புதிதாக எல்லாமே வாங்கி வைத்திருந்தான் நிர்மலன். அவள் தேநீரை கப்பில் ஆற்றும்போதே அவனும் வந்துவிட்டான். குளித்து புது உடையில் உற்சாகமாக வந்தவனைப் பார்க்கவும் நன்றாக இருந்தது.

“தேத்தண்ணியா? எனக்கும் கொண்டா!” என்று வாங்கிப் பருகினான்.

அப்படியே அவளறியாமல் அவள் முகத்தையும் ஆராய்ந்தான். தெளிந்த வானம்போல இருந்தது. விழிகளை அந்த வீட்டை சுற்றியே வட்டமிட விட்டுவிட்டு இதழில் பூத்திருந்த குட்டிச் சிரிப்புடன் தேநீரை ரசித்துப் பருகியவளைப் பார்க்கையில் அவன் மனமும் நிறைந்து போயிற்று!


மாறிவிடுவாள்! மாற்றிவிடலாம்! நம்பிக்கை வந்திருந்தது அவனுக்கு.


Buy on Amazon.in

cloth.JPG


for more details please click below link


Clothing and Accessories
 
Last edited by a moderator:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-7


அதன்பிறகு எல்லாமே வேகம் தான். அவளின் எந்தக் கதையையும் அவன் செவிமடுக்கவே இல்லை. பத்மாவதியும், “சும்மா இரம்மா!” என்று அவளைத்தான் அதட்டினார்.

வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிளாஸ்டிக் காலுக்கு அளவு கொடுத்தார்கள். அப்படியே மின்சாரத்தில் பயன்படுத்தும் சக்கரநாற்காலியும் வாங்கிக்கொண்டான். இனி அவள் கையால் உருட்டத் தேவையில்லை. ஒருமுறை சார்ஜ் போட்டால், குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை பயணிக்கலாம்.

“நீங்க வீட்டை போகேல்லையா?” அதுதான் அவன் நினைத்ததுபோலவே எல்லாம் செய்துவிட்டானே என்று கேட்டாள்.

அதைவிட, அவளைப்பற்றி உஷாவுக்கு எல்லாம் தெரியுமா என்றும் தெரியாது. எவ்வளவோ கேட்டும் மூச்சு விடவில்லை அவன். பொல்லாத பிடிவாதக்காரன்

“என்னைத் துரத்திப்போட்டு என்ன செய்யப் போறாய்? சந்தோசமா வாழப்போறியோ?” கனிவோடும் பாசத்தோடும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறவன் இப்படிக் கேட்டால் மட்டும் பாய்ந்துவிடுவான்.

“உஷா பாவமெல்லோ நிர்மலன். சின்னப்பிள்ளைகளோட என்னெண்டு தனியா சமாளிப்பா? ஆரனும் மானசியும் ஏங்கப் போறீனம். எனக்கே பாக்கோணும் மாதிரி இருக்கு.”

“அடுத்த சம்மருக்கு ஆறுகிழமை லீவுல எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாறன். இப்ப இப்படிப் பார்.” என்று அவர்களின் போட்டோக்களை காட்டினான்.

ஆசையாசையாக வாங்கிப் பார்த்தாள்.

அவளுக்கென்று அளவெடுத்து செய்யக் கொடுத்த கால் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனாலும், இப்போதெல்லாம் கண்மணி ஊன்றுகோலின் உதவியோடு வீட்டுக்கு வெளியேயும் வரத்துவங்கி இருந்தாள். அன்றும், மூவருக்குமாகத் தேநீரை ஊற்றிக்கொண்டு அதனை ஒரு கையிலும் மற்றக் கையில் ஒற்றை ஊன்றுகோலோடும் வந்தவள், தடுமாறி விழப்போக, பாய்ந்து பிடிக்கப்போன நிர்மலன், அவனைப்போலவே வேகமாக வந்த காந்தனைக் கண்டதும் அவள் கையிலிருந்த கப்பை மட்டும் பற்றிக்கொண்டான்.

அதற்குள் காந்தன் அவளைப் பற்றி விழாமல் தடுத்திருந்தான். கூச்சமாகப் போயிற்று அவளுக்கு. “சொரி.. ஒரு கைல தேத்தண்ணி கொண்டு வந்தன்.. அதுதான்.”

நிர்மலனின் முறைப்பில் அவள் குரல் உள்ளுக்குள் போயிருந்தது.

“இதுக்காக வேலை செய்துகொண்டிருக்கிற உங்களைக் கூப்பிடுறதா?” என்றாள் சமாதானமாக.

“எண்டாலும் கவனமா இருக்கவேணும் கண்மணி!” என்று சொன்னது காந்தன்.

“சரி வாங்கோ, தேத்தண்ணி ஆறமுதல் குடிப்பம்.” என்றவள், நிர்மலன் வாங்கி வந்திருந்த கேக்கையும் கொண்டுவந்து மூவருக்கும் பகிர்ந்தாள்.

முற்றத்தின் ஒரு ஓரமாக ஒற்றை வேம்பு ஒன்று, யாரினதும் உதவி இல்லாமல் ஓங்கி வளர்ந்து நின்றதில், அதற்குக் கீழே பிரம்பிலான ஒரு செட் மேசை நாற்காலிகளை வாங்கிப் போட்டிருந்தான் நிர்மலன். அங்கேதான் அவர்களின் மாலைத் தேநீர் பொழுது கழிந்தது.

அந்த நேரத்தில் தமையனைப் பற்றி காந்தனிடம் விசாரித்தாள் கண்மணி. அவனும் கதைக்க யாருமில்லாமல் இருந்தவன் தானே. மலர்ந்த சிரிப்போடு கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களுக்குள் தலையிடாமல் கவனித்திருந்தான் நிர்மலன்.

நாட்கள் நகர்ந்தது. அவளுக்கான காலும் பொறுத்தப்பட்டுவிட, ஊன்றுகோலும் இல்லாமல் நடமாடத் துவங்கியிருந்தாள் கண்மணி. போதாக்குறைக்கு, காந்தனும் அவனுமாகச் சேர்ந்து அருகிலேயே ஒரு நீண்ட கொட்டிலை இறக்கி சின்னதாக ஒரு டியூஷன் செண்டர் போல ஒன்றையும் உருவாக்கினார்கள்.

“உனக்கு கணிதம் நல்லா வருமெல்லோ. ஆங்கிலமும் சேர்த்து சொல்லிக்குடு. நேரமும் போகும், உனக்கும் மாற்றமாயிருக்கும்!” என்றவன், அதை அவன் நிற்கும்போதே செயலாக்கி இருந்தான்.

ஊரவர்களும், அவள் வந்துவிட்டதை கேள்விப்பட்டு கேள்விப்பட்டு வந்து கதைத்துப்போனதில் மனதுக்கு மிகவுமே ஆறுதலாக உணர்ந்தாள்.

பலர் அவள் உயிரோடு இல்லை என்றே நினைத்திருக்கிறார்கள். அவர்களில் பலரை அவளும் அப்படித்தான் கேள்விப் பட்டிருந்தாள்.

நாட்கள் நகர்ந்தன. நிர்மலன் இலங்கை வந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. அந்த இரண்டு மாதத்தில் அவளது வாழ்க்கையையே மாற்றிப்போட்டிருந்தான்.

காந்தனுக்கும் தமிழும் சமயமும் நன்றாக வரும் என்பதில் அவனும் அங்கே படிப்பிக்கத் தொடங்கி இருந்தது அவனுக்கும் பெரும் மாற்றமாய் இருந்தது. இருவருக்கும் அவர்களுக்கான வருமானமும் வரும். நமக்காக யாருமில்லையே என்கிற வேண்டாத சிந்தனைகளில் இருந்தும் விடுதலையே!

கண்மணி இப்போதெல்லாம் நிறைய மாறி இருந்தாள். அவளின் தேவைகளை அவளே பார்த்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டதால் தன்னம்பிக்கையோடு நடமாடத் துவங்கியிருந்தாள். அதுவும் படிக்கவரும் குழந்தைகளோடு குழந்தையாக அவள் சிரிப்பதைப் பார்க்கையில் மனம் நிறைந்துபோகும் நிர்மலனுக்கு. இந்தச் சிரிப்பை மீட்டுவிடத்தானே பாடுபட்டான்!

அவள் கண்களில் ஒளியும் மீண்டிருந்தது. எதிர்காலம் பற்றி பலதை அவனோடு கலந்துரையாடினாள். அதிலே ஒன்று, இந்து சமயத்தையும் தமிழையும் காந்தனும் கணிதத்தையும் ஆங்கிலத்தையும் இவளும் எடுப்பதில் மிகுதிப் பாடங்களுக்கும் யாராவது வேறு ஆசிரியர்களைப் பிடித்தால் அவர்களது ஒரு முழுமையான டியூஷன் செண்டராக மாறிவிடும் என்று சொல்லியிருந்தாள். அதற்கான ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பைக் காந்தன் ஏற்றிருந்தான்.

அவனுக்கும் ஒரு பிளாஸ்ட்டிக் கைக்கு நிர்மலன் ஏற்பாடு செய்தபோது, உணர்ச்சி மேலீட்டில் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு கண்கலங்கிவிட்டான் காந்தன். உழைப்புப் பிழைப்பில்லாமல் இருந்தபோது கூலியாக அந்த வீட்டுக்கு வந்தவன் ஆசிரியனாக மாறிப்போனானே! போதாக்குறைக்குக் கையும் கிடைத்துவிட்டதே!

அவன் எதிர்பார்த்தபடியே அனைத்தும் நடந்ததில், ஒருநாள் அவளது கல்யாணப் பேச்சையும் எடுத்துவிட்டான் நிர்மலன்.

“கல்யாணமா?” அப்பட்டமான அதிர்ச்சி அவளிடம்.

“உங்களுக்கு என்ன விசரா?” அந்த வார்த்தையே அவளுக்குள் புயலைக் கிளப்பியது.

“எதுக்கு உனக்கு இவ்வளவு அதிர்ச்சி?” அவள் மீதே விழிகளைப் பதித்து நிதானமாக விசாரித்தான்.

அவனுக்குத் தெரியாதா? தெரியாதவர்களுக்குச் சொல்லலாம், தெரிந்தும் கேள்வி கேட்பவனிடம் என்ன சொல்வது? முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.


“சொல்லு கண்மணி!” விடாமல் நின்றான் அவன்.




Buy on Amazon.in


books.JPG



for more details please click below link


eBooks in Tamil

 
Last edited by a moderator:

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்னத்த சொல்லச் சொல்லுறீங்கள். இப்ப சத்தியமா நான் நல்ல சந்தோசமா இருக்கிறன் நிர்மலன். நிம்மதியா வாழுறன். இது காணும் எனக்கு. என்ன இப்படியே விட்டுட்டு நீங்க வெளிக்கிடுங்கோ.” என்றாள் அவள்.

“உன்ன இங்க தனிய விட்டுட்டுப்போய் அங்க என்னால நிம்மதியா இருக்கேலாது.” என்றான் அவன்.

“என்னாலயும் கல்யாணம் எல்லாம் செய்யேலாது நிர்மலன்.”

“ஏன்?”

திரும்பவும் ஏனாம்? “உங்களுக்குத் தெரியாதா?” கோபத்தோடு அவனை நோக்கிக் கேட்டாள்.

“தெரியாததாலதான் கேக்கிறன். சொல்லு!” அவனும் விடவில்லை.

கடைசியில், “என்ர இதயம் என்னட்ட இல்ல நிர்மலன்!” கண்ணீரோடு சொல்லியேவிட்டாள். அன்று காலுக்கு ஓய்வாக இருக்கட்டும் என்று பிளாஸ்டிக் காலைக் கழற்றிவிட்டு சக்கரநாற்காலியில் இருந்தவள் கண்ணீரைக் காட்டப் பிடிக்காது வேகமாக திரும்பிக்கொண்டாள்.

அவளது நாற்காலியைப் பற்றி மெல்லத் திருப்பினான் நிர்மலன். கலங்கிச் சிவந்திருந்த விழிகளைக் கண்டவனின் நெஞ்சு துடித்தது. அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து அவளின் கரங்களை பற்றிக்கொண்டான்.

“நீ யாரிட்ட குடுத்தியோ அவன் அதை பக்குவமா வச்சிருக்கேல்ல கண்மணி. அவனுக்கு அதின்ர அருமை தெரியேல்ல. தூக்கி எறிஞ்சிட்டான். விளங்கிக்கொள்ளு!” அடைத்த தொண்டையிலிருந்து கரகரத்த குரலில் சொன்னான்.

“இப்ப அவனிட்ட இன்னொரு இதயம் இருக்கு. அதுவும் அவனில உயிரையே வச்சிருக்கிற இதயம்! அவனுக்கும் இப்ப அதுதான் உயிர். அதோட இன்னும் ரெண்டு குட்டி இதயமும் அவனை நம்பி இருக்கு. அவனை என்ன செய்யச் சொல்லிச் சொல்லுறாய்?”

அவள் விழிகளிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிந்தது. அழுகையை அடக்கப் பார்த்ததில் உதடுகள் நடுங்கின. “எதுவும் செய்யச் சொல்லி நான் கேக்கேல்லையே? என்னை இப்படியே விடுங்கோ எண்டுதானே சொல்லுறன்.” உதடுகள் நடுங்கச் சொன்னாள்.

“உன்ன இப்படியே விட்டுட்டுப் போய் நிம்மதியா இருப்பன் எண்டு நினைக்கிறியா நீ?” அவளிடமே கேட்டான்.

என்ன சொல்லுவாள்? உள்ளத்தின் வலி விழிகளில் தெரிய அவளையே பார்த்தவனை அணைத்துக்கொண்டு கதறவேண்டும் போலிருந்தது. இவனுக்கு எதற்கு இந்தக் குற்ற உணர்ச்சி?எவ்வளவு சொன்னாலும் விளங்கிக்கொள்கிறான் இல்லையே?

“அவர் என்ர இதயத்தை தூக்கி எறியேல்ல நிர்மலன். அவரால அப்படி தூக்கி எறியவும் முடியாது. நான்தான் எறிய வச்சனான். என்ன அது என்னட்ட திரும்பி வரேல்ல. அதோட, அவர் நேசிக்கிற யாரையும் என்னால வெறுக்க முடியாது.”

“அவே நாலுபேரும் சந்தோசமா வாழுறதை நான் ரசிச்சுப் பாக்கவேணும். ஒவ்வொரு வருசமும் எப்ப சம்மர் வரும், அவே எப்ப வருவீனம் எண்டு காத்திருந்து காணவேணும். என்ர பிள்ளைகளின்ர வளர்ச்சியை கண்டு நான் வாயப்பிளக்கவேணும். ஆண்ட்டி எண்டு ஓடிவார அந்தக் குழந்தைகளை அள்ளி அணைக்கவேணும். இந்தளவும் எனக்கு காணும் நிர்மலன்.”

அவள் சொல்லக் சொல்ல கேட்டிருந்தவனின் நிலை மகா மோசமாகப் போய்க்கொண்டிருந்தது.

“விசராடி உனக்கு! எப்ப பாத்தாலும் என்னைப்பற்றியே யோசிக்கிற?” கேட்டவன் அவள் கரங்களிலேயே முகத்தைப் புதைத்திருந்தான். “என்னை எங்கயாவது தூக்கி எறி கண்மணி! நான் உன்ர வாழ்க்கைல இல்ல! ஏன் உனக்கு இது விளங்குதில்லை?” அவன் சொல்ல சொல்ல அவள் கண்களிலும் கண்ணீர்!

அவளின் கரங்கள் ஈரமாகவும், அவள் துடித்துப்போனாள்.

“நிர்மலன் ப்ளீஸ்! அழாதிங்கோ! அதைப்பாக்கிற சக்தி எனக்கில்லை.” மெல்லச் சொன்னாள்.

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு நிமிர்ந்தான் அவன்.

“அதேமாதிரி நீ இப்படி இருக்கிறதையும் என்னால பாக்க ஏலாது கண்மணி. நீ கல்யாணம் கட்டியே ஆகவேணும். சின்ன வயதில இருந்தே காந்தனை எனக்கு நல்லாத் தெரியும். நல்ல பெடியன். உனக்கும் டியூஷன் செண்டருக்கும் அவர் நல்ல துணை.” என்றான்.

காந்தனா? அதிர்வோடு பார்த்தாள். பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவனும் உடனேயே சொல்லச் சொல்லி வற்புறுத்தவில்லை.

“நடந்த விஷயங்களை.. என்னை மறக்க முடியாம இருக்கா?” ஒருநாள் மெல்லக் கேட்டான்.

“உங்களை ஏன் மறக்க?” எதிர்கேள்வி கேட்டவளை அவன் முறைக்க, ‘உங்களுக்கு விளங்கேல்ல’ என்பதாக மறுத்துத் தலையசைத்தாள் அவள்.

“அது ஒரு அழகான காலம் நிர்மலன். நானும் நீங்களும் சேர்ந்தா மட்டும்தான் முழுமையாகும் எண்டில்லை. நினைச்சுப் பார்த்தாலும் சந்தோசம் தான். அதையேன் மறக்க? நிறைய வருசத்துக்குப் பிறகு திடீர் எண்டு உங்களைப் பாத்ததும் ஒரு தடுமாற்றம் வந்தது உண்மைதான். அது சின்னத் தடுமாற்றம் மட்டும்தான். மற்றும்படி அந்த நினைவும், உங்கள்ள இருக்கிற பாசமும் எண்டைக்கும் இருக்கும். அதுக்கு பெயர் என்ன எண்டு கேட்டா உண்மையா எனக்குத் தெரியாது. அதுக்காக மறுக்கேல்ல. இனி ஒரு கல்யாணம் தேவையா எண்டு இருக்கு.. என்னால ஏலுமா? சரியா வருமா.. ஏதும் பிரச்சனை வந்தா என்ன செய்றது? நிறையக் காலத்துக்குப் பிறகு நிம்மதியா நித்திரை கொண்டு எழும்புறன் நிர்மலன். அது பறிபோயிடுமோ எண்டு பயமா இருக்கு.” இன்னதுதான் என்றில்லாமல் அவள் மனம் குழம்பித் தவிப்பதை அவன் உணர்ந்துகொண்டான். ஒரு பிரச்சனை என்று வந்தால் துணைக்கு யாருமில்லாத பாதுகாப்பற்ற நிலை கொடுக்கும் பயமல்லவா இது!

அந்தப் பாதுகாப்புக்குத்தானே திருமணம் செய் என்கிறான். அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை அவன்.

குழம்பித் தெளியட்டும்! ‘என்றைக்குமே உனக்காக நானிருப்பேன்.’ என்கிற நம்பிக்கையை மட்டும் கொடுத்துவிட்டுக் காத்திருந்தான்.

அவ்வப்போது அவள் விழிகள் யோசனையோடு காந்தனைப் பின்தொடர்வதையும் கவனித்தான். சிந்திக்கட்டும், பிறகு தெளிவான முடிவை எடுக்கட்டும். காயப்பட்டு, நைந்து, நம்பிக்கையிழந்து போன மனது அவளது. அதில் மாற்றங்கள் நினைத்ததும் உருவாகாதே.

அவனைப்போலவே அவளது பார்வையை காந்தனும் கவனித்தான். ஒருநாள் அவனே அவளிடம் வந்தான்.

“நிர்மலன் கதைச்சவரா?”

ஆம் என்பதாகத் தலையசைத்தாள்.

“என்னோடையும் கதைச்சவர். எல்லாம் சொன்னவர். உன்னைப்போலத்தான், என்னாலையும் உடனே பதில் சொல்ல முடியேல்ல. இனி ஒரு கல்யாணமா எண்டு அதிர்ச்சியாவும் இருந்தது. ஆனா ஆறுதலா யோசிச்சுப் பாத்தா அதுவும் நல்ல முடிவுதான் எண்டு பட்டது.” என்று அவன் சொல்லவும் அவள் புருவங்கள் சுருங்க கேள்வியாகப் பார்த்தாள்.

அவன் நிதானமாக விளக்கினான்.

“டியூஷன் செண்டரால நான் ஒவ்வொருநாளும் இங்க வந்துபோக பேச்சு எப்படியும் மாற சான்ஸ் இருக்கு. அதோட நாங்க ஒண்டும் காதலிச்சு வயசுத் தேவைக்காக கட்ட நினைக்கவும் இல்ல. அதோட, உன்ர வலி எனக்குத் தெரியும். என்ர வலி உனக்குத் தெரியும். இது ஒரு உதவி மாதிரி.. ஓராளுக்கு மற்றவர் துணை மாதிரி. யோசிச்சுப் பாரு, எனக்கு சமைக்க தெரியவே தெரியாது. நீ எனக்கு சமச்சுத் தரலாம். நான் உனக்குத் தேவையானதை கடை கன்னிக்குப் பொய் வாங்கிக்கொண்டு வரலாம். ரெண்டுபேரும் சும்மா இருக்கிற நேரம் கதைச்சுக்கொண்டு இருக்கலாம். பின்னேரத்தில தேத்தண்ணியை சேர்ந்து குடிக்கலாம். ஒருத்தருக்கு உடம்புக்கு முடியாமல் போனால் மற்றவர் பாத்துக்கொள்ளலாம். இப்படி நாங்க ஒருத்தருக்கு மற்றவர் உதவியா இருக்கிறதுக்கு ஊருக்கு ஒரு மரியாதையான பெயர் வேணும். அதுதான் கல்யாணம். அத செய்தா என்ன எண்டு யோசிச்சன்.”

தெளிவாகப் பேசியவனின் பேச்சில் அமிழ்ந்து போயிருந்தாள் அவள்.

“என்ர கார்த்திகா போனபிறகு ஒரு துணை வேணுமெண்டு நானும் நினைச்சதில்ல. ஆனா, காலம், நம்மை சுற்றி இருக்கிற மக்கள் நமக்கு படிப்பிக்கிற பாடத்தையெல்லாம் இருந்து பாக்கேக்க எனக்கு நான் மட்டும் தான் துணையோ எண்டு யோசிச்சு இருக்கிறன். அது மாறி இப்ப உனக்கு நான் துணை எனக்கு நீ துணை. அதைத் தாண்டி நடக்கிறது எல்லாம் நடக்கேக்க பாப்பம். எனக்கு கை போகும் எண்டோ உனக்கு கால் போகும் எண்டோ நினச்சா பாத்தம்? நடந்தபோது மீண்டு வர இல்லையா? இதைவிட மோசமா இன்னும் என்ன நடக்க இருக்கு, சொல்லு? ஆனா, எதுக்காகவும் உன்னை வற்புறுத்த இல்லை நான். உன்ர விருப்பம் தான் முடிவு!” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.


அதன்பிறகு நீண்ட சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் கண்மணி. காந்தன் சொன்னவைகளே அவள் நினைவுகளில் சுற்றிச் சுழன்றது.

Buy on Amazon.in

for more details please click below link



Beauty

beuty2.JPG
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Top Bottom