Amazon Links of Rosei Kajan

Status
Not open for further replies.

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்!

காதல்.. அது எப்போதுமே அழகுதான் இல்லையா? அதே காதல், அதிரடியாக முட்டி மோதிக்கொள்ளும் நட்புக்குள் மென்னடை போட்டு நுழைந்தால்?

காணும் நேரமெல்லாம் முட்டிக்கொள்ளும் எதிரெதிர் துருவங்களான இருவருக்குள்ளும் நுழைந்த காதல் அவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதையும், கண்டதும் ஆழ்மனதில் அழுந்த வித்திட்டாலும், அதீத உரிமையுணர்வும், கோபமும், கலந்து பேசாத பொறுமையின்மையும் குறுக்கிட்டால் அந்த அழகிய காதல் வித்தும் ஆட்டம் காணலாம் என்பதுக்கு எடுத்துக்காட்டாக இருவருமாக, ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பும் கலகலப்புமாக நகரும் இக்கதை உங்களையும் தன் பயணத்தில் அரவணைத்துக் கொள்ளும் எனும் நம்பிக்கையுடன்,

ரோசி கஜன்.






25129874_1797145283629162_164323341_o - Copy.jpg


13. என் பூக்களின் தீவே!

Amazon.in


Amazon.com
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
வணக்கம் வாசகர்களே!

‘அங்கீகாரம்’ மிகவும் பெரிய வார்த்தை! நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்ததும் கூட. மாணவப்பருவத்தில் கற்கையின் அங்கிகாரமாய் புள்ளிகள்; வேலையிலோ, அடுத்தடுத்த கட்டத்துக்காண நகர்வுகள்!
அதுவே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் பிள்ளைகளின் நடத்தை, செயல்பாடுகள் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகையில் அவர்கள் மேலும் முன்னேற வழிவகுக்கும். அதைப்போலவே கணவன் மனைவி ஒருவர் ஒருவரை அங்கிகரிக்கவில்லையோ இருவராலும் இழுக்கப்படும் வாழ்வுத்தேர் சீராகச் செல்வதென்பது கடினமே! இழுபறியாகத்தான் இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையேயான அங்கீகாரம் என்பதில் முக்கிய பங்கை வகிப்பது ‘புரிதல்’ என்பதே! அது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட விடயம் அல்ல என்றே சொல்லலாம். புதிர் போட்டுக் குழப்பிவிடவல்லது. அவற்றைச் சரியாகப் புரிந்து அதன் நுணுக்கங்களை மெல்ல மெல்ல விடுவித்து புரிதலில் வெற்றி கொள்கையில் தம்பதிகளின் வாழ்வென்பதில் வசந்தமே!
இக்கதையில் உலாவருபவர்கள் புரிதலின் புதிர்களை எவ்வாறு அணுகமுயன்றார்கள் அதன் முடிவில் சந்தித்தவை... என நகரும் இக்கதையில் உங்களையும் நீங்கள் இனம்காணவும் கிடைக்கலாம் .

வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

அன்புடன் ரோசி கஜன்.




 

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசகர்களுக்கு வணக்கம்,

காலதேவனின் காய் நகர்த்தலில் எங்கெங்கோ விழவேண்டிய முடிச்சுகள் மாறி வேறு எங்கெங்கோ விழுந்துவிடுகிறது. அவிழ்க்க முடியாத முடிச்சுகள். தீர்க்க முடியாத சிக்கல்கள். தீர்த்துவிடப் போராடும் ஓரிதயம், உயிராய் நேசித்த உறவின் பிரிவால் துடிக்கின்றது. சொந்தங்கள் உருவாக்கித் தந்த உறவை நேர்த்தியாக்கிடப் போராடும் இன்னோர் இதயம். இவையிரண்டும் இணைந்து உதயத்தைக் காணத் துடிப்பதுதான் 'சூர்யோதயம்' .
தேவைக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் பொருள் அல்ல உறவென்பது! அழகான குட்டிக் குட்டிச் சொந்தங்களாலும் கட்டியமைக்கப்பட்டவன்தான் ஒவ்வொரு தனிமனிதனும். அவ்வழகான உறவுச் சங்கிலியோடு உயிரோட்டமாக நகரும் இக்கதை, உங்களுக்கு பிடிக்கும் என்கின்ற அசையாத நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
நட்புடன், ரோசிகஜன்

sooryothayam.jpg

 

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிறக்கும் குழந்தை, அவன் வரவு தாய், தகப்பன், குடும்பத்தில் உண்டுபண்ணும் மாற்றங்கள் என்று ஆரம்பிக்கும் இக்கதையும் வருடங்கள் பல கடந்து நகர்ந்து செல்கின்றது.

இக்கதை மாந்தர்களும் உங்களுக்குப் பரீட்சயமானவர்களாவே இருப்பார்கள். கதை நிகழ்வுகளும், என்னதான் அங்கங்கே மென் கற்பனை கொண்டு வண்ணம் ஏற்றிருந்தாலும் நமக்கு அறிமுகமானவை தான்.

இனி, வாசித்துவிட்டுச் சொல்லுங்களேன்.

அன்புடன்,
ரோசிகஜன்

unakkaga.jpg
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom