Ananthi.C
Well-known member
"எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை, அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திடக் கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்கு"ன்னு சொல்லியிருக்கீங்க.
தனித்தன்மை, அடையாளம் என்பதெல்லாம் என்ன? எனக்குத் தெரிந்தவரை, நன்றாக பாடும் திறமை உள்ள பெண் என்றால் கச்சேரியில் அல்லது சினிமாவில் தொடர்ந்து பாடுவது, நாட்டியத்தில் சிறந்த பெண் தன் நடனத்தை தொடர்வது போன்றதாக இருந்தாலும் சரி, வேலையில் சிறந்த பதவி வகிப்பதாக இருந்தாலும் அதை தொடர வேண்டும், அல்லது அதில் மேலும் முன்னேற வேண்டுமென்று நினைத்தாலும் (இதுவெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே) அதற்காக பிடிவாதம் பிடித்தால், அதை பெண்களின் முன்னேற்றமாக பார்ப்பதில் தவறில்லைதானே? அதற்குத் தகுந்த துணையை எதிர்பார்த்து, கலந்து பேசி, கல்யாணம் செய்யும் அளவு காலம் முன்னேறி விட்டது என்று தான் நினைக்கிறேன்.
"முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் உணர்வுகள் பாதிக்கப்படாமல் போனது, அவர்கள் விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும், அதுவே பெண்களின் கடமை, முத்திரை" என்று சொன்ன நீங்கள், ஆரம்பத்திலேயே முந்திய தலைமுறை என்று சொல்லிவிட்டதால் இதற்கு விவாதம் தேவையில்லைதானே?
"இன்றைய உலகம் சுருங்கி உள்ளங்கையில் அலைபேசி வடிவில் அடங்கி விட்டது" என்றும் "அதனால் விதவிதமான கலாச்சாரமும், சுதந்திரமும் அதிகரித்து தனக்கான அடையாளத்துடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறார்கள்" என்றும் சொல்லி இருக்கீங்க. அவர்களின் அடையாளம் தன்னை மேம்படுத்தவோ, சமுதாயத்தை சீர்படுத்தவோ இருக்குமானால் அவர்கள் சிந்தனையை நாமும் வரவேற்பதில் தவறில்லையே?நல்ல விதத்தில் முன்னேற விரும்புபவர்கள் கைபேசியை நல்ல விதத்தில் பயன்படுத்துவார்கள் தானே
(கைபேசி பயன்பாட்டைப் பற்றி என்றால் தனியான விவாதம் தான் வைக்க வேண்டும், நிறைய பட்டி மன்றங்கள் ஏற்கனவே தொலைக்காட்சியில் வந்துவிட்டது
)
"திருமண உறவில் எல்லா விதமான உரிமையும், கடமையும், பொறுப்புகளும், ஏன் விட்டுக்கொடுத்தலும் சம அளவு இருக்க வேண்டுமென்று இன்றைய பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றும் சொல்லியிருக்கீங்க. இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், எப்போதும் ஒரு கை தட்டி ஓசை வராதல்லவா?பெண் தனக்குச் சமமாக படிச்சிருக்கணும், சம்பாதிக்கணும், என்று எதிர் பார்க்கும் ஆணும் குடும்பத்து உரிமை, கடமை, பொறுப்பு, விட்டுக் கொடுத்தலில் சமமாக இருக்கட்டுமே
உண்மையை சொல்லுங்க, இது காலத்தைக் கடந்த நம் அனைவரின் எதிர்பார்ப்பும்தானே?
"பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது" என்று நீங்கள் சொல்லியிருப்பதில் எதையும் என்று எதைக் குறிப்பாக சொல்லவருகிறீர்கள் என்பது பொறுத்துதான் விவாதிக்க முடியும். உதாரணமாக, கணவன் அதிகமாக குடித்துவிட்டு வந்து தினமும் மனைவி, குழந்தைகளை அடிக்கிறான் என்றால், அவனை திருத்த முடியாது என்று தெரிந்துவிட்டால், அதை எந்தப் பெண்ணும் சகித்து வாழ விரும்ப மாட்டாள், பொருளாதாரம் குறைவாக இருக்கும் பெண்கள் கூட அந்த நரகத்திலிருந்து வெளிவரவே விரும்புவாள். அதை நாமும் ஆதரிப்போம் தானே?
பொதுவாக சகிப்புத்தன்மை, பொறுமை இரண்டும் ஆண்களை விட பெண்களுக்கு மிக, மிக அதிகம் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒத்துக்கொள்ளாதவர்கள் கீழ் கண்ட உண்மையை உணர்ந்தால் அது புரியும்.
குழந்தையை கருவில் தாங்கி பிறக்கச் செய்யும் பாக்கியம் பெண் இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம் ஏனென்றால் அந்த கால கட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறாள் பெண். இதற்கு அவளது பொறுமையும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணம் தானே? கடவுளின் படைப்பில் இது மனித இனத்திற்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் தானே பொருந்துகிறது. அவைகளும் கஷ்டப்பட்டு குட்டியை ஈன்றெடுத்தோ அல்லது முட்டைப்போட்டு அடைகாத்தோ தனது தாய்மையை வெளிப்படுத்துகிறதே ..... எவ்வளவு ஆச்சர்யமான விஷயம்![]()
கோம்ஸ் இந்தகால பெண்கள் தன்னுடைய வேலை அல்லது தனித்திறமை இதில் வெற்றி பெற குடும்பத்தின் முக்கியமாக கணவரின் ஆதரவு என்பது மிக முக்கியமான ஒன்று.... என்னதான் பேசி புரிந்து திருமணம் செய்தாலும் கணவன் என்ற ஆண் சொன்னதை போன்றே நடந்து கொள்வதில்லை (எல்லா கணவர்களையும் சொல்லவில்லை பெருவாரியான ஆண்கள் அப்படித்தான்) எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தியாகம் செய்ய கடமைபட்டவளாக பெண் என்பவளே பழியாக்கப்படுகிறாள்... எனவே இன்றைய பெண்கள் அதை ஏற்று என்னுடைய விருப்பங்களை எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் இப்படிபட்ட திருமணம் தேவையா என்று சிந்திக்கிறார்கள்....."எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை, அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திடக் கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்கு"ன்னு சொல்லியிருக்கீங்க.
தனித்தன்மை, அடையாளம் என்பதெல்லாம் என்ன? எனக்குத் தெரிந்தவரை, நன்றாக பாடும் திறமை உள்ள பெண் என்றால் கச்சேரியில் அல்லது சினிமாவில் தொடர்ந்து பாடுவது, நாட்டியத்தில் சிறந்த பெண் தன் நடனத்தை தொடர்வது போன்றதாக இருந்தாலும் சரி, வேலையில் சிறந்த பதவி வகிப்பதாக இருந்தாலும் அதை தொடர வேண்டும், அல்லது அதில் மேலும் முன்னேற வேண்டுமென்று நினைத்தாலும் (இதுவெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே) அதற்காக பிடிவாதம் பிடித்தால், அதை பெண்களின் முன்னேற்றமாக பார்ப்பதில் தவறில்லைதானே? அதற்குத் தகுந்த துணையை எதிர்பார்த்து, கலந்து பேசி, கல்யாணம் செய்யும் அளவு காலம் முன்னேறி விட்டது என்று தான் நினைக்கிறேன்.
"முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் உணர்வுகள் பாதிக்கப்படாமல் போனது, அவர்கள் விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும், அதுவே பெண்களின் கடமை, முத்திரை" என்று சொன்ன நீங்கள், ஆரம்பத்திலேயே முந்திய தலைமுறை என்று சொல்லிவிட்டதால் இதற்கு விவாதம் தேவையில்லைதானே?
"இன்றைய உலகம் சுருங்கி உள்ளங்கையில் அலைபேசி வடிவில் அடங்கி விட்டது" என்றும் "அதனால் விதவிதமான கலாச்சாரமும், சுதந்திரமும் அதிகரித்து தனக்கான அடையாளத்துடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறார்கள்" என்றும் சொல்லி இருக்கீங்க. அவர்களின் அடையாளம் தன்னை மேம்படுத்தவோ, சமுதாயத்தை சீர்படுத்தவோ இருக்குமானால் அவர்கள் சிந்தனையை நாமும் வரவேற்பதில் தவறில்லையே?நல்ல விதத்தில் முன்னேற விரும்புபவர்கள் கைபேசியை நல்ல விதத்தில் பயன்படுத்துவார்கள் தானே
(கைபேசி பயன்பாட்டைப் பற்றி என்றால் தனியான விவாதம் தான் வைக்க வேண்டும், நிறைய பட்டி மன்றங்கள் ஏற்கனவே தொலைக்காட்சியில் வந்துவிட்டது
)
"திருமண உறவில் எல்லா விதமான உரிமையும், கடமையும், பொறுப்புகளும், ஏன் விட்டுக்கொடுத்தலும் சம அளவு இருக்க வேண்டுமென்று இன்றைய பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றும் சொல்லியிருக்கீங்க. இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், எப்போதும் ஒரு கை தட்டி ஓசை வராதல்லவா?பெண் தனக்குச் சமமாக படிச்சிருக்கணும், சம்பாதிக்கணும், என்று எதிர் பார்க்கும் ஆணும் குடும்பத்து உரிமை, கடமை, பொறுப்பு, விட்டுக் கொடுத்தலில் சமமாக இருக்கட்டுமே
உண்மையை சொல்லுங்க, இது காலத்தைக் கடந்த நம் அனைவரின் எதிர்பார்ப்பும்தானே?
"பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது" என்று நீங்கள் சொல்லியிருப்பதில் எதையும் என்று எதைக் குறிப்பாக சொல்லவருகிறீர்கள் என்பது பொறுத்துதான் விவாதிக்க முடியும். உதாரணமாக, கணவன் அதிகமாக குடித்துவிட்டு வந்து தினமும் மனைவி, குழந்தைகளை அடிக்கிறான் என்றால், அவனை திருத்த முடியாது என்று தெரிந்துவிட்டால், அதை எந்தப் பெண்ணும் சகித்து வாழ விரும்ப மாட்டாள், பொருளாதாரம் குறைவாக இருக்கும் பெண்கள் கூட அந்த நரகத்திலிருந்து வெளிவரவே விரும்புவாள். அதை நாமும் ஆதரிப்போம் தானே?
பொதுவாக சகிப்புத்தன்மை, பொறுமை இரண்டும் ஆண்களை விட பெண்களுக்கு மிக, மிக அதிகம் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒத்துக்கொள்ளாதவர்கள் கீழ் கண்ட உண்மையை உணர்ந்தால் அது புரியும்.
குழந்தையை கருவில் தாங்கி பிறக்கச் செய்யும் பாக்கியம் பெண் இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம் ஏனென்றால் அந்த கால கட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறாள் பெண். இதற்கு அவளது பொறுமையும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணம் தானே? கடவுளின் படைப்பில் இது மனித இனத்திற்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் தானே பொருந்துகிறது. அவைகளும் கஷ்டப்பட்டு குட்டியை ஈன்றெடுத்தோ அல்லது முட்டைப்போட்டு அடைகாத்தோ தனது தாய்மையை வெளிப்படுத்துகிறதே ..... எவ்வளவு ஆச்சர்யமான விஷயம்![]()
முந்தைய தலைமுறை பெண்களைப் பற்றி விவாதம் தேவையில்லையா.... இறந்த காலத்தின் நிழல் விழுந்ததாலே... இன்றைய சிந்தனை மாறியிருக்கிறது பெண்களிடம் ......
ஆம் ஒவ்வொரு பெண்ணின் கனவு என்று கூட சொல்லலாம் அனைத்திலும் சம உரிமை என்பது.... ஆனால் இந்த காலத்திலும் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?? அப்படி கிடைக்காத பட்சத்தில் முந்தைய தலைமுறை அனைத்தையும் விட கணவன் மனைவி உறவை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றே நினைத்தனர்.... ஆனால் நம் குடும்பங்கள் நமக்கு அதை தருகிறதா....
நிச்சயமாக கோம்ஸ் ஒரு பெண் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ..... சகித்துக் கொள்ளவே முடியாத சூழலில் இருந்து வெளிவர நினைத்தால் நம் ஆதரவை கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால் எதையும் என்று எதைச் சொன்னேன் என்றால் தன் கருத்துக்களோடு விருப்பங்களோடு ஒத்து வரவில்லை என்றால் கூட அந்த உறவின் மேல் இருக்கும் அன்பு மரியாதை அனைத்தையும் விட்டுவிட தயாராக இருக்கும் பக்குவம் அற்ற பெண்களாக இருக்கிறார்களே....
சகிப்புத் தன்மையும் பொறுமையும் அளவுக்கு அதிகமாகவே நமக்கு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.... இன்றைய பெண்களின் கேள்வியே ஏன் நான் மட்டுமே சகிக்க வேண்டும் நான் மட்டுமே பொறுமையாக இருக்க வேண்டும் என்பது தானே...
நான் பார்த்த.. பழகிய.. கேள்விபட்ட...படித்த விஷயங்களில் இருந்து கவனித்த கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன் சகோதரிகளே.... யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்...