• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ibc தொலைக்காட்சிக்கு ரோசி அக்கா வழங்கிய பேட்டி

நிதனிபிரபு

Administrator
Staff member
செவ்வந்தி
சில நாவல்கள் தனக்கான வாசகர்களுக்காகக் காலம் காலமாய்க் காத்திருக்குமாம். அப்படியான ஒரு இலக்கிய நாவல்தான் செவ்வந்தி.
பெண் எழுத்து என்று தனியாகப் பிரித்து, சற்றே தாழ்வாகப் பார்க்கும் சமூகத்துக்கு ஒரு பெண்ணின் எழுத்து எப்படி ஆழமாய், அழுத்தமாய் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம்.
காத்திரமான படைப்புகளுக்கு ஆண் என்ன, பெண் என்ன? இதோ, அதற்கு உதாரணமாகச் செவ்வந்தியும் அதை எழுதிய அன்பு அக்கா எழுத்தாளர் ரோசி கஜன் அவர்களும்!
எனக்கு இன்னுமே செவ்வந்திக்கான அங்கீகாரமும், அது போக வேண்டிய உயரமும், சென்று சேரவேண்டிய பரப்பும் இன்னும் பெரிது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கூடவே, தனக்கான உயரத்தைத் தானாகவே எட்டிப் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். அதற்கு உதாரணமாக ibc தொலைக்காட்சி வழங்கியிருக்கும் இந்தப் பேட்டியைப் பார்க்கிறேன்.
மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும் அக்கா. இதெல்லாம் ஆரம்பம் மட்டுமே! உயரங்கள் இன்னும் நிறைய உண்டு. அதையெல்லாம் நீங்கள் எட்டிப் பற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

 

kamalnila

New member
👏👏👏👏👏👏👏👏 அக்கா உங்களுடைய பேட்டியை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் அக்கா மேலும் மேலும் வெற்றி படிகள் ஏற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் . உங்கள் sevvanthiyai பார்க்க வேண்டும். எப்படி பார்ப்பது?
 
All the best Nitha mam இன்னும் பல வெற்றிகளைப் பெற நல்லூர் கந்தசாமியை வேண்டிக் கொள்கிறேன்
 
Top Bottom