You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே

நிதனிபிரபு

Administrator
Staff member
Reni Angeline Raj's review


நிதனி பிரரபுவின்
"ஏனோ மனம் தள்ளாடுதே"
நிசமாகவே மகிழ்ச்சியால் மனம் தள்ளாடுகிறது.
அழகான அர்த்தமுள்ள கதை.
சிறப்பான கதை
சீறிப்பாய்கிறது கதை வரிகள்.
சில இடங்களில் கண்கள் தழும்புகிறது.
கதையை வாசித்து அனுபவியுங்கள்
கையில் எடுத்தால் முடிக்காமல்கீழே வைக்க முடியாத கதை.
நல்ல தரமான கதையை தந்த நிதனிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஷண்முகப்பிரியா சுரேஷ்


“ஏனோ மனம் தள்ளாடுதே “ - நிதனி பிரபு
உயர்ந்த கோட்பாடுகளும் கல்விச் சேவையையே முதன்முதலாவும் கொண்ட பிரமிளாவும் , எதிலும் வியாபாரத்தையும் தன்னலத்தையுமே பெரிதாகக் கருதும் கௌசிகனும் சந்தித்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளுவதே கதை.
ஆனால் அந்த சந்திப்பில் தொடங்கி முடிவு வரை வாழ்வில் வரும் சிக்கல்களையும் இருவரின் மனவோட்டத்தையும் அருமையாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.
பிரமிளா - ஓர் பெண் எவ்வளவு அன்பாகவும், உறுதியாகவும், நேரிய சிந்தனையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு அழகான எடுத்துக்காட்டு. கடைசிவரை நெறிபிழறாது உயர்ந்து நிற்கிறாள். கல்லூரியிலும், இரு குடும்பத்துக்குள்ளும் பிரச்சனைகளை தீர்க்க இவள் எடுக்கும் செயற்பாடுகள் கைதட்டவைக்கின்றன.
பூவோடு சேர்ந்து நாரும் நாறும் ( மணம்வீசும் ) என்பதுபோல் கடைசியில் கௌசி தன்னகங்காரத்தையும் வியாபார புத்தியையும் விட்டுவிட்டு பிரமிக்கு பிடித்தவனாக மாறினான்தான்-
ஆனால் அதற்குள் அவர்கள் இழந்தது ஒரு பொக்கிசத்தை.
“ மிருதுளா” பெயரின் அர்த்தமும் பொருத்தமும் நினைத்தாலே கண் கலங்குறது நிதாக்கா.
இலங்கையில் நடக்கும் கதை - ஊர் தமிழல் வாசிக்கும் போது ஊரையே பார்த்தது போல ஓர் தோற்றம்& மகிழ்ச்சி.
மீண்டும் ஓர்
அருமையான

நாவலுக்கு நன்றிக்கா
❤️
❤️
❤️
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Vizeastry K




நிதனி பிரபு எழுதிய ஏனோ மனம் தள்ளாடுதே படித்து முடித்து விட்டேன்.... என்ன ஒரு ஆழமான கதை.நான் இப்போதுதான் இவரது கதையை முதலாக படிக்கிறேன்.இவரது எழுத்தும் நடையும் நம்மை கட்டிப்போட்டு விடுகிறது.குடும்ப உறவுகள் பற்றி எழுதி லஷ்மியை போல், பெண்களின் மன இயல்பை , எதிர்பார்ப்பை பற்றி எழுதி வாசந்தியை போல், சமூகத்தில் பெண்களின் அவலநிலை பற்றி எழுதி சிவசங்கரி, அனுராதா ரமணன் பொல் ... எனக்கு அவர்களின் எழுத்துகளை நினைவு வரவைத்து விட்டார்.அதேபோல் இலங்கையில் இருக்கும் நம் தமிழர்களின் குடும்ப அமைப்பு, கலாசாரம்.. அவர்களின் பண்பாடு, என அவர் சித்தரிக்கும் கதை வழி நாம் புரிந்து கொள்ள முடிகிறது.கதையின் மாந்தர்கள் தம் முன்னே உண்மையாக உருக்கொண்டு உதவுவது அவரது எழுத்தின் வன்மையாலேயே... சில நாட்கள் வேறு எதுவும் படிக்க மனம்‌ வரவில்லை. அது அந்த கதையின் தாக்கத்தால் தான் என்றால் மிகையாகாது.இவருடைய வேறு நாவல்கள் இருக்கிறதா என்று தேடுகிறேன்... அந்த அளவிற்கு இவருடைய எழுத்து என்னை கவர்ந்துவிட்டது. யாருக்கும் தெரிந்தால் லிங்க் கொடுக்கவும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Usharani Balaji


மக்களே நிதனி பிரபு அவர்களின் ஏனோ மனம் தள்ளாடுதே நாவல் மிக மிக அருமை. எதார்த்தத்தை மீராத ஆழமான கதை.ஒரு பெண்ணுக்கு ஆணிடம் இருந்து காதல் மட்டும் கிடைத்தால் போதாது, அவளின் மரியாதை, மனம்,மானம், நம்பிக்கை அனைத்தும் தேவை என்பதை அழகாக சொன்ன கதை. ஹா ஹ ஹாசினி போல பைத்தியக்கார ஹீரோயின் மத்தியில் பிரமி simply super friends. கௌசிகன் அன்பான எதிரி. ( இலங்கை தமிழ் தெரியாவிட்டாலும் கதையில் வரும் என்ற மனுசன், என்ற மனுஷி வார்த்தை அழகாக இருக்கும்)
 

நிதனிபிரபு

Administrator
Staff member
புகழ் மங்கை

ஓ ராதா நிதனி பிரபு வின் நாவல் எப்போதும் போல அருமை ஏனோ மனம் தள்ளாடுதே நாவலின் இரண்டாபாகம் சொல்லலாம் மோகனன் இந்த பேரே அழகு கௌசிகன் ஹீரோ பேரை விட வில்லன் பேர் நல்லாயிருக்கே நினைச்சேன் கடைசியில் மோகனன் ஹீரோ ஆகிட்டான் இயல்பா ஹீரோ மாத்தினாங்க பாருங்க செம்ம...ஒரு நல்ல குடும்பத்தில் வந்து மகன் தன் தவறுகளை திருத்திக் கொள்வது அழகு...ராதா அதிகம் வெறுத்தவனை நேசிக்கும் போது எனக்கு ரமணிஅம்மாவின் விருப்புக்கும் வெருப்புக்கும் இடைவெளி நூல் அளவுதான் சொல்வது ஞாபகம் வந்தது..ராஜீவ்
அருமையான

காதபாத்திரம் இயலாமை கோபம் பாசம்
அருமை
உங்க நாவலில் பிடித்ததே குடும்ப நபர்களின் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது மிக்க நன்றி நிறைய எழுத
வாழ்த்துக்கள்பா
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சரவணப்ரியன்


ஏனோ மனம் தள்ளாடுதே - நிதனி பிரபு
இந்த கதையோட எனக்கு இருக்குறது ஒரு Love-hate relationship தான். இந்த கதையில் சில விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது. சில விஷயங்கள் சுத்தமா பிடிக்கலை. ஆனால் இந்த கதையை நான் எதுக்கு படிக்க எடுத்தேனோ அந்த விஷயம் வெற்றி தான். ஓ ராதா கதையின் ஹீரோ மோகனன் பற்றி தெரிந்து கொள்ள தான் இந்த கதையை எடுத்தேன். இந்த கதையை படித்த பிறகு ஓ ராதா கதையை படிக்க என்னுடைய ஆர்வம் இரண்டு மடங்கு அதிகமாகிடுச்சு.
எழுத்தாளர் நிதனி பிரபு அவர்களுடைய கதைகளில் நான் படித்த நான்காவது கதை இது. நல்ல எழுத்தாளர்கள் பற்றி யோசிச்சா அவங்க பேரும் கண்டிப்பா நியாபகம் வரும். அவர்களுடைய எழுத்து நடை ரொம்ப அழகா இருக்கும். இதற்கு முன்பு நான் படித்த மூன்று கதைகளும் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதுவும் குறிப்பாக என்னோட பேவரிட் என் சோலை பூவே தான். அதில் ரஞ்சனுடைய கதாபாத்திரத்தில் சில குறைகள் இருந்தாலும் அதற்கான காரணங்கள் எல்லாமே எளிதாக புரிந்து கொள்ள முடியும். அந்த சூழ்நிலையில் இருப்பவர்கள் அப்படி நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு என்கிற அளவு தான் இருக்கும்.‌ அந்த கதையே ஒரு நிஜ மனிதர்கள் வாழ்க்கை மாதிரி தான் இருக்கும். மற்ற இரண்டு கதைகளும் கூட அந்த மாதிரி தான்.
ஆனால் இந்த கதை முதல் நூறு பக்கங்களில் கதையோட சுத்தமாக ஒட்ட முடியலை. நூறு பக்கங்கள் போனதே தெரியலை தான். இருந்தாலும் கௌசிகனை ஒரு வழக்கமான எல்லா கதைகளிலும் வருகிற ஆன்டி ஹீரோ மாதிரி மனதில் பதிய வச்சிடுச்சு.‌ பணம், வசதி, அதிகாரம் இதை மட்டுமே முக்கியமாக நினைக்கிற அப்பாவை பார்த்து தான் அவனும் அப்படி இருக்கான் என்பது ஒரு சரியான காரணம் தான். ஆனால் பொதுவாக ஆன்டி ஹீரோ என்று எழுதுபவர்கள் எல்லாருமே அப்படி தான் எழுதுறாங்க நான் படித்த வரையில். இதனால் எப்பவும் நிதனி பிரபு சிஸ் கதையில் இருக்குற ஒரு தனித்தன்மை இந்த கதையில் இல்லாத மாதிரி எனக்கு தோன்றியது.
இந்த கதையில் கதாநாயகன் கௌசிகன் கதாநாயகி பிரமிளாவை விட எனக்கு மோகனனை தான் ரொம்ப பிடிச்சதுனு சொன்னால் எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்கனு தெரியலை. ஆனால் அது தான் உண்மை. மோகனன் கதாபாத்திரத்தை கொண்டு போன விதம் ரொம்ப நல்லா இருந்தது. அந்த மாதிரி கௌசிகன் கதாபாத்திரத்தை கொண்டு போயிருந்தால் இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திருக்கும். தன் அப்பா அண்ணன் செயல்களை பார்த்து பார்த்து வளர்ந்ததால் அவர்களை மாதிரியே நடந்துக்குறது. அவன் தப்பு செய்யும் போது அப்பாவும் அண்ணனும் கண்டிக்காமல் இருப்பதால் திரும்ப திரும்ப தப்பு செய்துக் கொண்டே இருப்பது. அப்பாவும் அண்ணனும் அவனை மட்டம் தட்டவும் தன்னை நிருபிச்சே தீர தனக்கு தெரிஞ்ச தவறாக குறுக்கு வழியில் போறதுனு அவனுடைய செயல்கள் எல்லாத்துக்கும் ஒரு அடிப்படை காரணம் இருந்தது.‌ தன் அப்பாவும் அண்ணனும் தன் அம்மாவை மதிக்காததால் தானும் மதிக்காதது எளிமையான உதாரணம் அவன் ஏன் அப்படி இருக்கான்னு? தன்னால் எளிதாக அடக்க முடிந்த தங்கையை அடக்குறதும் ஒரு நல்ல உதாரணம் தான். இந்த மாதிரியான விஷயங்கள் தான் நான் நிதனி பிரபு சிஸ் கதையில் எதிர்ப்பார்த்தது. இந்த மாதிரியான அம்சங்கள் கௌசிகன் கதாபாத்திரத்தில் எனக்கு தெரியலை. அதனால் தான் இந்த கதை என்னை கொஞ்சம் disappoint பண்ணிடுச்சு.
பணம் அதிகாரம் அப்படின்னு தான் நினைத்ததை எப்படியும் சாதிக்க கூடியவன் தான் கௌசிகன்.‌ தன்னை எதிர்த்து நிற்கிற பிரமிளாவை மிரட்டி திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்திற்கு பிறகு பிரமிளாவால் அவன் மாறுவது தான் கதை.‌ எனக்கு புரிந்த கதை சுருக்கம் இது தான்.
ஆன்டி ஹீரோ கதாபாத்திரங்கள் எனக்கு சுத்தமாக பிடிக்காது. பொதுவாக அவங்க வில்லன் கதாபாத்திரங்கள் தான். ஆனால் என்ன ஒன்று ஹீரோயின் அவங்களை விரும்பறதால் அவங்க ஆன்டி ஹீரோ ஆகிடுறாங்க. ஆரம்பத்தில் இல்லைனா கூட கண்டிப்பா கிளைமாக்ஸில் ஹீரோயினோடு சேருகிற வில்லன்கள் தான் ஆன்டி ஹீரோக்கள். கௌசிகனும் அப்படி தான்.‌ அவன் நடந்துக்குற விதம் நிறைய அக்மார்க் வில்லத்தனமாக தான் இருந்தது. தன் குடும்பத்துக்கு மட்டும் எந்த கஷ்டமும் வரக் கூடாது. ஆனால் அடுத்தவன் குடும்பம் பற்றி‌ எல்லாம் யோசிக்க மாட்டாங்க. இதெல்லாம் ரொம்ப பொதுவான ஆன்டி ஹீரோ கதாபாத்திரங்கள்.‌ கௌசிகன் மற்ற கதாபாத்திரங்கள் போலவே இருந்தது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் கொடுத்தது. எழுத்தாளர் நிதனி பிரபு கிட்ட இருந்து நான் நிறைய எதிர்ப்பார்த்தேன். எதிர்ப்பார்ப்பு கொடுத்த ஏமாற்றம் மட்டும் தான் வார்த்தையில் வெளிப்படுதே தவிர இது ஒன்றும் மோசமான கதை கிடையாது.‌ ஒவ்வொருத்தருடைய ரசனைகள் ஒவ்வொரு விதம். என்னோட ரசனைக்கு ஏற்ப தான் என்னோட பார்வை இருக்கும். எனக்கு பிடித்த விஷயங்கள் கூட இந்த கதையில் நிறைய இருக்கு.
நான் முன்பே சொன்ன மாதிரி மோகனன் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. மோகனன் கதாபாத்திரம் எந்த அளவு மாற்றங்கள் அடைந்து இருக்கு என்று பார்க்க ஓ ராதா கதை படிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கேன். அந்த கதை ரொம்ப நல்லா இருக்கும்னு நிறைய பேர் சொன்னாங்க.‌ அந்த கதை தனியாகவே படிக்கலாம்னு கூட சொன்னாங்க. ஆனால் எனக்கு எதையும் அரைகுறையாக பண்ண பிடிக்காது. அதனால் அவனை பற்றி தெரிந்து கொள்ள தான் இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன்.
பிரமிளாவுக்கு கால் செய்து மன்னிப்பு கேட்கிற இடம் வரும் போதே எனக்கு அவன் கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சு போச்சு.‌ ஓ ராதா கதை படிச்சால் மோகனன் உனக்கு பிடிக்கும்னு என்கிட்ட சொன்னாங்க. ஆனால் அந்த கதை படிக்குறதுக்கு முன்பே எனக்கு அவனை பிடிச்சு போச்சு. அவன் கதாபாத்திரத்துக்கான இந்த கதையின் முடிவு ரொம்ப நல்லா இருந்தது. அதுவரையில் இந்த கதை என்னுடைய எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கு.
திருமணம் ஆன பிறகும் கூட உடனே அவன் மேல பிரமிளாக்கு பாசம் வர மாதிரி வைக்காமல் அவனுடைய தவறுகளை கண்டிக்குறது, தவறு செய்தவர்களை தண்டிக்க முயல்கிறது, பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளுறது இந்த மாதிரியான பிரமிளாவுடைய குணநலன்கள் ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க.
இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் யாழினி ஒருத்தன் தன் காதலிப்பதாக சொல்லி பின்னாடியே சுத்துறான் கையை பிடிச்சிட்டான் என்று அழுதுகொண்டே வரும் போது அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அதை அடிதடி அப்படின்னு வழக்கம் போல தீர்க்க நினைக்க அந்த பிரச்சினையை பிரமிளா கையாள்கிற விதம் ரொம்ப நல்லா இருந்தது.
கதை முடிவுக்கு முன்பு மோகனனால் பெரிய பிரச்சினை வந்த பிறகு பிரமிளா உங்கள் பாவத்தை எல்லாம் என்னால் சுமக்க முடியாதுன்னு தன்னை விட்டுவிடும் படி கௌசிகனிடம் கேட்கும் போது இந்த ஜென்மத்தில் உனக்கு வேற வழி கிடையாது. சாகிற வரைக்கும். அது நீயோ நானோ. என்ற பாவம் பழி எல்லாத்தையும் என்னோட சேர்ந்து நீதான் சுமக்கவேணும் என்று சொல்கிற இடம் எனக்கு ரொம்ப பிடிச்சது.
இந்த கதையில் நிறை குறை என்று இரண்டுமே இருந்தாலும் கதையை படிக்க எடுக்கும் 676 பக்கங்களா என்று கொஞ்சம் பிரம்மிப்பா இருந்தது. ஆனால் கதை படிக்க ஆரம்பித்த பின்னர் 676 பக்கங்கள் போனதே தெரியலை. கடகடவென்று போயிடுச்சு. எழுத்தாளர் நிதனி பிரபு உடைய சிறந்த கதைன்னு இதை சொல்லவே முடியாது. அவங்க கதைக்குனு ஒரு எதிர்பார்ப்பு மனதில் பதிந்து விட்டது. ஆனால் இதுவே வேற ஏதாவது புது எழுத்தாளரோட கதையா இருந்திருந்தால் இந்த கதை ஓரளவு நல்ல கதைன்னு தோன்றி இருக்குமோ என்னவோ.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
sharly usha


நிதனி பிரபு அக்காவோட ஏனோ மனம் தள்ளாடுதே கதை மிஸ் பண்ணாம படிங்க.
நினைத்ததை நடத்தி காட்டும் அதிரடி நாயகன் கௌசிகன்
?
?
?
?
?
நேர்மையான தைரியசாலியான டீச்சரம்மா பிரமி.
இருவரது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களால் யார் மனம் யாரிடம் தள்ளாடியது என்று அழகாக நிதனி அக்கா சொல்லிருக்காங்க
?
?
?
?
?

தனபாலசிங்கம் சார் முதுமையிலும் முற்போக்கு சிந்தனை வாதியாய் மிளிர்கிறார்.
திபா, தீபன், ரஜீவன், யாழினி, சாரதாம்மா செல்வராணி அனைவரும் கதையின் போக்கில் நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.
மிஸ் பண்ணாம படிங்க
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Chitra Srinee

நிதனி பிரபு நான் படித்த உங்களின் முதல் கதை "எனோ மனம் தள்ளாடுதே"....
"உங்கள் எழுத்தில் , கதை வடிவமைப்பில் , சொல்லாடலில்" ஏனோ என் மனமும் தள்ளாடிவிட்டது....
கதையின் நாயகி பாத்திர வடிவமைப்பு என்ன சொல்ல Wow Brilliant!!!!...
என்ன நடந்தாலும் என்ன சூழ்நிலையிலும் அதை "சாதகமாக சாதூரியமாக" மாற்றும் வித்தைகாரி... தோற்றாலும் ஜெயிப்பவள்... பிரமி நெஞ்சில் நிறைந்துவிட்டாள்...
This is what im expecting , we r expecting!!!!...
கதையில் வர்ற எல்லாருமே Sema!! பட் King பிரமிளா தான். பிரமிளாவை பெற்று இதுபோல் வளர்த்தவர்கள்தான் வேறென்ன சொல்ல..
"முதல் முத்திரை என்னுள் அழுத்தமாக ஆழமாக பதித்துவிட்டீர்கள்"...
Last but not least உங்களின் கொஞ்சும் தமிழ் அழகு!!!!.....
"
வாழ்த்துக்கள்

தோழி" உங்களின் எழுத்து ஒரு முழு இரவின் தூக்கத்தையும் தள்ளிவைத்தது , எடுத்துமுடிக்கும்வரை கீழே வைக்க தோன்றவில்லை... அலாதியான வாசிப்பனுபவம்!!!!....
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Pooja Sri



ஏனோ மனம் தள்ளாடுதே - NithaniPrabu Novels
கல்வியை கண் என நினைக்கும் நேர்மையான ஒருத்திக்கும்,கல்வியை வியாபாரமாக பார்க்கும் ஒருவனுக்கும் நடைபெறும் மோதல் அதை தொடர்ந்து ஒருவரை ஒருவர் காயப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது கதை...
ஆசிரியர் என்பதாலோ தொடக்கம் முதல் இறுதி வரை பிரமியை நேர்மையாக கம்பீரமா காட்டியிருப்பது அருமை.. தன்னவன் செய்யும் பிழைக்கு தானே வேறுவழி இல்லாமல் அடங்கி போகும்போது குமுறுவது என ஒவ்வொரு இடத்திலேயும் அவள் கீழ் இறங்காமல் இருந்து நம் மனதில் பதிந்துவிடுகிறாள்....
கௌசிகன் என்ன சொல்லனு கூட தெரியல வெறுத்துக்கிட்டே விரும்ப முடியுமா? முடியும் போல குடும்பத்துக்கு என்று எல்லாம் செய்து அவளை இரண்டாம் பட்சமாக ஆக்கி, மேலும் அவளுக்கு தன் மேல் வெறுப்பை தான் உண்டாக்குகிறான்... மைண்ட்ல சொல்றத கொஞ்சம் அவ கிட்டயும் சொல்லலாம்ல பிரச்சனையே வந்து இருக்காது(இது என்னோட மைண்ட் வாய்ஸ்)..
ஒரு தப்பு பண்ணிட்டு அந்த தப்புக்கு தன்னவளையும் மிரட்டி அடிப்பணிய வைத்த காரணத்துக்காக அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை மிகப் பெரியது...நெஞ்சடைக்கும் இடங்கள் நிறைய இருந்தது... கண்ணு வேர்த்த இடமும் அதிகம்...
தனபாலசிங்கம் வீட்டு பெண்களுக்கு கொடுத்த சுதந்திரம்,மதிப்பு,நம்பிக்கை, அமைதியான வாழ்க்கை அதை கௌசியின் தந்தை ராஜ நாயகம் தன் வீட்டுப் பெண்களுக்கு கொடுக்கவில்லை...
நிறைய கதாப்பாத்திரங்கள் மனதில் மறக்கமுடியாததாக இருந்தது... செல்வராணி போல் நிறைய தாய்மார்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்...எத்தனை காலம் தான் குட்ட குட்ட குனிந்து கொண்டே இருப்பது...
தீபா விளையாட்டு பொண்ணாக இருந்தாலும் கேள்வி ஒவ்வொன்றும் நறுக்கென்று இருக்கு....
பிடித்த வரிகள்::
" பெண்கள் நெருப்பை போன்றவர்கள்...வீட்டில் விளக்கு ஏற்றவும் செய்வர்...தேவையில்லா குப்பையை எரிக்கவும் செய்வர்...இருளை நீக்கி ஒளியை கொண்டு வரவும் செய்வர்...அதற்கு இடையூறு செய்யாமல் துணையா இருந்தால் மட்டும் போதும் என்று தனபாலசிங்கம் சொல்வது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்".....
எப்பவும் போல இதுலயும் அழ வச்சுட்டாங்க யா
?
?
?
?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Deepa Senbagam



கதை விமர்சனம்.
கதை: ஏனோ மனம் தள்ளாடுதே.
ஆசிரியர்: நிதனி பிரபு .
சில கதைகளை வாசித்தவுடன் அதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றும். அப்படியான ஒரு கதை ஏனோ மனம் தள்ளாடுதே.
இலங்கைத் தமிழில் நான் வாசிக்கும் முதல் கதை. அம்மாச்சி என நாங்கள் அம்மாவின் அம்மாவைச் சொல்லுவோம். இங்கு மகளை செல்லமாக, இல்லமா என்பது போல் பயன்படுத்துவார்கள் என்பது முதற்கொண்டு, பற்பல சொற்கள் எனக்கு அறிகமுகமானது.
காலையில் , நிதனி பிரபுவின்... நான் கதையை இன்னும் வச்சிருக்கனும்னு சொன்னா அழுதுடுவேன் என்ற போஸ்டை பார்த்து, வாசிக்க ஆரம்பித்தான். சாதாரணமாக நான் எழுதி பதிய வேண்டிய என் கதையின் அத்யாயங்கள் மற்றவர் கதைகளை வாசிக்க இயலாமல் துரத்தும். இன்று, அஜீரணம், ட்ரிப்ஸ், உடல்நிலை தொய்வு, வழக்கமான வேலைகளைச் செய்ய இயலாமல் போனதும் நன்றதாக போயிற்று. ஒரு நல்ல கதையை வாசித்த அதோடு இலங்கையில் வாழ்ந்த அனுபவத்தை தந்தது.
நேர்மையான, பள்ளியின் மீது உணர்வுபூர்வமான பற்றுதல் கொண்ட ஆசிரியை, அப்பாவின் மேல் கொண்ட பாசம், தன்னை சுற்றியுள்ளவர்கள் மேல் கொண்ட அக்கறை என வாழும் பிரமிளா டிச்சர்.
இது அத்தனைக்கும் சவாலாக வரும் கௌசிகன், என இரு துருவங்களை வாழ்க்கையில் இணைத்து பயணிக்கும் கதை.
ஆரம்பத்தில் அடாவடியான நாயகர்கள், கடைசியில் மனைவின் அன்பில் சிறைபடுவது வழக்கம். நமது வாசகர்களும் அதைத் தான் எதிர்பார்ப்பார்கள். ஆனாலும் கௌசிகன் அவளுக்கு ஸ்பேஸ் கொடுத்து, அவ்வப்போது அவனையும் உணர்த்தி தனது மாற்றத்தை நன்றாகவே பதிவு செய்துள்ளான்.
கதையோட்டம், எந்த அதிகபடுத்திய உணர்ச்சி வயப்பட்ட சினிமாதனமும் இல்லாத இயல்பான கதை.
சொல்லாட்சியும் நன்றாகவே உள்ளது. இலங்கை தமிழ் என்பதால் இதை, இப்படியும் சொல்வார்களோ என யோசிக்க வைத்தது. ஆனால் விமர்சனமே உங்க பாணியில் வந்திடுமோ என்ற யோசனை.
நாயகன், நாயகி இருவர் கண்ணோட்டத்திலும் நகர்ந்த கதை அருமை.
கதாபாத்திர படைப்புகளும் , பெண்ணை பெற்ற அன்னையின் ஆதங்கம். மகனை பெற்ற தாயின் கையாலாகத்தனம், நாத்தனார் அண்ணி உறவின் பாசம், மாமனார் மருமகனின் உறவு , தாமதமாகவெனினும் மரு- மகன் என்பதை உணர்ந்து செயலாற்றும் நாயகன். அத்தான்- கொழுந்தியாள் உறவு என அத்தனையும் அருமை.
நல்ல கதை தந்தமைக்கு நன்றி.
மேலும் பல நல்ல கதைகளை தர வாழ்த்துக்கள் நிதனி பிரபு.
 
Top Bottom