You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தனிமைத் துயர் தீராதோ - கருத்திட

Chitra ganesan

Active member
இந்த அப்பா இப்ப உயிரோட இல்லை சித்ரா சிஸ். உண்மையான மித்ராவுக்கு உண்மையில் ஒரு அண்ணா இருக்கிறார். நிறையக் காலத்துக்குப் பிறகு ஒரு தம்பி பிறந்தார். அந்த சின்ன பிள்ளைக்கு நான்கு வயதாக இருக்கும்போது அந்த அப்பா இறந்துட்டார். அம்மா எப்பவோ ஒருவித மனநோயாளி. அவா ஒரு வேலை செய்யமாட்டா. மித்ராதான் ஆன்லைன் மூலம் படிச்சுக்கொண்டு அம்மாவையும் தம்பியையும் வீட்டில இருந்து கவனிக்கிறா. அண்ணா படிச்சு முடிச்சிட்டு வேலை செய்றார். அவரின் உழைப்பில்தான் மொத்த குடும்பமும் வாழுது.

அண்ணா, தங்கை இருவருமே 30 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள். திருமண வாழ்க்கை எப்படி அமையும், யார் அமைச்சு கொடுக்கிறது. முதல் இப்படியான ஒரு அம்மாவோடு இருக்கிற பிள்ளைகளை கட்ட யாராவது வருவார்களா. இப்பிடி இன்னுமே அந்த பிள்ளைகளுக்கு நிறைய கேள்விகள்.
அப்ப கதையில் மட்டுமே மித்து மாறி இருக்கும் பெண்களுக்கு ஹாப்பி எண்டிங்.நிஜத்தில் இல்லையே நினைக்கும் போது இன்னும் மனசு பாரமா ஆகுது.அதேபோல இந்த கதை இன்னும் மனசுக்கு நெருக்கம் ஆகுது.
நிஜ மித்துவுக்கும்,அவள் அண்ணனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்.
 

Chitra ganesan

Active member
ஈஸ்வரியின் மேலே தான் கோவம் வருது.ஆனாலும் பழமையில் ஊறி போனவர் வேற என்ன முடிவு எடுத்திருக்க முடியும்?
ஆனாலும் தன் மகளை கண்டுக்காமல் விட்டுவிட்டாரே.ஒன்னு போனால் என்ன இன்னும் இரண்டு இருக்கிறதே என்று நினைத்து கொண்டார் போலும்.அதையும் சரியா கவனிக்காமல் இருக்காரே🤦
 

Chitra ganesan

Active member
மித்ராவின் நிலைக்கு மொத்த காரணமும் ஈஸ்வரி மட்டும் தான்.அவரின் கோழைதனமும்,பயமுமே மித்துவின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளியது😡
 

Chitra ganesan

Active member
ஒவ்வொரு முறையும் இந்த அத்தியாயம் படிக்கும் போது என் கண்கள் கண்ணீர் வடித்து கொண்டே தான் இருக்கிறது.😥 சந்தோஷ் குழந்தை அவனுக்கு புரியாது என்றாலும் மித்துவின் சோகம்,அவளின் மகனுக்கான பரிதவிப்பு, அவளின் சிறு வயது துயரம்,இழப்பு,அன்பு மறுக்கப்பட்ட விதம் எல்லாமே முழுமையாக தாக்கும்.துக்கம் தொண்டையில் அடைக்குது😥அதே போல இன்னொரு பதிவும் இருக்கு.அவளே பிரசவத்திற்கு செல்லும் போது..i can't control my tears.
 

Sowdharani

Well-known member
படிச்ச கதை தான் ஆனா திரும்ப படிக்க அடுத்த ud எப்போ வரும்னு இருக்கு அக்கா ...ப்ளீஸ் டெய்லி 2ud கொடுங்க....

கீர்த்தனன் எனக்கு இப்போ படிக்கும் போது தான் இது தோணுது... அங்க வளர்கிற பிள்ளைக்கும் நம்ம பிள்ளைக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு என்று உனக்கு கண்டிப்பா தெரிந்து இருக்கும் தானே... அவுங்க வாழ்க்கை முறை உறவுக்கு கொடுக்குற முக்கிய துவம் எல்லாம்...அதே போல என்ன தான் மித்ரா இலங்கை பெண் யாக இருந்தாலும் அவள் அங்கே பிறந்து வளர்ந்த பிள்ளை தானே... அவளோட அப்பா அம்மா கிட்ட நல்ல முறையில் அவளுக்கு பிணைப்பு இல்ல அப்போ அந்த ஊர் பிள்ளைகளை போல தானே வளர்ந்து இருப்பா அதை ஏன் நீ யோசிக்கவே இல்ல,,,,
 

Sowdharani

Well-known member
இதுவரை தனா அப்படினு சொல்லவே இல்ல மித்ரா... அப்போ முதல் முறை சத்யனை கண்டிக்கும் பொது தான் சொல்லி இருக்கா ...
 

Chitra ganesan

Active member
இந்த பகுதி படிக்கும் போது எப்போவும் ஒரு டென்ஷன் இருக்கும்.இப்பவும் அப்படியே..
யாரை குறை சொல்ல,யாரின் தவறு என்று முடிவெடுக்க..சந்தர்ப்பங்கள் சரியில்லாமல் போயிடுச்சு.ஹ்ம்ம்☹
 
Top Bottom