Arthi Ravi
நிதனி பிரபுவின் நீ வாழவே என் கண்மணி
சிறு கதையாக முன்பு வாசித்தது முதல் பக்கத்திலேயே நினைவு வந்து ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அப்படியே நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணி வரை இருந்து வாசித்து முடித்தேன்.
முடித்ததும், இதற்கு இரண்டாம் பாகம் தர மாட்டார்களா என்கிற ஏக்கம் பிறந்தது உண்மை.
காதல் கதையே!
ஆனால், அதைத் தாண்டி ஓர் உன்னத உணர்வு வந்து ஆட்கொண்டது. அபூர்வமாகச் சில கதைகள் நெஞ்சை விட்டு அகல மறுத்துச் சண்டித்தனம் செய்பவைகளாக நின்று விடுகின்றன. இக்கதை அந்த ரகம்.
ஈழப்போரின் சிறு பகுதி. போர் வீரர்களின் இந்நாள் துயரங்கள்... கண்டிப்பாக ஈழமக்களால் கவனிக்கப்பட வேண்டியவை.
துயில்லம்... புதிய வார்த்தையைக் கற்றுக் கொண்டேன். அங்கு ஒரு காட்சி. மறக்க இயலாது. கண்ணீரை வரவழைத்து விட்டது.
உஷா... எப்படி இவளால் முடிந்தது? அதுவும் இரண்டு மாதங்களுக்கு மேல் முன்னால் காதலியுடன் கணவனை அனுமதித்தது. Great!
நிர்மலன்... இவனின் காதல் மனம் தவிக்கும் தவிப்பு. பின்னர் எழும் கோபம். உத்வேகம்.
இவனை, கண்மணியை, காந்தனை உணர, கதையை வாசியுங்கள்.
கண்மணி... a pure love
.
அந்த இரண்டு கவிதைகள் அருமை. மூன்று கோவில் காட்சிகளும் கண்ணீரை வரவழைத்து விட்டன.
Best wishes
Nitha!
அன்புடன்,
ஆர்த்தி ரவி