• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வரலாறு காணாத அனர்த்தம் !

ரோசி கஜன்

Administrator
Staff member
உலகச் சுற்றுலாப் பயணிகளின் ஏகோபித்த விருப்பாக மாறிவிட்ட அழகிய இலங்கைத் தீவு சந்தித்துள்ள மிகவும் கொடிய சவால் - cyclone Ditwah! இயற்கையின் சீற்றம் இதுவரை 69 உயிர்கள் வரை எடுத்துச் சென்றுள்ளது. முழு நாட்டினதும் வாழ்வாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பல இடங்களில் அடிப்படை வசதிகளற்று மக்கள் திண்டாடுகிறார்கள். வீடு வாசல், வாகனம், பாதைகள், பயிர்கள், தொழில்கள் மற்றும் கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கை என்று, எல்லாமே கோரத் தாண்டவத்தில் அகப்பட்டுச் சின்னா பின்னமாகி விட்டது. காற்றும் மழையும் நின்று வெள்ளமே வடிந்தாலும் வழமைக்குத் திரும்புதலில் உள்ள சவால்கள் எண்ணிலடங்காதவை.

சமாளித்து மீளும் சக்தியையும் அந்த இயற்கையே வழங்கட்டும்!

NP 1.jpgNp2.jpgNP3.jpgNP4.jpgNP5.jpgNP6.jpg
 

Goms

Well-known member
ஆமாம் சகோதரி. இயற்கையின் சீற்றத்தை நம்மால் தாங்க முடியாது மா. சீக்கிரத்தில் அவர்கள் மீண்டு வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏
 

sangi

New member
இலங்கை வாழ் உறவுகள் விரைவிலேயே மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். புயலின் கோரத்தாண்டவம் பார்க்கையில் மிகுந்த மன வேதனை உண்டாகிறது.
 

Goms

Well-known member
இலங்கையின் மழை, வெள்ளம் பற்றிய செய்திகள் அறியும்போது நெஞ்சம் பதறுகிறது. நீங்கள் இலங்கையில் இருக்கீங்களா? நலமாக இருக்கீங்களா? உங்கள் உறவுகள், நிதாமாவின் உறவுகள் இலங்கையில் சுகமாக இருக்கிறார்களா?

நாட்டில் இயல்பு நிலை திரும்பி, அனைவரும் தங்கள் வாழ்க்கையை மீட்டு முன்னேற, இறைவன் அவர்களுக்கு தேவையான மனோதைரியத்தையும், உடல் பலத்தையும், தேவையான உதவிகளையும் செய்து வழி நடத்தட்டும் என்று மனதார பிரார்த்திக்கிறோம்.
 
Top Bottom