ஆமாம்.... தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கூட வடிகட்டி வெளிப்படுத்த வேண்டிய சூழலைக் தான் சுயம் தொலைத்த இடமாக கருதுகிறேன்...
எனக்கும் இது தான் எண்ணம்.. சின்ன சின்ன விசயம் கூட மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வெளியே இருந்து பார்க்கும் நமக்கு இதெல்லாம் பெருசானு தோணும் ஆனால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தான் அடிப்படையான தன் இயல்பு தொலைத்து வாழ்வது சொல்ல முடியாத வலியை உண்டாக்கும்..
திருமணத்திற்கு முன்பே பேசி பழகி புரிதல் இருந்தாலும் கூட theory class kum practicle attend panrathukum உள்ள வித்தியாசத்தை விட இங்க அதிக கஷ்டம்.ஒன்னா ஒரே வீட்டில் வாழும் போது நிறையவே கருத்து வேறுபாடு செயலில் முரண்பாடு ஏற்பட்டு அங்க தான் உண்மையான புரிதல் வரும் இடம்... அந்த இடத்தில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் தன்னியல்பை தொலைத்து கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்னு ஒரு வட்டத்துக்குள்ள வாழுறாங்க...