இன்றைய சமுதாயத்தில் ஒரு இளம்பெண் திருமண வாழ்க்கை நீங்க குறிப்பிடும் இரண்டுமே கலந்துதான் நடைமுறையில் உள்ளது..
இங்கே நமது கையில் உள்ள விரல்கள் எப்படி ஒரே போல இருக்காதோ அப்படி தான் திருமண வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்..
நம்ம இயல்பு மாறாமல் தனித்துவம் காக்கும் சுகமான உறவா அமைஞ்சா அந்த வாழ்க்கை நிச்சயம் மனநிறைவு நிறைந்த சுகமான திருமண வாழ்க்கை தான் ஆனால் பெரும்பாலும் நடக்கிறது என்னன்னா நம்ம இயல்பு தொலைக்கப்படுது அதுவும் நாமே தான் அத்தகைய சூழலில் நம்மை பொருத்திக்கிறோம் இது ஒரு பெண்ணுக்கு வழி வழியாக நமக்கான மூளைச்சலவை போல நம்ம சுற்றத்தார் மூலமா தான் நமக்கு கடத்தப்படுது உதாரணமா சொல்லனும்னா திருமணத்திற்கு பின் ஒரு பெண் இப்படி தான் இருக்கனும்னு ஒரு கட்டமைப்புக்குள் தான் இன்னமும் இருக்கோம் ஒரு ஆண் வேலைக்கு செல்லும் சம்பாத்தியம் ஈட்டக்கூடிய நபராகவும் ஒரு பெண் அப்படின்னா குழந்தைகள் குடும்பம் வீட்டு மேலாண்மை இந்த வரையறை இருக்கும் வரை பெண்ணுக்கான தனித்துவம் அங்க காணாமல் தான போகும்.
இந்த வேலையை ஆண் தான் செய்யனும் இது பெண் தான் பார்க்கனும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும் மக்கள் மத்தியில் எனக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தி நம் தனித்துவம் இங்க பறிபோகுமா இல்லையா சுயத்தை இழக்க நேரிடும் போது சுகமான வாழ்க்கை அந்த இடத்தில்??????அப்போ மனநிறைவு எங்க இருந்து வரும்..
என்ன தான் பெண்கள் கல்வியில் சிறந்து சம்பாத்தியம் ஈட்டக்கூடிய நபராகவும் இருந்தாலும் கூட குடும்பம் குழந்தை இதெல்லாம் வரும் போது அந்த இடத்தில் ஒரு பெண்ணுக்கு தான் பொறுப்பு அழுத்தம் இதெல்லாம் அந்த இடத்தில தான் நிச்சயம் நாம உணரமுடியும் நமக்கான தனித்துவம் காணாமல் போறத... நம்ம குடும்பத்துக்காக தான அப்படின்னு ஒவ்வொரு செயலும் செய்து விட்டுக்கொடுத்து மனநிறைவோட நாம இதெல்லாம் ஏற்று வாழ்ந்தாலும் கூட ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் உணருவோம் என் தனித்துவம் காணாமல் போச்சுன்னு ஏதோ ஒரு சூழலில்...
முக்கால்வாசி பெண்கள் தனித்துவம் தொலைத்து அத ஏற்றுக்கொண்டு வாழ பழகிட்டாங்கனு தான் சொல்லனும் அப்படி அவங்க இல்லாமல் போனால் சமுதாயத்திலோ இல்லை அவங்க குடும்பத்திலோ நல்ல பெயரோட வாழ முடிவதில்லை...
நிச்சயம் தனித்துவம் காணாமல் போகுது ஆனாலும் பெண்கள் குணமே இருப்பதை வச்சு மனநிறைவு கொள்வது தானே அதனால் ஏதோ ஒரு விதத்தில் மனநிறைவோட வாழ்ந்துட்டு தான் இருக்காங்க.
அம்மாடி நீங்க தலைப்பை படிச்சிட்டுதான் வந்திருக்கீங்காளான்னு எனக்கு சந்தேகமா இருக்கு

ஏன்னா, ஒரு ஆண் வேலைக்கு சென்று சம்பாத்தியம் ஈட்டும் நபராகவும், பெண் அப்படின்னா குழந்தைகள், குடும்பம், வீட்டு மேலாண்மை என்கிற வரையறை இருக்கு, அதோட இந்த வேலையை ஆண் தான் செய்யணும், இந்த வேலையை பெண் தான் செய்யணும் அப்படிங்கறதால, சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு, தனித்துவம் பறி போகுதுன்னு சொல்லி இருக்கீங்க.
கதையின் தலைப்பு "
இன்றைய இளம் பெண்களின் பார்வையில்"

மனசாட்சி தொட்டு சொல்லுங்க இன்றைக்கு ஆண் மட்டும் தான் சம்பாதிக்கிறானா?

பெண் குடும்பம், குழந்தைகள்(!), வீட்டு மேலாண்மை (?????) இப்படித்தான் இருக்காங்களா?

நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கீங்க
என்னமா, எந்த லோகத்தில இருந்து பூலோகத்துக்கு இறங்கி வந்திருக்கீங்க

ஒரு வேலையை, இது ஆண் பார்க்கிறதுன்னு விட்டு வச்சிருக்காங்களா இன்றைய பெண்கள்? ஆண்களுக்கு நிகரா அனைத்து வேலையிலும் சாதனை படைச்சிட்டு வர்றாங்க. அவங்களோட தனித்துவமும், சுதந்திரமும் பாதிக்கப்பட்டா, இப்படி சாதனைகள் செய்ய முடியுமா? சாதனை புரிந்தவர்கள் எல்லாம் குடும்பம், குழந்தை இல்லாதவர்களா?

இருவேளை நீங்கள் வீட்டு வேலை செய்வது பற்றி சொல்ல வர்றீங்கன்னா, பாவம் இன்றைய ஆண்கள் தான். சமையலில் கை கொடுப்பதாகட்டும், அம்மா அல்லது மாமியார் வீடு அருகே போய் வரும் தூரத்திலிருந்தால், போய் சாப்பாடு வாங்கி வருவதாகட்டும், சனி ஞாயிறு வீட்டில் சமைப்பதில்லை என்ற கொள்கையுடன் இருக்கும் குடும்பத்தை ஹோட்டலில் வாங்கியோ, ஆர்டர் போட்டோ சமாளிப்பதாகட்டும், வாஷிங் மெசினில் துணி போட்டு எடுப்பதாகட்டும், இன்னும் எத்தனையோ, இதெல்லாம் செய்வதில்லையா, சொல்லுங்கள் பார்ப்போம்
குடும்பம், குழந்தைன்னு வந்துட்டா, பெண்ணுக்குதான் பொறுமை, அழுத்தம் இதெல்லாம்னு சொல்றீங்க. குடும்பம்கிறத்தில நீங்களும் ஒரு அங்கம்ன்னு பாருங்க, (5 விரல்கள்ல நீங்களும் ஒரு விரல்), குழந்தையை சந்தோஷமா வரவேற்கவும், தாய்மைக்கான பரிசாவும் பாருங்க. இதையெல்லாம் சுமையா நினைக்கிறதால் தான், அழுத்தம் கூடுது. அதனாலேயே கருத்தரிப்பு மையம் அதிகமாயிற்று போகுது.
அப்புறம் உணவு விஷயம் பற்றி சொல்லி இருக்கீங்க. தான் திருமணம் செய்யப் போகிறவர், அவர் குடும்பம், சைவமா, அசைவமா என்று தெரியாமல் இன்றைய காலத்தில் எப்படி திருமணம் செய்கிறார்கள்? பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை என்றாலும் இது தெரியாமலா திருமணம் செய்து வைப்பார்கள்? கண்டிப்பாக பெற்றோர் தன் மகளை இப்படி மாற்று சைவ/அசைவ சமயத்தில் கொடுத்து தன் மகள் கஷ்டப்படுவதை விரும்ப மாட்டார்கள். அப்படி ஒருவேளை விரும்பினாலும், அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து, மகள் இதற்கு சரி, சமாளித்து கொள்ளலாம் என்று சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்திருப்பார்கள். இது ரொம்ப rare. அப்போ கூட சமாளிப்பேன் என்று வந்துவிட்டு இதை ஒரு பிரச்சனையாக அந்த பெண் நினைத்தால், அவள் தான் அதற்கு காரணமே தவிர, அந்த திருமணத்தை பாரமாக நினைப்பாளா? ஒருவேளை காதல் திருமணமாக இருந்தால், உண்மையாய் காதலிக்கும் மனதிற்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரியாது.
அம்மா வீட்டில் மட்டுமே அவள் ஆசைப் படுவதை, சாப்பிட முடியும் என்பதெல்லாம் சும்மா ஒரு சாக்கு. அம்மா வீட்டுக்கு வந்து ஹாயாக இருந்து கொண்டு அம்மா சமைப்பதை காலாட்டி கொண்டு சாப்பிடும் இந்த காலத்து பெண்களின் ட்ரிக் இது. இளம் பெண்களின் தாய்மார்களே உஷார்

