• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Debate Hub - Nov & Dec

ஆமாம்.... தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கூட வடிகட்டி வெளிப்படுத்த வேண்டிய சூழலைக் தான் சுயம் தொலைத்த இடமாக கருதுகிறேன்...
அப்படிப் பார்த்தால் எத்தனை ஆண்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை விட்டு குடும்பத்திற்காக, உழைக்கிறார்கள். என்ன சுயம் குடும்பம் என்றாலே அங்கு "நான் " என்பது இல்லை -நாம் "நமது என்பதுதான் குடும்பம்
 
Akalya

New member
ஆமாம்.... தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கூட வடிகட்டி வெளிப்படுத்த வேண்டிய சூழலைக் தான் சுயம் தொலைத்த இடமாக கருதுகிறேன்...
எனக்கும் இது தான் எண்ணம்.. சின்ன சின்ன விசயம் கூட மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வெளியே இருந்து பார்க்கும் நமக்கு இதெல்லாம் பெருசானு தோணும் ஆனால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தான் அடிப்படையான தன் இயல்பு தொலைத்து வாழ்வது சொல்ல முடியாத வலியை உண்டாக்கும்..
திருமணத்திற்கு முன்பே பேசி பழகி புரிதல் இருந்தாலும் கூட theory class kum practicle attend panrathukum உள்ள வித்தியாசத்தை விட இங்க அதிக கஷ்டம்.ஒன்னா ஒரே வீட்டில் வாழும் போது நிறையவே கருத்து வேறுபாடு செயலில் முரண்பாடு ஏற்பட்டு அங்க தான் உண்மையான புரிதல் வரும் இடம்... அந்த இடத்தில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் தன்னியல்பை தொலைத்து கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்னு ஒரு வட்டத்துக்குள்ள வாழுறாங்க...
 
Goms

Well-known member
இன்றைய சமுதாயத்தில் ஒரு இளம்பெண் திருமண வாழ்க்கை நீங்க குறிப்பிடும் இரண்டுமே கலந்துதான் நடைமுறையில் உள்ளது..
இங்கே நமது கையில் உள்ள விரல்கள் எப்படி ஒரே போல இருக்காதோ அப்படி தான் திருமண வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்..
நம்ம இயல்பு மாறாமல் தனித்துவம் காக்கும் சுகமான உறவா அமைஞ்சா அந்த வாழ்க்கை நிச்சயம் மனநிறைவு நிறைந்த சுகமான திருமண வாழ்க்கை தான் ஆனால் பெரும்பாலும் நடக்கிறது என்னன்னா நம்ம இயல்பு தொலைக்கப்படுது அதுவும் நாமே தான் அத்தகைய சூழலில் நம்மை பொருத்திக்கிறோம் இது ஒரு பெண்ணுக்கு வழி வழியாக நமக்கான மூளைச்சலவை போல நம்ம சுற்றத்தார் மூலமா தான் நமக்கு கடத்தப்படுது உதாரணமா சொல்லனும்னா திருமணத்திற்கு பின் ஒரு பெண் இப்படி தான் இருக்கனும்னு ஒரு கட்டமைப்புக்குள் தான் இன்னமும் இருக்கோம் ஒரு ஆண் வேலைக்கு செல்லும் சம்பாத்தியம் ஈட்டக்கூடிய நபராகவும் ஒரு பெண் அப்படின்னா குழந்தைகள் குடும்பம் வீட்டு மேலாண்மை இந்த வரையறை இருக்கும் வரை பெண்ணுக்கான தனித்துவம் அங்க காணாமல் தான போகும்.
இந்த வேலையை ஆண் தான் செய்யனும் இது பெண் தான் பார்க்கனும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும் மக்கள் மத்தியில் எனக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தி நம் தனித்துவம் இங்க பறிபோகுமா இல்லையா சுயத்தை இழக்க நேரிடும் போது சுகமான வாழ்க்கை அந்த இடத்தில்??????அப்போ மனநிறைவு எங்க இருந்து வரும்..
என்ன தான் பெண்கள் கல்வியில் சிறந்து சம்பாத்தியம் ஈட்டக்கூடிய நபராகவும் இருந்தாலும் கூட குடும்பம் குழந்தை இதெல்லாம் வரும் போது அந்த இடத்தில் ஒரு பெண்ணுக்கு தான் பொறுப்பு அழுத்தம் இதெல்லாம் அந்த இடத்தில தான் நிச்சயம் நாம உணரமுடியும் நமக்கான தனித்துவம் காணாமல் போறத... நம்ம குடும்பத்துக்காக தான அப்படின்னு ஒவ்வொரு செயலும் செய்து விட்டுக்கொடுத்து மனநிறைவோட நாம இதெல்லாம் ஏற்று வாழ்ந்தாலும் கூட ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் உணருவோம் என் தனித்துவம் காணாமல் போச்சுன்னு ஏதோ ஒரு சூழலில்...
முக்கால்வாசி பெண்கள் தனித்துவம் தொலைத்து அத ஏற்றுக்கொண்டு வாழ பழகிட்டாங்கனு தான் சொல்லனும் அப்படி அவங்க இல்லாமல் போனால் சமுதாயத்திலோ இல்லை அவங்க குடும்பத்திலோ நல்ல பெயரோட வாழ முடிவதில்லை...
நிச்சயம் தனித்துவம் காணாமல் போகுது ஆனாலும் பெண்கள் குணமே இருப்பதை வச்சு மனநிறைவு கொள்வது தானே அதனால் ஏதோ ஒரு விதத்தில் மனநிறைவோட வாழ்ந்துட்டு தான் இருக்காங்க.
ஹா.. ஹா..ஹா.. 😂😂🤣🤣 நீங்களே சொல்லிட்டீங்க ஒரு கையின் விரல்கள் எல்லாம் எப்படி ஒரே மாதிரி இருக்காதோ, அப்படித்தான் திருமண வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்னு.

எப்படி விரல்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வேலை பார்க்க முடியாதோ அப்படித்தான் திருமணத்தில் இணைந்துவிட்டால் அவளும் அந்த குடும்பத்தோடு சேர்ந்துதானே செயல்பட வேண்டும் 😜 பிறந்த வீட்டில் உள்ளதுபோல புகுந்த வீட்டிலும் உறவுகளை தன் சொந்தமாக நினைக்கும் மனம் வேண்டும்.😀 விரல்கள் மட்டுமல்ல, நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் அதன் செயல்பாட்டில் தனித்துவம் கொண்டிருந்தாலும், ஒரு வேலை என்று இறங்கிவிட்டால், அனைத்து உறுப்புகளும் ஒன்று பட்டு ஒத்துழைத்தால்தான் நம்மால் அந்த வேலையை செய்ய முடியும். கால் நடக்கும்போது கண் பார்க்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா, கண் மூடி நாம் அமைதியாய் சிறிது நேரம் இருந்தாலும் நம் செவி, நானும் எதுவும் கேட்க மாட்டேன் என்றோ, உடல், எந்த உணர்ச்சியும் உணர மாட்டேன் என்றோ இருந்துவிடுமா, எப்போதும் ஒரு விழிப்புணர்வு உடல் உறுப்புகளுக்கு இருக்கும்தானே. நாம் சொல்லலாம் இவை அனைத்திற்கும் காரணம் மூளை என்று. மூளை அறிவின் தேக்கம் என்றால் நாம் தான் நிறைய கற்று நிறைய தெரிந்து வைத்திருக்கிறோமே. ஒருவனுக்கு ஆபத்து என்றாலோ, அடி பட்டு விட்டது என்றாலோ, அனைவரும் சென்று உதவுகிறோமா, இல்லை, சிலர் மட்டுமே. அங்கே ஏன் அறிவு வேலை செய்யவில்லை? ஏனென்றால், அங்கே மனம் நம்மை அடக்கி விடுகிறது. கண்ணுக்கு தெரியாமல், நம்மை கட்டி வைத்து ஆட்டும் அதன் பின் சென்றால் நம்மால் ஒருவரையும் புரிந்து கொள்ள முடியாது. தனித்துவம் என்பது உணர்வு, பழக்கம் இப்படி மனம் சார்ந்ததாக இருந்தால், "மனம் ஒரு குரங்கு" என்பது நூற்றுக்கு நூறு உண்மை தானே. அதை சரியாக கையாள்வதும் நம் கையில்தானே இருக்கிறது. அதற்காக இந்த முழு உடம்பையும் குறை சொல்லுகிறோமா?🤔😂
 
Goms

Well-known member
இன்றைய சமுதாயத்தில் ஒரு இளம்பெண் திருமண வாழ்க்கை நீங்க குறிப்பிடும் இரண்டுமே கலந்துதான் நடைமுறையில் உள்ளது..
இங்கே நமது கையில் உள்ள விரல்கள் எப்படி ஒரே போல இருக்காதோ அப்படி தான் திருமண வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்..
நம்ம இயல்பு மாறாமல் தனித்துவம் காக்கும் சுகமான உறவா அமைஞ்சா அந்த வாழ்க்கை நிச்சயம் மனநிறைவு நிறைந்த சுகமான திருமண வாழ்க்கை தான் ஆனால் பெரும்பாலும் நடக்கிறது என்னன்னா நம்ம இயல்பு தொலைக்கப்படுது அதுவும் நாமே தான் அத்தகைய சூழலில் நம்மை பொருத்திக்கிறோம் இது ஒரு பெண்ணுக்கு வழி வழியாக நமக்கான மூளைச்சலவை போல நம்ம சுற்றத்தார் மூலமா தான் நமக்கு கடத்தப்படுது உதாரணமா சொல்லனும்னா திருமணத்திற்கு பின் ஒரு பெண் இப்படி தான் இருக்கனும்னு ஒரு கட்டமைப்புக்குள் தான் இன்னமும் இருக்கோம் ஒரு ஆண் வேலைக்கு செல்லும் சம்பாத்தியம் ஈட்டக்கூடிய நபராகவும் ஒரு பெண் அப்படின்னா குழந்தைகள் குடும்பம் வீட்டு மேலாண்மை இந்த வரையறை இருக்கும் வரை பெண்ணுக்கான தனித்துவம் அங்க காணாமல் தான போகும்.
இந்த வேலையை ஆண் தான் செய்யனும் இது பெண் தான் பார்க்கனும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும் மக்கள் மத்தியில் எனக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தி நம் தனித்துவம் இங்க பறிபோகுமா இல்லையா சுயத்தை இழக்க நேரிடும் போது சுகமான வாழ்க்கை அந்த இடத்தில்??????அப்போ மனநிறைவு எங்க இருந்து வரும்..
என்ன தான் பெண்கள் கல்வியில் சிறந்து சம்பாத்தியம் ஈட்டக்கூடிய நபராகவும் இருந்தாலும் கூட குடும்பம் குழந்தை இதெல்லாம் வரும் போது அந்த இடத்தில் ஒரு பெண்ணுக்கு தான் பொறுப்பு அழுத்தம் இதெல்லாம் அந்த இடத்தில தான் நிச்சயம் நாம உணரமுடியும் நமக்கான தனித்துவம் காணாமல் போறத... நம்ம குடும்பத்துக்காக தான அப்படின்னு ஒவ்வொரு செயலும் செய்து விட்டுக்கொடுத்து மனநிறைவோட நாம இதெல்லாம் ஏற்று வாழ்ந்தாலும் கூட ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் உணருவோம் என் தனித்துவம் காணாமல் போச்சுன்னு ஏதோ ஒரு சூழலில்...
முக்கால்வாசி பெண்கள் தனித்துவம் தொலைத்து அத ஏற்றுக்கொண்டு வாழ பழகிட்டாங்கனு தான் சொல்லனும் அப்படி அவங்க இல்லாமல் போனால் சமுதாயத்திலோ இல்லை அவங்க குடும்பத்திலோ நல்ல பெயரோட வாழ முடிவதில்லை...
நிச்சயம் தனித்துவம் காணாமல் போகுது ஆனாலும் பெண்கள் குணமே இருப்பதை வச்சு மனநிறைவு கொள்வது தானே அதனால் ஏதோ ஒரு விதத்தில் மனநிறைவோட வாழ்ந்துட்டு தான் இருக்காங்க.
அம்மாடி நீங்க தலைப்பை படிச்சிட்டுதான் வந்திருக்கீங்காளான்னு எனக்கு சந்தேகமா இருக்கு 😜 ஏன்னா, ஒரு ஆண் வேலைக்கு சென்று சம்பாத்தியம் ஈட்டும் நபராகவும், பெண் அப்படின்னா குழந்தைகள், குடும்பம், வீட்டு மேலாண்மை என்கிற வரையறை இருக்கு, அதோட இந்த வேலையை ஆண் தான் செய்யணும், இந்த வேலையை பெண் தான் செய்யணும் அப்படிங்கறதால, சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு, தனித்துவம் பறி போகுதுன்னு சொல்லி இருக்கீங்க.

கதையின் தலைப்பு "இன்றைய இளம் பெண்களின் பார்வையில்" 😜 மனசாட்சி தொட்டு சொல்லுங்க இன்றைக்கு ஆண் மட்டும் தான் சம்பாதிக்கிறானா?🤔 பெண் குடும்பம், குழந்தைகள்(!), வீட்டு மேலாண்மை (?????) இப்படித்தான் இருக்காங்களா?🤔 நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கீங்க 😂

என்னமா, எந்த லோகத்தில இருந்து பூலோகத்துக்கு இறங்கி வந்திருக்கீங்க 😂 ஒரு வேலையை, இது ஆண் பார்க்கிறதுன்னு விட்டு வச்சிருக்காங்களா இன்றைய பெண்கள்? ஆண்களுக்கு நிகரா அனைத்து வேலையிலும் சாதனை படைச்சிட்டு வர்றாங்க. அவங்களோட தனித்துவமும், சுதந்திரமும் பாதிக்கப்பட்டா, இப்படி சாதனைகள் செய்ய முடியுமா? சாதனை புரிந்தவர்கள் எல்லாம் குடும்பம், குழந்தை இல்லாதவர்களா?🤔 இருவேளை நீங்கள் வீட்டு வேலை செய்வது பற்றி சொல்ல வர்றீங்கன்னா, பாவம் இன்றைய ஆண்கள் தான். சமையலில் கை கொடுப்பதாகட்டும், அம்மா அல்லது மாமியார் வீடு அருகே போய் வரும் தூரத்திலிருந்தால், போய் சாப்பாடு வாங்கி வருவதாகட்டும், சனி ஞாயிறு வீட்டில் சமைப்பதில்லை என்ற கொள்கையுடன் இருக்கும் குடும்பத்தை ஹோட்டலில் வாங்கியோ, ஆர்டர் போட்டோ சமாளிப்பதாகட்டும், வாஷிங் மெசினில் துணி போட்டு எடுப்பதாகட்டும், இன்னும் எத்தனையோ, இதெல்லாம் செய்வதில்லையா, சொல்லுங்கள் பார்ப்போம்😂

குடும்பம், குழந்தைன்னு வந்துட்டா, பெண்ணுக்குதான் பொறுமை, அழுத்தம் இதெல்லாம்னு சொல்றீங்க. குடும்பம்கிறத்தில நீங்களும் ஒரு அங்கம்ன்னு பாருங்க, (5 விரல்கள்ல நீங்களும் ஒரு விரல்), குழந்தையை சந்தோஷமா வரவேற்கவும், தாய்மைக்கான பரிசாவும் பாருங்க. இதையெல்லாம் சுமையா நினைக்கிறதால் தான், அழுத்தம் கூடுது. அதனாலேயே கருத்தரிப்பு மையம் அதிகமாயிற்று போகுது.

அப்புறம் உணவு விஷயம் பற்றி சொல்லி இருக்கீங்க. தான் திருமணம் செய்யப் போகிறவர், அவர் குடும்பம், சைவமா, அசைவமா என்று தெரியாமல் இன்றைய காலத்தில் எப்படி திருமணம் செய்கிறார்கள்? பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை என்றாலும் இது தெரியாமலா திருமணம் செய்து வைப்பார்கள்? கண்டிப்பாக பெற்றோர் தன் மகளை இப்படி மாற்று சைவ/அசைவ சமயத்தில் கொடுத்து தன் மகள் கஷ்டப்படுவதை விரும்ப மாட்டார்கள். அப்படி ஒருவேளை விரும்பினாலும், அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து, மகள் இதற்கு சரி, சமாளித்து கொள்ளலாம் என்று சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்திருப்பார்கள். இது ரொம்ப rare. அப்போ கூட சமாளிப்பேன் என்று வந்துவிட்டு இதை ஒரு பிரச்சனையாக அந்த பெண் நினைத்தால், அவள் தான் அதற்கு காரணமே தவிர, அந்த திருமணத்தை பாரமாக நினைப்பாளா? ஒருவேளை காதல் திருமணமாக இருந்தால், உண்மையாய் காதலிக்கும் மனதிற்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரியாது.

அம்மா வீட்டில் மட்டுமே அவள் ஆசைப் படுவதை, சாப்பிட முடியும் என்பதெல்லாம் சும்மா ஒரு சாக்கு. அம்மா வீட்டுக்கு வந்து ஹாயாக இருந்து கொண்டு அம்மா சமைப்பதை காலாட்டி கொண்டு சாப்பிடும் இந்த காலத்து பெண்களின் ட்ரிக் இது. இளம் பெண்களின் தாய்மார்களே உஷார் 😜😂
 
Goms

Well-known member
எனக்கும் இது தான் எண்ணம்.. சின்ன சின்ன விசயம் கூட மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வெளியே இருந்து பார்க்கும் நமக்கு இதெல்லாம் பெருசானு தோணும் ஆனால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தான் அடிப்படையான தன் இயல்பு தொலைத்து வாழ்வது சொல்ல முடியாத வலியை உண்டாக்கும்..
திருமணத்திற்கு முன்பே பேசி பழகி புரிதல் இருந்தாலும் கூட theory class kum practicle attend panrathukum உள்ள வித்தியாசத்தை விட இங்க அதிக கஷ்டம்.ஒன்னா ஒரே வீட்டில் வாழும் போது நிறையவே கருத்து வேறுபாடு செயலில் முரண்பாடு ஏற்பட்டு அங்க தான் உண்மையான புரிதல் வரும் இடம்... அந்த இடத்தில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் தன்னியல்பை தொலைத்து கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்னு ஒரு வட்டத்துக்குள்ள வாழுறாங்க...
தியரி கிளாஸ்ஸுக்கும், பிராக்டிகல் கிளாஸ்ஸுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை தியரியை விட பிராக்டிகல் எளிது என்பதும். அதாவது நீங்க பிராக்டிகலில் இறங்கி செய்யும்போது நன்றாக தியரியையும் புரிந்து கொள்றீங்க, மார்க்கும் அதிகமா வாங்குறீங்க. தியரியில் ஃபெயில் ஆக வாய்ப்பு அதிகம். ஆனால் பிராக்டிகலில் ஃபெயில் ஆவது ரொம்ப ரொம்ப கம்மி. அப்படியே வாழ்க்கையிலும் பிராக்டிகலா கஷ்டப்பட்டாலும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளை எல்லாம் ஈசியா களைய முடியும். அதை புரிந்து கொள்ளும் பொறுமை வேண்டும். எப்படி பிராக்டிகலில் ஏற்படுகிற தவறுகள் / குறைகள் (errors) ஒவ்வொன்றையும் திருத்தினால் மட்டுமே சரியான விடை கிடைக்குமோ, அதேபோல் தங்களுக்குள் ஏற்படுகிற வேறுபாடுகள், குறைகளை திருத்திக் கொள்ளும் மனம் இருந்தால் அழகான வாழ்க்கை வாழலாம்.
இங்கேயும் நீங்கள் சொல்வது போல் பெண் மட்டுமே தவறுகளை திருத்த வேண்டுமா, பொறுமை சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்டால், கண்டிப்பாக நாங்களும் அப்படி சொல்லவில்லை. இயற்கையிலேயே மனித இனத்திற்கு மட்டுமல்ல மற்ற எல்லா விலங்குகளுக்கும் கூட தாய்மை அப்படிங்கிறதை பெண் உயிரினங்களுக்கு கடவுள் கொடுத்து இருக்கிறார் என்றால் அவரே பெண் பொறுமையானவள், அதிக சகிப்புத்தன்மை கொண்டவள், தைரியம் மிகுந்தவள் என்பதால் தானோ. நீங்கள் சொல்வதுபோல் அதிகம் பெண்களே விட்டுக் கொடுக்கிறார்கள் என்றாலும், "விட்டுக் கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப்போவதில்லை" என்பதும் உண்மை தானே. அதனால் நாங்க சொல்ல விரும்புவது, எப்படி திருமணம் ஆகி குழந்தை வந்தால் வயிற்றுப்பிள்ளையை தாய் சுமையாக நினையாமல் சுகமான வரவாக நினைப்பாளோ அப்படித்தான் திருமணத்தையும் எதிர் கொள்கிறாள், எதிர் கொண்டு மன நிறைவடைகிறாள் 😂
 
Top Bottom