• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 16

Romba kanamana padhivu...ilavanji vidatha ana sakthi velaiyum pedi bala kumaranaiyum...evanaiyum vidathanu than sola thonuthu...first anda perichali enna un company lerndu enana vishangal business secrets therinji vachirko Theriyala...parambarai buthi apadiye varuthu pathiya .bala kumaran madri mithun, sakthi madri nilan,kuruki vazhila un businessku aapu vaikarthu...ini ellaraiyum oru kai pakala...avalothan..
 

aashabanu

Member
ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் சூப்பர் எபிசோடு எதிர்பார்த்ததுதான் ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கல 👌👌👌👌
பாலகுமாரன் ஒரு மனுசனா என்ன வார்த்தை எல்லாம் வஞ்சி அம்மா பார்த்து கேட்டாரு இப்ப என்ன பார்வை வஞ்சி மீது கண்ணு ரெண்டையும் தோண்டி புடுவேன் 🤬🤬🤬
அப்புறம் சக்திவேல் ஐயா இனி என்ன ஐயா மரியாதையே கிடையாது😡😡 அவருக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிச்சிட்டு இவரு அதிகாரம் பண்ணுவாராம் என்ன சொன்னீங்க அவளுக்கு உரிமை இல்லையா சொத்து உரிமையானவங்களுக்கு போகணுமா இப்ப ரெண்டு பக்கம் சொத்துமே அவளுக்குத்தான் ஏகபோக உரிமை இப்ப என்ன பண்ணுவீங்க 😏😏😏
குணாளன் நல்ல மகன், அண்ணன் ,சிறந்த தகப்பன் எல்லாம் விட சிறந்த மனிதன் அதில் மாற்றுக் கருத்து இல்லை
எனக்கு குணாளன் மீது கொஞ்சம் வருத்தம் தான் இதை தையல்நாயகியை வஞ்சி கொடுக்கும் போதே சொல்லி இருக்கலாம்😔😔 இனிதான் இருக்கு வஞ்சியோட ஆட்டம் 😎😎
கடைசியா நிலன் உனக்கு கடைசி எபிசோட் வரை ஒரு பிட் அளவுக்கு கூட 18 பிளஸ் வரதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா😝😝😝😝
 

Goms

Active member
ரொம்ப கனமான மனதை உருக்கும் FB. பாலகுமாரன் ஒரு முதுகெலும்பு இல்லாத மனிதர் என்று எதிர்பார்க்கவில்லை. துரோகம் செய்திருப்பது தெரிந்தது. ஆனால் இந்த அளவுக்கு தொடை நடுங்கியாக, இரக்கம் இல்லாதவராக, சக்திவேலுக்கு அடிமையாக இருப்பார் என்று நினைக்கவில்லை.

சக்திவேல் நீ ஒரு மனிதனே இல்லை என்று தெரிந்து கொண்டோம். சுயநலப் பிசாசு, பேராசை கொண்ட மிருகம், அநியாயத்தின் மொத்த உருவம் ..... நினைக்கவே நெஞ்சு கொதிக்குது எங்களுக்கே. அப்போ இளவஞ்சியின் நிலை? வஞ்சத்தினால் வந்த மகள் என்பதால்தான் உனக்கு பெயர் இளவஞ்சி என்று அப்பம்மா வைத்தாரோ?

உன்னால் முடியும் இளா. இவர்களை உன்னால் வஞ்சம் தீர்க்க முடியும். உன் ஆட்டத்தைக் காண காத்திருக்கோம்.

நிலன் என்ன செய்வான்?🤔 அவனுக்கும் முழு விவரம் தெரிந்தால் சக்திவேலை விட்டு வந்து தையல் நாயகிக்கு support செய்வானா? மனைவிக்கு கை கொடுப்பானா?

சோகமான எபிசோட் படித்து நாங்களும் சோகம்தான்.😔
 

Ananthi.C

Active member
பூமியை பெண் பாலினமாக நாம் பாவிப்பது சரிதானா என்று நெடுநாட்களாக எனக்கு சந்தேகம்....
சக்தி வேலர்... பாலகுமாரன் போன்றோரும் அதனினும் மோசமான மனிதர்களையும் தன்னுள் விழுங்காமல் எப்படி தாங்க முடிகிறது.....
எந்த யுகமாக இருந்தாலும் எத்தனை காலம் ஆனாலும் ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்குரியதாக மட்டுமே பார்க்கப்படுகிறது.... மிகவும் சுலபமாக பெண்ணின் மீது சேற்றை வாரி தூற்றி விட்டு போகிறார்கள்.....
நிலன் இதைப்பற்றி ஓரளவு அறிந்ததால் தான் வஞ்சியை திருமணத்திற்கு கட்டாய படுத்தினான... பிறகு உண்மை தெரிந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டாள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டானா??
மிதுனும் பாலகுமாரன் வழியில் சென்றாலும் கடைசியில் கொஞ்சம் மனசாட்சி உள்ளவனாக நடந்தது மட்டும் சிறு ஆறுதல்....
இந்த உண்மை தெரிந்த குணாளனால் எப்படி வஞ்சியை அந்த வீட்டிற்கு மருமகளாக அனுப்ப முடிந்தது ....
பாலகுமாரன் அன்று உயிருடன் வாசவியை கொன்று விட்டு இன்று எதற்கு இந்த பரிவு பாசப் பார்வை வஞ்சியின் மேல்....வஞ்சியின் மேல் உரிமையும் பாசமும் காட்டுவதற்கான தகுதி அணு அளவு கூட கிடையாது....
வஞ்சியின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்....

எர்த்தின் நிலமை இனிமேல் கவலைக்கிடம் தான்... உன் டப்பா டான்ஸ் ஆட போகிறது மகனே 🤣🤣....

உங்கள் சோகம் தீர வழியுண்டு இன்று இன்னொரு யூடி கொடுத்து.... சிறப்பான வீக்கெண்டாக மாற்றலாம்....
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... தையல்நாயகி அம்மா வஞ்சிக்கு தையல்நாயகியை மட்டுமல்ல தைரியத்தையும் நிமிர்வையும் சேர்த்தே விட்டுச் சென்றிருக்கிறார். இனி சக்திவேலர் இன்னொரு தையல்நாயகியை எதிரியாக எதிர்கொள்ள வேண்டும். சக்திவேலரையும் பாலகுமாரனையும் நினைத்து நிலன் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். இனியும் அவர்களுக்காக பேசுவானா என்ன?.
 

indu4

Member
இந்தளவில் கேவலமான ஒருவனோடு வாழப்போகும் வாழ்க்கை என்றுமே தன் மகளுக்குச் சுகிக்காது என்று புரிந்து போயிற்று. கூடவே, இப்படியான உறவுகளுக்கு மத்தியில் என்ன வாழ்க்கையை அவள் வாழ்ந்துவிடுவாள் என்றும் தோன்றிவிட மண்ணள்ளித் திட்டிவிட்டு வந்துவிட்டார்.

ஆனால், மனத்தில் மட்டும் அவர்கள் முன்னாலேயே என் மகளை வாழவைத்துக் காட்டுகிறேன் என்று ஒரு ஓர்மம். முதலில் குழந்தை பிறக்கட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

பாலகுமாரன் குழந்தையைக் குறித்து அப்படிச் சொன்னதைக் கேட்ட வாசவியும் மொத்தமாக நொருங்கிப்போனார். சட்டப்படி போவோமா என்று கேட்ட அன்னையிடம் இன்னும் அவமானப்பட்டுச் சந்தி சிரிக்கத் தெம்பில்லை என்றுவிட்டார்.

தையல்நாயகி தன் வாழ் நாளில் இடிந்து அமர்ந்தது அந்த நாள்களில்தான். அவர்கள் சொன்ன வார்த்தைகளினால் நெஞ்சில் தீப்பற்றி எரிந்தாலும் சதா கண்ணீரிலேயே கரையும் மகளையும் கவனித்துக்கொண்டு, தொழிலையும் கவனித்துக்கொண்டு, இன்னுமின்னும் எகத்தாளத்தோடும் எக்களிப்போடும் போட்டி போட்ட சக்திவேலரையும் சமாளித்துக்கொண்டும் என்று அத்தனையையும் தனியொருத்தியாகவே தாங்கிக்கொண்டார்.

இத்தனைக்கு மத்தியிலும் புத்திசாலித்தனமாக யோசித்து, ஊருக்குள் செய்தி கசிய முதல், வாசவியின் கழுத்தில் தாலிச்செயின் போல் ஒன்றைப் போட்டு, திருகோணமலையில் இருக்கும் தங்கை வீட்டில் கொண்டுபோய் வாசவியை விட்டுவிட்டு வந்திருந்தார். கேட்கிறவர்களிடம் எல்லாம் கணவன் தொழிலுக்காகச் சிங்கப்பூர் சென்றிருக்கிறான் என்று சொல் என்றும் சொல்லிக்கொடுத்திருந்தார்.

குழந்தை பிறக்கட்டும், அதன் பிறகு அவள் வாழ்க்கைக்கு ஏதாவது செய்யலாம் என்று தனக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்.

ஆனால் சக்திவேலர் மீதிருக்கும் கோபம் அத்தனையையும் தொழிலில் வெறியோடு காட்டினார். அவரால் சக்திவேலருக்குத் திருப்பி அடிக்க முடிந்த ஒரே இடம் அதுவாகத்தான் இருந்தது.

சக்திவேலரும் அதன் பிறகு தாமதிக்கவில்லை. அவசரம் அவசரமாக ஜானகிக்கும் பாலகுமாரனுக்கும் திருமணம் முடித்துவைத்தார்.

அதையறிந்த வாசவி மொத்தமாய் உடைந்துபோனார். தன்னைக் காதலுடன் நோக்கி, அள்ளியணைத்த மனிதரால் இன்னொரு பெண்ணை நெருங்க முடிகிறதா என்ன என்று எண்ணியெண்ணி அழுதார்.

இளவஞ்சி பிறந்தாள். அச்சு அசல் தையல்நாயகியைப் போலவே இருந்தாள். ஆனால், இடுப்புக்குக் கீழே பின் பக்கத்தில் இருந்த பெரிய கரிய மச்சம், அவள் யார் பிள்ளை என்று அடித்துச் சொல்லிற்று.

அதைப் பார்க்கும் பொழுதுகளில் எல்லாம் அழுதே தீர்த்தார் வாசவி. ஒரு மாதம் கடந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல் மகளையும் தூக்கிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்.

இவள் உன் மகள்தான். நீ சொன்னதுபோல் நான் ஒழுக்கம் தவறியவள் இல்லை என்று நிரூபித்துவிடும் வேகம். அவரின் கெட்ட காலமா, இல்லை பாலகுமாரனுக்கு அந்தக் கடவுள் இன்னுமே துணைபோக நினைத்தாரா தெரியாது, அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த பாலகுமாரன் வீதியில் வைத்தே வாசவியைக் கண்டுவிட்டார்.

மனிதர் நடுங்கியே போனார். சக்திவேலரைப் போல் பத்து மடங்கு ஆணவமும் அகங்காரமும் கொண்ட பெண்ணாக இருந்தார் ஜானகி. அவருக்கு இது தெரியவந்தால் தன் வாழ்க்கை மொத்தமாக நரகமாகிவிடும் என்கிற பயத்தில் தன் மனிதத் தன்மை மொத்தத்தையும் இழந்துவிட்ட பாலகுமாரன், தன்னைத் தேடி வந்த வாசவியைத் தகாத வார்த்தைகளால் விளாசினார்.

அதுவும் மகளின் பின் பக்கத்தில் இருந்த மச்சத்தை வாசவி காட்டியபோது, அவர் கழுத்தைப் பற்றி நெரித்த பாலகுமாரன், “இந்தப் பிள்ளை வேணுமெண்டா எனக்குப் பிறந்ததா இருக்கலாம். ஆனா நீ என்னோட மட்டும்தான் அப்பிடியெல்லாம் இருந்தாய் எண்டுறதுக்கு என்னடி சாட்சி?” என்று கேட்டுவிட, சுவாசிக்க கூட முடியாமல் அப்படியே நின்றுவிட்டார் வாசவி.

மார்பு துடித்தது. ஆங்காரம் எழுந்தது. கண்மண் தெரியாத ஆத்திரம் கிளம்பிற்று. அழுகை வெடித்தது. அத்தனை உணர்வுகளையும் காட்ட முடியாத பேதையாகச் சிலையாகிப்போனார்.

'என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நீங்கள் சொன்னதையும் கேளாமல் நியாயம் கேட்டுப்போய் தோற்றுவிட்டேன்.


எனக்கான நியாயம் கிடைக்காமல் போனதைக் கூட என் தவறுக்கான தண்டனையாக எண்ணிப் பொறுத்துக்கொள்ள முடிந்த என்னால் என் பிள்ளைக்கான நியாயம் கிடைக்காமல் போவதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

ஆனால், அவளுக்கான நியாயத்தை இன்னும் எப்படி வாங்கிக்கொடுக்க என்று தெரியவில்லை. போராட ஆரம்பித்தால் என் மானம்தான் இன்னுமே சந்தி சிரிக்கும். அதனால் எனக்கு வாழ விருப்பமில்லை. காதலைக் கொட்டிய கண்கள் என்னை வெறுப்புடனும், என்னை அள்ளியணைத்த கைகள் என் கழுத்தைப் பற்றியதையும் கடந்து வாழும் தைரியம் எனக்கில்லை.

இவ்வளவு காலமும் நான் உங்களுக்குப் பாரமாக இருந்தேன். இனி என் மகளுமா? நல்ல மனிதனுக்கு மகளாகப் பிறக்காத பாவத்தை அவளும் அனுபவிக்கட்டும். அநாதை இல்லத்தின் வாசலில் அவளைப் போட்டுவிட்டேன்'
என்று கடிதம் எழுதி போஸ்ட்டில் அனுப்பிவிட்டு, சொன்னதுபோல் இளவஞ்சியை ஒரு அநாதை இல்லத்தின் வாசலில் போட்டுவிட்டு நடந்து வந்தவர் எதிரில் வந்த பஸ்ஸில் மோதுண்டு, தன் இறப்பைத் தானே தேடிக்கொண்டிருந்தார்.

என் மகளை இரத்த வெள்ளத்தில் உயிரற்றுப் பார்த்தது போதாது என்று என் வீட்டின் ராணியை அநாதை இல்லத்தில் கண்டெடுத்தேன்.

வாழ்க்கையில் என்றும் நான் உடைந்ததில்லை கண்ணம்மா! எனக்குச் சவால்கள் பிடிக்கும். தடைகளைத் தாண்டுகிற ஒவ்வொரு பொழுதுகளிலும் பெருமையாக உணர்வேன். அப்படித்தான் உன்னையும் வளர்த்திருக்கிறேன்.

என்றைக்கும் நீ உடையக் கூடாது. துணிந்து நில். எதிர்த்து நில். இந்தத் தையல்நாயகியும் அந்தத் தையல்நாயகியும் என்றைக்கும் உனக்காகத்தான் இருக்கிறோம்.

இப்படிக்கு என் கண்ணம்மாளின் அப்பம்மா என்று எழுதி மிக அழகாகக் கையொப்பமிட்டிருந்தார்.

அதில் கூட அவர் அம்மம்மா என்று தன்னைக் குறிப்பிடவேயில்லை.

அதற்குமேல் முடியாமல் நெஞ்சு வெடித்துவிடுமோ என்கிற பயத்தில் படார் என்று கையிலிருந்த கொப்பியை மூடிவிட்டாள் இளவஞ்சி.

கன்னத்தில் கண்ணீர் வழிய நெஞ்சினில் அவளுக்கு இரத்தம் வடிந்தது.

ஆத்திரத்தில் நெஞ்சு கொதித்தது. ஆவேசத்தில் உடம்பெல்லாம் படபடத்தது. சக்திவேல், பாலகுமாரன் இருவர் கழுத்தையும் நெரித்துக் கொள்ளும் ஆத்திரம் எழுந்தது.

அவள் குடும்பத்துக்கு இத்தனையையும் செய்துவிட்டு, ஒரு உயிர் போவதற்கே காரணமாக இருந்துவிட்டு, இன்னுமே அவள் முன்னால் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் நிமிர்ந்து நிற்க எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

அதைவிட அவள் அன்னையின் உயிரைப் பறித்தவர்களின் வீட்டுக்கே வாழப்போயிருக்கிறாள் அவள். வழிந்த கண்ணீரை ஆத்திரத்தோடு சுண்டி எறிந்தாள்!

இரத்தத்தில் உறைந்து கிடந்த உயிரற்ற மகளின் உடலைத் தூக்கும் நிலை ஒரு தாய்க்கு வந்தால் அவர் என்ன பாடு பட்டிருப்பார்? ஒரு பெண் உயிரைத் துறக்கிற அளவுக்குத் துணிந்திருந்தால் அவர் எந்தளவில் நொந்துபோயிருப்பார்?

அதனால்தான் அவளின் அப்பம்மா சக்திவேலர் குடும்பத்தின் மீது அத்தனை வெறுப்பைச் சுமந்திருந்தாரா? அவள் மனத்திலும் தீராப் பகையையும் வெறுப்பையும் வளர்த்தாரா? இதனால்தான் உன் விரலை வைத்தே உன் கண்ணைக் குத்துகிறேன் என்று அவளைத் தையல்நாயகிக்குத் தலைவியாக்கினாரா?

இதெல்லாம் தெரியாமல் அந்த நயவஞ்சகக் கூட்டத்திடம் தையல்நாயகியைக் கொடுத்துவிட்டு நிற்கிறாள் அவள்.
அவளின் அப்பம்மாவின் ஆத்மா எத்தனை கொந்தளித்திருக்கும்? கடவுளே!

இல்லை! இனி விடமாட்டாள்! அவளுடையது இல்லை என்கிற வரையில்தான் அவர்களின் ஆட்டம். இனி அவளும் ஆடுவாள். முடிந்தால் சமாளித்துப் பார்க்கட்டும்!

மனம் வீறுகொள்ள ஆனந்திக்கு அழைத்துப் படபடவென்று உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளின் நெஞ்சினில் பெரு நெருப்பொன்று கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

தொடரும்…


சொறி மக்களே, நேற்று அடுத்த எபி போடாததுக்கு. ஆனா சும்மா இருக்க இல்லை. நேற்று ஒரு கதை மைண்ட்ல வந்தது. புல்லா தொடக்கம் முதல் முடிவு வரை சும்மா அருவி கொட்டின மாதிரி கொட்டினது தெரியுமா. அப்பிடியே கபக்கெண்டு பிடிச்சு லபக்கெண்டு நோட் பண்ணி வச்சிட்டேன்.

ஹாப்பி வீக்கெண்ட். எங்க அதான் முடிஞ்சு போச்சே. சோகத்துடன் ரைட்டர்.
பெண் புலி கிளம்பியது.....👏👌👍❤💃
 
சூப்பர் waiting for வஞ்சி, Action. பிறகு அந்த அருவி மாதிரி கொட்டிய கதையிலிருந்து சாரலை தூவ மறவாதீங்கோ! அக்கா!!!
 

Goms

Active member
மக்களே, இன்னும் என்ன சக்திவேலர்...
எல்லோரும் சக்திவேல் என்று சொல்லுங்க. என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?😡

நிலன் இனி இளா கிட்ட மரியாதை குடுக்க சொல்லுவானா? சொல்லட்டும், அப்புறம் இருக்கு அவனுக்கு, நல்லா செமத்தியா வாங்குவான்.... உடம்ப சுத்தி தீபாவளி 1000 வாலா கொளுத்திருவோம்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom