• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 17

Goms

Active member
வஞ்சியின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க நிதாமா. உண்மையை தெரிந்து கொண்டதும், குணாளன், ஜெயந்தியிடம் நடந்து கொண்ட விதம், அவர்களை தேற்றிய விதம், அவள் ராஜாங்கத்தை மீண்டும் கை கொள்ள போகும் சந்தோஷம், கடைசியில் நிலனை கட்டிக் கொண்ட விதம்..... அருமை.

உங்கள் எழுத்துகள் தனித்துவமானவை நிதாமா. நீங்கள் குறிப்பிட்டுள்ள dialogues வருகிற கதையை நான் படித்திருக்கிறேன். உங்கள் எழுத்துகளின் உண்மையும், நேர்மையும், உழைப்பும் உங்களைப் போலவே உங்கள் ஒவ்வொரு கதாநாயகியிடமும் நாங்கள் உணர்கிறோம். உங்கள் உண்மையான வாசகர்கள் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். Stay Cool and Be Happy 😊
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அருமையான கதை நகர்வு எப்பொழுதும் போல். உங்களுடைய வாசகர்களுக்கு உங்களை நன்றாக தெரியும், புரியும். யாருக்கும் நீங்கள் விளக்கம் அளிக்க தேவையில்லை.
 

Gowri

Active member
Ilavanji Thaiyalnayagi is back💥💥💥
அருமையான அத்தியாயம் நிதாக்கா..
குணாளன்- ஜெயந்தி கிரேட்.. இத்தனை வருடங்கள் ஒரு சின்ன செயல், அசைவு, சொல், ஏன் எண்ணத்தில் கூட வஞ்சி தங்களுக்கு பிறந்த மகள் அல்ல என்று வெளிப்படுத்தாமல் இருப்பது வேற லெவல்.
நிலனும் சூப்பர். உணரச்சிவசப்பட்டு இருந்தாலும் வஞ்சியின் முன் ஹீரோ சீன் போடாமல், அவளுக்கு தோள் சாயும் தோழனாகவும், அவளின் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் அன்பான கணவனாகவும் 100/100 தான்.
வஞ்சி முதலில் நிலனின் முன் உடையாமல் இருந்ததும், பின் அவன் முன்பே உணர்ச்சி பிளம்பாய் ஆகி அழுததும் நிலனை மனதால் தன்னவனாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள் என்பது தெளிவாகிறது எங்களுக்கு. அவளுக்கு விரைவில் தெரிந்தால் நல்லது..
அத்தியாயம் விறுவிறுப்பாக சென்றதால், சீக்கிரம் முடிந்தது மாதிரி இருக்கு அக்கா.. சீக்கிரம் அடுத்த அத்தியாயம் போடுங்க..

நிதாக்கா.. உங்கள் எழுத்து நடை, உங்களுடைய உணர்வு, உணர்ச்சிகளின் விவரிப்பு தனித்தவமான ஒன்று. எங்கே எப்போது படித்தாலும் உங்களின் வாசக ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால் வருத்தப்படாமல் தைரியமாக இருங்கள். உங்கள் மீதும், உங்கள் எழுத்து மீதும் எங்களுக்கு என்றும் நம்பிக்கை உள்ளது.
 

Gowri

Active member
ஆனா ஒரு சின்ன, இல்லல்ல பெரிய சந்தேகம் நிதாக்கா.. கல்யாணத்திற்கு முன் வஞ்சிக்கு தெரியக்கூடாதுனு நிலன் நினைத்த உண்மை இது இல்லனா வேறு என்ன?!
 
வஞ்சி நிலன் அழகு. கவலையை விடுங்கள் வாய் இருக்கு எழுத்து இருக்கு கண்டபடி பேசிட்டு எழுதிட்டு போவாங்க விடுங்க அவங்களை.
 
Ilavanji version 2.. Mithun and nilan relationship change.. nitha ma.. ur such a wonderful person.. தவறுவது தவறை திருத்துவதும் தான் வாழ்க்கை.
குணாளன்.. a gem.. more than him.. ஜெயந்தி is the wonderful woman..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom