• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 6

viji jayaraman

New member
Hai akka... Naan endha twist yosichen ka... Neenga starting epi la thaiyalnayagi paatiya ammama nu start panuneenga... Apram balakumar evavala ( vanjiya) pathukite erunthar la may be nilan ku edha pathi echo theriyumo nu yosichen... Waiting for next epi ka...
 

kavitha_

New member
“ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விடாத. நாங்களும் உன்ர நிலமைலதான் இருக்கிறம். இதுக்கும் தொழிலுக்கும் எந்தச் சம்மந்தமில்ல.” என்று அவன் சொன்னதை அவள் நம்பவே தயாராயில்லை.

தொழிலைத் தாண்டி அவர்களுக்குள் வேறு எந்தவித விரோதமுமே இல்லை.

“அம்மாச்சி இளவஞ்சி. தம்பி சொல்லுறது உண்மைதானம்மா. தொழிலுக்கும் இண்டைக்கு நடந்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இன்னுமே சொல்லப்போனா எங்கட மகனா இப்பிடியெல்லாம் நடந்தான் எண்டு நம்பேலாமா இருக்கு. ஒரு பொம்பிளைப் பிள்ளைய இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டுட்டானே எண்டுதான் பதறியடிச்சு ஓடி வந்திருக்கிறம். நடந்ததை ஆராலயும் மாத்தேலாது. அதால இனி என்ன செய்றது எண்டு பாப்பமே.” அவ்வளவு நேரமாக அவளை நெருங்கவே பயந்துகொண்டிருந்த சந்திரமதி, கணவரின் கண்ணசைவில் மெல்ல அவளிடம் வந்து இதமாகப் பேசினார்.

உண்மையில் அவரின் அந்த இதமான குரலுக்கு அவளிடம் பலனிருந்தது.

அதில், “இன்னுமே எனக்கு நீங்க சொல்லுறதுல நம்பிக்கை இல்ல அன்ட்ரி. அப்பிடியே நீங்க சொல்லுறது உண்மையாவே இருந்தாலும் உங்கட சின்ன மகனுக்கு என்ர தங்கச்சியத் தர எனக்கு விருப்பம் இல்ல. பழக்கவழக்கம் சரியில்லாத, ஷோர்ட் பிலிம் எடுக்கிறன் எண்டுற பெயர்ல ஆம்பிளை பொம்பிளை வித்தியாசமில்லாம கூத்தடிச்சுக்கொண்டு திரியிறது எல்லாம் எங்களுக்குச் சரி வராது.” என்று தணிந்த குரலில் என்றாலும் நேராகவே சொன்னாள்.

குணாளனுக்கும் அவள் சொன்னதில் உடன்பாடு என்பதில் அவரும் மகளுக்கு மாறாகப் பேச வரவில்லை.

சந்திரமத்திக்குச் சுவாதியின் நிலையை எப்படி உடைத்துப் பேசுவது என்று தடுமாற்றமாயிருந்தது. இப்போதே கொதிநிலையில் உச்சியில் இருக்கிறவன் அதையும் அறிந்தால்?

பிரபாகரனுக்கு அது மனைவி பேசினால்தான் சரியாக இருக்கும் என்று தோன்றியதில் அவராலும் பேச முடியவில்லை.

“அம்மாச்சி…” என்று மீண்டும் ஆரம்பித்தவரைத் தடுத்து, “அன்ட்ரி ப்ளீஸ். உங்கட வீட்டில உங்களில மட்டும்தான் எனக்குக் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கு. தயவு செய்து இதுக்கு மேல இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம். முதல் நீங்க போய் உங்கட சின்ன மகனின்ர இன்ஸ்டாவ ஒருக்கா செக் பண்ணுங்க. அவனுக்கு இதுக்கு முதலே பல காதலிகள். இனியும் எத்தின வரும் எண்டு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதில ஒருத்தியா இருந்து என்ர தங்கச்சிய கண்ணீர் வடிக்க விட என்னால ஏலாது.” என்று உறுதியாக மறுத்தாள்.

“அதெல்லாம் தெரிஞ்சுதான் உங்கட தங்கச்சி என்னை விரும்பினவா.” தாயும் தகப்பனும் தன்னால் இன்னுமின்னும் தலைகுனிகிறார்களே என்கிற குற்றவுணர்ச்சியில் இடையிட்டுச் சொன்னான் மிதுன்.

சுவாதியை பார்வையாலேயே எரித்துவிட்டு, “அதாலதான் பளார் எண்டு அவளுக்கு ஒண்டு போட்டனான். கண்ணிருந்தும் குருடா இருந்திருக்கிறாளே!” என்று சீறினாள் இளவஞ்சி.

“அக்கா ப்ளீஸ். நான் செய்தது எல்லாம் பிழைதான். அதனாலதான் கலியாணத்தையும் உங்களுக்குத் தெரியாம செய்ய வேண்டாம் எண்டு நினைச்சனான். ஆனா ஆனா… எனக்கு அவரோடதான் கலியாணம் நடக்கோணும்.” என்று சொன்னவளை திரும்பவும் ஒருமுறை வெளுக்கலாம் போலிருந்தது இளவஞ்சிக்கு.

ஆனாலும் தன்னை அடக்கி, “அதெல்லாம் கொஞ்ச காலம் போக எல்லாம் மாறும். நான் மாத்துவன். நீ வாய மூடிக்கொண்டு பேசாம இரு!” என்று அவளையும் அடக்கினாள்.

இதற்குமேல் யாருக்கு அவளோடு என்ன பேசுவது என்று தெரியவில்லை. எல்லோரும் குணாளனைப் பார்க்க, “குறையா நினைக்காதீங்கோ. உங்கட மூத்த மகனுக்கு எங்கட மூத்தவாவ நீங்க கேட்ட நேரம் நானுமே ஓம் எண்டு சொல்ல சொல்லி மக்களோட கதைச்சனான். அது வேற. அவர் பொறுப்பும் ஒழுக்கமுமான பிள்ளை. ஆனா உங்கட சின்னவர்… எங்களுக்குச் சரி வராது. விட்டுடுங்கோ.” என்றார் குணாளன்.

அப்படி விட முடியாதே. பெரியவர்கள் கையைப் பிசைய, “இந்தக் கலியாணம் நடக்கோணும் வஞ்சி.” என்றான் நிலன்.

“ஏன்?”

அதை உடைத்துச் சொல்ல முடியாத சங்கடத்தோடு தன் வீட்டினரைப் பார்த்தான் நிலன். அவள் வீட்டினர் நிலையையும் கவனிக்க வேண்டுமே. சுவாதிக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல் அடித்துக்கொண்டது.

“சொல்லுங்க நிலன். உங்களுக்கு என்னக் கட்டியே ஆகோணும். உங்கட தம்பிக்குச் சுவாதியோட கலியாணம் நடந்தே ஆகோணும். இதுக்கெல்லாம் என்ன காரணம்? சொல்லுங்க!”

“சொல்லுங்க சொல்லுங்க எண்டா என்னத்தச் சொல்லச் சொல்லுறாய்? உன்ர தங்கச்சி உன்ர தங்கச்சி மட்டுமில்ல. இன்னும் கொஞ்ச மாதத்தில ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகப்போறாள்.” என்று போட்டுடைத்தான் அவன்.

“என்ன?” என்று அதிர்ந்தவளின் சிந்திக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது அவன் தந்த அதிர்ச்சி.

கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை. திரும்பிச் சுவாதியைப் பார்த்தாள். முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் அவள். அந்தக் கண்ணீர் இளவஞ்சியின் உள்ளத்தைத் தொடவேயில்லை. எல்லாம் விட்டுப்போன ஒரு உணர்வு. பெரும் தவறு ஒன்று நடந்துவிடாமல் தங்கையைக் காத்துவிட வேண்டும் என்று துடித்தாளே. இங்கானால் தப்பே நடந்து முடிந்துவிட்டதாம்.

ஒருமுறை இறுக்கமாக விழிகளை மூடித் திறந்துவிட்டு, “உங்கட காரியம் ஆகோணும் எண்டுறதுக்காக எவ்வளவு தூரத்துக்கும் இறங்குவீங்களா நிலன்?” என்றாள் வெறுத்துப்போன குரலில்.

“லூசா நீ? திரும்ப திரும்ப எங்களிலேயே பிழை சொல்லிக்கொண்டிருக்கிறாய்? உன்ர தங்கச்சிக்கு விருப்பம் இல்லாமையாமா இதெல்லாம் நடந்தது?” திரும்ப திரும்ப அவர்களையே அவள் குற்றம் சாட்டவும் சுள் என்று ஏற பட்டென்று கேட்டுவிட்டான்.

இளவஞ்சியின் மொத்தக் குடும்பமும் கூனிக் குறுகிப் போயினர்.

அதுவும் குணாளனும் ஜெயந்தியும் அறை வாங்கிய மனிதர்களாக அவமானக் கணறலுடன் அவனைப் பார்க்க
ஐயோ என்றிருந்தது அவனுக்கு.

“சொறி சுவாதி. சொறி அங்கிள்! நான் அப்பிடிக் கதைக்க நினைக்கேல்ல வஞ்சி!” என்று அவள் கையை அவன் பற்ற வர, அதற்கு விடாமல் சட்டென்று தள்ளி நின்றவள், “இதுக்காக எல்லாம் கலியாணம் கட்டி வைக்கிறதுக்கு இது ஒண்டும் அந்தக் காலம் இல்ல. நீங்க நடவுங்க!” என்றாள் முகத்திலோ குரலிலோ எந்த உணர்வையும் காட்டாமல்.

இவ்வளவுக்குப் பிறகும் அவள் அப்படிச் சொன்னதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.

“அம்மாச்சி…” குணாளனுக்கு மனதே விட்டுப்போயிற்று. இனி என்ன பேசியும் பிரயோசனம் இல்லை என்று விளங்க, இந்தக் கலியாணத்தை முடித்துவிடவே நினைத்தார்.

“இல்லை அப்பா. இதுக்காகப் பாத்து அவளைக் காலம் முழுக்க அழு எண்டு விடேலாது. இதுக்கெல்லாம் என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும். நீங்க அமைதியா இருங்க.” என்று அவள் முடிக்கக் கூட இல்லை.

“சி! நீயெல்லாம் என்ன பொம்பிளை?” என்று சீறினார் ஜெயந்தி.

தன் அன்னையா என்று அவள் அதிர்ந்து பார்க்க, “பெத்த பிள்ளைக்குச் சமனா உன்ன நாங்க வளத்துவிட்டா நீ என்ர பிள்ளையின்ர வாழ்க்கையை நாசமாக்கப் பாப்பியா?” என்றதும் தலையில் இடி விழுந்தவள் போல் நின்றாள் இளவஞ்சி.

“ஜெயந்தி!” என்று தன்னை மீறிக் கத்தியிருந்தார் குணாளன்.

“என்னத்துக்கு கத்துறீங்க? இத்தின வருசத்தில ஒரு நாள், ஒரு பொழுது அவளுக்கும் என்ர பிள்ளைகளுக்கும் வேற்றுமை காட்டி இருப்பனா? இந்தச் சொத்து சுகம் முழுக்க என்ர பிள்ளைகளுக்குச் சேர வேண்டியது. ஆனா ஆண்டு அனுபவிக்கிறது அவள். அதுக்குக் கூட ஒரு வார்த்த சொல்லியிருப்பேனா? சொந்தப் பிள்ளை மாதிரித்தானே வளத்தனான். ஆனா இவள் என்ன சொன்னவள் எண்டு கேட்டனீங்கதானே? சுவாதின்ர வயித்தில இருக்கிறது எங்கட பேரக்குழந்தையப்பா. நடந்தது பிழைதான். பெரிய பிழைதான். அதுக்காக இப்பிடித்தான் கதைப்பாளா?” அந்தக் குழந்தையை அழித்துவிடுவாளோ என்று பட்டதுமே தன் சுயத்தை மொத்தமாக இழந்துவிட்ட ஜெயந்தி 28 வருட இரகசியத்தை அப்படியே போட்டு உடைத்திருந்தார்.

ஆனால், தையல்நாயகிக்குப் பிறகு அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்ற தூண் சுக்கு நூறாக நொருங்கிப் போனாள். தன் உடலைத் தானே சுமக்க முடியாதவள் போன்று இடிந்துபோய் அப்படியே அமர்ந்துவிட்டாள் இளவஞ்சி. விழிகளின் ஓரத்தில் மெலிதாய் நீர்ப்படலாம்.

தொடரும்…
Next epi eppo😞
 

Kameswari

New member
எவ்வளவு பெரிய ட்விஸ்ட்! 🧐 இப்போ என்ன இத்தனை வருஷம் வளர்த்த குடும்பத்துக்கு நன்றிக் கடனா நிலனை கல்யாணம் கட்டச்சொல்ல, வஞ்சியும் மரத்துப் போன மனசோட, உணர்வோட அவனை கல்யாணம் பண்ணிக்குவாளா? 🙄 இது நியாயமே இல்ல😢 சுவாதிக்காக வஞ்சியை வஞ்சிக்காதீங்க சிஸ் 😢

ஜெயந்தி என்னதான் 28 வருஷமா பிள்ளைகளுக்குள் வேறுபாடு காட்டாம வளர்த்திருந்தாலும், இப்போ நடந்துகிட்ட முறையில் அதெல்லாம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிட்டாங்க... 😏 அவங்களுக்கு தொழிலை நடத்தவும், சம்பாதித்து குடுக்கவும் தான் இவ தேவைப்பட்டிருக்கா... அதுமட்டும் தான் உண்மை 😢
 

Subamurugan

Well-known member
.ஹாய் நிதா... நீங்க புள்ளி வச்சுட்டீங்க.. நாங்க அதுல விதவிதமா கோலம் போட்டுப் பாக்கறோம். ஆனா ஆரம்பதில் இருந்தே கதை வேகமா போகுதே அதிலும் இப்ப ஸ்பீட் பிரேக்கர்ல ஏறி இறங்கி இருக்கு. இனி வண்டி எப்படி போகுமோ?.
 
Top Bottom