• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் அன்புக்கு நன்றி

நிதனிபிரபு

Administrator
Staff member
“உன் அன்புக்கு நன்றி
?

யாரால்?
யாருக்கு?
எச்சந்தர்ப்பத்தில்?
சுருங்க சொன்னால் இதுதான் கதை
?
?

அதைச் சொல்லிமுடிக்கமுன் எவ்வளவு உணர்ச்சிக்குவியல்கள்
?
?

அன்பு, பாசம், காதல், தவிப்பு, பிரிவு, வலி, இணைவு, தெளிவு, புரிதல் எல்லாம் இருந்தும் கதாபாத்திரங்களுக்கு இடையிலும் சரி, கதை படிக்கும் நமக்கும் சரி வெறுப்பு மட்டும் வரவேயில்லை
?
?

ஆம் வலிமைமிக்க விதியிட்ட வழியிலே பயணிக்கும்போது அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் என்றாலும் நமக்குமே அவை எல்லாம் சரியாகிப் போவதுதான் எழுத்தாளரின் எழுத்து வன்மையோ
❤️
❤️

முக்கோணக்காதல் கதையில் ஒருஜோடி பிரிய வேறொரு ஜோடி சேர இறுதியில் யாவும் சுபமானாலும், அந்தப் பயணத்தின் சுவடுகளை நம்மனங்களில் ஆழமாய் பதித்து செல்கின்றது இக்கதை
❤️

தவறவிடாமல் படிச்சுப் பாருங்கள்
?

ஏமாற்றமில்லாமல் நிச்சயமாக மனம்- கவரும், வலிக்கும், தவிக்கும் கடைசியில் சந்தோஷிக்கும்
?

‘எழுத்து’ எப்போதும் வாசிக்கும் நம்மை உணரவைக்க வேணும் & உருக வைக்கவேணும்
?
அந்த மேஜிக் நன்றாக கைவரப்பெற்றவர்களில் Nithani Prabuஉம் ஒருவர்
?

இயல்பான யதார்த்த மனிதர்களைக் கொண்டு ஆழமான உணர்வுபூர்வக் கதைகளை வடிப்பதில் வல்லரான நிதாக்காவின் எழுத்தில் 25வதாக வெளிவந்த இக்கதைக்கு வாழ்த்துக்கள்கா
?


ஷண்முகப்பிரியா சுரேஷ்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
உன் அன்புக்கு நன்றி - எனது பார்வையில்...
❤

அனந்தன், நிரல், சிசிர
A triangle love story
❤

எப்போவும் ஒரு முக்கோண காதல் கதையில ஒரு mutual love அண்ட்
ஒரு one side love இருக்கும்... இங்கவும் அப்படித்தான்
❤

மென்மையே உருவா கொண்ட ஸ்வீட் பாய் சிசிர
?

தன்னோட பிடியிலயே நிக்குற பிடிவாத குணம் கொண்ட நிரா
?

வெளிய முரட்டுத்தனமா இருந்தாலும் உள்ளுக்குள்ள பாசத்துக்கு ஏங்குற அனந்தன்
?

கதையில என்னாகுது, யார் காதல் ஜெயிக்குது... படிச்சு தெரிஞ்சிக்கோங்க...
❤
✨

படிக்குற நம்மள அவங்க காதல் என்ன செய்யும்?
ரசிக்க வைக்கும், சிரிக்க வைக்கும், தவிக்க வைக்கும், சிலிர்க்க வைக்கும், கலங்க வைக்கும், அழுக வைக்கும், எல்லாம் தாண்டி அவங்க நல்லாருக்கட்டும்னு வாழ்த்த வைக்கும்...
?
❤

கதையில வர எல்லா கேரக்டர்ஸும் எதோ ஒரு வகையில நம்ம மனசை தொடுவாங்க...
?
✨

ஒரு உணர்வுபூர்வமான காதல் கதை வாசிக்கணும்னு நெனைக்குறவங்க மிஸ் பண்ணாம படிங்க drs...
?
❣️

Nithani Prabu க்கா வாழ்த்துக்கள்...
?
?
✨

====
ஸ்டோரி லிங்க்...
?
❤


Priya Kutty
 

நிதனிபிரபு

Administrator
Staff member
உன் அன்புக்கு நன்றி...
இதில் வரும், நிரல்யா, ருக்ஷி, அனந்தன், சிசிர, பெற்றவர்கள் என ஒவ்வொருவரின் பாத்திரப்படைப்பும் அருமை.
கதையின் ஒன் லைன் சொன்னால் கூட சுவாரஸியம் குறைந்துவிடும் என்கிற அளவுக்கு ஒவ்வொரு அத்தியாயமும் உணர்வுக்குவியல்.
சத்தமே இல்லாமல், அழகான இலங்கைத் தழிழ் தளும்பத் தளும்ப தோழி நிதனி பிரபு இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார்.
கதை கிட்டதட்ட முடிவை நெருங்குகிறது.
மிஸ் பண்ணாம படிங்க.
லிங்க் கமென்டில்.
Wishes to Author...

கிருஷ்ணப்ரியா நாராயண்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
"உன் அன்புக்கு நன்றி" நிதா சிஸ் ராக்கிங்..சிசிரா,
நிரா,அனந்தன் இவர்களோடு எங்களையும் சேர்த்தே காதலிக்க வச்சு,உணரவச்சு,அழவச்சுட்டீங்க.ஒரு மழைநாளில்,ஒரு குடைக்குள் ஆரம்பிச்சு மீண்டும் ஒரு மழைநாளில்,இரு குடைகளுக்குள் முடித்த விதம் நிஜமா கனமான நேரங்கள் அவை.நல்ல காதலன் சாத்தியமே..அனந்தன் போல் ஒருவன் எத்தனை நிரல்யாக்களுக்கு கிடைப்பார்கள்ங்குறது கேள்விக்குறிதானே..அதால எப்பவுமே அனந்தன் ஆர்மிதான் நிதா சிஸ்.

Priyasekar
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நிதனி பிரபு அவர்களின் உன் அன்புக்கு நன்றி
❤️
கதை.....
வாவ்.... அருமை அருமை... என்ன சொல்ல வேண்டும் என்று சத்தியமா தெரியவில்லை.... ரொம்ப வருஷம் கழிச்சு கதை படிக்கும் போது என்னை அழ வைத்துவிட்டீர்கள்.. ரொம்ப ரொம்ப அழுத்தம் நிறைந்த கதை...சிசிர
♥️
உனக்கு ஏன் இப்படி நடந்தது கடவுள் ஏன் உனக்கும் நிராவுக்கும் நியாயம் செய்யல ஏன் இவ்வளவு வலி உயிர் போகும் வேதனை... எப்படி சகோதரி உங்களால் முடிந்தது எழுதுவதற்கு என்னால் கண்ணீர் இல்லாமல் கடக்க முடியவில்லை பாதி கதையின் இடையே....எனக்கே நடப்பது போல அப்படி ஒரு வலிமை உங்கள் எழுத்தில்
?
..... இப்படிப்பட்ட அழுத்தம் நிறைந்த கதை படிப்பதை நான் வாசிப்பதை நிறுத்தி இரு வருடங்கள் ஆயிற்று இன்று என்னால் வேண்டாம் என்று இடையே நிறுத்தி விடவும் முடியவில்லை அவர்கள் உடன் இணைந்து கடக்க வேண்டும் என்று நினைத்து கண்ணீர் உடன்தான் வாசித்து முடித்தும் கூட மனதின் பாரம் குறையவில்லை
?
.... காதலில் விதி ஏன் பாரபட்சம் காட்டுகிறது இப்படி.முதல் காதல் முதல் குழந்தை போல புதிதான உணர்வுகள் அங்குதான் முதலில் உணரப்படும் என்றுமே அது special தான்... முதல் காதல தவறவிட்ட எல்லோருக்குமே எங்கோ மனதின் ஒரு மூலையில் அந்த நினைவுகள் புதைந்து தான் இருக்கும் ஒரு பாடல் வரியோ இல்ல சிறு காட்சிகள் பேசிய வார்த்தைகள் கூட அடிக்கடி நெஞ்சை கீறி விட்டு செல்லும் ஆனால் காலம் போகப் போக அது சுகமான நினைவை கொடுக்கும் நினைக்கும் போது இதழ் ஓரமாய் சிறு புன்னகை
?
கூட தோன்றும் காலம் மாற்றும் நல்ல துணை அமைந்துவிட்டால் இது சாத்தியமே.... நிதனி பிரபு அவர்களின் எழுத்தில் இவை எல்லாமே அழுத்தம் நிறைந்ததாக கொடுத்துருக்காங்க... அருமை
?
அனந்தன் காத்திருப்பின் பலன்...அவனது காதல்
♥️
சிசிர நிரா இவர்கள் உடன் நானும் சிரித்தேன் அழுதேன் தவித்தேன் நிதர்சனம் உணர்ந்து மனதை தேற்றினேன் இதுதான் இந்த கதை ஆசிரியரின் எழுத்தில் உள்ள சிறப்பு
?
...
❤️
❤️
❤️
❤️
?
?



Akalya Muruga
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“நிதனி பிரபு” வின்
“உன் அன்புக்கு நன்றி” நாவல்
நன்றியுடன் விடைபெறும் நேரமுது. கதையின் பாகங்கள் முடியும் நிலையில்…ஆனால் கதையோ முடிந்து விட்டது. என்ற நிலைதான்!
Biggboss பார்த்தாக் கூட இப்படி ரென்சன் வராது. அந்தளவுக்கு தன் வரிகளால் வாசகர்களை ஒரு கலக்கு கலக்கிட்டார் எழுத்தாளர்.
நிதனி பிரபு அவர்களுடைய நாவல்கள் என்றுமே யதார்த்தங்களுக்குள் புதைந்து உணர்வுகளைக் குடைந்து எழுபவை. அலங்காரங்கள் ..ஜோடினைகளற்ற உணர்ச்சிப் பதிப்பு மட்டுமே!
கதைச் சூழலுக்குள் எம்மை இலகுவாக இழுத்துக்கொள்ளும் வல்லமை இவரது கதைகளுக்குள் எப்படித்தான் வந்து சம்மணம் இடுகிறதோ என வியப்பேன். பாத்திரப் படைப்புகள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். இந்தக் கதையிலும் அப்படித்தான் வில்லன்களாக எண்ணியவர்களையும் நல்லவர்களாக்கி நிலைக்க வைத்துள்ள அழகே தனி!
காதலில் பிரிவும் இணைவும் என்ற நிலை தாண்டி அவர்களுக்குள் எழும் வலிகளும் நினைவுகளும் கொன்று எழும் உணர்வுகளை ஆழமாக வரியாக்குவதில் வல்லமைமிக்கவரின் வார்த்தைகளுக்குள் இக்கதையும் நசுங்குண்டு இதயக் குருதியை ஓட விட்டே ஓய்ந்துள்ளது.
அத்தனை அழகான பாத்திரப் படைப்புக்கள்.அத்தனைக்குமான நியாயங்கள் சரியாத வண்ணம் தாங்கிப் பிடித்து கதையைக் கனமாக்கியுள்ளார்.
அழகும் ஆழமும் வலிகளும் ..கலந்த முக்கோணக் காதல். யார் யாரோடு இணைந்தார்கள் என்றதை வாசித்து அறியுங்கள் நட்புக்களே!
எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாது என்பதற்கு நான் உத்தரவாதம்.
உங்கள் அன்புக்கும் நன்றி” நிதனி பிரபு அவர்களே!

Nathan Shan
 

நிதனிபிரபு

Administrator
Staff member

#narmsreview2024
உன் அன்புக்கு நன்றி
Nithani Prabu என்ன ஓர் உணர்வுபூர்வமான கதை!
நிறைவில் அனைத்து கதாப்பாத்திரத்திற்கும் நிறைவை அளித்திருக்கீங்க சிஸ். அதுக்கு பெரிய பாராட்டுக்கள்
?
?
?

கையில் எடுத்தால் வைக்க முடியாதளவுக்குப் பரபரவென கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை
?
?
?
?

நிறைய எழுதுறனாலேயே இப்படி இருக்குமா அப்படி இருக்குமானு யூகிச்சிட்டே வாசிச்சதில் அழுகைலாம் வரலை. ஆனால் அவளோட மச்சானை மிகச் சரியாக யூகி வச்சிருந்தேன்.
அவளின் சந்தோஷத்துக்காக என்னனாலும் செய்வான்னு நினைத்த மாதிரியே அவனுடைய அன்பின் எல்லைக்கு அளவே இல்லைனு காண்பிச்சிட்டான்.
அந்த நிறைவு அத்தியாயம் அவ்ளோ பிடிச்சது
?
எத்தனை அழகான நிறைவை கொடுத்திருக்கீங்கனு மனசு பூரிச்சு போச்சு.
அழவில்லை என்றாலும் உன் அன்பிற்கு நன்றினு வரும் அத்தியாயம் மனசை வலிக்க வைத்தது. ஒரு மாதிரி மெல்லிய வலியோடவே அந்த அத்தியாயம் முழுக்கவும் வாசிச்சேன்.
இவ்ளோ அழுத்தமான கதையை பெரும்பாலும் நான் வாசிக்க மாட்டேன். ஆனால் இந்தக் கதையை நான் சிரிச்சிக்கிட்டே தான் வாசிச்சேன். கதையின் போக்கும் நீங்கள் நகர்த்தி செல்லும் விதமும் காட்சிகளும்னு என்னை மீறி எழுத்தாளர் மோட்ல நிறைய வாசிச்சனால மட்டுமே அப்படி கடக்க முடிந்ததுனு நம்புறேன்.
இந்த அன்பும் காதலும் தான்‌ மனிதரின் வாழ்வை எப்படி எல்லாம் புரட்டிப் போட்டுடுதுனு மூவரையும் நினைத்து கலங்கவும் நெகிழவும் வைத்த கதை!
இத்தகைய அருமையான கதையை கொடுத்ததற்கு நன்றியும் வாழ்த்துகளும் சிஸ்
?
?
?
?


படிச்ச முடிச்ச கையோட அப்படியே வந்து எழுதி வச்சிருக்கேன்
?
?
?
.. அந்த அன்புக்கு நன்றி டைட்டில் வச்சி யார் யாரோட சேருவானு நான் யோசிச்சிட்டே வாசிச்சேன். அனந்தன் அவகிட்ட சொல்ற மாதிரி.. அவ அனந்தன் கிட்ட சொல்ற மாதிரிலாம் தான் யோசிச்சேன். ஏன்னா ரௌடி மாதிரி நடந்துக்கிட்டாலும் அவனே கொண்டு போய் சேர்த்து வச்சிடுவான்னு நினைச்சேன். அத்தனை அன்பு அவ மேல வச்சிருக்கிறவன்னு நினைச்சேன்.‌ ஆனால் என் யூகங்கள் எல்லாம் வேற மாதிரி நிறைய ட்விஸ்ட் டர்ன்ஸ்ஸோட சூப்பரா போச்சு கதை சிஸ்
?
?
?
நிஜமாவே உங்க எழுத்தில் கற்றுக் கொள்ள நிறைய நிறைய இருக்கு. ஒவ்வொரு அத்தியாமும் உணர்வுக்குவியல் தான். Thank you so much for such a lovely story and congratulations for your 25th story sis
?


and I could feel your pain sis.. ezhuthum pothu evalo azhuththama irunthirukum .. athaiyum each epila ninachi paathen..
 

நிதனிபிரபு

Administrator
Staff member

#Gowsireviews
#உன்_அன்புக்கு_நன்றி
Nithani Prabu
சிசிர, நிராவை மட்டுமில்லாமல் அந்த வலியை, அந்த கஷ்ட காலத்தை எங்களையும் கடந்து, சிரிக்க வச்ச உங்கள் அன்புக்கும், எழுத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள் நிதா மா
?
!!...
ரொம்ப ரொம்ப அழகான காதல் கதை!!.... கண்டிப்பா அழுத்தமும் இருந்தது, ஆனால் அதையும் தாண்டி அருமையான காதல்கள் மனதை நிறைத்தது!!!...
யாருடைய காதலும் கூடவும் இல்லை, குறைவும் இல்லை!!... அனைவரின் காதலும் பரிசுத்தமானவை!!... சிசரவின் வைராக்கியம், நிராவின் காத்திருப்பு, அனந்தனின் பொறுமை, ருக்க்ஷியின் புரிதல் எல்லாமே வியக்க வைத்தது, கலங்க வைத்தது!!...
கடந்து போன காதலின் நியாயமும், நிகழ்காலத்தின் காதலின் அருமையும் எங்கும், எந்த உறுத்தலும் தரவில்லை!!!...
ஒவ்வொருவரின் உணர்வுகளையும் ரொம்ப தெளிவா, நிதர்சனத்தோடு இருந்தது!!... பெற்றவர்களின் கோவம், ஆற்றாமை, அதிர்ச்சி, பரிதவிப்பு, வேண்டுதல், விரக்தி, காத்திருப்பு, மகிழ்ச்சி, நிறைவுன்னு எல்லாத்தையும் ரொம்ப நல்லா உணர முடிந்தது!!...
The perfect and fantastic closure for the relationship between Sisira and Nira in Nira's house!!...
ஒரு நட்பாய் அவங்க உறவு உறுத்தல் இல்லாம தொடர்வது நிதர்சனத்துல சாத்தியமான்னு கேட்டா, தெரியலை!!... ஆனால் அவங்களை இப்படி பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது!!...
அனைவரின் சூழ்நிலையையும், அவர்களுக்கான நியாயத்தையும் நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சது!!... யாரையும், எதுக்கும் குறை சொல்ல முடியலை!!..
அவரவர் ஆசைப்பட்டது கிடைக்கலைனாலும், அவங்களும் கிடைத்த எதுவும் குறைவானதா இல்லாமல் ரொம்ப இருந்தது, அவங்களை உணர்ந்த எங்களுக்கும் மனசு ரொம்ப நிறைவா இருந்தது!!..
அனந்தனின் அவளுக்கான 'டி' ரொம்ப ஈர்த்தது கா!!..
அருமையான நட்புகள் மூவரும்!!...
மீண்டும் இப்படியான கதையை தந்ததற்கு நன்றி நிதா மா
❣️
!!.. இது உங்க 25 ஆவது கதையாக இருப்பது ரொம்ப சந்தோஷம்!!... இன்னும் நிறைய நிறைய எழுத வாழ்த்துகள் நிதா மா
?
!!..
இனி லண்டனுக்கு போகும்போதெல்லாம் சிசிர, ருக்க்ஷி, அவர்களின் குடும்ப நினைவுகளை தவிர்க்க இயலாது நிதா மா
?
!!..
பிடித்த சில இடங்களும், வரிகளும்:
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Mukhil Geetz

# உன்_அன்புக்கு_நன்றி_ Review
இதை நான் சொல்லியே ஆகனும் நிதனி கா...
ஒரு பச்சை புள்ளைய தேம்பி தேம்பி அழவச்சு கொடுமை பண்ணிட்டீங்க
?

நல்லவேளை தனியா ரூமுக்குள்ள உக்காந்து கதையை படிச்சு அழுதேன்... என் பையன் மட்டும் பார்த்திருந்தா பங்கம் பண்ணியிருப்பான்
?

கதையை பத்தி சொன்னா அப்பறம் படிக்கிற சஸ்பென்ஸ் போயிடும்... அதுனால நான் ரசிச்ச விதத்தை சொல்லறேன்...
நிச்சயம் ரெண்டு ஹீரோ கான்செப்ட் தான்... ஆனாலும் லவ்வர் பாய் சிசர விட தாடிக்கார அனந்தன் மச்சானைத்தான் எனக்கு ரொம்ப பிடிச்சுது...
கதைல குறைவா வந்தாலும் நிறைவா என்னோட மனசுல இடம் பிடிச்சிட்டான்...
சிசரக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சு சுந்தரலிங்கம் சந்தோஷப்பட்டதை விட நான் அதிகமா சந்தோஷப்பட்டேனா பார்த்துங்களே
?

அனந்தன், சிசர , நிரல் இவங்களா விட என்னோட ஹார்டை டச் பண்ணுனது ருக்ஷி தான்... செம கேரக்டர்...
கடைசில சிசர நிரலை வந்து பார்த்துட்டு போறப்ப வர்ற மழை ரொம்ப ஹைலெட்... அதுவும் அந்த குடைக்குள்ள சிசரவும் நிரலும் வாய்ப்பே இல்ல... அடேய் எங்கடா என்னோட அனந்தன் மச்சான்னு தவிச்சுகிட்டு இருக்கிறப்ப கொண்டு வந்து நிறுத்தினீங்க பாரூங்க... வேற லெவல் கா...
அப்பறம் ஜிலேபிய பிச்சுபோட்ட மாதிரி இந்த சிங்களத்த இடைல இடைல கொண்டு வந்து என்னை எழுத்துக் கூட்டி படிக்க வச்சு காண்டாக்கிட்டீங்க... ஆனாலும் ஒன்னு ரெண்டு வார்த்தை நிரலோடு சேர்த்து நானும் கத்துகிட்டேன்...
மொத்தத்துல வார்த்தைல வசியம் வைக்கிற மந்திரம் உங்ககிட்ட இருக்குன்னு மீண்டும் ஒருமுறை நிரூபிச்சு என்னை உங்களோட எழுத்துக்கு வசியப்படுத்திட்டீங்க...
வாழ்த்துக்கள் நிதனி கா...
உன் அன்புக்கு நன்றி கதைக்கு என்னோட நன்றிகள்

 

நிதனிபிரபு

Administrator
Staff member
உன் அன்புக்கு நன்றி ... நிதனி பிரபு
நிதாவின் 25 வது கதையாம்.
கதை என்று சொல்வதை விட ஒரு காதல் காவியம் என்று சொல்லலாம்.
ஒரு அழகான மழை நாளில் ஆரம்பித்த காதல் , அதே போன்ற ஒரு மழை நாளில் மனதில் ஏற்றி வைத்த பாரத்தோடு முடிவடைகிறது. என்னதான் அன்பு அலாதியானது என்றாலும் நிச்சயம் ஒரு சோகமான நெருடல் தான் எனக்குள்.
விதியின் சதியா அல்லது சதியே விதியா?
எங்கே தவறானது, நிச்சயம் கணிக்க முடியவில்ல.
சிசிர.. நீதான் எவ்வளவு மென்மையானவன்.. குறும்பான உன் காதல் ரொம்பவே ரசிக்க வைத்தது. உன் காதலை நீ திடீரென்று ஒரு பாட்டில் சொன்ன அழகும், (நானும் அந்த லஸ்ஸான பாட்டை நிறைய முறை கேட்டு ரசித்தேன்) மழைக்கால குடையில் ஓடி வந்து இணைந்து கொள்ளும் குறும்புகளும் , பேராதனை கூடத்தில் சுற்றி காதலித்த நிகழ்வுகள் எல்லாமே ரசித்து மகிழ்ந்த போதும், உன் லஸ்ஸன கெல்லிக்காக, நீ கடைசி வரை எப்படி மறக்க முடிந்தது என்று உனக்குள் உருகுவது, எல்லாமே கடைசியில் நம் மனதை உண்மையில் பாரமாக்கியது தான் நிஜம். அய்யோ ஏன் இப்படி, எதற்காக இப்படி நடந்தது என்று எண்ணாமல் இருக்க முடியல. மனசுக்குள் அதே இன்னும் ஓடுது.
நிதா ஏன் இப்படி செஞ்சிங்க?
நிரல்யா.. நிரா, நிரல் எவ்வளவு க்கு எவ்வளவு அவள் நினைச்சதை சாதிக்க நினைப்பவள் என்று வர்ணிக்கபபட்டவள், தான் விரும்பியதை சாதிக்க முடிந்ததா? ஏன்?
இருந்தாலும், சட்டென ஒரே நொடியில் தனக்கு இனி அவன் இல்லை என்று உணர்ந்தவள், அவனுக்காக ஒதுங்கி போனது,
நிரல்யா சிசிர மனசை விட எங்கள் மனசில் நிரந்தரமாய் குடியேறி விட்டாய். உன்ற மனுஷி யோட தான் வாழணும் என்று சிசிராவிடம் சொல்லற பக்குவம், ஆனந்தனை மெதுவாய் மெல்ல மெல்லஏற்றுக் கொள்ளும் விவேகம், கூடவே அவ்வப்போது அது முடியாமல் தடுமாறும் தவிப்பு, அவள் மச்சானிடம் பயம், கோபம், நடுக்கம், கடைசியில் அவனோடு கூடிய அந்நியோனியம்,.. நிறல்யாவுக்குத்தான் எத்தனை முகங்கள்..
ஆனந்தன்.. உண்மையான கதாநாயகன் இவன். கோவம், தைரியம், சின்ன வயசிலேயே பக்குவம், துணிவு, எல்லாமே இருந்தாலும் அன்புக்காக எங்கும் ஒரு குழந்தை தான். அதுவும் தன்னால் தானே தன்நிரலுக்கு அத்தனை துன்பம் என்று ஒரு கட்டத்தில் உணருபவன் கடைசியில் அவளுக்காக அனைத்திலும் துணை நிற்கும் பக்குவம் நிச்சியம் யாருக்கு வரும்? அதிலும் அந்த டாட்டூ எனக்கு ஒண்ணுமே இல்லை என்று அப்படியே ஏற்றுக் கொள்வது? கடைசி வரை ஒவ்வொரு இடத்திலும் நிரல்யாவை ஆதரவாய் அணைத்துக் கொள்வது.. ரியல் ஹீரோ இவன் தான். ஆனந்தன் இல்லைன்னா நிரல்யாவும் இல்லை தான்.
இன்னும் நிறைய கதா பாத்திரங்களை சொல்லலாம்.
ருக்ஷி .. நல்ல புரிதலோடு வாழக்கையை அணுக தெரிந்தவள்.
மஹிந்த, சரண்யா, நிவேதா, முக்கியமா நிரலோட அம்மா, அப்பா... எல்லாருமே ஒவ்வொரு வகையில மனசை டச் பண்ணறாங்க..
மொத்தத்தில் உன் அன்புக்கு நன்றி... பொருத்தமான தலைப்போடு, ஒரு நல்ல இனிமையான அழகான காதல் + காதல் பின்னோடு மனசை உருக்கும் சோகம், அப்படியே பின்னர் ஒரு நல்ல முடிவையும், யதார்த்தமாய் வாழக்கையை வாழ வேண்டிய அவசியத்தையும் சொல்லி நிறைவாக கதையை கொண்டு சென்ற நிதாவுக்கு அன்பான நன்றிகள்.
வாய்ப்பு கிடைத்தவர்கள் தவறாமல் வாசித்து பாருங்கள்.
நித்தாவின் 25 வது கதைக்கு வாழ்த்துகள் மா.
பெரிசா எனக்கு விமர்சனமெல் லாம் எழுத வராது. எனக்கு தோன்றியதை கதையை படிச்சிட்டு உடனே எழுதிட்டேன் பா.
கதையின் போக்கில் அவ்வப்போது மனதை பாரமாய் உணர வைத்தாலும் மொத்தத்தில் உங்கள் கதை மனதுக்கு நிறைவாய் இருந்தது நிதா.
வாழ்த்துகள் மா.


Latha Sridhar
 
Top Bottom