• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மின்னிதழ் 5 இல் வெளிவந்த பகுதி -1

ரோசி கஜன்

Administrator
Staff member
மருவுதமிழ் மறவாமல் காப்போம்!

மதிப்பிற்குரிய ‘வி.இ. குகநாதன்’ அவர்கள் எழுதிய ‘கிரந்தம் தவிர் தமிழ் பழகு’ என்கிற கையேட்டிலிருந்து நாம் அறிந்துகொண்டவற்றை, நம் செந்தூரத்தின் வாசக நெஞ்சங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்கிற பேரவாவின் பெயரில், வி. இ. குகநாதன் அவர்களின் அனுமதியுடன் அவரின் கையேட்டிலிருந்து தகவல்களை முடிந்தவரையில் சுருக்கமாகத் தரவிருக்கிறோம். படித்துப் பயன்பெறுவீர்களாக. தமிழை மறவாமல் காப்பீர்களாக!

அனுமதியளித்த வி. இ. குகநாதன் அவர்களுக்கு செந்தூரத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்!

செம்மொழியாம் தமிழ் மொழியினை பிறமொழியின் கலப்பின்றித் தனித்தமிழ் மொழியாக எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது இவ்வேடு. அந்த வகையில், ஆங்கிலம் போன்ற மொழிகள் கலக்கையில் வேறுபாடு தனியாகவே தெரிந்துவிடும். அதுவே, உறவாடிக்கெடுக்கும் வடமொழி(கிரந்தம்) கலக்கும்போது கண்டுகொள்வது கடினம். இந்த கிரந்தக்கலப்பினை மேற்கொள்பவர்கள் முதலில் தமிழும் சமசுகிரதமும் இரண்டு கண்கள் என ஆரம்பித்து, கலப்பு ஒரு கட்டத்தைத் தாண்டியபின் தமிழால் தனித்து இயங்க முடியாது, அது ஒரு செம்மொழியல்ல, சமசுகிரதத்தின் வழித்தோன்றலே தமிழ் என்றெல்லாம் பேசுவார்கள்.

இந்த சூழ்ச்சியில் ஏற்கனவே இன்று நாம் பயன்படுத்தும் தமிழில் ஏறக்குறைய இருபது தொடங்கி முப்பது வரையிலான விழுக்காடு அளவிற்கு கிரந்தச் சொற்கள் கலந்துள்ளன. இந்த இன்னலை எதிர்கொள்ளவும், தமிழை காக்கவும் தனித்தமிழ் பற்றி அறிந்துகொள்ளுதல் முக்கியமாகிறது.

இன்றைய உலகமயமாதல் நிலையில் தனி மொழிப்பயன்பாடு நடைமுறையில் சரிப்பட்டு வருமா என்கிற கேள்வி எழலாம். பாலில் சிறிதளவு நீரைக் கலப்பதற்கும், நீரில் சிறிதளவு பாலைக் கலப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
தனித்தமிழ் பயன்பாட்டுக்குச் செய்ய வேண்டியவை:

முடியுமானவரை தமிழில் உள்ள 247 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.


கிரந்த எழுத்துக்களை ஸ, ஷ, ஜ, ஹ போன்றவற்றை தவிருங்கள். (எடுத்துக்காட்டாக ஹிந்து என்பதை இந்து எனவும் ரஸ்யா என்பதனை இரசியா எனவும் எழுதவும்.)

கிரந்தச் சொற்களுக்குப் பதிலான தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்துதல்.(பட்டியல் இணைப்பைக் காணலாம்)
புதிய சொற்களின் தமிழ் மொழியாக்கம் அறிந்து பயன்படுத்துதல். (எடுத்துக்காட்டு: Pen Drive-விரலி, Whatsapp- புலனம்)

கீழே கிரந்தச்சொற்களுக்கு சரிநிகரான தமிழ்ச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டும்தான் முழுமையாகத் தமிழில் கலந்துள்ள கிரந்தச்சொற்களல்ல. சொற்களின் வேர்ச்சொற்களை கண்டுகொள்வதன் மூலமே தமிழ்ச்சொற்களைக் கண்டுகொள்ளலாம். ஒரு தொடர்ச்சியான செயற்பாட்டின் மூலமே இம்முயற்சி வெற்றிபெரும். இச்சொற்களில் கூட தவறுதலாக கிரந்தச் சொற்கள் இடம் பெற்றிருக்கலாம். ஒவ்வொருநாளும் ஒரு தனித்தமிழ்ச்சொல்லினை கற்பதன் மூலமோ அல்லது வாரத்துக்கு ஒரு எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கான தனித்தமிழ்ச்சொற்களைக் கற்பதன் மூலமோ இதில் வெற்றி பெறலாம்.

முயற்சித்து நீங்களும் வென்று தமிழையும் தழைத்தோங்கச் செய்ய வேண்டும்.


கிரந்தம் தவிர தமிழ் பழகு

  • அகங்காரம் - செருக்கு
  • அக்கிரமம் - முறைகேடு
  • அசேலம் - உறுப்பு
  • அசூயை - பொறாமை
  • அதிபர் - தலைவர்
  • அதிருப்தி - மனக்குறை
  • அதிர்ஷ்டம் - ஆகூழ், நல்லூழ்
  • அத்தியாவசியம் - இன்றியமையாதது
  • அநாவசியம் - வேண்டாதது
  • அநேகம் - பல
  • அந்தரங்கம் - மறைபொருள்
  • அபகரி - பறி, கைப்பற்று
  • அபாயம் - இடர்
  • அபிப்ராயம் - கருத்து
  • அபிஷேகம் - திருமுழுக்கு
  • அபூர்வம் - புதுமை
  • அமிசம் - கூறுபாடு
  • அர்ப்பணம் - படையல்
  • அலங்காரம் - ஒப்பனை
  • அலட்சியம் - புறக்கணிப்பு
  • அவசரமாக - உடனடியாக, விரைவாக
  • அவஸ்தை - நிலை, தொல்லை
  • அற்பமான - கீழான, சிறிய
  • அற்புதம் - புதுமை
  • அனுபவம் - பட்டறிவு
  • அனுமதி - இசைவு
  • அங்கீகாரம் - ஏற்பு, ஏற்பளிப்பு
  • அகோரம் - கொடுந்தோற்றம்
  • அங்கவஸ்திரம் - மேலாடை
அடுத்த இதழில் தொடரும்...
 
Top Bottom