You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Devil's Food Cake!

ரோசி கஜன்

Administrator
Staff member
தேவையான பொருட்கள்:

பட்டர் / மாஜரின் - 300 g
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 100g
கொக்கோ பவுடர் - இரண்டு மேசைக்கரண்டி
டார்க் சொக்லேட் 100 g
பிரவுன் சீனி 350 g ( நான் இந்தமுறை அரைவாசி கரும்புச் சீனி அரைவாசி பிரவுன் பாஸ்டர்ட் சுகர் எடுத்தேன்)
வனிலா இரண்டு தேக்கரண்டி
உப்பு அரைத் தேக்கரண்டி
முட்டைகள்- 7
கோதுமை மா 250 g
பேக்கிங் பவுடர் 10 g

அலங்காரத்துக்கு:

கிரீம்
ஒரு மேசைக்கரண்டி கொக்கோ
இரண்டு மேசைக்கரண்டி ஐசிங் சுகர்

செய்முறை:
- மூன்று முட்டைகளின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.




- பட்டரை ஒரு பானில் இட்டு உருக விடுங்கள் . உருகிக் கொண்டிருக்கையில் கோப்பித்தூளையும் சேர்த்து நன்றாக கலந்து வர அடுப்பை விட்டு இறக்குங்கள்.





- இதில் சொக்லேட்டை இட்டு அடியுங்கள். அது உருக கொக்கோவையும் நன்றாகக் கலந்தெடுங்கள்.





- பின்னர், வனிலா , உப்பு, சீனி சேர்த்து விஸ்கால் அல்லது பீட்டரால் சீனி கரையும் வரை அடியுங்கள் . முட்டைகளையும் ஒன்று ஒன்றாகச் சேர்த்தே அடியுங்கள்.



நன்றாக சீினி கரைந்ததும், சலித்து வைத்திருக்கும் கோதுமை மா மற்றும் பேக்கிங் பவுடர் கலவையை இட்டு கையால் கலவுங்கள். கடைசியாக முட்டை வெள்ளைக்கருவையும் கலந்து கொள்ளுங்கள்.




- பின்னர் கிறிஸ் பண்ணிய தட்டிலிட்டு 135c ல் 85 நிமிடங்கள் பேக் செய்து, கேக்கின் நடுவில் குச்சியால் குத்தி ஒட்டவில்லையோ இறக்கி ஆறவிடுங்கள். (oven 10 நிமிடம் சரி ப்ரீ ஹீட் செய்து கொள்ளுங்கள்)

- ஆறிய பின்னர் மேல்பகுதியில் உப்பி வந்திருந்தால் அதை வெட்டி எடுத்து துருவல்களாகச் செய்து எடுத்து வையுங்கள்.

- பின்னர் கேக்கை இரண்டாக வெட்டிக்கொள்ளுங்கள். ( மூன்றாகவும் வெட்டலாம் .)

- கிரீமை அடித்து இலேசாக இறுகிவருகையில் கொக்கோ, ஐசிங் சீனி சேர்த்து அடித்து எடுத்து அதை கேக்கின் நடுவிலும் மேல்பகுதியில் பரவிவிடுங்கள்

- பின் மேல்பகுதியில் ஏற்கனவே எடுத்துவைத்துள்ள கேக் துருவல் கொண்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.



devil cake 9.jpg
 
Last edited by a moderator:

Shruti

Moderator
Staff member
செம கேக்.. Dark chocolate எடுத்து mixing bowlல போடும் முன்னயே நான் வாய்க்குள்ள போட்டுடுவேன் அக்கா.. உங்க பொறுமை எனக்கு நோ நஹி லேது.. பேசாம உங்க பக்கத்து வீடு காலியா இருந்தா சொல்லுங்க
 

ரோசி கஜன்

Administrator
Staff member
செம கேக்.. Dark chocolate எடுத்து mixing bowlல போடும் முன்னயே நான் வாய்க்குள்ள போட்டுடுவேன் அக்கா.. உங்க பொறுமை எனக்கு நோ நஹி லேது.. பேசாம உங்க பக்கத்து வீடு காலியா இருந்தா சொல்லுங்க
பக்கத்து வீடு ஏன் வீட்டில ஒரு அறையே தரலாம் ஓடி வாங்கோ
 
Top Bottom