You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Summer health care tips

Shruti

Moderator
Staff member
1589121327763.png

கோடை காலம் வந்தாலே கூடுதல் உடல் - சருமப் பாதுகாப்பு அவசியம். கொளுத்தும் வெயிலின் வெப்பத்தில் நம் தோல் மற்றும் உடல் சோர்வுற்று வெகுவிரைவிலேயே அயர்ச்சி ஏற்படுத்தும். நாம் அனைவரும் முறையான பராமரிப்புகளை மேற்கொண்டால் கோடை காலத்தில் ஏற்படுகின்ற உடல் உபாதைகள், சரும கோளாறுகள் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.


1589121447245.png

என்ன சாப்பிடலாம்?

மற்ற காலங்களை விட இக்கோடைக்காலத்தில் நம் உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அடிக்கின்ற வெயிலில் சூடான பானங்களை நினைத்துக்கூடப் பார்க்க கூடாது. எப்பொழுதுமே சீசன் சமயங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளே உடலுக்கு நல்ல பலன்களைத் தரும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைத் தரும். அதுதான் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும்.

இதற்கு சிறந்த தீர்வு பழங்கள்தான். அதில்தான் ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கிறது. உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. ருசிக்காக நீங்கள் பலவிதமான பழங்களை முயற்சி செய்யலாம். சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இதிலுள்ள வைட்டமின் சி சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்.

இந்த காலத்தில் உடலில் வெப்பம் அதிகரித்து கண் நோய், அம்மை போன்ற வைரஸ் நோய் பாதிப்புகள் வர வாய்ப்புகள் உண்டு. இவை வராமல் பாதுகாக்க பழங்கள், நீர்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
 

Shruti

Moderator
Staff member
அடுத்த மிக முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் குடிப்பது. அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அத்துடன் இளநீர், மோர், சாத்துக்குடி, எலுமிச்சை, தர்பூசணி போன்ற பழச்சாறுகளை அருந்த வேண்டும்.
  • புரதம் அதிகமுள்ள பால், முட்டையும் சாப்பிடலாம்.
  • அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க, மோரில் உப்பு போட்டு அருந்துவது நல்லது.
  • எலுமிச்சை சாற்றில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடித்து வந்தால், நீரிழப்பால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் உடனடியாக குறையும்.
  • சீசன் பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை, கொய்யா, பப்பாளி, கிர்னிப் பழம், நுங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்படும்.
  • நீர்ச்சத்து நிறைந்த சுரக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, நூகோல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1589121715594.png
 

Shruti

Moderator
Staff member
பொதுவான குறிப்புகள் :
  • இறுக்கமான உடைகளை தவிர்த்துவிட்டு தளர்வான உடைகளை அணியுங்கள்.
  • கறுப்பு நிறங்கள் வெப்பத்தை அதிகளவில் கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்தல் நல்லது. பருத்தி ஆடைகளை அணிவது மிக நல்லது.
  • வியர்வையினால் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. அதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். அடிக்கடி முகம் கழுவுங்கள். இரண்டு முறை குளிப்பது சிறந்தது.
  • குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை தவிர்ப்பது நல்லது.
  • ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்
  • வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் நீர் அருந்துங்கள்.
  • கொழுப்பு நிறைந்த, சூட்டை ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
  • அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான மசாலா உணவுகளை தவிர்த்துவிடுங்கள். இது செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.
கண்களை பராமரிக்க எளிய குறிப்புகள் :
  • தினமும் இரண்டு மூன்று முறை கண்களை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். அப்படி செய்வதால் கண்கள் புத்துணர்வை பெறும்.
  • சுத்தமான பஞ்சை தண்ணீரில் முக்கி 10 நிமிடம் கண்ணில் வைத்து எடுத்து கழுவுங்கள். இது இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்தி கண்களை தளர்த்தும்.
  • கற்றாழை சாறை ஐஸ் கட்டிகளாக்கி, அதனை கண்களில் வைத்து வந்தால் சோர்வுற்ற கண்கள் புத்துணர்வை பெறும்.
  • அதிக நீர் சத்துக்கொண்ட வெள்ளரிக்காய் கண்களுக்கு மிகவும் நல்லது. குளிர்ந்த வெள்ளரிக்காயை மெலிதாக நறுக்கி கண்களில் 10 நிமிடம் வைத்து வந்தால், பொலிவிழந்த கண்கள் புத்துணர்வு அடையும்.
1589121838603.png
 
Top Bottom