You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்ர மகள். எனக்கு அம்மா மாதிரி.” அவள் கேசத்தை முகம் கனிய ஒதுக்கிவிட்டபடி சொன்னான்.

“ஓ!” அவளுக்குக் குரல் எழும்பவே மாட்டேன் என்றது. ஊகித்ததுதான். ஆனாலும் அவன் வாயால் கேட்டபோது உயிர் துடித்தது.

அவளின் சிசிர அவளுக்கு இல்லை. இனி இல்லவே இல்லை.

அத்தனை கடினமான சூழ்நிலைகளையும் அவனைச் சேரப்போகும் ஒற்றை நொடிக்காகக் கடந்து வந்தாளே! இனிச் சேரவே முடியாது என்றால் எப்படி?

நதியைப் படகால் கடப்பதுபோலக் காலத்தை அவன் நினைவுகளால் கடந்துகொண்டிருந்தாளே. இனி? பாதை முழுவதும் பாலைவன மணல் சுட்டபோதெல்லாம் கடந்துவிட்டால் போதும், கை நீட்டி அரவணைத்துக்கொள்ள அவன் இருக்கிறான் என்று எண்ணி எண்ணி நடந்தாளே! இனி?

அவள் உள்ளம் படும் பாட்டை அறியாமல், “அங்க இருக்கிறா பாருங்க. அந்த ரெட் கலர் சாறி. அவா வைஃப் ஜயருக்‌ஷி. பக்கத்தில இருக்கிறது அப்பா.” அங்கே இருந்தவர்களைக் காட்டிச் சொன்னான் அவன்.

அப்ப நான்? இனி நான் உனக்கு யாருமே இல்லையா? உன் கண்மணி இல்லையா? மகே லஸ்ஸன கெல்ல என்று கொஞ்சுவானே. துகள் துகள்களாய் சிதறிப்போன நெஞ்சத்துடன் பரிதாபமாய் அவனையே பார்த்து விழித்தாள் நிரல்யா.

அவன் இவளிடம் திரும்பவும் வேகமாக அவள் விழிகள் இப்போது அவன் பெண்ணிடம் தாவிற்று. அவளும் இவளைக் குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்தாள்

அவள் புறம் கைகளை நீட்டி, “ஒயா மகே லங்கட எனவத?(என்னட்ட வாறீங்களா?)” என்றாள் சிங்களத்தில்.

சின்னவள் விழிகளோடு சேர்த்து சிசிரவின் விழிகளும் வியப்பில் விரிந்தன.

“சிங்களம் தெரியுமா?” குரலிலும் அந்த வியப்புத் தொனிக்க வினவினான்.

என்ன கொடுமை இது? இன்னும் எத்தனை துன்பங்களை அவள் கடக்க வேண்டுமாம்? கடவுளுக்கு அவள் மீது இத்தனை கோபம் ஏன் என்று விளங்கவே இல்லை. கண்ணீரை உள்ளுக்கிழுத்தபடி வெறுமையாய்ப் புன்னகைக்க முயன்றாள்.

அவன் நெஞ்சில் சுளீர் என்று ஓர் வலி. அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் மகள் புறம் திரும்பி, “அன்ட்ரிட்ட(ஆண்ட்டி) போறீங்களா?” என்றபடி அவளை இவளிடம் நீட்டினான்.

எந்த ஜென்மத்துப் பந்தமோ, குழந்தையும் அவளிடம் வந்தாள்.

அவளைக் கையில் ஏந்திய அந்த நொடியில் தேகமெல்லாம் சிலிர்த்தடங்கியது. அவள் சிசிரவின் மகள். அவனைப் போலவே, அவன் வார்ப்பில் சுருண்ட குழல்கள், அடர் நீல நிற விழிகள் என்று குட்டி சிசிரவை அப்படியே நெஞ்சுக்குள் பொத்திக்கொள்ளும் ஆசையில் அவளை மார்போடு அணைத்து, கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்த நொடியில் உடைந்தாள் நிரல்யா.

அவன் அணைத்தது, முத்தமிட்டது, அவளில் லயித்தது, என்னை மறந்திட மாட்டியே என்று கேட்டது எல்லாம் இதயத்தைக் கசக்கிப் பிழிந்துகொண்டு அவள் நினைவில் வந்து போயின.

என்ன முயன்றும் முடியாமல் ஒரு கேவல் வெடித்திருந்தது. அதில் பயந்த குழந்தை தந்தையிடம் தாவி இருந்தாள். அவனும் தவித்துப்போனான்.

“ப்ளீஸ் அழாதீங்க. ஏன் இப்பிடி அழுறீங்க எண்டு எனக்குத் தெரியேல்ல. நான் ஏதாவது முந்தி உங்கள நோகடிக்கிற மாதிரி செய்திட்டேனா? அப்பிடி ஏதும் எண்டால் உண்மையா சொறி. தெரிஞ்சோ, வேணுமென்டோ செய்திருக்க மாட்டன். என்னை அறியாம நடந்திருக்கும். ஆனாலும் சொறி.”
என்றான் அவன் இனம்புரியாத் தவிப்புடன்.

அவள் நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. அங்கிருந்து ஓடிவிடத் துடித்தாள். உடல் ஒத்துழைக்கும் என்கிற நம்பிக்கை மருந்துக்கும் இல்லை.

அதில், வேக வேகமாய் முகத்தைத் துடைத்துக்கொண்டு, “சொறி, அது ஏதோ… இதுக்கு நீங்க காரணமில்ல. அது வேற ஏதோ நினைவு…” வார்த்தைகளைச் சரியாகக் கோர்க்க முடியாமல் கோர்த்தாள்.

என்னவோ அவள் துன்பமெல்லாம் அவளோடு போகட்டும். இதுவரை திரும்பாத அவன் நினைவு இனியும் திரும்பாமலேயே இருக்கட்டும். இதையெல்லாம் அவன் தாங்கமாட்டான். மென்மையான இதயம் கொண்ட அவளின் சிசிரவால் தாங்கவே முடியாது. இவன் அந்தப் பெண்ணின் கணவனாகவே காலம் முழுமைக்கும் இருக்கட்டும். கண்களைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள். முடியாமல் அப்போதும் உதடுகள் நடுங்கின.

அவனுக்கு அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. என்னவோ மனத்தைப் பிசைந்தது. அவளை விட்டு விலக முடியாதது போன்று, அவள் கண்ணீரைத் துடைவிட வேண்டும் போன்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. தலையை வேறு விண் விண் என்று வலித்தது. இந்த உணர்வு நல்லதற்கன்று, இந்தப் பெண்ணை விட்டுப் போய்விடு என்று அறிவு எடுத்துரைக்க, அதே நேரம் நண்பன் ஒருவன் அவனைத் தேடிக்கொண்டு வந்தான்.

“டேய் சிசிர. போயிட்டியாக்கும் எண்டு நினைச்சன். இன்னும் இங்கேயா நிக்கிறாய்?”

“நானும் வெளிக்கிட நினைக்க நீயும் வாறாய்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, அவளிடம் மெல்லிய தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டு எழுந்து, அவனுக்குக் கையை நீட்டும்போதுதான், அவன் கையில் இருந்த டட்டூவைக் கவனித்தாள்.

மணிக்கட்டின் உட்புறத்தில் பெருவிரல் ஆரம்பமாகும் இடத்தில் ‘என்’ என்கிற ஆங்கில எழுத்துக் கொடிபோல் படர்ந்து கிடக்க, அதற்குள் ஐ, ஆர், ஏ மூன்று எழுத்துகளும் மறைந்தும் மறையாமல் கிடந்தன. அவனது நாடித் துடிப்பாக அவள் இருக்கிறாளாம் என்று சொல்லி, அவன் இலண்டனில் இருந்தபோது குத்தி, அவளுக்குக் காட்டியும் இருக்கிறான். யாராவது பார்த்தால் ஒரு கொடி ஆர்ட் போன்று தெரிவது, அவர்கள் இருவருக்கும் மட்டுமே அது அவள் பெயர் என்று தெரியுமாம் என்று வேறு சொல்லியிருந்தான். அதுதான் வீட்டில் ஒரு பிரச்சனை என்று வந்தபோது பச்சை குத்திக்கொள்ளும் எண்ணத்தை அவளுக்குள் வரவைத்ததும்.

அவளை மறக்கவே கூடாது என்று உடலில் பச்சையாகக் குத்திவிட்டு உள்ளத்திலிருந்து மறந்துவிட்டான்.

அடக்கிய அழுகை மீண்டும் வெடித்துக்கொண்டு வருவது போலிருக்க, கைப்பேசியைப் பார்ப்பதுபோல் குனிந்து தன்னை அடக்க முயன்றாள். அவன் அங்கிருந்து அந்த நண்பனோடு அகல்வது தெரிந்து நெஞ்சம் பரிதவித்தபோதிலும் அவள் நிமிரவில்லை. கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி அப்படியே இருந்தாள்.



தொடரும்…

கருத்திடும் அனைவருக்கும் நன்றி. போட்டுத் தாக்க நினைக்கிற எல்லாத்தையும் போட்டுத் தாக்குங்க. நாளைக்கு வந்து பாக்கிறேன். உங்க கமெண்ட்ஸ் போஸ்ட்க்கு லைக் கூட போட இல்ல. ஒரு பீல் ல இந்த ஏரியாவை எழுதி முடிச்சிட்டா நானுமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவேன். அதுதான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 28


தன்னருகில் யாரோ வந்து நிற்பது தெரிந்தாலும் நிமிரவில்லை நிரல்யா. கண்களுக்குள் சேர்ந்திருந்த கண்ணீர் நிமிர விடவில்லை. அப்போது, “மகள்?” என்று மெல்லிய குரல் ஒன்று நலிந்து ஒலித்தது.

அதற்குமேல் அப்படி இருக்க முடியாமல், கண்ணைச் சிமிட்டித் தன்னைச் சமாளித்துக்கொண்டு மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். கையில் ஊன்றுகோலுடன் மத்தும பண்டார நின்றிருந்தார்.

இருவரும் முன்பின் பேசியதில்லையே தவிர்த்து ஒருவருக்கு மற்றவரைத் தெரியும்.

“உங்களோட கொஞ்சம் கதைக்கோணும் மகள்.” என்றபடி அவள் முன்னால் இருந்த இருக்கையைத் தன் வசதிக்கு ஏற்பத் தள்ளிப் போட்டுக்கொண்டு அமர்ந்தார் அவர்.

ஒரு காலை மடிக்காமல் நீட்டி அமர்ந்ததிலேயே முழங்கால் வரையில் அந்தக் கால் இல்லை என்று தெரிந்தது. அதற்குப் பொய்க்கால் போட்டிருந்தார். ஒரே நொடியில் மனைவியை இழந்து, காலையும் பறிகொடுத்து, அம்னீசியா வருமளவுக்கு ஒற்றை மகனும் காயப்பட்டுக் கிடந்தபோது எப்படியெல்லாம் துடித்திருப்பார்?

நெஞ்சை அந்த வலியும் சேர்த்து அழுத்த, “உண்மையாவே அவருக்குக் கலியாணம் நடந்திட்டுதுதானா?” என்று கேட்கும்போதே அவள் குரல் உடைந்து கரகரத்தது. அவனே தன் வாய் மொழியில் சொன்னபோதும் அப்படி இல்லாமல் இருந்துவிடாதா என்கிற நப்பாசை கேட்கவைத்தது.

மத்தும பண்டார ஒருகணம் தடுமாறிப்போனார். ஆசையும் நிராசையும் போட்டிபோடும் அந்த முகத்தைப் பார்க்க முடியாமல், “மகள்…” என்றார் இயலாமையுடன்.

அதுவே உண்மையைச் சொல்ல அவள் முகம் கசங்கிப் போயிற்று. “ஏன் இப்பிடிச் செய்தனீங்க? அவர் என்னை விரும்பினது உங்களுக்குத் தெரியும் தானே? தெரியாது எண்டு மட்டும் சொல்லிப் போடாதீங்க. உங்க எல்லாருக்கும் தெரியும் எண்டு எனக்குத் தெரியும். அவர் சொல்லி இருக்கிறார். பிறகும் ஏன் இப்பிடிச் செய்தனீங்க? நான் என்ன பாவம் செய்தனான் உங்களுக்கு?” கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி நியாயம் கேட்டவளைக் கண்டு அவருக்கும் விழிகள் கலங்கும் போலாயிற்று.

“அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க மகள். அந்த நேரம் என்ர நிலைமை அப்பிடி. மனுசி இல்ல, மகள் சுய நினைவிலேயே இல்ல, மகன் தப்பிறதே கஷ்டம் எண்டு சொல்லிப்போட்டாங்கள். இந்தக் கால் சரியாகி வாறதுக்கே எனக்கு ஒரு வருசத்துக்கு மேல பிடிச்சது. சுகர் வருத்தம் வேற இருக்கு. அந்த நேரம், என்ர மொத்தக் குடும்பத்துக்கும் கூலி வேலைக்குப் போய்க் கஞ்சி எண்டாலும் ஊத்தினது என்ர தங்கச்சிதான். அவளுக்கும் மனுசன் இல்ல. ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. அவளைக் கட்டிக் குடுக்கிற அளவுக்கு வசதியும் இல்ல…” என்றவரை இடைமறித்து,

“அதால என்ர சந்தோசத்தை மொத்தமா பறிச்சீங்களா அங்கிள்? பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு மனமே இல்லை எண்டு நினைச்சிட்டீங்களா? இல்ல அவளுக்கு ஆசையெல்லாம் வராதா? இல்ல காச வச்சு மனதில நினைச்சவனக் கூட மறக்க வைக்கலாம் எண்டு நினைச்சீங்களா? என்ன சொல்லுறீங்க? என்னட்ட ஒரு வார்த்த சொல்லி இருக்கலாமே? ஒரு வார்த்த போதுமே! உங்கட தங்கச்சி குடும்பத்தையும் சேர்த்து நான் பாத்திருப்பனே. என்ர சிசிரவ மட்டும் என்னட்ட தந்திருக்கலாமே. உங்களோட சேந்து நானும் சந்தோசமா வாழ்ந்து இருப்பனே. ஆரோ ஒருத்தியா நிண்டு அவரைப் பாக்கிற நிலை வந்திருக்காதே! உங்களுக்கு என்னைத் தெரியுமா எண்டு என்னட்டையே வந்து கேக்கிறார். என்ன சொல்ல நான்? ஏன் என்னை இப்பிடி நிப்பாட்டினீங்க? இனி நான் என்ன செய்ய?” என்ற அவளின் குமுறல்களைக் கேட்டு அவரும் துடித்துப் போனார்.

ஆனால், இதற்கெல்லாம் அவரால் என்ன பதில் சொல்ல முடியும்? அவளால் இப்படிக் கேட்க முடியும். அவரால் எப்படி அப்படி நினைக்க முடியும் என்றா? முதலில் மகனுக்கு அவள் வீட்டினரால் ஏதும் நடந்துவிடுமோ என்கிற பெரும் பயம் நெஞ்சில் இருக்கையில் எப்படி அவளிடம் சென்று நிற்பார்?

“முதல் சொல்லாம கொள்ளாம ஏன் காலில இருந்து மாயமாகிப் போனனீங்க. அங்கயாவது இருந்திருக்க இதெல்லாம் நடந்து இருக்காதே.” அவளுக்குத் தாங்கவே முடியவில்லை. இவர்கள் எல்லோராலும் மிக மிக மோசமாகத் தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாய் உணர்ந்து துடித்தாள்.

அவருக்கும் அவள் படும் ஆட்டைப் பார்க்க முடியவில்லை. அதில், “மகள், இண்டைக்கு நீங்க கேக்கிற எந்தக் கேள்விக்கும் என்னட்ட நியாயமான பதில் இல்ல. ஆனா, அண்டைக்கு நிறையப் பயம் இருந்தது. திடீர் எண்டு ஒரு நாள் மகன் கோல் பண்ணி அப்பா கொழும்புக்கு வாங்க, நான் இலங்கைக்கு வாறன் எண்டு சொன்னார். எனக்குச் சந்தோசத்துக்குப் பதிலா உங்கட வீட்டு ஆக்கள் அவர் வாறது தெரிஞ்சு திரும்பவம் ஏதும் செய்து போடுவீனமோ எண்டு பயமாத்தான் இருந்தது. காரணம், அங்க காலில அப்பப்ப என்னை ஆரோ கண்காணிக்கிற மாதிரி நான் உணர்ந்திருக்கிறன். நான் பயந்த மாதிரியே கொழும்பில இருந்து காலிக்குத் திரும்பி வரேக்க ஆக்சிடென்ட் நடந்ததும் அதுக்குக் காரணம் உங்கட வீட்டு ஆக்கள் எண்டுதான் அப்ப நினைச்சனான். அதுதான் ஆருக்கும் சொல்லாம கொள்ளாம மிச்சமா இருக்கிற என்ர குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு திருகோணமலைக்கு ஓடி வந்திட்டன். மகன் தேறி வந்ததும் அவசரம் அவசரமா நான் செய்த முதல் வேலையே இந்தக் கலியாணத்தை முடிச்சதுதான். மனுசியையும் என்ர காலையும்தான் பறி குடுத்திட்டன். மகனையாவது காப்பாத்த வேணும் எண்டு நினைச்சன்.” என்று அன்றைய தன் நிலையை விளக்கினார்.

அவர் என்ன சொன்னாலும் அவள் மனம் ஆறவேயில்லை. அவள் இழந்தது என்ன சாதாரண ஒன்றையா? உயிர் நேசமாயிற்றே! நான் என்ன துன்பங்களை அனுபவித்தாலும் பரவாயில்லை அவனை மட்டும் இழந்துவிடவே கூடாது என்று நினைத்த ஒருவனை அல்லவா! அவள் கன்னங்கள் இரண்டையும் தாங்கி, நெற்றியில் முத்தமிடுவானே, அவனை அல்லவா இழந்துவிட்டாள். தோளைச் சுற்றிக் கையைப்போட்டு அவள் நெற்றியோடு நெற்றி முட்டிச் சிரிப்பானே, அவனை அல்லவா இழந்துவிட்டாள்! அவள் மீதான அதீத காதலில் கண்ணீர் விட்டுக் கசிந்துருகினானே, அவனை அல்லவா இழந்துவிட்டாள்! மொத்தமாய்… ஒட்டு மொத்தமாய் இழந்துவிட்டாளே! தான் மிகவும் அநியாயமான முறையில் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாய் உணர்ந்தவளுக்கு வலி தாங்காமல் துடிக்கும் தன் இதயத்தைப் பிடித்து யாராவது நிறுத்திவிடமாட்டார்களா என்றிருந்தது.

“என்னை மட்டும் தான் அவருக்கு மறந்திட்டுதா?” அந்தக் கேள்வியைக் கேட்க அவளுக்குக் குரலே வரமாட்டேன் என்றது. எப்படி அப்படி அவளை மறப்பான்? என்ன வேண்டுமானாலும் அவனுக்கு நடந்திருக்கட்டும். அவனின் நிராவை எப்படி மறந்தான்? அவன் மறக்காமல் இருந்திருக்க இதெல்லாம் நடந்திராதே! அவள் இதழ்கள் அடக்கப்பட்ட அழுகையில் நடுங்கின. விழிகள் இரண்டும் கண்ணீரை அடக்கியடக்கி இரத்தமாய்ச் சிவந்து போயின.

அவர் துடித்துப் போனார். “இல்லை மகள். அவருக்குப் படிச்ச படிப்பு, பாத்த வேலை, எங்களை எண்டு எதுவுமே நினைவு இல்ல. நாங்களாத்தான் நான் அப்பா, அவள் தங்கச்சி, அத்தை எண்டு எங்களை நாங்களே அவருக்கு அறிமுகம் செய்தனாங்க. படிச்ச படிப்புக்கு வேலை பாக்க இல்லை அவர். இந்தக் கலியாண வீட்டுக்காரரின்ர இன்னொரு நகைக்கடைக்கு மனேஜரா இருக்கிறார்.”

“என்ன சொல்லுறீங்க?” அதிர்ந்து வினவினாள். அவளால் இதை ஏற்கவே முடியவில்லை. கண்ணுக்கு முன்னால் இருந்திருக்கிறான். அவ்ளோ இலங்கை முழுக்கத் தேடி இருக்கிறாள். கடவுளே… அவன் வேண்டும் என்பதற்காகக் காலத்தோடு, வீட்டினரோடு, தனிமையோடு, பிரிவின் துயரோடு என்று எல்லாவற்றோடும் போராடினாளே! கடைசியில் இப்படி விதியிடம் தோற்று நிற்கிறாளே!

விதி வென்று சிரிக்கிறது. காலம் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது. என்ன செய்வாள்? இதுதான் அவளுக்கு எழுதியது போலும். காலம் முழுக்கக் கிடந்து அழு என்று கடவுள் சொல்லிவிட்டான் போலும். இல்லாமல், சம்மதிக்கவே மாட்டார் என்று நினைத்த தந்தையே சம்மதித்த பிறகும் அவனை இப்படி இழக்கக் காரணமே இல்லையே! காதல் இனிக் கை கூடிவிடும் என்று நினைத்திருந்த நொடியில் இப்படி வஞ்சிக்கப்பட்டு இருக்கிறாளே! ஏதாவது நியாயமான ஒரு காரணம் இருந்திருந்தாலாவது மனம் ஆறியிருக்கும் போலும்.

“எப்ப லண்டன்ல இருந்து திரும்பி வந்தவர்?” குரலடைக்க வினவினாள்.

அவர் சொன்ன மாதத்தைக் கேட்டு அவள் உள்ளம் அதிர்ச்சியில் குலுங்கிற்று. “என்ன சொல்லுறீங்க? அப்ப அவருக்குப் படிப்பு முடிஞ்சு இருக்காதே அங்கிள். திகதி நினைவிருக்கா?” என்றாள் அவசரமாய்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அது எப்படி மகள் மறக்கும்?” என்று கேட்டு அவர் சொன்ன திகதியில் விழுக்கென்று நிமிர்ந்தாள். அவள் நிவேதா வீட்டுக்குச் சென்றதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருக்கிறான். அப்படியானால் அன்று அவன் சொன்ன சஸ்பென்ஸ் அவனா? தானே அவள் முன்னால் வந்து நின்று அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தர நினைத்தானா? அதுதான் நாடு திரும்புவதை அவளிடம் சொல்லாமல் விட்டானா? அப்படியானால் படிப்பு? அந்த நாள்களில் எல்லாம் காரணமே இல்லாமல் அவள் இதயம் கிடந்து துடித்ததே இதனால்தானா? உன் உயிர் இங்கே உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறான் என்று காலம் உணர்த்த முயன்றதோ! இது எதுவும் தெரியாமல் அவன் கைப்பேசிக்கு அழைத்து அழைத்து ஓய்ந்தாளே!

அதற்குமேல் அவளால் முடியவே இல்லை. முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள். அவன் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தர நினைத்திருக்க, காலம் அவர்கள் இருவருக்கும் பெரும் அதிர்ச்சியையே தந்திருக்கிறது. அன்றைக்கு அவனைப் பார்த்திருந்தால் அவள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும்? இனி? இனி? இந்தக் கேள்வி அவளைப் போட்டு இரண்டு இரும்புச் சட்டத்துக்குள் வைத்து நசித்தது! காலம் முழுக்கத் தனிமையா?

இத்தனை வருடங்களுமாவது அவன் நினைவுகளோடு வாழ்ந்தாள். இனி? அது கூட அவளுக்குச் சொந்தம் இல்லையே! அந்தக் கடவுள் அவளை ஏன் இப்படி வஞ்சித்தான்? அந்தளவில் என்ன பாவம் செய்தாள்? அவனை இழந்துவிடவே கூடாது என்று வீட்டினருக்குச் சொல்லாமல் பச்சை குத்தியதும் நகையை எடுத்ததும் அவ்வளவு பெரிய தவறோ? சத்தியத்தை மீறினாளே. அதனாலா? உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றிவிடு என்று சொன்னாரே அன்னை. அதைச் செய்யாமல் போனாளே. அதுதான் உன் உயிருக்கும் மேலானவனையே உன்னிடமிருந்து பறித்து, உனக்குப் பாடம் கற்பிக்கிறேன் என்று நினைத்தானா அந்தக் கடவுள்? இதற்கு அவள் உயிரைப் பறித்திருக்கலாம். கொஞ்சம் கூட வலித்திருக்காது.

“மகள்…” தன் மகளை விடவும் ஒரு சில வயதுகள் பெரியவளான அவள் அப்படி அழுவதை அவரால் தாங்கவே முடியவில்லை.

இந்த நிமிடம் தான் அப்படியெல்லாம் நடந்திருக்க வேண்டாமோ, மகனை இந்தப் பெண்ணிடமே குடுத்திருக்கலாமோ என்றுதான் நினைக்கிறார். ஆனால், அன்று மனத்தாலும் உடலாலும் மொத்தமாய் உடைந்திருந்தார். மனைவியின் இழப்பே அவருக்குப் பேரிழப்பு. இதில் காலும் இல்லை. மகனும் சுயத்தில் இல்லை. வேலை இல்லை. எதிர்காலம் மீதான பெரும் பயம் வேறு. சொந்த ஊருக்குத் திரும்பவே பயந்தார். அங்குப் போய் மட்டும் என்ன செய்வது என்கிற கேள்வி.

பக்கத்து வீட்டு நண்பர் வேறு இவர்களைத் தேடி அவள் வீட்டினர் வந்தார்கள் என்று சொன்னதும் தன் மொத்தக் குடும்பத்தையே ஒளித்துத்தானே வைத்திருந்தார். மறந்தும் தன்னைப் பற்றிய எந்தச் செய்தியையும் சொல்லிவிடாதே என்று கெஞ்சிக் கேட்டிருந்தாரே. அதன் பிறகும் அவர்கள் தன் குடும்பத்தைத் தேடுவது தெரிந்ததுமே மகள் சொன்னதைக் கூடக் கேட்காமல் திருமணத்தை முடித்து வைத்திருந்தார்.

அன்றைக்கெல்லாம் அவளை பற்றி யோசிக்கும் இடத்தில் அவர் இல்லை. எப்படியாவது மகனைக் காப்பாற்றிவிட நினைத்தார். அது மட்டுமே அவர் நினைப்பில் இருந்தது.

தன் குடும்பத்தையே வைத்துத் தாங்கும் தங்கைக்கு, அப்பாவி மருமகளுக்கு, தனக்கு, மகனுக்கு என்று அன்றைய நிலையில் அதுதான் அவருக்கு மிகச் சரியான முடிவாகத் தெரிந்தது.

அதன் பிறகும் காலிக்கோ, பேராதனைக்கோ அவன் போவதற்கு அவர் விடவேயில்லை. முதலில் இவர்கள் மீதான பயம் என்றால் பிறகு மகன் மீதான பயம். அவனுக்கு நினைவு திரும்பினாள் என்னாகும்? அவன் இப்படியே இருக்கட்டும் என்றுதான் நினைத்தார். ஏன் இணைய உலகத்தில் கூட அவன், சிங்கித்தி, ஜயருக்‌ஷி மூவரும் சொந்தப் பெயரில் இல்லை. புகைப்படங்கள் எக்காரணம் கொண்டு போடக் கூடாது என்று கடுமையாக எச்சரித்திருந்தார். சிசிரவும் எதற்கும் திமிரும் மகன் இல்லை என்பது அவருக்கு வசதியாயிற்று.

உண்மையில் அந்தளவுக்குப் பயந்தார். கஞ்சியைக் குடித்துவிட்டு என்றாலும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று நினைத்தார். ஆனால் இன்று…

முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் குலுங்கும் அவளைப் பார்க்கையில் மனம் பிசைந்தது. அவள் சொன்னதுபோல அவளிடம் சொல்லியிருக்கலாமோ என்று இப்போது நினைத்தார். சின்னப் பெண் இப்படித் துடிக்கிறாளே!

திருமணம் மண்டபம் என்பதும் சுற்றி இருப்பவர்கள் அவர்களை ஒரு மாதிரிப் பார்ப்பதும் ஒரு மாதிரி இருக்க,
“மகள்…” என்றபடி அவள் கையைப் பற்றினார். “என்ன மன்னிச்சுக்கொள்ளுங்க மகள். அந்த நேரம் எனக்கு அதுதான் சரியாப் பட்டது. ஆனா இப்ப…” என்றவர் பரிதவிப்புடன் அவள் முகம் பார்த்து, “எல்லாரும் மகனுக்குச் சுகமாகிட வேணும் எண்டுதான் கடவுளைக் கேப்பினம். ஆனா நான் அவர் இப்பிடியே இருந்திடோணும் எண்டுதான் கேக்கிறன். சரியோ பிழையோ இண்டைக்கு அவரை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. இன்னும் மூண்டு மாதத்தில இன்னொரு பிள்ளையும் பிறக்கப் போகுதம்மா. உங்களக் கெஞ்சி கேக்கிறன், அவரின்ர வாழ்க்கையக் கெடுத்துப் போடாதீங்க.” என்றதும் துடித்து நிமிர்ந்தாள் நிரல்யா.

அவள் கெடுப்பாளா? அவன் வாழ்க்கையை அவள் கெடுப்பாளா? இயலாமையும் அநியாயமாக அவனை இழந்த கோபமும் சுனாமியாகப் பொங்க, “இப்பிடித்தான் உங்கட மகனும் என்னைக் கேட்டார். என்னை விட்டுடாத எண்டு சொன்னார். ஆனா இண்டைக்கு… நான் தனியா நிக்கிறன். அவரின்ர நினைவிலேயே நான் இல்ல. ஆனா ஒண்டு… அவருக்கு நினைவு திரும்பிச்சோ, நீங்க தாங்க மாட்டீங்க!” என்றவள் அவரிடமிருந்து கையைப் பறித்துக்கொண்டு வேகமாய் அந்த மண்டபத்தை விட்டு ஓடிப்போனாள்.


அங்கே காருக்குள் அமர்ந்திருந்த சிசிர அழுதுகொண்டு ஓடும் அவளையே குழப்பத்துடன் பார்த்திருந்தான். அவனுக்கு நடப்பது எதுவும் விளங்காதபோதும் அந்தப் பெண்ணும், அவள் கண்ணீரும், உயிரையே உருக்கும் அவள் பார்வையும் அவன் நெஞ்சை என்னவோ செய்தன. அடிக்கடி நெற்றியை அழுத்திவிட்டான்.

“என்ன சிசிர?” அருகில் அமர்ந்திருந்த ஜயருக்‌ஷி வினவினாள்.

“தெரியா. தலை வெடிக்கும் மாதிரி வலிக்குது ருக்‌ஷி.” என்றதும் அவனை நெருங்கி அவன் நெற்றியை இதமாய் அழுத்திவிட்டாள். மனைவியின் மென் கரங்கள் இதம் சேர்க்க சீட்டில் சாய்ந்து விழிகளை மூடியவனின் கண்களுக்குள் வந்து நின்றாள் நிரல்யா.

அவன் புருவங்கள் சுருங்கின. ஏதோ ஒன்று அவனை மிக ஆழமாய் தொந்தரவு செய்தது.

அவன் வாழ்வின் இறந்தகாலம் எதையும் அறியாதவள், கணவனின் முகம் சுருங்குவது கண்டு, “டொக்டரிட்ட போவமா? உங்களுக்கு ஆக ஏலாம இருக்கு போலையே.” என்றாள் கவலையோடு.

“சேச்சே அந்தளவுக்கு எல்லாம் இல்ல. இரவு படுக்கவும் லேட் தானே. ஒரு நித்திரை கொண்டு எழும்பினா சரியாயிடும் எண்டு நினைக்கிறன்.”

இதற்குள் மெல்ல நடந்து வந்து காருக்குள் ஏறினார் மத்தும பண்டார. நிமிர்ந்து அமர்ந்து, காரை எடுத்தபடி, “அவாவை உங்களுக்கும் தெரியுமா அப்பா. ஏன் இப்பிடி அழுறா? அவாவை அப்பிடிப் பாக்கவே ஏலாம இருக்கு.” என்றான் கண்ணாடி வழியே அவரைப் பார்த்து.

மத்துமவுக்கு ஒருமுறை திக் என்று இருந்தது. வேகமாகச் சமாளித்து, “உங்களோட ஒரே கம்பஸ்ல படிச்சை பிள்ளை மகன். திடீர் எண்டு நீங்க காணாமப் போயிட்டீங்களாம் எண்டு விசாரிச்சவா. அதான் என்ன நடந்தது எண்டு எல்லாம் சொன்னனான். அதுதான் அழுறா.” என்று ஏதோ சொல்லிச் சமாளித்தாலும் தெளியாத மகனின் முகம் அவருக்குள் கிலியைப் பரப்பிற்று.

தொடரும்...

இந்த அத்தியாயங்கள் எனக்கும் இலகுவா எழுத முடியவில்லை. அதுதான் கொஞ்சம் கொஞ்சம் லேட் பண்ணுறேன். பொறுத்தருள்க.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 29


மண்டபத்திலிருந்து ஓடிவந்து ஒதுக்குப் புறமாய் இருந்த வாங்கில் ஒன்றும் அமர்ந்துகொண்ட நிரல்யாவின் நெஞ்சை ஒருவிதமான வலி போட்டு அழுத்தியது. அவளால் அவளுக்கு எந்தச் சமாதானங்களையும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு நடந்திருப்பது மிகப்பெரிய அநியாயம். அதை எப்படி ஏற்பாள்? அவன் திட்டம் போட்டது போன்று அன்று அவன் அவளைப் பார்க்க நிவேதா வீட்டுக்கு வந்திருந்தால் அவள் வாழ்க்கை எத்தனை அழகு மாயமாய் மாறியிருக்கும்? உயிராய் நேசித்தவனே கணவனாகியிருப்பான். இதே இரண்டு குழந்தைகளுக்கு அவள் அன்னையாகியிருப்பாள். கண்டா கனவுகள் எல்லாம் மெய்யாகியிருக்கும்.

இனி? அவளுக்கு நெஞ்சில் விண் விண் வலித்தது. தன்னையறியாது அழுத்தி அழுத்திவிட்டாள்.

இதற்கா இத்தனையையும் கடந்து வந்தாள்? அவனை இன்னொருத்தியோடு பார்ப்பதா இந்த ஐந்து வருடங்களைப் பலி கொடுத்தாள்?

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னைக் காணாமல் தினம் உன்னைத் தேடினேன்
என் கண்ணீர்த் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்

அவளுக்காகவே எங்கிருந்தோ வந்தது இந்தப் பாடல்.

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்
நான் சாம்பலானாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…

அதுவும், ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மையா…
என்கிற வரியில் மொத்தமாய் உடைந்தவள் வாயைப் பொத்திக்கொண்டு விம்மினாள். அவளால் சுவாசிக்க முடியவில்லை. வாயைத் திறந்து மூச்சு விட முயன்றாள்.

*****


அனந்தனுக்கு அன்று விடிந்ததில் இருந்தே மனம் சரியில்லை. நிரல்யா இப்படித் தனியாகப் புறப்பட்டால் அவன் சஞ்சலப்படுவது வழமைதான். என்னதான் அவளுக்கு 28 வயதாகிவிட்டது, தன்னைத்தானே பார்த்துக்கொள்வாள், இன்னும் நான் என் சிறகுகளுக்குள் பொத்தி வைத்திருக்க நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும் இயல்பாக இருக்க முடிவதில்லை. கவனம் கலைந்துகொண்டே இருப்பான். அடிக்கடி கைப்பேசியை எடுத்துப் பார்ப்பான். அவள் பாதுகாப்பாய் இருக்கிறாள் என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக்கொள்ள விளைவான. பக்கத்தில் இருந்தால் மட்டுமே நிம்மதியாக வேலைகளைப் பார்ப்பான்.

இன்று காலையில் அரை மணி நேரத்தில் அங்கு மண்டபத்தில் நிற்பேன் என்று சொன்னவள், அதன் பிறகு அவன் கேட்ட ‘போயிற்றியா?’ வுக்கு ‘ம்!’ என்று அனுப்பியிருந்தாள்.

அங்கிருந்து மூன்று மணிக்கு முதல் புறப்படும்படி சொல்லியிருந்தான். அப்போதுதான் நான்கரை ஐந்துக்கு முதல் வவுனியாவுக்கு வந்துவிடுவாள் என்று கணித்திருந்தான். நேரம் மூன்றை நெருங்கவும் ‘வெளிக்கிட்டியா?’ என்று கேட்டிருந்தான். அதற்குப் பதில் வரவில்லை. நேரத்துக்கே புறப்பட்டுவிட்டாளோ என்று ஓடினாலும், அவனுக்குத் தகவல் தராமல் காரை எடுக்கமாட்டாளே என்று யோசனை ஓடிற்று. ஆனாலும் அரை மணி நேரம் இன்னும் பொறுத்து பார்த்துவிட்டு ‘எல்லாம் ஓகேயா?’ என்று கேட்டு மீண்டும் அனுப்பியிருந்தான். அதற்கும் பதில் வரவில்லை என்றதும் அவன் புருவங்கள் சுருங்கின.

இப்படி எங்காவது தூரப் பயணங்கள் போகும் நேரத்தில் அவன் மெசேஜ் அனுப்பி, அவள் பதில் தராமல் இருந்தால் அவனுக்குக் கோபம் வந்துவிடும் என்று அவளுக்குத் தெரியும். அவள் பாதுகாப்பு அவனுக்கு மிக மிக முக்கியம் என்றும் தெரியும். அதனால் அவளும் உடனுக்குடன் பதில் அனுப்பிவிடுவாள். இப்படி இருக்க மாட்டாள்.

பிறகும் ஏன் இன்னும் பதில் வரவில்லை? மனத்தில் வேறு என்னவோ போட்டு அழுத்தியது. எந்த வேலையையும் பார்க்க முடியவில்லை. அவள் குரலைக் கேட்டால் மட்டும் அடுத்து என்ன என்றாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்திருந்தான். ‘இவளத் தனியா அனுப்பிப்போட்டு நான் படுற பாடு!’ வாய் விட்டு முனகியவன் வேகமாக அவளுக்கு அழைத்தான்.

மூன்று ரிங்குகள் போயின. இவனுக்கு அதற்கே இரத்த அழுத்தம் ஏற ஆரம்பித்தது. நான்காவதில் அழைப்பு ஏற்கப்பட்டாலும் அந்தப் பக்கம் எந்தச் சத்தமும் இல்லை. ஆனால், என்னவோ மூச்சுக்காய்த் தவிப்பதுபோல் ஏதோ ஒரு சத்தம். இவன் பதறி, “நிரல்?” என்றான் அவசரமாய்.

அந்தக் குரலையும் அதிலிருக்கும் அக்கறையையும் அவளுக்குத் தெரியும். அது காலம் காலமாய் அவளைப் பாதுகாத்திருக்கிறது. அவள் துன்பங்களைக் களைந்திருக்கிறது. அவளே வெறுத்து ஒதுக்கியபோதும் அவளைத் தன் சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்திருக்கிறது. அதை அவள் உணராதபோதும் அவளின் ஆழ்மனத்துக்கு தெரிந்திருந்தது. அதில், “மச்சான்…” என்று, வேகவீதியில் பயணித்த வாகனத்தில் அடிபட்ட மான்குட்டியாய்க் கதறினாள் நிரல்யா.

அவன் உயிர் ஒருகணம் நின்று துடித்தது. இருந்த இருக்கையிலிருந்து துடித்துப் பதறி எழுந்திருந்தான். “என்ன? என்ன நிரல்? என்னடி உனக்கு? ஏன் அழுறாய்? நல்லா இருக்கிறாய் தானே.” அவனுக்குப் பதற்றத்தில் குரல் நடுங்கியது. அவள் பதில் சொல்லும் முதலே ஒரு கை கைப்பேசியை காதுக்குக் கொடுத்திருக்க, மறு கையால் மேசையில் கிடந்த திறப்பை எடுத்துக்கொண்டு படிகளில் தாவி இறங்கி, கடைக்குள்ளிருந்து பஜிரோவை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தான்.

கடையில் இருந்தவர்கள் எல்லோரும் என்னவோ என்று பார்த்ததை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.

அவன் கேட்ட கேள்விகளை உள்வாங்கும் நிலையில் அவள் இல்லை. “இங்க வாறீங்களா? இப்பவே. எனக்கு… எனக்கு நான்… நான் செத்திடுவன் போல இருக்கு… நெஞ்சுக்க என்னவோ செய்யுது மச்சான்…” என்றதும் ஓடிக்கொண்டிருந்தவன் அப்படியே நின்றுவிட்டான். அவன் நெஞ்சு ஒருமுறை குலுங்கிற்று.

“லூசாடி நீ? என்ன கதைக்கிறாய்? உனக்கு ஒண்டும் நடக்காது. நல்லா மூச்ச இழுத்து விடு. நிதானமா இரு. நான் இருக்கிறன். நான் இருக்கிறன் உனக்கு!” பஜிரோவினுள் பாய்ந்து எறியவன் முதல் வேலையாகக் காதுகளுக்குள் ஹெட்போன்களை கொழுவினான்.

“ப்ளீஸ் நீங்க வாங்க. இப்பவே! எனக்கு பயமா இருக்கு.” திரும்ப திரும்ப அதையேதான் சொன்னாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இந்தா வெளிக்கிட்டன். பஜிரோ சத்தம் கேக்குதெல்லா உனக்கு? சரியா ஒண்டரை மணித்தியாலத்தில அங்க நிப்பன். நீ எங்கயும் போகாத. அங்கேயே இரு, சரியா?” அவன் பஜிரோ அந்த நொடியே புழுதியைக் கிளப்பியபடி திருகோணமலையை நோக்கிப் பாய ஆரம்பித்திருந்தது.

“நீங்க வாங்க. ப்ளீஸ்ஸ்ஸ்…”

அவள் நிதானத்தில் இல்லை என்று விளங்கிற்று. அவனுக்கும் இந்த நிமிடமே அவள் பக்கத்தில் இருக்க வேண்டும் போல்தான் இருந்தது. அவளின் துன்பங்கள் அத்தனையையும் அந்த நிமிடமே களைந்துவிடத் துடித்தான். வளர்ந்துவிட்டாள், தன்னைத் தானே பார்த்துக்கொள்வாள் என்று தனியாக விட்ட தன் மீதுதான் கோபம் வந்தது அவனுக்கு.

“வந்துகொண்டுதான் இருக்கிறன் நிரல். வெளிக்கிட்டன். இப்ப வந்திடுவன். சரியா? என்ன நடந்தது. காலியாண வீட்டுக்குத்தானே போனனீ. அங்க ஏதும் நடந்ததா? அழாம, நிதானமாச் சொல்லு பாப்பம்.” மெல்ல அவளைப் பேச வைக்க முயன்றான்.

அது வேலை செய்தது. தன் உள்ளத்தின் குமுறலைப் பகிர யாரும் இல்லாமல், தனக்குள் வைத்து ஜீரணிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தவளும், “அவர்… அவர் சிசிர அவரைப் பாத்தனான். அவருக்குக் கலியாணம் முடிஞ்சு பிள்ளைகளும் இருக்கு…” என்று அவள் சொன்னதைக் கேட்டவனின் கையில் வாகனம் ஒரு முறை ஆடி அடங்கிற்று.

அவனுக்கே அப்படி என்றால் அவளுக்கு?

வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “சரி, என்ன எண்டு விசாரிப்பம். நான் வாற வரைக்கும் எங்கயும் போறேல்ல. அங்கேயே இரு. அவனோட கதைச்சியா?” என்று அவளிடம் பேச்சுக் கொடுத்து, மெல்ல மெல்ல நடந்தவற்றை எல்லாம் கேட்டறிந்துகொண்டான்.

“கெதியா வாங்க.” எதைச் சொன்னாலும் கடைசியில் இந்த வார்த்தையில்தான் கொண்டுவந்து முடித்தாள்.

அவனும் சலிக்கவில்லை. “இந்தா வந்திட்டன்.” என்று தான் அந்த நிமிடத்தில் கடக்குமிடத்தை அவளுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தான்.

சரியாக ஒன்றே கால் மணி நேரத்தில் அந்த மண்டபத்தினுள் பஜிரோவை விடும்போதே, மண்டபத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வாங்கில் ஒன்றில் கால்களைத் தூக்கி குறுக்கி வைத்துக்கொண்டு, முகம் புதைத்து நடுங்கிக்கொண்டிருந்தவளை அவன் விழிகள் கண்டுகொண்டிருந்தன.

கிடைத்த இடத்தில் பஜிரோவை நிறுத்திவிட்டு இறங்கி அவளிடம் ஓடினான்.

“நிரல்!”

அவன் குரலுக்குத்தான் எத்தனை சக்தி? விழுக்கென்று நிமிர்ந்தவள், “மச்சான்!” என்று கதறியபடி அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்துக் கதறித் தீர்த்தாள்.

துடித்துப்போனான் அனந்தன். அவளை இப்படிப் பார்த்துவிடக் கூடாது என்றுதானே அத்தனையையும் அவன் ஒருவனே தாங்கினான். அவள் இன்னொருவனின் கை சேர்ந்தால் தன் உலகமே அழிந்துபோகும் என்று தெரிந்தும் தாங்கிக் கொண்டானே! கடைசியில் தன் நிலையிலேயே அவளையும் நிறுத்திவிட்ட அந்தக் கடவுளைச் சபித்தான்.

“நிரல், காணும் அழுதது. நிமிரு, கண்ணை துடை! சும்மா சும்மா அழுறேல்ல.” அவன் சொன்ன எந்த ஆறுதல் வார்த்தைகளும் அவள் இதயத்தைத் தொடவேயில்லை.

அவன் வயிற்றுக்குள்ளேயே முகத்தைப் புதைத்து கதறித் தீர்த்தாள். அவனுக்கும் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. கடைசியில் அவள் தலையை வருடிக்கொடுத்தபடி அப்படியே நின்றான்.

“எல்லாம் போச்சு மச்சான். எல்லாமே போச்சு. அவர் இனி எனக்கு இல்ல. அவர் இனி எனக்கு இல்ல. நம்பவே ஏலாம இருக்கு மச்சான். எப்பிடி என்னை மறந்தவர். எப்படி அவரால என்னை மறக்க முடிஞ்சது? வருவார் வருவார் எண்டு பாத்துக்கொண்டு இருந்தனே. தாங்கேலாம இருக்கு மச்சான். எனக்குச் சாகோணும் மாதிரி இருக்கு. நெஞ்செல்லாம் வெடிக்கும் மாதிரி இருக்கு…”

அவ்வளவு நேரமாய் அவள் வலிக்கு மருந்தாய் நின்றவன் நொடியில் கொதித்துப் போனான். “லூசாடி நீ? என்ன கதை கதைக்கிறாய்? நீ ஏன் சாகோணும்?” தன்னிடமிருந்து அவளைப் பிரித்து அவன் உறும, மூச்செடுக்க முடியாமல் திணறியபடி “மச்…சா…ன்…” என்று அவன் நெஞ்சுச் சட்டையைக் கொத்தாகப் பற்றியபடி அப்படியே மூர்ச்சையாகிப் பின்னால் சரிந்தவளைக் கண்டு நடுங்கிப்போனான் அனந்தன்.

என்ன நடக்கிறது, அவன் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்துகொள்வதற்கே அவனுக்குச் சில நொடிகள் பிடித்திருந்தன.

அடுத்த நொடியே நெஞ்சு நடுங்க, “நிரல், கண்ணைத் திற! உனக்கு ஒண்டும் இல்ல. கண்ணைத் திறந்து பார் நிரல். இல்ல உன்ன நானே கொண்டுடுவன்! ஏய் கண்ணைத் திறடி!” என்று பதற்றத்தில் படார் படார் என்று அவள் கன்னத்தில் தட்டினான்.

அவன் அடித்த அடிகளில் அவள் கன்னம் சிவந்ததே தவிர அவள் விழிக்கவில்லை. தலை பின்னால் சரிந்து காற்றில் ஆடியது. பதற்றத்தில் சுவாசிக்கிறாளா, உயிர் இருக்கிறதா என்று கூடத் தெரியமாட்டேன் என்றது அவனுக்கு. கண்ணை மறைத்த கண்ணீரைத் தோள் பட்டையில் வேகமாகத் துடைத்துக்கொண்டு அவளை உற்று உற்றுப் பார்த்தான்.

அவள் அசைவற்றுக் கிடைப்பதாகவே பட அவனுக்குத் தொண்டை எல்லாம் உலர்ந்து போயிற்று. நெஞ்சு டமார் டமார் என்று அடித்துக்கொண்டது.

அன்னை தந்தையை ஒன்றாகப் பறிகொடுத்தபோது கூட இப்படி உணரவில்லை. தனக்கு அவள் எந்தளவில் முக்கியம் என்று அவனே உணர்ந்த கணங்கள் அவை.

இதற்குள் அந்தப் பக்கத்தில் நடமாடிய ஒரு சிலர் என்ன என்ன என்று ஓடி வந்து விசாரித்ததை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன். சூழ்நிலை உணர்ந்து யாரோ ஒருவர் ஓடிவந்து தண்ணீர் தந்தார். வேகமாக வாங்கி அவள் முகத்துக்கு அடித்தான். அப்போதும் அவள் அசையவில்லை.

போத்தலை போட்டுவிட்டு, “ஏய் கண்ணத் திறடி. திறடி எண்டுறன்.” என்று மீண்டும் அவள் கன்னத்தில் தட்டினான். அவனுக்குப் பயத்தில் எண்சாண் உடம்பும் நடுங்கியது. நெஞ்சு உலர்ந்து போயிற்று. “ப்ளீஸ் மா. திரும்பவும் என்னை அனாதையாக்கிப் போடாத நிரல்!” என்றவனைப் பெரும் பயம் பிடித்துக்கொண்டது. தான் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் தனக்கெதிராகவே திரும்பிவிடும் என்று தெரிந்துவிட, அவளை அப்படியே அள்ளித் தூக்கிக்கொண்டு பஜிரோவுக்கு ஓடினான்.

தொடரும்...

இனித் திங்கள் தான் வருவேன். ஹாப்பி வீக்கெண்ட்! கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

 

நிதனிபிரபு

Administrator
Staff member

அனந்தனின் பயம் பதற்றம் எல்லாம் ஒரு நிலைக்கு வந்திருந்தன. நிரல்யாவை உள்ளே வைத்தியர் பரிசோதிக்க அவன் வெளியே நின்றிருந்தான். நிச்சயமாக வந்துவிடுவான் என்று இத்தனை வருடங்களாக இறுக்கமாகப் பற்றியிருந்த நம்பிக்கை முற்றிலுமாக அறுந்து போனதும், இனி அவன் தனக்கு இல்லவே இல்லை என்கிற மிகக் கசப்பான உண்மையும், அதையெல்லாம் ஜீரணிக்க முடியாமல் போராடிய போராட்டமும்தான் அவள் மூர்ச்சையானதுக்குக் காரணமாக இருக்கும் என்று, ஓரளவு நிதானத்துக்குத் திரும்பிவிட்ட அவனால் ஊகிக்க முடிந்தது.

ஆனால் அவளை இந்த நிலையில் நிறுத்தியது யார்? வேறு யாருமில்லை. அவன்தான். அவன் மட்டுமே காரணம்! அதை நினைக்க நினைக்க அவனுக்கு அவன் மீதே அப்படி ஒரு ஆத்திரம் உண்டாயிற்று.

‘அவரைத் தேடித் தாங்க மச்சான்.’ என்று எத்தனை நம்பிக்கையாய் வந்து கேட்டாள்? காலிக்குப் போகலாம் என்றதும் அவள் முகம் எப்படி மலர்ந்தது? அவன் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த மலர்ச்சியை, அந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டானே! இந்த ஐந்து வருடங்களில் அவனால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்றே! நீயெல்லாம் பெரிய இவன் என்று எதற்கு இருக்கிறாய்? அவள் வாய்விட்டுக் கேட்டதை வாய்க்கப்பண்ணிக் கொடுக்க வக்கற்றவன் என்று அவன் மனச்சாட்சியே சொல்லிவிட, ஆத்திரத்தை அடக்க முடியாமல் கையை ஓங்கிச் சுவரில் குத்தினான்.

“ஐயோ என்ன செய்றீங்க?” அந்த வழியால் வந்த தாதிப்பெண் பயந்துபோய் ஓடிவந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிர்த்து ஒரு வார்த்தை உதிர்த்தான் இல்லை. அவளுக்கு அந்தப் பார்வை மெல்லிய பயத்தைத் தந்தாலும், “இஞ்ச இப்பிடியெல்லாம் நடக்கிறேல்ல.” என்று சொல்லிவிட்டு ஓடிப்போனாள்.

அவன் அடிக்காமல் இருந்திருந்தால், அவர்களின் கடையை உடைக்காமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திராதோ? ஆரம்பத்திலேயே அவர்களின் நேசத்தை விளங்கிக்கொண்டிருக்கலாமோ? அவன் நெஞ்சுச் சட்டையைப் பற்றிக்கொண்டு அவள் மூர்ச்சையாகிய அந்த நொடியை மறக்க முடியாமல் தலையை உலுக்கினான். இந்த வலி இனி எப்படி அவள் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் என்று அவனுக்குத் தெரியுமே! தெரிந்தும் விட்டுவிட்டானே!

தொண்டை ஏறி இறங்க தலையை இரண்டு கைகளாலும் கோதிப் பற்றியவனுக்கு நெஞ்சின் புழுக்கம் அடங்கவே மாட்டேன் என்றது.

இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் கவனமெடுத்துத் தேடியிருக்க வேண்டுமோ? அப்படியும் அவனால் நினைக்க முடியவில்லை. அப்படி அவன் இருக்கவும் இல்லை. அவள் ஒன்று கேட்டு எப்படி அப்படி விடுவான்? அவளுக்கே தெரியாமல், எல்லாப் பக்கமும் விசாரித்துக்கொண்டுதான் இருந்தான்.

சாதாரணமாக வாழும் ஒருவரைக் கண்டுபிடிப்பது என்பது வேறு. தேடப்படுகிறோம் என்று தெரிந்து ஒளிந்துகொண்டவர்களைக் கண்டுபிடிப்பது என்பது வேறுதான். என்றாலும்… அவனால் இந்த என்றாலுமுக்கு முறையான பதில் கொடுக்க முடியவில்லை.

திரும்ப திரும்ப ஏன்டா விட்டாய், ஏன்டா கண்டுபிடிக்காம விட்டாய் என்று அவன் மனமே அவனைப் போட்டு உலுக்கியது. அவளை ஏன் இந்த நிலைக்குக் கொண்டு வந்தாய்? ‘அவர் இனி எனக்கு இல்ல மச்சான்’ என்கிறாளே! அந்த வலி என்னவென்று தெரிந்திருந்தும் அவளை அதே நிலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டானே!

வளர்ந்து, தனக்கென்று ஒரு நேசத்தைத் தேடிக்கொண்ட பிறகு அதற்காய் அவள் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். ஆனால், அவன் நெஞ்சில் நிற்பது எல்லாம் அந்தச் சின்ன வயதில் கள்ளமில்லா அன்பைத் தந்து, அவளே அறியாமல் அவனை அரவணைத்துக்கொண்ட அவள் மட்டும்தான். அவனுக்காகத்தானே அவனோடே கதைக்காமல் விட்டாள். அதன் அடிநாதம் அவன் நன்றாய் வாழ வேண்டும், நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்கிற பாசமாயிற்றே! அதற்கு என்ன செய்தான்? இதோ உயிர் போகும் வலியை அவளை அனுபவிக்க வைத்திருக்கிறான். அவனை அரவணைத்து, வாழ்வின் மீது பிடிப்பைத் தந்தவளுக்கு அவன் நியாயம் செய்யவே இல்லை!

விபத்து ஏதும் நடந்திருக்கலாம், குடும்பமே எங்காவது ஓடி ஒளிந்திருக்கலாம், இல்லை வெளிநாட்டுக்கே கூட ஓடியிருக்கலாம் என்றெல்லாம் யோசித்திருக்கிறான்தான். அந்த வழியில் விசாரித்தும் இருக்கிறான்.

பிறகும் எப்படி அவன் காதுக்கு எட்டாமல் போனது? இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் ஏன் அவன் பார்வைக்கு வரவில்லை?

சினமும் சீற்றமும் பொங்க பிரைவேட் ஏஜென்சிக்கு அழைத்தான். “இந்த அஞ்சு வருசமா சுளையாக் காசு வாங்கிப்போட்டு என்ன …” என்று எடுத்ததுமே அவன் வாயிலிருந்து வந்த கெட்ட வார்த்தைகளில் அந்தப் பக்கம் இருந்தவர் காது கூசியே போயிற்று.

“அனந்தன் ப்ளீஸ்…” அவன் கோபக்காரன், சற்றே பொல்லாதவன் என்று தெரிந்தாலும் இப்படி மரியாதை இல்லாமல் கதைத்ததில்லை என்பதால் தடுமாறிப்போனார்.

“என்ன ப்ளீஸ்? அவன் இந்த அஞ்சு வருசத்தில கலியாணம் கட்டிப் பிள்ளையையும் பெத்து வச்சிருக்கிறான். ஆனா நீங்க இன்னும் தேடிக் கிழிக்கிறீங்க. எங்களுக்குப் பக்கத்தில திருகோணமலைல இருந்திருக்கிறான், அதுவும் எங்கட நகைக்கடை பிஸ்னஸ்லையே வேலையும் செய்திருக்கிறான். ஆனா நாங்க கண்டு பிடிக்கேல்ல. இப்ப நீங்க எனக்குச் செய்ய வேண்டியது, உங்களால அவனை ஏன் கண்டுபிடிக்க ஏலாமப் போனது எண்டுற காரணத்தைக் கண்டு பிடிச்சுச் சொல்லுறதுதான். இல்லை எண்டு வைங்க, ஏன்டா இந்தக் கேஸ ஒழுங்காப் பாக்காம விட்டன் எண்டு காலம் முழுக்கக் கவலைப்படுற மாதிரிச் செய்வன்!” என்றான் சொன்னதைச் செய்வேன் என்கிற குரலில்.

வேறு யாருமாய் இருந்திருக்க உன்னால் முடிந்ததைப் பார் என்று அவரும் சொல்லியிருப்பார். அனந்தன் சொன்னதைச் செய்வான் என்பதும் அவருக்கே சவால் விட்ட கேஸ் இது என்பதும் சேர, “அனந்தன், உங்கட கோபம் எனக்கு விளங்குது. அதே நேரம் எனக்கும் ஏன் கண்டுபிடிக்கேலாமப் போனது எண்டுற காரணம் தெரிய வேணும். இது என்ர தொழில்ல எனக்கு விழுந்த மிகப்பெரிய அடி. அதால ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள் டைம் தாங்க. காரணத்தைக் கண்டு பிடிச்சுச் சொல்லுறன்.” என்று நிதானமாகவே பேசியவர் நிரல்யாவிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட அத்தனை தகவல்களையும் கேட்டுக் குறித்துக்கொண்டு, திரும்பவும் பேசுவதாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அப்போதும் அவன் மனம் அமைதியடைய மாட்டேன் என்றது. இதைக் கண்டு பிடித்து இனி எண்ணாகப் போகிறது? உள்ளே படுத்திருக்கிறவளை எப்படி இதிலிருந்து வெளியே கொண்டுவரப் போகிறான்? அவனை மீட்டவளை அவன் எப்படி மீட்கப் போகிறான்?

“பயப்பிடுற மாதிரி பெருசா ஒண்டும் இல்ல. அவா ஓகேயாத்தான் இருக்கிறா. நீங்க சொன்னதை வச்சுப் பாக்கேக்க அளவுக்கதிகமான அதிர்ச்சிதான் மயக்கத்துக்குக் காரணம். மற்றும்படி ஆரோக்கியமாத்தான் இருக்கிறா. செலைன் ஏறுது. அது முடிஞ்சு, அவா முழிச்சதும் நீங்க கூட்டிக்கொண்டு போகலாம்.” என்று சொல்லிவிட்டுப் போனார் வைத்தியர்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

அங்கே அவள் வாடிய கொடியாகக் கட்டிலில் கிடந்தாள். ஒரு கணம் அவள் முகத்தையே பார்த்தவன் அவளருகில் அங்கிருந்த முக்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான். இன்னும் அவள் கண் விழிக்கவில்லை. விழிக்காதவரை நல்லது என்றே தோன்றிற்று. விழித்தால் திரும்பவும் அழுவாளே! கலைந்திருந்த அவள் தலையை மெல்ல வருடிவிட்டான். அவளின் ஒற்றைக் கரத்தை எடுத்துத் தன் கைக்குள் பொத்திக் கொண்டான். அவன் உள்ளம் துடித்தது. அவளுக்காய் அழுதது. உன்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டேனே என்று மருகியது.

எப்படி இதிலிருந்து அவளை வெளியே கொண்டுவரப் போகிறான்? அவனுக்குத் தெரியவே இல்லை. அவன் கரத்தின் பற்றுதலா இல்லை விடாமல் அவன் வருடிக்கொடுத்த வருடலில் கிடைத்த ஆறுதலா மெல்ல விழிகளைத் திறந்தாள் நிரல்யா. இதயம் தன் துடிப்பை நிறுத்த, தன் உணர்வுகளை அவளுக்குக் காட்டாது இமைக்கவும் மறந்து அப்படியே அவளையே பார்த்திருந்தான் அனந்தன். அவன் உள்ளத்தில் மட்டும் பெரும் துடிப்பு. அவளும் அவனிடமிருந்து பார்வையை அகற்றவே இல்லை. ஆனால், மெல்ல மெல்ல விழிகளில் நீர் சேர ஆரம்பித்தது. பூ முகம் கசங்கியது. அழுகையை அடக்கியதில் அவள் உடல் மெலிதாகக் குலுங்கிற்று. அவனுக்கு முதுகு காட்டி அவள் திரும்ப முயல அவன் விடவில்லை.

“அழுறேல்ல!” என்றான் அழுத்தமாய் அவளையே பார்த்து.

அவளுக்கு அதற்கும் கண்ணீர் பெருகி வழிந்ததே தவிர குறையவில்லை.

“நிரல்!” அவனுடைய ஒற்றை அதட்டலில் அவள் திகைத்து விழிக்க, “அழாத எண்டு சொன்னான் எல்லா!” என்றான் கோபமாக.

அப்போதும் அசையாமல் அவனையே பார்த்திருந்தாள் அவள்.

“எழும்ப ஏலுமா? வெளிக்கிடுவமா?” என்றான் வேறு எதையும் பேசாமல். அவனுக்கு அடங்கி மெல்ல எழுந்து அமர முயன்றாள். அணிந்திருந்த சேலை விலகி இருந்தது. அதற்கு ஒன்றும் சொல்லாமல், “பாத்ரூமுக்கு போயிற்று முகத்தையும் துடைச்சுக்கொண்டு வா!” என்று அவளை அனுப்பி வைத்தான். வரும்போது சீராக வந்தாள் அவள்.

நேராக ஒரு உணவகத்துக்குச் சென்று, அதட்டி உருட்டி அவளைக் கொஞ்சமாய்ச் சாப்பிட வைத்து, அவள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, உடை மாற்ற வைத்து, அவள் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

நிரல்யாவின் காரை எடுப்பதற்காக வீட்டில் இருக்கும் இன்னொரு திறப்பை எடுத்துக்கொண்டு நாதனை பஸ்ஸில் வரச் சொல்லியிருந்தான்.

மீண்டும் அவனுடைய ஜீப் அவளோடு வவுனியா நோக்கி அளவான வேகத்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

அவளுக்கு இதமாய் இருக்கட்டும் என்று மியூசிக் பிளேயரை போட்டுவிட்டான். அதுவோ அவன் நெஞ்சைச் சொல்ல ஆரம்பித்தது.

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா… யார் போனா என்ன
யார் போனா… யார் போனா… யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி

என்னவோ அவனுக்காகவே அந்த வரிகள் இருப்பது போலிருக்க அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் அந்த வரிகளையோ, அதிலிருக்கும் அவனையோ உணரும் நிலையில் இல்லை.

ஒரு கணம் ஒரு போதும் பிரியக் கூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுகக் கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையக் கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுகக் கூடாதே
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்குப் பழகுறதும் நியாயம் தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

அதற்குமேல் முடியாமல் ஜீப்பை கரையாக நிறுத்திவிட்டு இறங்கி நின்று தலையைக் கோதினான். நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. ‘நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுகக் கூடாதே!’ என்றுதான் அவனும் நினைத்தான். கடைசியில் அவளின் ஒட்டுமொத்தக் கண்ணீருக்கும் அவனே காரணமாகிப் போனானே! திரும்பி அவளைப் பார்த்தான். அவள் இந்த உலகத்திலேயே இல்லை. தன்னைச் சுற்றி நடப்பதை உணரும் நிலையிலும் இல்லை. எங்கோ பார்வை இருக்க, சீற்றில் தலையைச் சாய்த்துக் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தவளைப் பார்க்க, அவனுக்கு அவனையே அடித்து நொறுக்கும் அளவில் கோபம் வந்தது.

‘என்னடா செய்து வச்சிருக்கிறாய் அவளை? உன்ன நம்பிக் கேட்டாளே, அவனைக் கண்டு பிடிச்சுக் குடுத்திருக்க எப்பிடி இருந்திருப்பாள்? இனி?’ இந்தக் கண்ணீர் அவளுக்கு நிரந்தரமோ என்று நினைத்து முடிக்க முதலே, இல்லை, அதற்கு அவளை விடமாட்டேன் என்கிற மூர்க்கம் அவனுக்குள் கிளம்பிற்று.

வேகமாக அவள் பக்கம் வந்து, “இறங்கு!” என்று அவளை இறக்கிக் கூட்டிக்கொண்டு நடந்தான். அவளுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவனோடு இழுப்பட்டாள். வெயில் மறைந்து இருள் கவிய ஆரம்பிப்பதற்கு முன்னான மிக இதமான ஒரு பொழுது. அந்த இடமும் ஊர்ப்புறமாய் இருக்க இலகுவாய் நடக்க முடிந்தது. ஒரு இடத்தில் கவனம் இல்லாமல் அவள் காலை வைத்துவிட்டுத் தடுமாறவும், “பாத்து நடக்கமாட்டியா?” என்று அவள் கையைப் பற்றிக்கொண்டவன் அதன் பிறகு விடவில்லை.

அவள் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக்கொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகுதான் அவள் அதை உணர்ந்தாள். மனம் திடுக்கிட, குழப்பத்தோடு அவனைப் பார்த்தவள் அவன் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

அன்றொருநாள் இதே போன்று அவன் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள அவள் முயன்றபோது, தானாகவே விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டவன் இன்று விடவில்லை. இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

“விடுங்கோ!” நடப்பதன் பொருள் புரியாதபோதும் அதைச் சாதாரணமாக ஏற்க முடியாமல் முணுமுணுத்தாள்.

“ஏன் விடோணும்? நான் உன்ர கையப் பிடிச்சதே இல்லையா? ஏன் விடோணும், காரணம் சொல்லு?”

அவனுடைய இந்தத் திடீர்க் கோபத்துக்குக் காரணம் விளங்காமல் விழித்தாள் அவள். கையைத்தானே விடச் சொன்னாள். குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.

“இனி விடேலாது! இப்பிடித்தான் பிடிப்பன்! இனி என்னோடயே நீ வாறாய்!” என்று நடத்திச் சென்றவன் அவள் கையை விடவேயில்லை. எதையும் யோசிக்கும் நிலையில் இல்லாதவளும் அவன் கோபத்துக்குப் பயந்து அடங்கியே போனாள்.

அவளின் அழுகை அடங்கி, இலகுவாகச் சுவாசிக்கத் தொடங்கும் வரையில் நடக்க வைத்தான். கவனம் வேறு ஒன்றில் திரும்புகையில் நாம் இருக்கும் சுழலுக்குள் இருந்து நம்மை அறியாமலேயே வெளியே வந்துவிடுவோம். தற்போதைக்கு அவளை அவளின் அழுகையிலிருந்து அப்படித்தான் வெளியே கொண்டுவந்தான் அனந்தன்.

எதிர்ப்பட்ட ஒரு கடையில் தேநீர் வாங்கி, அவளோடு சேர்ந்து தானும் அருந்திவிட்டு மீண்டும் திரும்பி நடந்து ஜீப்பை எடுத்தபோது அவன் தெளிந்திருந்தான்.





தொடரும்...

நேற்று உண்மையில் சின்ன அத்தியாயம் என்று எனக்கும் தெரிஞ்சுதான் இருந்தது. அதுக்கு மேல எழுதினா இந்த அத்தியாயம் வரைக்கும் எழுதவேணும் என்றுதான் அதை அப்படியே முடித்துப் போட்டேன். அதுதான் இன்றைக்கு இதை எழுதினேன். இதோ இந்த அத்தியாயமும் போட்டாச்சு. சந்தோசம் தானே? இனி உண்மையா திங்கள் தான் வருவேன்.

மற்றது, இந்தக் கதைல அடிக்கடி பாட்டு லைன்ஸ் வருது. அது ஓகேயா? இல்ல நல்லா இல்லையா? எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க.

மக்களே நல்லா கவனிங்க. ரெண்டு... ரெண்டு அத்தியாயங்களில் மொத்தமா அனந்தனை கொண்டு வந்திருக்கிறன். இனியும் சொல்லுறேல்ல அனந்தனை காண இல்ல எண்டு. ஓக்கேய்ய்ய்ய்ய!

கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 31



எப்படி என்றில்லாமல் அடுத்த மூன்று நாள்கள் கடந்திருந்தன. திருமண வீட்டுக்கென்று புறப்பட்டுப் போன மகள், ஒற்றை நாளில் பாதி உயிராகித் திரும்பி வந்ததைக் கண்டு, சுந்தரலிங்கமும் அமிர்தவல்லியும் துடித்துப் போனார்கள். இருவர் பார்வையும் ஒருங்கே அனந்தனிடம்தான் பாய்ந்தன.

அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டபோது மீண்டுமொருமுறை இடிந்துபோய் அமர்ந்துவிட்டனர். அதுவும் அமிர்தவல்லியால் நடப்பவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதற்கா இத்தனை பாடுகளையும் பட்டாள்? சத்தியத்தை மீறி, பச்சை குத்தி, வயதுக்கு ஏற்ற வாழ்க்கை வாழாமல், எந்தச் சந்தோசத்தையும் அனுபவிக்காமல் ஒரு தவம் போன்று அவனுக்காக மட்டுமே வாழ்ந்தது இதற்குத்தானா? அவளைக் கட்டிப்போடும் என்று நம்பி, அவசரப்பட்டு நான் வாங்கிய சாத்தியம்தான் இத்தனைக்கும் காரணமா? திரும்பவும் அவரால் அந்தப் புள்ளியில் வந்து நின்று, தன்னையே நோக்கத்தான் முடிந்தது.

சுந்தரலிங்கத்துக்கும் செய்வதறியா நிலைதான். இப்படி நடந்திருக்க வேண்டாம் என்றுதான் அவரும் எண்ணினார். வந்ததிலிருந்து கண்ணீரிலேயே கரையும் அவளைப் பார்க்கையில் நெஞ்சு அடைக்காமல் இல்லை. ஐந்து வருடங்கள் என்பது எவ்வளவு பெரிய துன்பத்தையும் இழப்பையும் கடந்து வருவதற்குத் தேவையான காலத்தைகியும் விட அதிகமானது.

அப்படியிருந்தும் கூட அவனை மறக்காமல், அவன் மீதான நம்பிக்கையை இழக்காமல், கொக்குக்கு ஒன்றே மதி என்பதுபோல், என் உலகம் அவன் இல்லாமல் இயங்கவே இயங்காது என்று சொல்லும் முகமாய்க் காத்திருந்தவளின் அந்த நெடிய காத்திருப்பு, இத்தனை பெரிய ஏமாற்றத்தில் போய் முடிந்திருக்க வேண்டாம் என்றுதான் நினைத்தார்.

பாசமாய்ப் பெற்றெடுத்த மகளாயிற்றே! தமக்குப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவளாவது சந்தோசமாக இருக்கட்டும் என்கிற மனநிலைக்கு இத்தனை வருடங்களில் வந்திருந்தார்.

இனி என்ன செய்யப் போகிறாள், அவளின் எதிர்காலம் எண்ணாகப் போகிறது என்கிற கேள்விகள் இப்போது அவரையும் தாக்கிற்று. ஆனாலும் கூட, இத்தனை காலமும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு என்று தெரியாமலேயே இருந்த காத்திருப்பு முடிவுக்கு வந்ததில் நிம்மதிதான். அவளோடு சேர்த்து அனந்தனும் காத்திருந்தானே! அதனாலேயே மனைவி அளவுக்கு அவர் பெரிதாய்க் கவலைப்படவில்லை.

கூடவே, இத்தனை வருடங்கள் அவளை விடாத அனந்தன் இனியும் விடமாட்டான் என்கிற அசைக்க முடியா நம்பிக்கையும் அவரை அமிர்தவல்லி அளவுக்கு உடைய விடவில்லை. இருந்தாலும் என் மகளைக் கட்டிக்கொள்கிறாயா என்று அன்று போன்று இன்றும் உரிமையாய்க் கேட்க வாய் வரவில்லை. வேண்டும் என்றதும் தூக்கி வைத்துக்கொள்ளவும் வேண்டாம் என்றதும் தூக்கி எறியவும் அவன் என்ன அவர்கள் கையில் கிடைத்த பொம்மையா? மனத்தில் அவள் மீது விருப்பம் இருந்தும் சிறு பார்வையில் கூடக் காட்டாமல், தனக்கான எல்லையில் தற்போதுவரை நிற்பவனிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கேட்பார்? ஒரு தடவை ஆசை காட்டி மோசம் செய்ததே போதும். இனி விதி விட்டபடி மகள் வாழ்க்கை அமையட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

அனந்தனும் அவர்கள் மூவரையும் கவனிக்காமல் இல்லை. கண்ணீரிலேயே கரையும் நிரல்யா, இனிச் செய்ய எதுவுமே இல்லை என்பது போன்று தனக்குள்ளேயே மருகிக் கரையும் அமிர்தவல்லி, அவன் முகம் பார்ப்பதையே தவிர்த்துத் தனக்குள் தவிக்கும் சுந்தரலிங்கம் என்று எல்லோர் எண்ணவோட்டங்களையும் அறிந்துதான் வைத்திருந்தான்.

அதுவும் சுந்தரலிங்கத்தை நினைக்கையில் அவன் உள்ளம் கனிந்துதான் போயிற்று. தனக்காய் இத்தனை யோசிக்கும் அந்த மனிதரை அல்லல் பட அவன் எப்படி விடுவான்?

அவர்கள் மூவரும் கொஞ்சம் நிதானமாகி, இந்தச் சஞ்சலங்களிலிருந்து வெளியே வரட்டும் என்று விட்டிருந்தான். கூடவே, நிரல்யாவும் இல்லாமல் அவனுக்குக் கடை வேலைகள் இருக்க நிற்க நேரமில்லாத அளவுக்கு இருந்தன. சுந்தரலிங்கம் உதவிக்கு வந்ததார்தான் என்றாலும் முன் போன்ற வேகம் இப்போது அவரிடம் இல்லை.

இத்தனைக்கு மத்தியிலும் கூட அவர்கள் மூவரையும் கவனிப்பதை அவன் நிறுத்தவில்லை.

*****

இங்கே சிசிரவுக்கு அன்றிலிருந்து உறக்கம் பறிபோயிற்று. ஏதோ போல் இருந்தான். வெளியே அமைதியாக இருந்தாலும் ஆழ்கடலுக்குள் பொங்கும் சுனாமியாக என்னென்னவோ காட்சிகள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து வந்து போயின. உறங்க முடியவில்லை, எந்த வேலையிலும் கவனம் செலுத்த இயலவில்லை, மனைவி மகளைக் கூடக் கவனிக்க முடியவில்லை. ஆழ் மனது எந்த நேரமும் எதையோ தேடிற்று. ஊமையாய் அவன் உள்ளம் அழுவது அவனுக்கே கேட்பது போலொரு வலி.

அதுவும் அந்தப் பெண்ணின் அழுத விழிகளும், அவள் பார்த்த பார்வைகளும் அவன் நிம்மதியை மொத்தமாகப் பறித்துக்கொண்டன. அவள் அவனிடம் எதையோ கேட்டாள்! எதற்கோ துடித்தாள்! எதனாலோ ஆதங்கம் கொண்டாள்! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவள் பரிதவித்த பரிதவிப்பு உயிர் போகும் வாதையை அவனுக்குத் தந்தது.

பல்கலையில் சக மாணவனாக அவனைத் தெரிந்த ஒருத்தி எதற்கு இப்படிக் கண்ணீர் உகுக்க வேண்டும்? தந்தை சொன்னது போன்று அவனுக்கு நடந்த விபத்தை அறிந்து அவள் அழவில்லை. அதற்கு முதலே அழுதாள். அவளின் விடாத பார்வையும் கண்ணீரும்தானே அவனை அவளை நோக்கி இழுத்ததே. அன்று அவள் அழுததில் விபரமாய் எதையும் விசாரிக்க முடியாமல் போயிற்று. கூடவே அவள் பார்வைகள் அவனை இயல்பாய் இருக்க விடவுமில்லை.

இப்போதோ அதற்கெல்லாம் வேறு பொருள் தேடினான். மத்துமவிடம் கேட்டுப் பார்த்தான். முறையான எந்தப் பதிலையும் தர அப்போதும் அவர் தயாராயில்லை. இதில், இந்த இரண்டு நாள்களாக அவர் அவனைத் தவிர்ப்பதும் முகம் பாராமல் பேசுவதும் வேறு உறுத்தின.

இப்படித் தனக்குள் உழன்றபடியும் எதையெதையோ சிந்தித்தபடியும் அவனால் இரண்டு நாள்களை மட்டுமே சமாளிக்க முடிந்தது. மூன்றாம் நாள் இன்னும் பல புதிய காட்சிகள் மின்னி மின்னி மறைந்தன. தலை வலி உச்சம் கண்டது. இரவு இரண்டு மாத்திரைகளை ஒன்றாகப் போட்டுக்கொண்டு மனைவியை அணைத்தபடி உறங்கிப் போயிருந்தான்.

‘அப்பா ப்ளீஸ் அவரை விடுங்கப்பா!’ என்று திடீரென்று கதறினாள் அந்தப் பெண். “நிரா!” என்று கத்திக்கொண்டு துடித்துப் பதறி எழுந்து அமர்ந்தான் சிசிர.

அவனுக்கு வியர்த்து வழிந்தது. பிடரியில் உயிர் போவது போலொரு வலி. தொட்டுத் தடவிப் பார்த்தான். அங்கு எதுவும் இல்லை.

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த ஜயருக்‌ஷி, “என்ன சிசிர, ஏன் கத்தினனீங்க? கனவேதும் கண்டீங்களா?” என்றாள் நெஞ்சு படபடக்க

மனைவியைத் திரும்பிப் பார்த்தான். நிறைமாதத்தை நெருங்கிக்கொண்டு இருப்பவள் பயமும் பதற்றமுமாய் அவனையே பார்த்திருந்தாள்.

அப்போதுதான் அவளையும் சேர்த்துப் பயப்படுத்திவிட்டது புரிய, “கனவுதான் போல. நீ பயப்பிடாத.” என்று ஆறுதல் தரும் விதமாகச் சொல்லிவிட்டு, அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் பருகிவிட்டுத் தரத் தானும் பருகினான். கட்டிலில் தலையணையை முதுகுக்குக் கொடுத்துக் கால் நீட்டி அமர்ந்தவனின் நெஞ்சு இன்னுமே படபடவென்று அடித்துக்கொண்டுதான் இருந்தது.

ஆனாலும் அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, மார்பில் சாய்த்து “எனக்கு ஒண்டும் இல்ல. நீ படு.” என்று அவள் உச்சியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவளுக்கும் கணவனின் அச்செய்கை அந்த நேரத்தில் மிகவுமே தேவையாக இருக்க இன்னுமே அவனோடு ஒன்றிக்கொண்டாள். ஆனாலும், அந்தத் திருமணத்திற்குச் சென்று வந்ததிலிருந்து கணவனினதும் மாமனாரினதும் நடவடிக்கைகளில் தெரியும் வித்தியாசம் ஒருவிதக் கலவரத்தை உண்டாக்கியிருக்க, “பயமா இருக்கு.” என்றாள் மெல்லிய குரலில்.

“ஏன்?”

“தெரியா.”

தன்னால் அவளும் காரணமற்று கலங்குவது புரிந்ததில் தன் அணைப்பை இன்னும் கொஞ்சம் இறுக்கி, “அப்பிடியெல்லாம் கண்டதையும் யோசிக்காத. மறந்துபோன பழசுகள் எல்லாம் அப்பப்ப நினைவு வாற மாதிரி இருக்கு. அது என்ன எண்டு தெளிவாத் தெரியுதும் இல்ல. அதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு. இன்னும் ரெண்டு நாள் பாத்திட்டு டொக்டரிட்டை போயிற்று வரட்டோ எண்டு யோசிக்கிறன்.” என்றான் அவன்.

வேகமாய் நிமிர்ந்து, “அப்பிடிப் பழசெல்லாம் நினைவு வந்தா என்னை மறந்திடுவீங்களா??” என்றாள் அவன் முகத்தையே பார்த்து.

அவள் கண்களில் தெரிந்த கலவரத்தில் அவள் மனத்தைப் படித்தவனுக்குச் சிரிப்பு வந்தது. அவள் மூக்குடன் தன் மூக்கை உரசி, “அப்பிடி மறப்பனா? அப்பிடியே மறந்தாலும் என்னை நீ விட்டுடுவியா? வந்து நினைவு படுத்த மாட்டியா?” என்றான் விளையாட்டுக் குரலில்.

“விடுறதா? என்னை ஆரு எண்டு நினைச்சீங்க? காதுல பிடிச்சு இழுத்துக்கொண்டு வருவன். வந்து நாங்க வாழ்ந்த சந்தோசமான வாழ்க்கை எல்லாத்தையும் ஒண்டு ஒண்டாச் சொல்லி, உங்களுக்கு எல்லா நினைவையும் வர வச்சிடுவன்!” என்றதும் அவன் தலையைப் பின்னுக்குச் சாய்த்து சத்தமாகச் சிரித்தான்.

அவசரமாக அவன் வாயைப் பொத்தினாள் ருக்க்ஷி. “அச்சோ மெல்லச் சிரிங்க. உங்கட குரல் சச்சினிக்குக் கேட்டுதோ பிறகு என்னை இப்பிடி உங்கட கைக்க இருக்க விடமாட்டா!” என்றாள் மூக்கையும் முகத்தையும் சுருக்கிக்கொண்டு.

மகளின் நினைவில் அவன் முகம் மலர்ந்து, கனிந்து, விகசித்தது. அவள் அப்படித்தான். உறங்கும் வரையில் அவன் வேண்டும். பின் மத்தும தன்னோடு வைத்துக்கொள்வார். பெரும்பான்மை இரவுகளில் விழிக்கமாட்டாள் என்பதில் ருக்க்ஷிக்கு கொண்டாடட்டம்தான்.

செல்லமாக அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு, “முழிச்சிருந்தது காணும். நித்திரையைக் கொள்ளு. இன்னும் கொஞ்ச நாளில எங்கட மகன் வந்து உன்னப் படுக்கவே விடமாட்டான்.” என்றான் மென் முறுவலோடு.

உதட்டில் தானாய் முறுவல் மலர மீண்டும் அவன் முகம் பார்த்து, “மகனா?” என்று ஆர்வத்தில் கண்கள் மின்ன வினவினாள்.

“மகன்தான்!” என்றான் அவனும் முறுவல் விரிய.

“மகன் எண்டால் சந்தோசம்தான். எண்டாலும் என்ன பிள்ளை எண்டாலும் பரவாயில்ல. எனக்கு உங்களை மாதிரி இருந்தாப் போதும்!” என்றவள் தன்னால் முடிந்த வரையில் தன் வயிறு விட்ட வரையில் அவனைக் கைகளால் கட்டிக்கொண்டு மார்பில் சாய்ந்துகொண்டாள்.

மனம் தன் சஞ்சலங்களையெல்லாம் களைந்து, சுகமான அமைதியில் திளைக்க நிம்மதியாக உறக்கத்தைத் தழுவிக்கொண்டாள்.

ஒரு கை அவளை வாகாக அணைத்துக்கொள்ள, மாற்றக் கையால் அவள் கழுத்து வரையிலும் இருவருக்கும் சேர்த்துப் போர்த்திக்கொண்டவன் மனத்தில் மட்டும் மிகுந்த போராட்டம்.

யார் அந்த நிரா? அந்தப் பெண்ணா? அன்று அவள் பெயரைக்கூட கேட்காமல் விட்டுவிட்டோமே! ஆனால், அவள் பெயரைச் சொல்லி அவன் ஏன் கத்த வேண்டும்? யாரோ அடித்ததுபோல் வலித்ததே. தன் பின்னே ஒளிந்து கிடக்கும் மர்மம் என்ன என்று தெரியாமல் மிகவுமே குழம்பிப் போனான் சிசிர.

மெல்ல மெல்ல அவன் விழிகள் உறக்கத்தில் மூடின. அப்போது அவளே திரும்பவும் வந்தாள். உயிர் நேசத்தை விழிகளில் நிரப்பி அவன் கேசம் கோதினாள். எம்பி அவன் முகமெங்கும் ஈர முத்தங்கள் பதித்தாள். அவன் கன்னத்தைத் தன் கைகளில் தாங்கி, ‘என்ர வீட்டு ஆக்கள் என்ன செய்தாலும் என்னை விட்டுடாதீங்க சிசிர. எனக்கு நீங்க வேணும், காலம் முழுக்க.’ என்றாள் கண்ணீர் வழிய. திடுக்கிட்டு விழித்தவனின் கண்களிலும் கண்ணீர். ஏனோ துடைக்க துடைக்கப் பெருகியது.

இது அவளேதான்! அந்த அழுத விழிகளேதான்! அவனுக்காக அவ்வளவு துடித்தவள் அவளேதான்! அப்படியானால் தன் கைக்குள் இருப்பவள்? வேகமாகக் குனிந்து பார்த்தான். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் ஜயருக்க்ஷி. அப்படியானால் இவள் யார்? அவன் கைகள் நடுங்கின. பிடி தளர்ந்தது. அதில் அவள் அசைய மெல்ல அவளைத் தலையணையில் கிடத்திவிட்டு வேகமாய் விலகி அமர்ந்தான். அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தொண்டை உலர்ந்து தேகமெல்லாம் நடுங்கிற்று. கால்களைத் தரைக்கு இறக்கி, தொடைகளில் முழங்கைகளை ஊன்றித் தலையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டவனின் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது.

அவள் முத்தமிட்ட ஈரம் இன்னுமே அவன் முகம் எங்கும் இருப்பது போலொரு மாயை. விரல்கள் நடுங்க தடவிப் பார்த்தான். அப்படி எதுவுமில்லை. ஆனால், அவன் உணர்ந்தானே! அவள் அழுதாளே!

அவனால் மேலே யோசிக்கக் கூட முடியவில்லை. நெஞ்சை அப்படி ஒரு பயம் பிடித்துக்கொண்டது. அவன் வாழ்வில் இரண்டு பெண்களா? அது எப்படி? அந்த இரவை உறக்கமில்லாது கழித்தவன் அடுத்தநாள் தந்தையிடம் எதையும் கேட்டுக்கொள்ள போகவில்லை. அவர் உண்மையைச் சொல்லப்போவதில்லை என்கையில் எதற்குக் கேட்க?

அடுத்தநாள் வேலைக்குச் சென்றவனால் அந்த வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. யோசிக்க யோசிக்கத்தான் தந்தையின் புரியாத பல செய்கைகள் இப்போது சந்தேகத்தைக் கிளப்பின.

வேலை, வீடு இரண்டையும் தாண்டி அவன் வேறு எங்குப் போவது என்றாலும் தடுத்துவிடுவார். இதுவரையில் திருகோணமலையைத் தாண்ட விட்டதேயில்லை. ஆரம்ப நாள்களில் அவனுக்குள் நிறையத் தேடல்கள் இருந்தன. என்னைப் பற்றி எனக்கே தெரியவில்லை என்றால் எப்படி என்கிற தடுமாற்றத்தில் பேராதனைக்குப் போய்வரவா என்று ஒருமுறை கேட்டபோது அவ்வளவு கோபப்பட்டிருந்தார்.

திருமணமான புதிதில் ஜயருக்க்ஷியோடு தியேட்டர், ஹோட்டல், கடற்கரை என்று வெளியே புறப்பட்டாலே அவர் பதற்றமாவதும், அடுத்த இரண்டு நாள்களுக்கு ஒருவிதப் பயத்துடன் சுற்றுப்புறத்தையே கவனிப்பதும், உறக்கத்தைத் தொலைத்துவிட்டு விழித்தே கிடப்பதையும் கவனித்துவிட்டு அவனாகவே கொஞ்சம் கொஞ்சமாக அப்படியான பயணங்களைக் குறைத்துக்கொண்டிருந்தான். கூடவே, ருக்க்ஷி சச்சினிக்குத் தாய்மை உற்றதும் காரணமாகிப் போனது.

‘என்ர பிரெண்ட்ஸ் ஒருத்தரைக் கூடவா அப்பா உங்களுக்குத் தெரியாது?’ என்ற அவனின் நம்பவே முடியாத கேள்விக்குக் கூட, ‘பழசு எல்லாம் வேண்டாமே, நான் இழந்ததெல்லாம் போதும் மகன்’ என்று இரஞ்சியது என்று இப்படி நிறைய!

அன்று, அந்த விபத்தினால் உண்டான பெரும் இழப்புகளால் பயந்திருக்கிறார் என்று புரிந்து, அவர் மீது இரக்கப்பட்டு, அவர் விருப்பத்துக்கே வளைந்து கொடுத்தவனால் இனியும் முடியும் போலில்லை.

அந்த அழுத விழிகள் அதன் பின்னிருக்கும் துயரத்தை, மாற்ற முடியாத துன்பத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி அவனைத் தூண்டின. அவளின் பெயரைக்கூட கேட்காமல் விட்ட தன் முட்டாள்தனத்தைத் திரும்பவும் நொந்துகொண்டான்.

என்னவோ வேலை பார்க்க முடியும் போலில்லை. உறக்கமில்லாது இரவைக் கழித்தது வேறு அவன் உற்சாகத்தை முற்றிலுமாகப் பறித்துக்கொண்டிருந்தது. தலை வேறு திரும்பவும் விண் வின் என்று வலிக்க ஆரம்பிக்க ஒரு பால்த் தேநீருடன் யன்னலோரமாய் சென்று நின்றான்.

அவன் நின்றுகொண்டிருந்தது இரண்டாம் மாடியில். மேலிருந்து வீதியை வேடிக்கை பார்க்க மனம் சற்றே சமன்பாடும் உணர்வு.

மழை மெலிதாகப் பெய்துகொண்டிருந்தது. ஒரு பெண் பின்னால் பாக் ஒன்றைக் கொழுவிக்கொண்டு வேக வேகமாய் நடந்துகொண்டிருந்தாள். யாரோ ஒரு வாலிபன் ஓடிவந்து அவள் குடைக்குள் புகுந்தான். அவள் பயந்து நெஞ்சில் கையை வைக்கவும் இவன் உதடுகள், “மகே லஸ்ஸன கெல்ல !” என்று தன்னையறியாது உச்சரித்தன.

தொடரும்...

கருத்திடும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த அத்தியாயம் எப்படி இருக்கு என்று சொல்லுங்க.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 32


ஒற்றை அறையில், இருள் சூழ்ந்த இரவில், விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில், தன்னந்தனிமையில் தரையில் சுருண்டு கிடந்தாள் நிரல்யா. அவளின் சிசிரவை இன்னொரு பெண்ணின் கணவனாகக் கண்டு ஐந்து நாள்களாயிற்று. நினைக்கும்போதெல்லாம் இன்னுமே நெஞ்சை அடைத்தது. விழியோரம் சூடான கண்ணீர் அரும்பின.

உண்மையில் அவளுக்குத் திடமனம்தான். இல்லாமல், அவனை அப்படிக் கண்டும் இன்னும் அவள் இதயம் துடித்துக்கொண்டு இருக்குமா? எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள், கற்பனைகள்? அத்தனையும் தவிடுபொடியாகிப் போயிற்றே!

எங்கோ இருக்கிறான், என்னவோ அவனுக்குப் பிரச்சனை, என்றாயினும் என்னைத் தேடி வருவான் என்று அசைக்க முடியாத அளவுக்கு நம்பினாளே! இனி?

எத்தனை எத்தனையோ உள்ளக் குமுறல்கள், துயரங்கள், நெஞ்சு அடைக்க அடைக்க அடக்கிவைத்த துன்பங்கள் எல்லாவற்றையும் அவனைக் காணும் நாளில் கொட்டித் தீர்த்துவிட்டுக் கதறி முடிக்க வேண்டும் என்று காத்திருந்தாளே. இனி? நதியைப் படகால் கடப்பது போன்று காலத்தை அவன் நினைவுகளால் கடந்துகொண்டிருந்தாள். இனி?

அவனோடான அழகிய நிகழ்வுகள் எல்லாம் இப்படி வலி தரும் நினைவுகளாய் மாறிப்போகும் என்று நினைக்கவே இல்லையே!

இனி அவன் எனக்கு இல்லை!இனி அவன் எனக்கு இல்லவே இல்லை என்று வலிக்க வலிக்கச் சொல்லிக்கொண்டு உயிரைக் குடையும் இந்த வலியிலிருந்து வெளியே வரத்தான் விரும்புகிறாள். முடிய வேண்டுமே! அதற்கு அவள் தன்னை அழிக்க வேண்டும். இல்லையோ அவளும் தன் நினைவுகளை இழக்க வேண்டும்.

இது எதுவும் முடியாமல் விழிகளை இறுக்கி மூடினாள். ஆதிகாலத்தில் அழியாமல் இருக்க வரைந்துவைத்த கோட்டோவியமாய்க் கண்ணீர் கன்னங்களில் இறங்கிற்று.

அப்போது அவள் அறையின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவள் பழைய நாள்களுக்கு ஒருமுறை சென்று திரும்பினாள். அப்படி அவள் கதவைத் தட்டுகிறவன் ஒரே ஒருவன்தான். இப்போது ஏன் வந்திருக்கிறான்? முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்து வந்து கதவைத் திறந்தாள். ஏமாற்றாமல் அவன்தான் நின்றிருந்தான்.

கலைந்த தலை, அழுது வீங்கிய முகம், நலுங்கிய ஆடை என்று நின்றவளைப் பார்வையால் ஒருமுறை அளந்துவிட்டு, “மேல வா! உன்னோட கதைக்கோணும்.” என்றுவிட்டு மேலேறினான்.

அவளுக்குப் படபடத்தது. ஏதாவது நடந்து, அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க எண்ணி, அவள் அறைக்குள் பதுங்கிக்கொள்கையில்தான் இப்படி வந்து அழைத்துச் சென்று விசாரிப்பான். இன்று என்ன? ஒன்றும் விளங்காமல் மேலே சென்றாள்.

அமைதியான இரவுப் பொழுது. சில்லிடும் காற்று. அதனால் உண்டான மரங்களின் மெல்லிய சலசலப்பு. இருளோடு பின்னிப் பிணைந்திருந்த நிலவின் மெல்லிய ஒளி என்று மிக ரம்மியமான நேரம். கைகளைக் கட்டிக்கொண்டு, மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தவனின் பார்வை படியேறி வரும் அவளில்தான் இருந்தது.

அதுவே அவளை நிமிர விடாமல் செய்ய, மெல்ல வந்து அவன் முன்னால் நின்றாள். என்ன பேசப் போகிறானோ என்கிற கலக்கம் நெஞ்சைக் கவ்விப் பிடித்தது.


நொடிகள் கடந்துகொண்டே இருந்தன. பேச அழைத்தவன் பேச்சை ஆரம்பிப்பதாய் இல்லை. தான் நிமிர்ந்து அவனைப் பாராமல் பேசமாட்டான் என்று விளங்கிவிட மெல்ல நிமிர்ந்து அவன் பார்வையைச் சந்தித்தாள்.

அதற்காகவே காத்திருந்தவனும், “எங்கட கலியாணத்துக்கு ஒழுங்கு செய்யப் போறன்.” என்று நிதானமாக அறிவித்தான்.

“என்ன?” அவளுக்கு அவன் அதைத்தான் சொன்னானா என்கிற பெரும் சந்தேகம். “என்ன கதைக்கிறீங்க?” என்றாள் சட்டென்று தொற்றிக்கொண்ட கோபத்துடன்.

“அப்பிடி என்ன பிழையா கதைச்சிட்டன்? சரி சொல்லு, நீ என்ன ஐடியால இருக்கிறாய்?” என்றான் இப்போதும்
அதே நிதானத்துடன்.

எதையும் சிந்திக்கும் நிலையிலேயே இல்லாதவள் என்ன திட்டம் வைத்திருக்கப் போகிறாள்? முதலில் அவள் எப்படி இன்னொருவனை? நினைக்கவே நெஞ்செல்லாம் பதறிப்போனது.

“சொல்லு! இனி என்ன செய்யப் போறாய்?”

செய்ய என்ன இருக்கிறது? அவள் உலகம்தான் முற்றிலுமாய் அழிந்து போயிற்றே! கண்ணீர் விழிகளை நிறைக்கவும் பார்வையை அகற்றிக்கொண்டாள்.

“எனக்குப் பதில் வேணும் நிரல்!”

“என்ன பதில் சொல்லச் சொல்லுறீங்க. உங்களுக்கு எல்லாம் தெரியும். பிறகும் இப்பிடிக் கேட்டா?” என்றாள் தவிப்புடன்.

“எல்லாம் தெரிஞ்சதாலதான் கேக்கிறன். இனி அவன் உன்ர வாழ்க்கைல இல்ல. அடுத்தது என்ன எண்டு பாக்க வேண்டாமா?”

“என்ன மச்சான் கதைக்கிறீங்க? அவர் இல்லை எண்டதும் நீங்க எண்டு நினைக்க நான் என்ன…” என்றவளுக்கு மேலே பேச முடியவில்லை. ஆனாலும் சமாளித்து, “ப்ளீஸ்! நீங்களும் என்னை வதைக்காதீங்க. இதப்பற்றிக் கதைக்கவே எனக்கு உடம்பும் மனமும் கூசுது. என்னால இன்னொருத்தர என்ர வாழ்க்கைல அனுமதிக்கவே ஏலாது.” என்றாள் கண்ணீருடன்.

அவனுக்குச் சுள் என்று கோபம் வந்தது. “உடம்பும் மனமும் கூசுற அளவுக்கு அப்பிடி என்ன செய்யக் கூடாததை நீ செய்திட்டாய்? ஒருத்தனை விரும்பினாய். இனி அவன் உனக்கு இல்லை எண்டு தெரிய வந்திருக்கு. அவ்வளவுதானே? அதுக்கெல்லாம் உன்ன இப்பிடியே விடேலாது.” என்றான் எரிச்சலுடன்.

அவளுக்கு நெஞ்சு பதறியது. இது என்ன புதுப் பூகம்பம் என்று அல்லாடினள். “ப்ளீஸ், இப்பிடியெல்லாம் கதைக்காதீங்க. எனக்கு இனி வாழ்க்கை எண்டு ஒண்டு இல்ல. நீங்க ஒரு கலியாணத்தைக் கட்டுங்க. என்னாலதானே இவ்வளவு காலமும் தனியா இருந்தனீங்க.” என்றாள் தழுதழுத்த குரலில் கெஞ்சலாக.

“உன்னால இல்ல உனக்காக!” அவள் மீதே பார்வையைப் பதித்துத் தெளிவாகச் சொன்னான் அவன்.

அவன் சொன்னதன் பொருள் அவளுக்கு முழுமையாக விளங்கவில்லை. ஆனாலும் அதைப் பற்றி யோசிக்காமல், “அவரை நான் உயிருக்கு உயிரா விரும்பி இருக்கிறன். அவர்தான் உலகம் எண்டு வாழ்ந்து இருக்கிறன். அப்பிடியான என்னைப் போய்…” என்று தன்னை விளக்க முயன்றவளை இடையிட்டு, “இனியும் அப்பிடித்தான் வாழுவியோ?” என்றான் அவன் கூர்மையான பார்வையுடன்.

அந்த நிலவின் மெல்லிய வெளிச்சத்திலும் அந்தப் பார்வை அவள் நெஞ்சைக் கூறு போடுவது போலிருந்தது. முகம் கன்றப் பார்வையை அகற்றினாள்.

“பதில் சொல்லு! இனியும் அவனை நினைச்சுக்கொண்டுதான் இருக்கப் போறியா?”

அது கூடாதே! அவன் இன்னொருத்தியின் கணவனாயிற்றே! பெரும் சிரமத்துக்கு மத்தியில் இல்லை என்பதுபோல் தலையசைத்தாள்.

“அதில இருந்து நீ வெளில வரத்தானே வேணும்?”

வரத்தான் வேண்டும். ஆனால், முடிய வேண்டுமே! கண்கள் குளமாகின.

“அதுக்குத்தான் இந்தக் கலியாணம்!” என்றான் அவன் முடிவு போல.

அவள் துடித்து நிமிர்ந்தாள். “சத்தியமா என்னால இது ஏலாது. ஏலவே ஏலாது. என்னை இப்பிடியே விட்டுடுங்க ப்ளீஸ்.” கண்ணீர் கன்னங்களில் உருண்டோடக் கெஞ்சினாள். “நீங்க வேற ஆரையும் கட்டுங்க. என்னால உங்களைக் கட்டேலாது. நான் வேண்டாம் உங்களுக்கு.”

“எனக்கு நீ மட்டும்தான் வேணும்!” என்றான் அவன் அழுத்தி.

“மச்சான்?” முதலும் இப்படித்தானே ஏதோ சொன்னான். நம்ப முடியாமல் அவள் அதிர, “உனக்குத் தெரியுமா? எனக்கும் உன்னப் பிடிக்கும்.” என்றான் கண்ணீரில் நனைந்திருந்த அவள் விழிகளையே பார்த்து.

இப்போதும் அவளால் இதை நம்பவே முடியவில்லை. அதிர்வும் திகைப்புமாய் அவனை நோக்கினாள். “நீங்க சும்மா… எனக்காகத்தானே இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க?” என்று தடுமாறினாள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom