கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Sowdharani

Well-known member
காந்தன் பண்ணது தப்புனா அபயன் பண்ணதும் தப்பு தானே சுபா இதுக்கு என்ன சொல்லுவா எதுக்கு ஞாயம் கேட்கணும் அன்பு கேட்காமல் இருப்பது தான் சரி
 

shanthi

Member
நல்ல முடிவு தம்பி எப்படி குற்ற குறுகுறிபில்லாமல் வாழ்.கிராய் என்று பார்க்கிறோம்.சுபா இவ்வளவு வஞ்சம் தேவையா?
 

Sumathi siva

Active member
Exact lines I thought when he promises his sister that he’s not going to marry Anbini.What did she do.he only proposed her and tortured her and now left abandoned .what ever explanation he says to Anbini will not be acceptable.wow awesome.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சுபாங்கி.. காந்தன் உன்னை ஏமாற்றினால் நீ உன் தம்பியை வைத்து அவன் தங்கையை ஏமாற்ற நினைக்கிறாய்.. அப்போது உனக்கும் காந்தனுக்கும் என்ன வித்தியாசம். ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல அவசரக்காரனுக்கும் புத்தி மட்டு.
 

Yamu

Member
ஆத்திரத்தில் இந்த சுபாங்கி அவரப்பட்டு முடிவெடுக்கிறாள் என்று தான் தோன்றுகிறது.
அதிலும் அபயனும் அன்பாவும் விரும்பியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தும் இவள் இப்படியொரு முடிவெடுத்தால் அதை என்னவென்று சொல்வது.
சரி இப்பொழுது அவள் காதலி அதனால் அவளை ஈஸியாக மறந்துவிடு வேறொரு பெண்ணை மணந்துகொள் என்று பிடிவாதம் பிடிக்கிறாளே ஒருவேளை ஏற்கனவே பேசியிருந்தபடி இவர்களுக்கு திருமணம் முடிந்தபின் காந்தனின் சுயரூபம் தெரியவந்திருந்தால் அப்பொழுது என்ன செய்வாள் உன்னுடைய மனைவியை விலக்கிவை என்பாளா?
இவள் காந்தனை மட்டும் பழிவாங்கவில்லை தன்னுடைய தம்பியையும் காதலியிடம் இருந்து பிரித்து அவன் மனதிலும் ஒரு ஆறாத காயத்தை உண்டாக்குகிறாள்.தம்பியே ஆனாலும் அவனுடைய வாழ்க்கையை இவள் கையிலெடுப்பது சரியல்ல.
இந்த அபயன் அக்காவின் பேச்சைக்கேட்டு அன்புக்கு துரோகம் செய்தால் இவனுக்கும் காந்தனுக்கும் வித்தியாசமே இல்லை என்பேன்.இவன் காந்தனுக்கு அடித்தான் இவனை இவன் மனசாட்சியே கேள்வி கேட்டு கொல்லும் .பார்ப்போம் நிதாம்மா எப்படி முடிக்கிறார் என்று.:unsure::unsure:
பின்குறிப்பு:
வாழ்த்துகள் நிதாம்மா.ஒவ்வொரு கதையையும் ஒரு வித்தியாசமான கோணத்தில் யோசித்து எழுதுகிறீர்கள்.ஆனால ஒவ்வொரு கதையின் கருவும் புதிதல்ல.நாம் அன்றாட வாழ்க்கையில் கேள்விப்படும் விஷயங்கள்,சந்திக்கும் நபர்கள் தாம் .ஆனால் அதை உங்களுடைய எழுத்து நடையில் படிக்கும்போது மிகவும் அருமையாக உள்ளது.
ஆரம்பத்தில் இந்தக்கதையை படிக்கும்போது காந்தன் சுபாவை வவுனியாவுக்கு வரச்சொல்லும்போது எல்லாம் நான் இன்னொரு பயணம்புதிது போலவோ என்று நினைத்தேன்.இல்லை நான் வித்தியாசமாக யோசிப்பவள் என்று உணர்த்திவிட்டீர்கள்.சூப்பர் நிதாம்மா.
சபலபுத்திக்கு ஆட்பட்டு தன்தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் எத்தனையோ பேருக்கு இந்தக் கதை சவுக்கால் அடிப்பது போல் உள்ளது.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... டேய் அபய் உனக்கெல்லாம் அன்பா செட்டாகவே மாட்டா... போய் பக்கத்துல நிக்கிற அந்த கனிமொழியோ இல்லை தேன்மொழியோ யாரையாவது கல்யாணம் பண்ணிக்க.. ஆனா அன்பினி இனி உன்னை லேசுல மன்னிக்க மாட்டா. நிதா
எப்படி எப்படி எங்க மனநிம்மதிக்காகவா?.. மொத்தமா எங்க மனச உடைச்சிட்டு இப்படி சொல்ல உங்களாள எப்படி முடிஞ்சது.😭😭😭
 
Top Bottom